This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 26 February 2019

பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் -1


Click here to get all parts

காலை 10 மணி நல்ல வெயிலில் கீரை கீரை என கூவிக்கொண்டே வந்தாள் நம்ம அஞ்சலை காலை சாப்பாடு முடிந்து பாலுதாத்தா அவர் சினேகித பட்டாளங்களுடன்(எல்லாம் நண்டு சிண்டுங்கதான்) அவர் வீட்டு வாசலில் உள்ள வேப்பமரத்தடியில் தர்பார்{ வம்புமடம் }நடத்தி கொண்டிருந்தார்.


அஞ்சலையின் குரல் கேட்டு வாடிம்மா பொண்ணே மாலு கிழவி இவளோ நேரம் உனக்காக தான் காத்திண்டிருந்தா சித்த இரு அவளை கூப்பிடறேன் என சொல்லிவிட்டு உட்புறம் திரும்பி மால்ஸ் அஞ்சலை வந்திருக்கா பாரு  என குரல் கொடுத்தார்.


ஏற்கனவே அஞ்சலை வர நேரமாகி விட்டதால் கடுங்கோவத்தில் இருந்த பாட்டியோ வந்துட்டாளா? இந்தோ வரேன் என அவசர அவசரமாக கையில் கிடைத்த பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்.


தளதளவென கூடையில் கீரை அவரை பார்த்து சிரிக்க அதுவரை அஞ்சலை மேல் இருந்த கோவமெல்லாம் அதை பார்த்த உடன்  போயேபோச்சு..


முகத்தில் புன் சிரிப்புடன் வந்த மாலு பாட்டி ஏண்டிமா அஞ்சலை இன்னிக்கு இவ்வளோ நேரம் பண்ணிட்டே என கேட்டுக்கொண்டே கீரை கட்டை எடுத்து ஆராய ஆரம்பித்தார்.


யம்மா நீங்கதான் இன்னைக்கு முத போணி இன்னமும் காலேல இருந்து சாப்பிட கூட இல்லை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு அனுப்பிவிடுங்கமா என கேட்க...


என்னது காலையில இருந்து இன்னும் சாப்பிடலயா? என குறுக்கிட்ட பாலுதாத்தா மால்ஸ் அவ கீரைய எடுத்து வைப்பா நீ போய் அவளுக்கு சாப்பிட எதாவது எடுத்துண்டு வா என சொல்லி அனுப்பினார்.


அதெல்லாம் எதுக்குப்பா? என அஞ்சலை சங்கடபட அவளை இலகுவாக்கும் பொருட்டு கிழவி சமையல் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும் ஹீம் என்ன பண்றது ? இன்னைக்கு உனக்கு அதுதான் தலைஎழுத்து இப்படி இனி மாட்டிக்க கூடாதுனா காலேல சாப்புடாம இருக்காதே என சொல்லிவிட்டு திரும்பி பார்க்க அவர் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த பாட்டி மினி பத்ரகாளியாக மாறிருந்தாள்.


அஞ்சலையிடம் சாப்பாடையும் தண்ணீரோடு கொடுத்து விட்டு நீ சாப்பிடுடி இந்த மனுஷனை இன்னைக்கு லங்கணம் (பட்டினி) போடலை நான் மாலதி இல்ல...


கிழவியாமே ஐயாவுக்கு கொஞ்சும் குமரன் நு நினைப்போ ? ஏண்டா வானரங்களா நொடிக்கு நொடி மால்ஸ் பாட்டி அது பண்ணிகுடுங்கோ இது பண்ணிகுடுங்கோ நு கேட்டு வாங்கி சாப்பிடறேளே என் சமையல குத்தம் சொல்லறார் உங்க தாத்தா அவர் கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசாம அவர் பேசறத்துக்கு எல்லாம் வாயை மூடிண்டு கமுக்கமா ரசிச்சு சிரிக்கரேளா? இனி யாராவது எதாவது வேணும் நு கேட்டுண்டு வாங்கோ அப்புறம் இருக்கு சேதி.

 

பாட்டியின் கோபம் தாத்தாவுக்கு பீதியை கிளப்ப அதற்க்குள் சாப்பிட்டு முடித்து விட்ட அஞ்சலை போதும்மா எதோ தெரியாம சொல்லிட்டாரு மன்னிச்சு விட்டுருங்க என சிபாரிசு செய்ய மலை இறங்கினார் பாட்டி 


அவரை குளிர்விக்கும் பொருட்டு ஏன்மா காலைல சாப்பிடுறது அவ்வளவு முக்கியமா? எனகேட்க அவ்வளவுதான் காலை உணவின் அவசியத்தை தாத்தாவும் பாட்டியும் சபீனா போடாத குறையாக விளக்கினர் அவங்க சொன்னதெல்லாம் அங்க இருந்தவங்க தொகுத்துதர பாய்ண்ட்  பாய்ண்டா கீழ குடுத்திருக்கேன்.


சாப்பிடும் முறை


காலையில் 1 பங்கு சாதம் என்றால் மதியம அரை பங்கு சாதம் பின் இரவில் பெரும்பாலும் கால் பங்கு மற்றும் பால் குடித்தாலே போதுமானது.  இதுதான் உணவின் ரகசியம்


காலைஉணவு மிக அவசியம். !

1. இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும்

2. . காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். 

3. அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். 

4. காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும். உடல் எடை அதிகரிக்கும்

5. சுறுசுறுப்புடனும் இருக்க நமது காலை உணவு மிக அவசியம். ..


காலையில் சாப்பிட ஏற்ற உணவுகள்.

1. குளித்து முடித்து விட்டு நல்ல கஞ்சியில் சாதத்தை கரைத்து தொட்டுக்க மிளகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் எடுத்து வைத்துக்கொண்டு வயிறார சாப்பிடவேண்டும்.

2. ஒரு முழு சாதம் சாப்பிடவேண்டும் கடைசியில் கண்டிப்பாக ரசம் இருக்க வேண்டும்.

3. காலையில் எக்காரணம் கொண்டும் அசைவம் வேண்டாம். மதியவேலையில் பார்த்துக்கொள்ளலாம்.

4. சைவப்பிரியர்கள் சாப்பிடவேண்டியது கண்டிப்பாக கீரை மற்றும் கொண்டைக்கடலை வகைகள் தான்.

5. தோசை மாவு இட்லி மாவு உற்றி செய்யும் பண்டங்களை இரவில் வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.