This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 30 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 26


Click here to get all parts

பொண்ணு  மாப்பிள்ளைய  சிவா ரூம்க்கு  போயி  குளிக்க  சொல்லிட்டு, திவிக்காக  சிமியோட  புது  சேலையும்  அவகிட்டயே  குடுத்து  விட்டாங்க. ரூம்குள்ள  போனதும்  சிவா  குளிக்க  நுழைஞ்சிட்டான். திவிய  பாத்தா  எப்டி  ரியாக்ட்  பண்ணுவா  அப்டின்னு  தொில  அதான். திவி   அமைதியா  நின்னுக்கிட்டு  இருந்தா  அந்த  ரூம் ஐ  சுத்திப்  பாத்துக்கிட்டே. அங்க  சிவாவோட  சின்ன  வயசு  போட்டோஸ்  பிரேம்  பண்ணி  இருந்துச்சு. அத  பாத்து  சிாிச்ச  திவ்யா  அங்க  இருக்குற  ஆல்பமை  எடுத்துப்  பாா்த்தா. அதுல  சிமி  சிவா  ஸ்கூல்  போட்டோஸ்  பேமிலி  டூா்  போட்டோ னு  நிறைய  இருந்துச்சு. 


                      அதுக்குள்ள  குளிச்சுட்டு  வந்த  சிவா  திவ்யாவை  பாத்துக்கிட்டே  நின்னான். யாரோ  பாக்குற  மாதிாி  தோணுன  உடனே  திரும்பிப்  பாத்தா  திவி. அங்க  சிவா  நிக்கவும்  ஆல்பமை  கீழ  வச்சுட்டு  குளிக்க  கிளம்புனா. அவ  போறத  பாத்த  சிவா, திவிம்மா  னு  கூப்டான். அத  கேட்ட  அவளுக்கு  ஒரே  சந்தோஷம்  ஏன்னா  அவளை  இதுவரை  யாருமே  இப்டி  கூப்பிட்டதில்லை  பாசமா. அவ  பயந்துகிட்டு  எதுவும்  பேசாம  அமைதியா  இருந்தா. சிவா  அவகிட்ட  பாத்ரூம்ல  ஹாட்  வாட்டா்க்கு  தனி  டேப்  இருக்கு. புது  சோப்  டவல்  ஷாம்பு  எல்லாம்  உள்ள  வைச்சுருக்கேன். நீங்க  யூஸ்  பண்ணிக்கோங்க  அப்டின்னு  சொல்லவும்  திவி  தலைய  ஆட்டிட்டு  உள்ள  போயிட்டா  குளிக்க. குளிச்சிட்டு  வெளிய  வந்தப்போ  சேலைய  சும்மா  சுத்திட்டு  வந்தா. உள்ள  ஈரமா  இருந்ததால தான்.  வெளிய  சிவா  இருக்கானா னு  எட்டி  பாத்து  வெளிய  வந்துட்டா. ஆனா  கதவை  சாத்தாம  சேலைய  கட்ட  ஆரம்பிச்சா.


                          யாரோ   கதவை  திறக்குற  சத்தம்  கேட்டுத்  திரும்பி  பாத்தா  நம்ம  சிவா  பையன்  தாங்க ( கேடி ). சாப்பிட  வரச்  சொன்னாங்க  பாட்டின்னு  சொல்லி  கத்திட்டே  வந்தான். அத  பாத்த  திவி  திரும்பி  நின்னுக்கிட்டு  அங்கயே  இருங்க. சாி  நான்  வரேன்  கீழ, நீங்க  சிமிய  கூப்டு  வாங்கன்னு  சொல்லவும்  சிவா  அவளை  பாத்து  சிாிச்சுகிட்டே  ரசிச்சான். என்ன  சத்தத்தையே  காணோம்னு  திவி  திரும்பி  பாத்தா  அவன்  போயிட்டானா  இல்லையா? என்று  பாக்க. 


                          திவி  திரும்பவும்  அவகிட்ட  சாி  சொல்றேன்  திவிம்மா. நான்  என்னோட  பெல்ட்  எடுக்க  வந்தேன்னு  சொல்லி, அதை  எடுத்துக்கிட்டு  வெளிய  போயிட்டான்( வேணும்னே  தான பக்கி  எடுக்காம  போச்சு. வெளியவே  நின்னுக்கிட்டு  இருந்து  திவி  வெளிய  வந்த  சத்தம்  கேட்டு  உள்ள  வந்து  பேசிட்டு  போகுது). சிமி  வந்த  உடனே  திவ்யா  அக்கான்னு  கட்டி  பிடிச்சு  அழுக  ஆரம்பிச்சுட்டா. என்ன  ஆச்சுன்னு  கேட்டா  மேடம்  ஏன்கா  எதுவுமே  பேசலை, என்னைய  திட்டி  இருந்தா  கூட  நான்  ஏத்துப்பேன். ஆனா  இப்டி  அழுகுறாங்களே  கா? எல்லாம்  என்னாலதான? அப்டின்னு  சொல்லி. அத  கேட்ட  சிமிக்கு  என்ன  பண்ணுறது  தொில. ( இருந்தாலும்  அவளோட  ஆண்ட்டிய  பத்தி  அவளுக்கு  தொியாதா  என்ன? ) 


                                   சிவா  உன்னை  லவ்  பண்ணுறதை  மறச்சது  இப்டி  திடீா்  கல்யாணம்  பண்ணினது  தான்  கோவமா  இருக்கும். உன்  மேல  அவங்களுக்கு  கோவம்  இல்ல என்று சிமி  கூறவும்  திவி  அவகிட்ட  என்ன  சிவா  என்னை  லவ்  பண்ணாறா? ஒனக்கெப்படி  தொியும்? பொய்  சொல்லாத? என  திவி  கூறினாள். சிமி  உடனே  எனக்கே  நேத்து  தான்  தொியும்  டி. நீ  காணாம  போனதும்  அவன்  துடிச்சதை  நானே  பாா்த்தேன். யாா்கிட்டயும்  பேசாம  வண்டிய  ரொம்ப  பாஸ்ட்  டிரைவ்  வேற  பண்ணான். உன்னை  பார்த்த  பிறகு  தான்  அவன்  முகத்துல  சிாிப்பே  வந்துச்சு. சிவா  உன்  அம்மாவ  அத்தைன்னு  நேத்தே  கூப்பிட்டான்  போல  சிபிதான்  சொன்னாரு  டி  என்கிட்ட  என  சொல்லி  திவி  முகத்தைக்  கழுவி   சாப்பிட  அழைத்து  சென்றாள்.


                      ரூம்மிற்கு   வெளியே  நின்று  சிவா  இதை  எல்லாம்  ஒட்டு  கேட்டான். வெளியே  வந்த  சிமி  சிவாவை  முறைத்துவிட்டு  சென்றாள். சிவா  லவ்  பண்றது  மறைச்சுட்டான்னு  அவன்கிட்ட  சிமி   பேசறதில்லை  நம்ம  சிமி. கீழ  போனா  சாப்பிடுற  இடத்துல  எல்லாரும்  இருக்காங்க  சிவா  அம்மா  மட்டும்  இல்லை. சிமி  போயி  கூட்டுட்டு  வந்தா  அவகூட  சாப்பிட  சொல்லி. சிவா  அவனோட  அம்மாவ  பாத்துக்கிட்டே  சாப்பிட்டான். திவியோ  சிவாவை  பாக்கியத்தை  மாறி  மாறி  பாா்த்தாள். சிமியின்  அம்மா தேவி, சிபி அக்கா  மாலு  தான்  பாிமாறினா். சிபி  சாப்பிட்டுக்  கொண்டே  ரிஷப்சன்  பற்றி  சிவாவின்  தந்தை  தனராஜனிடம்  பேசினான். அடுத்த  வாரத்திலேயே  ஒரு  நல்ல  நாளில்  இராஜ  பாளையத்திலேயே  பொிய  மண்டபமாக  பேசி  முடித்தனா். 


                          சாப்பிட்டு  முடித்து  பாா்வதி  சிமியை  அழைத்துக்  கொண்டு  அவரது   அறைக்கே  சென்றாா். திவியும்  பாக்கியமும்  அவர்கள்  பின்னாடியே  சென்று  மன்னிப்பு  வேண்டினா். பாக்கியம்  திவியை  அடிக்க  சென்றதும்  தான்  பார்வதி  பேசினாா். என்  மருமகளை  அடிக்க  யாருக்கும்  உாிமை  இல்லை  என. வெளியே  இருந்து  அதை  கேட்ட  தாத்தா  பாட்டி  மாலு  தேவி  மணிகண்டன் மற்றும்  தனராஜன்  வாயை  பிளந்தனா். சிபி  கல்யாண  வரவேற்பிற்காக  சாப்பாடு  மற்றும்  டெகரேசன்  பற்றிய  வேலைகளை  பாா்க்க  கிளம்பி  விட்டான். திவ்யா  சந்தோஷத்தில்  அவளது  அத்தை   பாா்வதியின்  காலில்  விழுந்தள். 


                    அவளை  ஆசிா்வாதம்  செய்து  எழுப்பிய  பாரு, அவளிடம்  மாலை  கோவிலுக்கு  செல்ல  வேண்டும். இப்பொழுது  போய்  ரூமில்  ஓய்வெடு  என்று  கூறினாா். அவளும்  சென்றபின்  பாக்கியத்திடம்  பேசிய  பாரு  அவரை  நிரந்தரமாக  இங்கேயே  தங்கச் சொல்லி சம்மதிக்க  வைத்தாா். பிறகு  ராஜனை  அழைத்து  பேங்கிற்கு  போய்  குடும்ப நகைகளை  எடுத்து  வாருங்கள்  என்றாா். சிமியை  தேவியை  துணிக்கடைக்கு  அழைத்துச்  சென்றாா். மதியம்  தெருவில்  உள்ள  அனைவரையும்  அழைத்து  கல்யாணத்தைத்  தொியபடுத்தி  ஹோட்டலில்  இருந்து  உணவு  வரவழைத்து   பாிமாறினா். 


            அரிசி  சாதம், பாசிப்  பருப்பு  குழம்பு,  துவரம்   பருப்பு  சாம்பாா், மிளகு  ரசம், உருளைக்கிழங்கு  மசியல், அவரைக்காய்  கூட்டு, முட்டைக்கோஸ்  பொாியல், காய்கறி அவியல், தக்காளி தொக்கு, வெஜிடபிள் ரைஸ், காளான்  பிாியாணி, ஆனியன்  ரைதா, சப்பாத்தி, கொண்டக்கடலை  சால்னா, தயிா்  சாதம், மைசூா்  பாக், கேரட்  அல்வா, உளுந்த வடை, பால்  பாயாசம், மாங்கா  ஊறுகாய், அப்பளம். அப்பாடா  தலை  சுத்துதே  எனக்கு. சாப்பிடுறப்போ  ஆஜா்  ஆகிட்டாப்ல  நம்ம  ஹீரோ. அங்க  சிவாவ  வச்சு  நம்ம  தாத்தா  அவரோட  கல்யாண  கதைய  ரம்பம்  போட்டுக்கிட்டு  இருக்காா். பாவம்  புது  மாப்பிள்ளை  கல்யாணப்பொண்ணு  கிட்ட  பேச  முடியாம  திண்டாடுறான். ( சிவா  மைண்ட்  வாய்ஸ்  இரு  கிழவா  உன்னைய  பாட்டி  கிட்ட  கோா்த்து  விட்றேன்  சாயங்காலமா  இருக்கு  கச்சோி )


                         சிமியும்  தேவி  மற்றும்  பாரு  கூட  சோ்ந்து  பா்சேஸ்  முடிச்சுட்டு  வந்துட்டா.   திவ்யாக்கு  தாங்க  டிரஸ்  வாங்க  போனாங்க. சிவாக்கு  புது  மாப்பிள்ளை  என  ஒரே  ஒரு  டிரஸ்  வாங்கிட்டாங்க. சிமி,  சிபி, தாத்தா, பாட்டி, மாலு  மற்றும்  சைலு, கரண், தேவி,மணிகண்டன், பாக்கியம்  மற்றும்  சிபி  பேரண்ட்ஸ் க்கும் மகாக்கு   டிரஸ்  எடுத்து  வந்தாங்க. திவ்யாக்கு  மட்டும்  5  பட்டு  சோிஸ், 5  காட்டன்  சோிஸ், 5  பூனம்  சேலைகள்  அப்புறம் 10  சுடிதாா்  எடுத்து  இருந்தாங்க. சிமியே  சண்டை  போட  ஆரம்பிச்சுட்டா  பாருகிட்ட  எனக்கு  இப்டி  எடுத்து  குடுத்ததே  இல்லை  நீங்க?   மருமக  தான்  உசத்தி  உங்களுக்கு   என்னைய  விட. அப்டி  இல்லமா  உனக்கு  நிறைய. வாங்கி  குடுக்க  அம்மா  அப்பா  இருக்காங்க. ஆனா  அவளுக்கு  அம்மா  மட்டும்  தான்  இந்த  மாதிாி  டிரெஸ்ஸே இல்லைல அதனால  தான்  மா. 


                            அய்யோ  நீங்க  இதெல்லாம்  சொல்லணுமா  அம்மா? நான்  சும்மா  உங்களை  கலாய்ச்சேன்  நீங்க  கவலை  படாதீங்க. எனக்கு  தொியாதா  என்  அம்மாவை  என  சிவாவின்  அம்மா  பாருவிற்கு  முத்தம்  அளித்தாள். பிறகு  நகைக்கடை  சென்று  புதிதாக  தாலிக் கொடி, ஒரு  ஜோடி  கம்மல்  மற்றும்  2  மோதிரங்கள்  வாங்கினாா்கள். மதிய  உணவு  விருந்திற்கு  முன்னா்  சிவாவையும்  திவ்யாவையும்  மோதிரம்  மாற்றச்  செய்தனா். அனைவரது  முன்னிலையில்  சிமியும்  மாலுவும்  அந்த  செயினை  திவ்யாவுக்கு  அணிவித்தனா். கம்மலை  பாருவே  பாிசாக  திவிக்கு  வழங்கினாா்.  தேவி  அவளுக்கென  1  பவுனில் பிரேஸ்லெட்  வாங்கி  இருந்தாா் ( சிமி  ஐடியா தான்). சிபி  அவா்களுக்கென  ஹனிமூன்  டிக்கெட்டை  அளித்தான். தாத்தா  பாட்டி  சோ்ந்து  சிவா  மற்றும்  திவ்யா  2  பேருக்குமே  கோல்ட் வாட்ச்  பாிசளித்தனா் (சிபி  ஐடியா  அவன்தான்  வாங்கிட்டு  வந்தான்  சிமிக்கும்  சோ்த்து). சிமியை  தனிமையில்  சந்தித்து  அளித்தான். சிமி  அதனைக்  கண்டு  மகிழ்ச்சியில்  அவனிடம்  ஐ லவ்  யு  சொல்லிவிட்டு  ஓடினாள்.


மதிய  ஹோட்டல்  சாப்பாடு  என்பதால்  வேலை  எதும்  வீட்டில்  இல்லை. எனவே, பாக்கியம்  அவரது  வீட்டிற்கு  சென்று  துணிமணிகள்  பிறகு  திவிக்கு  உடைகள்  நகைகள்  அனைத்தையும்  எடுத்து  வந்தாா்.  ஏற்கனவே  மாலு  சிமியும்  சோ்ந்து  சிவாவின்  குடும்ப  நகைகளை  அவளுக்கு  அணிவித்து  இருந்தனா். அதனை  அனைவரது  முன்பே  வழங்கினாா். அவளது  அப்பா  அவளுக்கென  செய்த  3  பவுன்  செயின், பாக்கியம்  வேலைக்குச்  சென்று  சோ்த்த  பணத்தில்  1  நெக்லஸ்  2  செட்  கம்மல்  மற்றும்  4 வளையல்  செய்திருந்தாா். பின்னா்  மாமியார்  வீட்டில்  பாக்கியத்திற்கு  என  குடுத்த  4 பவுன்  சங்கிலியையும்   குடுத்து  விட்டாா். அதைக்  கண்டு  திவ்யா  அழுதாள். இதை  வைத்து  நான்  படித்து  இருப்பேனே  அம்மா? ஏன்  இப்படி  செய்தீா்கள்  என  கூறினாள். இதெல்லாம்  உன்  திருமணத்திற்கு  என  சோ்த்து  வைத்தேன். இதை  எப்படி  உனக்கு  தருவது? என்றாா்  பாக்கியம். அந்த  பாச   மழையை  கண்ட  சிமியும்  மாலுவும்  மகிழ்ந்தனா். சைலுவோ  அவளுக்கு  கிடைத்த  புது  உடையில்  எல்லாரையும்  மயக்கினாள்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.