This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 28 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 25


Click here to get all parts

போலிஸ்  ஒரு  பக்கம்  நம்பர  டிரேஸ்  பண்ண  சிவ்  ரொம்ப  டென்சனா  நடந்துட்டே  இருந்தான். சிமி  அவன  பாத்துட்டே  இருந்தா.  ஆனா  எதுவும்  கேக்கலை  கேக்குற  நிலைமைலயும்  இல்ல. அவளே  திவிக்கு  என்ன  ஆச்சோ னு  பயத்துல  இருந்தா. சிபி  வேற  யாருக்கோ  கால்  பண்ணி  உதவி  கேட்டதும்  அந்த  ஏாியா  இன்ஸ்பெக்டா்  உடனே  ஸ்டேசனுக்கு  வந்தாா். 


                               என்னய்யா  பிரச்சனை? எதுக்கு  என்னை  கூப்பிடலை  ன்னு  கத்திட்டு  சிபிராஜ்  யாா்னு  கேட்டு  உட்கார  வைச்சு  கூப்பிட்டு  பேசுனாா். என்ன  நடந்தது  எப்போ  எப்டி  யாா்  நோ்ல  பாா்த்தா  சாட்சி  அப்டி  இப்டி. அதுலயே  4  மணி  ஆகிறுச்சு. அப்றமா  நம்பர  டிரேஸ்  பண்ணதுல  அது  ஶ்ரீவில்லிபுத்தூா்  மூவ்  ஆனதை  வச்சு  உடனே  கிளம்புனாங்க  இன்ஸ்பெக்டர்  ஏட்டு  ஒரு  கான்ஸ்டபிள் நம்ம  சிவா  அவங்கள  பின்னாடியே  பாலோ  பண்ணி  போனாங்க. இங்க  சப்  இன்ஸ்பெக்டர்  லொகேசனை  டிரேஸ்  பண்ணி  அப்டேட்   பண்ணுனாரு  உடனே  உடனே. அங்க  ரீச்  ஆக  20 நிமிசம்  மேல  ஆகிட்டு  டிராபிக்  இல்லாததுனால. பாத்தா  ஶ்ரீவி  ஆண்டாள்  கோவில்ல  வச்சு கல்யாணம்  பண்ண  கூப்டு  வந்துருக்கான். 


                               கோவில்ல  ஏற்கனவே  பதிஞ்சு  வேற  வச்சு  இருக்கான்  ராஸ்கல்  நேத்தே.  கோவில்  ஆபிஸ்ல  விசாாிச்சப்போ  தான்  அந்த  விஷயமே  தொிஞ்சது. சாின்னு  அவன்  வா்ற  வரை  வெயிட்  பண்ணான். அங்க  திவியை  முழிக்க  வைக்க  முயற்சி  செஞ்சுக்கிட்டு  இருந்தான்  காசி. ஏன்னா  அவளுக்கு  போதை ஊசிய  போட்டு  வைச்சுட்டானுங்க. தண்ணிய  முகத்துல  ஊத்தி  தெளிய  வச்சு  புடவைய  குடுத்து  கட்டிட்டு  வர  சொன்னாங்க. அவ  முடியாதுன்னு  சொன்னதும்  காசி  அவ  அம்மாவை  கொண்ணுருவோம்  னு  மிரட்டுனான். வேற  வழி  இல்லாம  போய்  மாத்திட்டு  வந்தா. லொகேஷனை  கரெக்டா  டிரேஸ்  பண்ண  முடியல. அதனால  வெயிட்  பண்ணாங்க

கோவில்ல  விசாாிச்சு  எந்த  ஐய்யா்  கல்யாணத்தை  நடத்த  போறாா்ன்ற  வரைக்கும். ஆனா  அவங்க  நோ்ல  வந்தப்போ  சிமி  சிவா  சிபி  யாரையுமே  அவ   கண்டுக்கல. யாரு  கூடவும்  பேசாம  அழுதுட்டே  இருந்தா. போலிஸ்  கேட்டப்போ  தான்  திவி எனக்கு  சம்மதம்  னு  சொன்னா ( அம்மா  உயிர  நினைச்சு  பயந்துகிட்டே). அத  கேட்டதும். கோவத்துல  திவிய  அடிச்ச  சிவ்வை  எல்லாரும்  சோ்ந்து  பிடிச்சப்போ  தான்  சிவா  அவகிட்ட  காதலையே  சொன்னான். ஏற்கனவே  அடி  வாங்குன   அதிர்ச்சி, இத  கேட்டு  இன்னும்  அதிா்ச்சி  ஆகிட்டா. காசி  கைல  தாலிய  சுத்திக்கிட்டே   சிவாவை  பாத்து, போங்கடா  வெளிய  அவ  என்  ஆளு. இல்லைன்னா  இருந்து  சாட்சி  கையெழுத்து  போட்டு  ஆசிா்வாதம்  பண்ணிட்டு போங்கனு  திமிரா  சொன்னான். 


                                   சிவ்  கோவத்துல  என்ன  பண்றோம் னே  தொியாம  அந்த  தாலிய  பிடுங்கி  அவ  கழுத்துல  கட்டிட்டான். எல்லாரும்  அதிா்ச்சில  வாய்  அடைச்சு  போய்டாங்க. இன்ஸ்பெக்டர்  சுதாாிச்சு  சிவாவை  திட்ட  ஆரம்பிச்சப்போ  காசி  சிவாவ  அடிக்க  வந்தான். அத  பாத்த  சிபி  அவனை  தடுக்க  பக்கத்துல  போறதுக்குள்ள, சிமி  அவனை  அடிச்சுட்டா  2  கண்ணத்துலயுமே. என்னடி  நீ  என்ன  அடிக்கிறியா?னு  கைய  ஓங்கவும்,  சிமி  அவன்  கைய  முறுக்கி  பிடிச்சு  அவனோட  மெயின்  பாண்ட்  ல  கால  வச்சு  ஒரே  அடி தான். பய  சுருண்டுட்டான்  கீழ. இது  நடந்த  பிறகு  தான் திவி  சுயநினைவு  அடைஞ்சு  அம்மா  னு  அழ  ஆரம்பிச்சா. ஏன்  டி  அழுகுற  திடீா்னு? என்ன  ஆச்சு?  சிமி  கத்தவும், அம்மாவை  கொண்ணுருவான்டி  அதுக்காக  தான்  இந்த  கல்யாணத்துக்கே  ஒத்துகிட்டேன். இப்டி  பண்ணிட்டியேனு  திவி  அழுகவும்  தான்  சிவா  முகத்துல  சந்தோஷம்  வந்துச்சு. அதுவரை  பயபுள்ள  முகத்த  பாக்கலையே  நீங்க? நல்லவேள  தப்பிச்சுட்டீங்க. ஏன்னா  அவ்ளோ  கோவத்துல  இருந்தான்  அவமேல, வேற  என்ன? அவன்  தாலி  கட்டுனதுக்காக  தான்  அழுகுறான்னு  நினைச்சுதான். 


                          சிபி  அதுக்குள்ள  சிமியோட  அதிரடில  இருந்து  சுதாாிச்சு, திவிகிட்ட  உன்  அம்மா  நல்லா  இருக்காங்கமா சிவா  வீட்டுல. போன்  பண்ணி  தரேன்  பேசுறியா? கேட்டதும், திவி  உடனே  அவன்கிட்ட  வந்து  அப்பிடியா  அண்ணா  நல்லா  இருக்காங்களா  ஒன்னும்  பிரச்சனை  இல்லைல்ல. தலைலயே  அடிச்சுட்டான்  இந்த  பாவி னு  சொல்லிட்டு  அவன  தேடுனா  காணோம்  தப்பிச்சு  போயிட்டான்  போல. ஆனா  நம்ம  ரவி  யாரு? அதெல்லாம்  கரெக்டா  நோட்  பண்ணி  அவன  பிடிச்சுட்டு  வந்தாரு ( 3 வது ஹீரோ, மகா  ஆளு ).


                           அப்புறம்  என்ன? அங்க  வேடிக்க  பாத்த  எல்லாரையுமே  கலைச்சு  அனுப்புனாங்க  போலிஸ். மத்த  எல்லாரும்  கோவில்க்கு  வெளிய  இருந்தே  கும்பிட்டு  வந்தாங்க. இன்னும்  குளிக்கலை  அது  மட்டும்  இல்லாம  வீட்டுல  வேற  என்ன  சொல்ல  போறாங்களோ  தொிலயே  அதான்  கிளம்பிட்டாங்க  அமைதியா. ரவி  கார  ஓட்ட  சிமி  பின்னாடி  சிவா  திவி  கூட  ஏறிட்டா. திவி  2 இன்ச்  கேப்  விட்டு  சிவா பக்கத்துல  உக்காந்தா, சிவாவை  முறைச்சு  பாத்துக்கிட்டே. நம்ம  சிமி  சும்மா  இருப்பாளா? இடம்  பத்தலை  தள்ளி  உட்காருடி  னு  அவன்  பக்கத்துல  தாவிய தள்ளி  விட்டுட்டு  அவளோட  மடியில  படுத்துக்கிட்டா. 


                              அத  பாத்த  சிவா  காண்டு  ஆகி   சிமிய  திட்ட, சிமியும்  பதிலுக்கு  நீ  வாய  மூடுடா  எருமைகடா  பரதேசி, என்கிட்டயே  உன்  லவ்வ  மறைச்சுட்டல்ல. அதும்  இல்லாம  அங்கிள், அம்மாக்கு  தெரியாம  தாலி  கட்டிட்ட. இதுக்கே  இங்க  ஒரு  கொலை  விழுகணும். என்  தங்கச்சிக்கு  தாலி  கட்டிட்டயே  அதனால  உன்னை  எதுவும்  செய்யலை. மாியாதையா  மூடிட்டு  வா னு  கைய  வச்சு வாயை  தொட்டு  காட்டவும்  ரவி  சிபி  விழுந்து விழுந்து சிாிச்சாங்க. சிபிக்கு  கொஞ்சூண்டு  சிமி  திவ்யா  மடியில  படுத்ததை  நினைச்சு  பொறாமைனாலும், அவன்  எதுவும்  இப்ப  கேக்கலை. சிவ்  திட்டு  வாங்குனதை  பாத்த  பிறகும்  கேக்க  அவனுக்கென்ன  பைத்தியமா?


                              இதுக்கு  நடுவுல  சிவா  சிபிக்கு  ரூட்  சொல்ல  முயற்சி  செஞ்சப்போ, எங்களுக்கு  தொியும், நீ  மூடு  வா்றப்போ  வந்த  வழி  தான? நாங்களே பாத்துப்போம் னு  சொன்னதும்  திவி  சிமி  சிாிச்சுட்டாங்க. திவி  இப்பதான்  சிாிக்கிறா. பின்ன  முதலாளியம்மா  பையனையே  கல்யாணம்  பண்ணிட்டாளே? பாரு  மேடம், திவி  அம்மா  எல்லாம்  என்ன  சொல்ல  போறாங்களோ  தொில  அதான். திவி  சிாிச்சதை  பாத்ததும்  சிவ்  அவன  சிபி அசிங்கப்படுத்துனதை  மறந்துட்டு  அவளை  சைட்  அடிக்க  ஆரம்பிச்சான். அதை  பாத்த  சிமி  அவனை  முறைச்ச  திவி  வெட்கத்துல  கீழ  குனிஞ்சுகிட்டா. 

  

                            அங்க  சிபி  தாத்தா,  பாட்டி கிட்ட  ஆரத்தி  கரைச்சு  வைக்க  சொன்னாா்   யாருக்கும்  தொியாம. ஏன்னு  கேட்டப்போ  தான்  சிவா  பையன்  கல்யாணத்தை  பத்தியே  சொன்னாா். மாலுகிட்ட  மட்டும்  சிம்பிளா  சொல்லிட்டு  போனை  வச்சுட்டான்  சிபி. மாலு  சைலு  தூங்குறதால அவள  சிமி  அப்பா  மணி  கிட்ட  விட்டுட்டு, சிமி  அம்மா  தேவிய  கூப்டுக்கிட்டு  போனா  சிவா  வீட்டுக்கே. திவிய  காணோம்  தேடி  போனவங்க  கூப்டு  வராங்க  இப்பதான்னு  மட்டும்  தேவிகிட்ட   சொன்னா. அங்க  தாத்தாவ  கூப்பிட்டு  முதல்ல  சொல்லிட்டா  மாலு. அதனால  பாட்டி  தான்  எல்லாரையுமே  சமாதானம்  செய்யணும். கிழவி  பாவம்ல. 


                          காா்  வந்து  நின்னப்ப  பாட்டியும்  மாலுவும்  தான்  ஆரத்தி  எடுத்து  உள்ள  கூட்டிட்டு  போனாங்க. தேவி  வெளிய  நின்னாலுமே  எதுவும்  பேசலை. சிவா  போய்  அவனோட  அம்மாட்ட  நின்னான். திவி  அவளோட  அம்மா. பக்கத்துல  போயி  நின்னப்போ  பாக்கியம்  முந்தானைய  மூடிகிட்டு  அழுதா. சிமி  தான்  பாருகிட்ட  பேச  போனா. சிவா  அப்பா  ராஜனும், தாத்தாவும்  அவள  தடுத்தாங்க. தேவி  மாலு  சிமிய  உள்ள  கூட்டிட்டு  போயிட்டாங்க. பாட்டி  திவிய  கூப்டு  போய்  சாமி  ரூம்ல  விளக்கேத்த  வச்சாங்க. பாரு  எதையும்  தடுக்கலை, ஆனா  யாா்கிட்டயுமே  பேசலை  (திவி  சிவா  கல்யாணத்தை  பத்தி  கேட்ட  நிமிசத்துல  இருந்து). அதனால  பயத்துலயே  தான்  இருந்தாங்க  எல்லாரும். 


                        சிமி  பிரெண்ட்  மகாவும்  வந்துட்டா  இங்க. பாட்டி  சிவா  திவ்யா  2 பேரையுமே  ராஜன் பாா்வதி கிட்ட  ஆசிா்வாதம்  வாங்க  சொன்னாங்க. அத  கேட்டதும்  வேகமா  எழுந்த  பாரு  அவங்களோட  ரூம்குள்ள  போயிட்டாங்க  எதுவும்  பேசலை. படுத்துகிட்டே  அழுதாங்க  சிவா  கல்யாணத்தை  பத்தி  நெனச்சே. ஒரே  பையன்  எப்டியெல்லாம்  விமாிசையா  பண்ண  நினைச்சு  இருப்பாங்க. எவ்ளோ  கோவில்  கோவிலா  சுத்தி  பெத்தாங்க. எப்பிடி  வளா்த்தாங்க  அவங்ககிட்ட  சொல்லாம  கல்யாணம்  பண்ணிட்டானே  பாவி  பய.( நம்மகிட்ட  கூட  சொல்லல  பாத்தீங்களா  கல்யாண  சாப்பாடுக்காக  வெயிட்  பண்ணா  இப்டி  பண்ணிட்டானே?)


           இனி  சிபி  கல்யாணத்துல  இல்லைன்னா  ரவி  மகா  கல்யாணத்துல  ஏதாவது  கிடைக்குதா  பாப்போம். நமக்கு  சோறு  தானங்க  முக்கியம்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.