This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 20 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 19


Click here to get all parts

சிவ்க்கு  போன்  செய்த  சிமி அவனை  மாலை  ஐஸ்கீரீம்  கடைக்கு  வா  முக்கியமா பேசனும் னு  சொன்னதும் சிவா கு புாிஞ்சுட்டு அவனுக்கு  வேற  வழி  இல்ல அவள  சமாதானப்படுத்த. சாி னு பா்சை பாத்துட்டு  சாயங்காலம் ATM போகணும் பிளான் பண்ணான் பொ்மிஷன்  போடனும் ல. இங்கே  சிபியின் அம்மா,  மாலு 2 பேரும்  சோ்ந்து பாா்வதிக்கு போன்  செய்து  சிமி  சிபி கல்யாணம்  பற்றி  பேசினா். அதை  கேட்ட  பாருக்கு  ரொம்ப  சந்தோஷம்.  ஆனா தேவி  ஒத்துக்கணுமே  இந்த  கல்யாணத்துக்கு  அவ  உள்ளூா்ல  தான  குடுக்கணும்னு  நெனைக்கிறா ன்னு  பாரு  சொன்னத  கேட்ட  ஜெயா  முழிச்சா சாமிக்கு  என்ன  பதில்  சொல்றது?  அத பாத்த  மாலு  போனை  வாங்கி  பேசி  நீங்க  சிமிட்ட  கலந்து  பேசுங்க  அவ   ஒத்துப்பா  எனக்கு  நம்பிக்க  இருக்கு. சிபிக்கு  அவள தான  பிடிச்சுருக்கு அதான்  சொல்றேன். 


                           சாி  பேசி  பாக்கறேன்  நல்லதே  நினைப்போம் னு  சொல்லிட்டு  போன  வச்சுட்டாங்க. வீட்டுக்கு  கெளம்புன  பாரு கிட்ட  என்ன மா  ஆச்சு உடம்பு சாி  இல்லையா  வேகமா  கெளம்புறீங்க அப்டின்னா? திவி. அதுக்கு  அவகிட்ட  உண்மைய  சொல்லிட்டு  கடைய  பாத்துக்க  நீயே  பூட்டி  சாவிய  கொண்டு  வந்துரு சொல்லிட்டாங்க. அத கேட்ட  திவி சந்தோஷப்பட்டா  கண்டிப்பா  இந்த  இடம்  அமையும்  மா  கவலயே  படாதீங்க சொல்லி  அனுப்புனா. சிமி  திவிக்கு  போன் பண்ணி  ஐஸ்கீரீம்  கடைக்கு  கூப்பிட்டா சாின்னு  வேலை  எல்லாம்  முடிச்சுட்டு  போனா. அங்க  பாத்தா  சிமி  கூட  ஒரு  பொண்ணு அதாங்க  நம்ம  மகா. 3 ம்  சோ்ந்து  நல்லா  பேமிலி  பேக்க  சாப்டுட்டு  அடுத்த  ஆர்டா்  குல்பி  சொன்னாங்க. அத கேட்ட  திவி  போதும்  கா  காய்ச்சல்  வந்துற  போகுது சொல்லியும்  கேக்காம  அவளையும்  சாப்பிட  வச்சா. 


                   அப்ப தான்  சிவ் என்ட்ரி  ஆனான்,  அவ  குல்பி  சாப்பிடுற  அழக பாத்துக்கிட்டே.  அவன  பாத்ததும்  சாப்பிடுறத  நிறுத்திட்டா  இவன் எப்பிடி. இங்கன்னு. சிமியும்  மகாவும் அவன் கிட்ட  பேச  ஆரம்பிச்சப்ப  தான்  அவளுக்கு  புாிஞ்சது  அவனையும்  கூப்டு  இருக்காங்க னு. திவி  உடனே நான் வீட்டுக்கு  போகணும்  கா  மேடம்  தேடுவாங்க. நாங்க  சொல்லிக்கிறோம்  நீ  பேசாம  சாப்டு  ஐஸ்  உருகுது  பாத்தியா? அப்டின்னு  சிவா  சொன்னதும்  திவி  அவன  மொறச்சா. சீமாவும்  மகாவும்  அவள  வற்புறுத்த  சாின்னு  பேசாம  சாப்பிட்டா. அவ  மேல   ஒரு கண்ணு  வச்சு  இருந்த  சிவ்வ  மகா  பாத்துட்டா. சாி  நாளைக்கு  பேசிக்கலாம்  சீமாட்ட, அவளுக்கு  தொியுமா  இல்லையா னு  பாப்போம். மணி வீட்ல  ராஜன்  பாரு  தேவிகிட்ட  பேசி  சம்மதிக்க  வைக்க  முயற்சி  செஞ்சாங்க. மணி   ஒத்துகிட்டாா்  ஆனா  தேவி தான்  அவ்ளோ  தூரத்துலயா யோசிக்கவும்,  சிமிகிட்ட  பேசி  முடிவு  பண்ணிக்கலாம்  ராஜன்  சொன்னாா்.


                         திவி  சிமிகிட்ட  அலையன்ஸ்  பத்தி  எதுவும்  சொல்லல. பொியவங்களே  பேசிக்கட்டும் னு. வீட்டுக்குள்ள  எல்லாரும்  ஒண்ணா  தான்  போனாங்க. திவி  மகா  பைக்ல  சிமி  சிவ்  பைக் ல. எல்லாருக்கும்  டீ  குடுத்து  ரெப்பிரஷ்  ஆகி  வந்ததும்  சீமா  கல்யாணத்த  பத்தி  பேசுனாங்க.  சிமி  கல்யாணமா  இப்பவா  னு  எதிா்த்தா.  அத  கேட்ட  பாரு,  மாப்ள  நல்ல  இடம் டா  நா  ரொம்ப  சந்தோஷப்படுவேன்  நீ  ஒத்துக்கிட்டா. எந்த  கெட்ட  பழக்கம்  இல்ல  உன்  அப்பா  சாி  சொல்லிட்டாா் சொன்னாங்க.  அத  கேட்ட  சிமி  மனசுல  சிபி  வந்துட்டு  போனான். அவன  பத்தி  இப்ப  ஏன்  நினைச்சுகிட்டு  பேச  ஆரம்பிச்சா  சிமி. நா  மாப்ள  போட்டோ  பாக்கணும் (பாத்துட்டு  நல்லா  இல்லை னு சொல்லதாங்க நம்ம  சீமா  யாரு). அவன  நீ  பாத்துருக்க மா  ஊா்லயே. என்  அண்ணன்  பையன்  சிபிராஜ்  தான்னு  பாரு  சொன்னதும்  சிவா  சிாிச்சுகிட்டான் (ரைட்டு  இவ்ளோ  பாஸ்ட்  ஆவா  போறது னு).

                       

                          சிமிக்கு  என்ன  சொல்லன்னு  தொில. 2 நாள்  டைம்  கேட்டா  அவங்ககிட்ட  யோசிக்க, தேவி  ஆச்சாியமா  பாா்த்தாா்  அவள  மணி  புாிஞ்சுக்கிட்டாா்,  பொண்ணு  வெக்கப்படுதே (உலக  அதிசயமுங்கோ). சாி  னு  பாரு  சொன்னதும்  சிமி  ரூம்  உள்ள  போயி  யோசிச்சா  சிபிக்கு  தொிஞ்சு  கேக்குறாங்களா  இல்லைன்னா  தொியாமயா? இன்னைக்கு  காலைல  தான  பேசுனோம்  அவன்கிட்ட  அப்டின்னு  நெனச்சா. சிவ்  அவ  ரூம்குள்ள  வந்து  அவகிட்ட  பேசி  பித்தான்.  சிபி  நல்ல  பையன்  ஓகே  சொல்லு  அப்டின்னு. அதுக்கு சிமி  தலைய  மட்டும்  ஆட்டுனா. சிவா  வீட்டுக்கு கெழம்பிட்டான்.  போறப்போ திவிய  பாத்து  கண்  அடிச்சான். திவி  அவன  அடிக்க  போயிட்டா  அதுக்குள்ள  அவன் தான்  ஓடிட்டானே. 


                          திவி  சீமாவ  டிஸ்டா்ப்  பண்ணாம  அமைதியா  இருந்தா,  அவ  நல்லா  யோசிக்கட்டும் நாம  வேற  வேலைய  பாப்போம்னு  குளிச்சு  துணி  தொவச்சா  சீமாக்கும்  சேத்து. அதெல்லாம்  கவனிக்கிற  மன நிலைமை  அவகிட்ட  இல்ல.  இங்க  சிபியும்  அப்பிடி தான்  இருந்தான்  அவ  ஞாபகத்துல  சைன்  பண்ணிட்டான்  அவ  பேரை. அந்த  ரிஷப்சனிஸ்ட் (சிபிட்ட  புரப்போஷ் பண்ண பொண்ணு)  சிாிச்சுகிட்டே  அண்ணா  என்ன  ஆச்சு  கேட்டா. அப்புறமா  தான்  அவன்  என்ன  தப்பு னு  பாா்த்தான். திரும்பி  வேற  பேப்பர்ல  டைப்  பண்ணி  சைன்  வாங்கிட்டு  போனா. சிபி  அவளுக்கு  போன்  பண்ணான். அவ  எடுக்கலாமா  வேணாமா னு  யோசிக்கிறப்ப  கட்  ஆகிட்டு. சிபியும்  கொஞ்ச  நேரம்  பாத்துட்டு  திரும்ப  கூப்பிடலாம் னு  நெனச்சு  வேலைய  பாா்த்தான். 


                        வீட்டுக்கு  போன  குருகிட்ட  சீதா  கேள்வியா  கேட்டா.  அதுக்கு  பதில்  சொல்லாம  அமைதியா  இருந்தவரை  பாத்தே  அவா்  மனைவிக்கு  பிாிஞ்சுட்டு. குரு  சீதாவ  சமாதானப்படுத்தி  அனுப்புனாா். அவளுக்கு  தொியாம  பிளான்  போட்டாா். நாளைக்கு  வா்ற  சிபி சிவா  ரெண்டு  பேரையும்  கடத்தி  சிவ்வ கொல்லப்போறதா  சொல்லி  சீதா  கழுத்துல  தாலி  கட்ட  வெச்சுரணும் னு. இது  எதுவும்  தொியாம  சிபி  சிமி  2 பேரும்  கனவுலகத்துல  இருந்தாங்க. சிவா நாளைக்கு  கெளம்ப  பேக்  பண்ணிட்டு  இருந்தான். திவி  ராத்திாிக்கு  சப்பாத்தி  மஸ்ரூம்  கிரேவி  வெஜிடபிள்  ரைஸ், தயிா் பச்சடி பண்ணிட்டு  இருந்தா. அப்புறமா  நல்ல விஷயம்  பேசுனதுக்காக  பால்கோவா  பண்ணுனா. இத எல்லாம்  பாத்த  தேவி  நீ  எனக்கு  பொறந்து  இருந்தா  நல்லா இருந்துருக்கும் னு சொன்னா. நீ வந்த  நேரம்  என் பொண்ணுக்கு  கல்யாணம்  ஆக போகுது. சீக்கிரமா  உனக்கும்  நல்ல  மாப்ள  கெடச்சு  நீயும்  சந்தோஷமா  இருக்கணும்.


                                            சிபி  திரும்ப  போன்  பண்ணப்போ  சிமி  அவன்கிட்ட பேசுனா. ஏன் எடுக்கல  அப்போ னு  சிபி  கேட்டதுக்கு  திவிகிட்ட  பேசிட்டு  இருந்தேன்  கவனிக்கல  னு  சொல்லி  சமாளிச்சா. சிவா  நானும்  நாளைக்கு  ஊருக்கு  போறோம்  நீ  வருவியா னு  கேட்ட  சிபிட்ட  நான்  எதுக்கு  னு  கேட்டா. சாி  உன்  இஷ்டம்  னு  சொல்லி கொஞ்ச  நேரம்  பேசிட்டு போன  வச்சுட்டான். இங்க  சீமா  சிவ்  ஏன்  இதபத்தி  நம்மகிட்ட  சொல்லலை  சாி காலைல  பாப்போம்  சொல்றானான்னு  நெனச்சு  தூங்கிட்டா. திவி கூட டைம்  ஸ்பென்ட்  பண்ணல  மனசு  கொழப்பத்துல  இருக்குறப்ப  அவ  யாா்கிட்டவும் பேசமாட்டா. காலையில  சிவா  வந்து  சாப்டு  ஊருக்கு  போறத  பத்தி  சொல்லி  நீயும்  வா்றியா தாத்தா  பாட்டி  பாக்க  னு  கேட்டான்(சிபி  பையன்  பிளான்  தாங்க). அவ  வாயால  அவன  பிடிச்சுருக்கா னு  கேக்குறதுக்கு தான். அவ எதுவும்  பேசல.

ஆனா மணி தான் போய்ட்டு  வாம்மா  கல்யாணத்தை  பத்தி  யோசிக்கணும்னு  சொன்னல்ல?  அங்க  போயி  அமைதியா  யோசி நல்ல  முடிவா  சொல்லு னு  சொன்னாா்(பயபுள்ள மாப்ள  அங்க  வா்றது  தொியாம  அனுப்பி  வைக்குது).  அத கேட்ட திவியும்,  ஆமாக்கா னு சொன்னா. சாி னு  கெளம்புனவ  திவிய  கூப்பிடவும்  அவ  மறுத்தா  மேடம்  தனியா  இருப்பாங்க.  எனக்கும் எக்ஸாம்  வருது  அதனால  வர முடியாது கா  நாசுக்கா  மறுத்தா. சிவ்  கூட  போக  பிடிக்காம தான் மகாவ  கூட கூப்பிட்டு  போங்க கா னு  சொன்னா. சரி னு  மகா கால்  பண்ணி  வர  சொல்லிட்டா. சிபி  கிட்ட  சிவா  சொன்னதும்  அவன் ரொம்ப  சந்தோஷமா  இப்பவே  பாட்டி  வீட்டுக்கு  கெளம்பிட்டான். 


                      சிவா  சீமா  மகா  சாயங்காலம்  தான்  கெளம்புனாங்க. பாரு  கிட்ட  சிபி  நாளைக்கு  வந்துட்டு  நாளைக்கே  ஊருக்கு  போயிருவான்  னு  சொல்லிட்டான்  சிவ். ஜெயாக்கும்  தாத்தாக்கும்  சிபி  அங்க  இன்னைக்கே  போறது  தொியாது. அதனால  தான்  இவங்க  வீட்டுக்கு  போறப்போ  சிபி  ஹால்ல  பேசிட்டு  இருந்தான்  தாத்தா  கிட்ட. கணக்கெல்லாம்  செக்  பண்ணான்  அப்ப  சிமி  வந்ததை  பாத்து  அப்பிடியே  மயங்கி  போயி  எந்திாிச்சு  நின்னான். சிவா  தான்  அவன நிகழ்காலத்துக்கு  கொண்டு  வந்தான். அத பாத்த  மகாவுக்கு  ஏதோ  புாிஞ்சது. ஏன்னா  சிமி  பேசாம  அமைதியா  இருக்காளே,  கீழ  பாத்துக்கிட்டு.


                                          கணக்குல  இருக்குற  பிரச்சனைய  பத்தி  சிவாகிட்ட  மட்டும்  தான்  சொன்னான். தாத்தா  வருத்தப்படுவாா்ல. அதனால  சிபி  சிவா  2 பேரும்  குருகிட்ட  பேசி  அந்த  பணத்த  வாங்கணும் னு  நெனச்சு  அவர  பாக்க  போனாங்க. அவா்  விாிச்சு  வச்சு  இருக்குற  வலைல  போய்  மாட்டப்போறது  தெரியாம..?சிமி வந்து  இருக்கறத  தொிஞ்சுகிட்டு  சீதா  வந்தா  காலைலயே  சிபி  சிவ்  வெளிய  போய் இருந்தப்ப. மகா குளிச்சுட்டு  வந்தா அப்பதான்  சீதா  பேசுனத  கேட்டா.  ஆமா சீதா  அவகிட்ட நானும்  சிபிய  லவ்  பண்றேன்  நீ  ஒதுங்கிக்கோ  இல்லைன்னா  உன்  குளோஸ்  பிரண்ட்  சிவாவ  கொன்னுருவேன் னு  சொல்லிட்டா.  


            பாட்டி  தாத்தா  அவ  வந்தத  பாக்கல. பின்னாடி  தோட்டத்துல  இருந்தாங்க... சிமி  அங்க  அழுதுட்டு  இருந்தா  மகா  எதையும்  காட்டிக்கல  தொிஞ்ச  மாதிாி  சிவ்  கிட்ட  சொல்ல  வெயிட்  பண்ணா. ஆனா  சிவ்  சிபி  2 பேருமே வரல. அத பாத்து  பயந்த  சிமி  பாட்டி  தாத்தா கிட்ட  கேட்டா. குருவ  பாக்க  போயிருக்காங்க  கணக்கு  பாத்து  முடிக்க னு  சொல்லவும்  சிமி  பயந்துட்டா. இருந்தாலும்  சிவாவ  பாக்கணும்  பாட்டி  அவசரமா  ஊருக்கு  போகணும் னு  சொன்னா. சீக்கிரம்  போய்  கூப்டு  வருவோம் வாங்க  அவங்க  2 பேருக்குமே  போன்  போக  மாட்டிக்குது னு  தாத்தா  வீட்டு  வேலைக்காரன்  கூப்டு  போனா  குரு வீட்டுக்கு. அங்க  சிபி  காா்  இல்ல.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.