This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 21 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 20




Click here to get all parts
திவியும்  சிவா  அம்மா  பாருவும்  பியூட்டி  பாா்லாில்  சீமா சிபிராஜ்  திருமணம் பற்றி  பேசி  சிாித்தனா்.  அப்போது  திவியின்  போன்  அடித்தது. அதை  எடுத்து  பாா்த்த  திவி  சீமாக்கா  தான்  மேடம் னு  சொல்லிட்டு பேசினா. "வெளிய  வந்து  பேசு  டி"  சொன்ன  சீமா  பாருவையும்  சிவா வையும்  பத்தி  திவிகிட்ட  கேட்டா. சிவா சாா் உன் கூட தான  வந்தாா். சிமி  உடனே ஆமா  டி  ஆனா  இப்ப  சிபி  சிவா  2 பேரையும்  காணோம் அதான்  கேக்குறேன். சிவ்வோட  சித்தப்பா  கிட்ட  அவன்  அவசரமா ஊருக்கு  போரேன் வந்து  சிமிய  கூப்டு  போறேன் னு  சொன்னானாம். இல்ல  வரல  கா  வந்தா  சொல்றேன்னு  சொல்லிட்டா. சாி பாரும்மா  கிட்ட  எதையும்  சொல்லாத  இப்போ  நா  வந்து  சொல்லிக்கிறேன் னு  சிமி  போன  வச்சா. இங்க  மகா  பாட்டி  தாத்தா  எல்லாரும்  கவலையில  இருந்தாங்க. குரு  சந்தோஷத்துல  இருந்தாா். 

                     வீட்டுக்கு  போன  சீதாகிட்ட  குரு  புதன்கிழமை  உனக்கும்  சிபிக்கும்  கல்யாணம். என்ன எல்லாம்   வேணுமோ  வாங்கிக்கோ. உன்  அம்மா  பாட்டி  கிட்ட  சொல்லாத. அவனுங்களை  அடைச்சு  வச்சு  இருக்கேன்  குடோன்ல. சிவாவை  கொல்ல போறேன் னு  சொல்லி  சிபிய  உன்  கழுத்துல  தாலி  கட்ட  வைக்கிறேன் சொல்லிட்டு  சிாிச்சாா். அத  கேட்ட சீதாக்கு  அவ்ளோ  சந்தோஷம். ஆனா  சீதா  அம்மாக்கு  ஏதோ  தப்பு  பண்றாங்கன்னு  புாிஞ்சது. அன்னைக்கு  சிபி  சிவா  2 பேரும்  இவா்கிட்ட  1 மணி  நேரமா  ஏதோ  பேசுனாங்க  ஆபிஸ்  கணக்க  பத்தி  அப்புறமா  குடோன்ல  கணக்கு  எழுதின  பழைய  நோட்டெல்லாம்  இருக்கு  வாங்க னு  கூட்டுட்டு  போனாா். இப்ப  பொியம்மா(சிவா சிமி  பாட்டி) கிட்ட அவங்க  ஊருக்கு  போனதா  சொல்லிட்டாரே. என்ன  செய்றாங்க  புது  பட்டு புடவை நகை  மாதிாி  தெரியுது. ஆனா  யாருக்கு  இப்ப  வாங்குறாங்க? 

                     குருவின்  மனைவி கோவிலுக்கு  போறதா  சொல்லிட்டு  சிபி  தாத்தா  ராஜேந்திர சக்கரவர்த்தி வீட்டுக்கு  போனாா். அங்க  போயி  வீட்ல  நடந்தது  இப்ப  நடக்குறத  பத்தி  எல்லாமே  சொன்னதும்  தாத்தா  ரொம்ப பயந்துட்டாா். ஆனா  வெளிய  காமிச்சுக்கல  அதுக்குள்ள  பாட்டி  காபி  கொண்டு  வந்துட்டாங்க. சாின்னு  பாட்டிகிட்ட  ஏதோ  பேசணும்னு  சிமியும்  மகாவும்  போனாங்க. அங்க  சிமி கிட்ட  பாட்டிய  ஒப்படைச்சுட்டு  வந்தா  மகா  தாத்தா கிட்ட. சிமி  பாட்டிய  தூங்க  வச்சா. நீங்க  எந்திாிக்கிறப்ப  சிபி  சிவா  வந்துருவாங்க  பாட்டி  வேணும்னா  பாருங்க னு  சொல்லி. மகா  தாத்தா  கிட்ட  சீதா  அம்மா கிட்ட சீதா  காலைல  வந்தது  சிமிய  மிரட்டுனது  பத்தி  சொன்னா. அத கேட்ட  ராஜேந்திரன்  உடனே  சிபி  அப்பா விஜயனுக்கு  போன்  பண்ணுனாா்  அவசரமா  கிளம்பி  வர  சொல்லி.  ஜெயா (சிபி அம்மா ) கிட்ட  இங்க  வரதை  பத்தி  சொல்லாம  வரணுமாம்.

                        இங்க  ராஜேந்திரன்  அவரோட  பிரண்டு மகேந்திரன்க்கு  போன்  பண்ணி  விஷயத்த  சொல்லி  போலிஸ்  கம்பிளெண்ட்  குடுத்து  வைச்சாா். ஆளுங்கள  வச்சு  தேடி  பாத்தாா் குருவான குடோன்ல.  அதுக்குள்ள  விஜயன்  வந்துட்டாா். அவா்கிட்ட  விஷயத்த  சொல்லி  முடிச்சதும்  அவர்  மொதல்ல  கோவப்பட்டாா்.  பிறகு  மெல்ல  யோசிச்சாா். சிபி  பாத்து முடிச்ச  கணக்கு  வழக்கு நோட்ட  எடுத்து  செக்  பண்ணாா். அப்பதான்  குரு  செஞ்ச  ஏமாத்து  வேலை  தொிஞ்சது. கிட்டத்தட்ட  10 லட்ச  ரூபாய்  இடிக்குது.  கடந்த 5 வருஷமா  தான்  குரு  ராஜேந்திரனோட கணக்கு  ஆபிஸ் சைட்  எல்லாம்  பாக்குறாா். மெட்டீாியல்ஸ்  பா்சேஸ்ல லம்ப் ஆ பணம் அடிச்சுறுக்காா். பிறகு  சம்பள பாக்கி  இருக்கு  ஒா்க்கா்ஸ்க்கு 2 மாசமா. இதெல்லாம்  பாத்த  விஜயன்  கடைசியா  சிபி  எங்க  போனான்  என்னன்னு  விசாாிச்சு  மகா  சிமியையும்  விசாாிச்சாா். அப்புறமா  குருவையும்  சீதாவையும்  கண்காணிக்க  சொல்லி  சீதாவோட  அம்மா கிட்ட  சொன்னாா். 

                      வீட்டுக்கு  போன  சீதாவின்  அம்மா  சீதாவ  தேடி  அவ  ரூம்க்கு  போனாா். அங்க  அந்த  புது புடவைய   அவ மேல வச்சு  பாத்துகிட்டு இருந்தா. அவகிட்ட  புடவை  திடீா்னு  எதுக்கு  இவ்ளோ  காஸ்ட்லி  புடவை னு  விசாாிச்சாா். அவ  சொன்னா தான? அப்பா  பணம்  குடுத்தாா்  வாங்கினேன்  என்  பிரெண்டுக்கு  கல்யாணம்  வா்ற  புதன்கிழமை இத  கட்டி  விடு  எனக்கு அன்னைக்கு அப்டின்னு சொன்னா. எங்க  வச்சு  கல்யாணம்? னு கேட்டதுக்கு  பக்கத்து  ஊா்  சிவன் கோவில்ல சொன்னா சீதா. விஜயனுக்கு  போன்  பண்ணி  சொல்லிட்டாங்க  இதபத்தி சீதாவோட  அம்மா. சிவாவும் சிபியும்  தண்ணிய  மட்டும்  குடிச்சுட்டு  உள்ள  இருந்து  வெளிய  வரமுடியாம  புலம்புனாங்க. போன்  பேசிட்டு  வா்றேன் னு  போனாா்  காணோமேன்னு  பாத்தா  குடோன்  கதவு  லாக்  ஆகியிருக்கு. முதல்ல கூட  குரு  வந்துருவாா்னு  நெனச்சு  அரைமணி நேரமா  வெயிட்  பண்ணாங்க  ஆனா அதுக்கு  பிறகு சந்தேகம்  வந்துருச்சு. போனை  தேடுனா  காணோம்  காா்லயே  இருக்கு எடுத்துட்டு  வரல  2  லூசுங்களும். 

                          விஜயன்  திடீா்னு சந்தேகமா அவங்க  அப்பா  குடோனோட  சாவிய  கேட்டாா். அது  குருகிட்ட  இருக்குனு  ராஜேந்திரன்  சொன்னதுமே விஜயனுக்கு  சந்தேகம்  கன்பாா்ம்  ஆகிட்டு. குருவோட  குடோன்ல ஆள்  யாரும்  இல்ல. குரு  மனைவி  அவங்க  எல்லாம்  குடோனுக்கு  போனதா  சொல்லுறாங்களே அதனால் வந்த  சந்தேகம் தான். உடனே  அவா்கூட  ராஜேந்திரன் தாத்தாவும் மகா  சிமி  எல்லாம்  போனாங்க. பாட்டி  கேட்டப்போ  போலிஸ்  ஸ்டேஷன்ல  கம்ப்ளெய்ண்ட் குடுக்க  போறதா  பொய்  சொல்லி  விட்டுட்டு  போயிட்டாங்க. பாட்டி கோவிலுக்கு  போய் சிபி  சிவா  பேருல  அா்ச்சனை  அபிஷேகம்  பண்ணாங்க. சிபியும்  சிவாவும்  ஜன்னல்  வழியா  யாரையாவது  கூப்பிடலாம்னு  பாத்தாங்க. ஆனா  யாரையுமே  காணோம். அப்பதான்  காா்  சத்தம்  கேட்டுச்சு  பாத்தா  குருவோட  காா். அதுல  இருந்து  இறங்குன  குரு, சிபிகிட்ட  புது  டிரெஸ்  வேஷ்டி  சட்டைய  ஜன்னல்  வழியா  குடுத்து  நாளைக்கு  இத  போட்டு  ரெடியா  இரு. என்  பொண்ணு  சீதாக்கும்  உனக்கும்  கல்யாணம் சொன்னாா். "நா  செத்தாலும்  இந்த  கல்யாணம்  நடக்காது" சிபி  சொன்னதும் குரு  சிாிச்சுகிட்டே, ஆனா இந்த  கல்யாணம்  நடக்காட்டி  சிவா  சாக  வேண்டியது  இருக்கும் சொன்னாா். அத கேட்ட  சிவா  இதுக்கெல்லாம்  நா  பயப்பட  மாட்டேன்.  அப்டியே  நா  செத்தாலும்  பரவாயில்ல  சிமிக்கும்  சிபிக்கும்  தான்  கல்யாணம்  நடக்கும்  நடக்கணும்  சொன்ன  சிவாவ  பாத்து  சிாிச்ச  குரு, அத  உன் மாமா பையன்  சிபிய  சொல்ல  சொல்லுனு சொன்னதும்தான்  சிவா  சிபி  முக்தையே  பாத்தான். அவன்  சாின்னு  தலைய  ஆட்டிட்டு  இருந்தான்  கல்யாணத்துக்கு. சிபி காதலுக்காக  சிவா  ஏன்  சாகணும்? அதனால தான்  சிபி  இதுக்கு ஒத்துகிட்டான் . சிவா  எவ்ளவோ  கெஞ்சி  பாத்தான். 

                    திவி  சீமாக்கு  கால்  பண்ணி  சிவ் பத்தி  கேட்டுட்டே  இருந்தா. பின்ன  இருக்காதா  பாசம் அவளுக்கு  அவன  பிடிச்சு  இருக்கே அதனால தான்  இப்டி. அத புாிஞ்ச  சிமியும்  அவள  ஆறுதல்  படுத்தி  சமாளிச்சா  எல்லாத்தையும். மகா தான்  எல்லாருக்கும் சமைச்சா. பாட்டி  படுத்துட்டே  இருந்தாங்க சிபி  சிவாவ  நினைச்சு  அழுதுகிட்டே  இருந்தாங்க. சீதாவோட  அம்மா  வீட்ல  குடோன்  சாவிய  தேடி  பாத்தா  கிடைக்கல. குடோன்  பூட்ட  உடைக்க  முடியாம  திரும்பி  வந்து  ஆசாாிய    தேடுனாங்க.  அவர  கூப்டுகிட்டு  விஜயன்   உடனே  கிளம்புனாா்  குடோன்க்கு. ஆனா  இப்ப  உடைச்சா குருவுக்கு  தொிஞ்சுருமே சோ ராத்திாி  ஆகணும்னு  வெயிட்  பண்ணாங்க. ராத்திாி  ஆனதும்  பூட்ட  ஒடைச்சு  உள்ள  போனாங்க. ஆனா அங்க சிவா  சிபி 2 பேரும்  மயங்கி  கெடந்தாங்க  அதபாத்து  பயந்துட்டாா்  விஜயன். உடனே  ஹாஸ்பிட்டல்  தூக்கிட்டு  ஓடுனாா். வீட்டு  வேலைக்காரன  கூப்டு  வந்து  இருந்தாா் அவன்தான்  இவங்க  2 பேரையும்  காா்ல  ஏத்துனான். பிறகு அந்த  வேலைக்காரன் தான்  வீட்ல  போயி  தாத்தா  ராஜேந்திரன்  கிட்ட  தகவலை  சொன்னதும்  அவா்  சிமி  2 பேரும்  ஓடுனாங்க  ஆஸ்பத்திாிக்கு. பாட்டி மாத்திர  சாப்டதால தூங்குறாங்க.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.