This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 27 February 2019

பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் - 3


Click here to get all parts

கையில் இருந்த உதிரிபூக்களை சரமாக தொடுத்து கொண்டிருந்த மாலு பாட்டி தன்னை நோக்கி நடந்து வந்த வத்சலாவை பார்த்து வாடிம்மா வத்சலா இப்போதான் உனக்கு ஆபிஸ் முடிஞ்சதா ? என வரவேற்க ஆமாம் பாட்டி இப்போதான் முடிஞ்சது நாளைக்கு அவர் டூர் முடிஞ்சு ஆத்துக்கு வரார் அதுதான் மார்கெட் போய் கறிகாயெல்லாம் வாங்கிண்டு வரேன் ஓ விச்சு(விஸ்வனாதன் ) நாளைக்குதான் வரானா ? என கேட்டமாலுபாட்டி துணைக்கேள்வியாக வயத்துக்கு ஏதாவது ஆகாரம் பண்ணியா எனவும் கேட்க இல்ல பாட்டி இனிமேதான் என பதில் சொன்னாள் வத்சலா


 பேசிக்கொண்டே தன் கையில் இருந்த பூச்சரத்தில் கொஞ்சம் கிள்ளி கொடுத்த மாலுபாட்டியிடம் ஆமாம் பாட்டி எங்க தாத்தாவ காணோம் வீடே அமைதியா இருக்கே என வத்சலா கேட்க அவரா அவருக்கென்ன நடந்தா நிழல் கூட கூட வருதாம் எடை வேற கூடி போச்சு அப்படினு காரணம் சொல்லிட்டு ஊர்சுத்த போய் இருக்கார் வர நேரம் தான் எதிர் பார்த்திண்டுஇருக்கேன் நீ பொழக்கடையில (வீட்டின் பின்புறம் ) போய் சரீர சுத்தி (கை கால் அலம்புதல்)பண்ணின்டுவாடி குழந்தே நான் போய் உனக்கு காப்பி போட்டு எடுத்துண்டு வரேன் என பாட்டி கிளம்ப மால்ஸ் அப்படியே எனக்கும் ஒரு லோட்டா காபி போட்டுண்டு வா என குரல் குடுத்துண்டே அங்கே ஆஜரானார் தாத்தா ம்ம் என முனங்கியபடியே அடுப்படிக்கு சென்றார் பாட்டி 


பாலு தாத்தா இந்த பையெல்லாம் சித்த உங்க பொறுப்புல பாத்துக்கோங்கோ நான் பொழக்கடைக்கு போயிட்டு வந்திடறேன் என வத்சலாவும் நகர்ந்தாள் வத்சலா வருவதற்க்குள் தன்னை ஆசுவாச படுத்தி கொண்ட தாத்தா அவளை கண்டவுடன் அம்மாடி குழந்தே உங்காத்து  ஃப்ரிட்ஜ் சர்வீஸுக்கு ஆள் வந்திருந்தா நான் கதவை திறந்து கொடுத்து கூடவே நின்னு ரிப்பேர் முடிஞ்சதும் செக் பண்ணி வெச்சிருக்கேன் பில்லை அவா உனக்கு அனுப்பிடுவாடியம்மா அதோட அவா குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கேன் போறச்ச கிழவிகிட்ட நியாபகமா வாங்கிண்டு போ என சொன்னார்


அவர் சொன்னதை கேட்ட வத்சலா கண்கள் கலங்க ரொம்ப தேங்ஸ் தாத்தா  ஃப்ரிட்ஜ் ரிப்பேர் ஆனதுல இருந்து கையும் ஓடல காலும் ஓடல அவர் வேற டூருக்கு போய்ட்டாரா  ரொம்ப தவிச்சு போயிட்டேன் என நன்றி நவில 

அதை கேட்டுக்கொண்டே சுடசுட வெங்காய பஜ்ஜியும் காப்பியுமாய் வந்த மாலுபாட்டி வத்சலா எனக்கு ஒரு சந்தேகம் நோக்கு மட்டும் கையும் காலும் தனிதனியா ஓடுமா என அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்க அதை கேட்டு கடுப்பான வத்சலாவோ யூ டூ பாட்டி ? என கத்த சும்மா ஒரு தமாஷுக்கு தாண்டி என மாலுபாட்டி சமாதான படுத்தினார் இதுவரை அங்கு நடந்த எதையும் கருத்தில் கொள்ளாது பாட்டி கொடுத்த பஜ்ஜியிலும் காப்பியிலும் கவனத்தை செலுத்தி கொண்டிருந்த பாலுதாத்தா எல்லாம்சாப்பிட்டு தீர்த்தபின் மால்ஸ் என்னதான் இருந்தாலும் எங்கம்மா கைமணம் உனக்கு வரலடி எதோ பண்டம் பாழாக பிடாதுனு நானும் பசி ருசியறியாதுனு வத்சலாவும் சாப்பிட்டோம் சரி இன்னமும் உள்ளமிச்சம் எதாவது இருந்தா கொண்டா என சொல்ல 

இருங்கோனா வத்சு கிளம்பட்டும் அப்புறம் நீங்க போதும் போதும் நு சொல்ற அளவுக்கு கொடுக்கறேன் என மாலு பாட்டி டபிள் மீனிங்கில் பதில் சொன்னார் 

இதை கேட்ட தாத்தா பீதியில் கண்ணு கலங்க ஐயோ வாய விட்டுட்டேனே அடி பின்னிடுவாளே பகவானே காப்பாத்து என எல்லாதெய்வங்களுக்கும் மனு போட அவரோட கெட்ட நேரம் அத்தனை பகவானும் இந்த பக்தனோட் கோரிக்கைய நிராகரிச்சுபுட்டாங்க 

அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்ச வத்சலாவுக்கு அவ கேட்ட நோட்ஸ்  எடுத்து கொடுத்து அனுப்புனதுக்கறம் பாட்டி வீட்டுல ஒரே வாண வேடிக்கைதான் போங்க சரி நாளைக்கு வந்து தாத்தாவையும் பாட்டியையும் பார்ப்போம் இப்போ வத்சு வோட சேந்து நாமும் ஃப்ரிட்ஜ் சர்வீஸுக்கு ஆள்  இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் தெரிஞ்சுபோம் நமக்கும் உபயோகமாகுமில்லயா? நாளைக்கு தாத்தாவையும் பாட்டியையும் எங்க பார்க்குறது நு கேக்குறவங்களுக்கு நல்லாஇருந்தா வீட்டுல இல்லை பாட்டி கொடுத்த கொடுவுல எதாவது ஆகிருந்தா ஹாஸ்பிட்டல்ல ? ஒகே பை

ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால்,  காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். 

எந்த பொருள்களை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, நம் உடல்நலனையும்  பாழாக்கிக் கொள்கிறோம்.


ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?

   *  ஃப்ரிட்ஜை  அடிக்கடி  திறந்து  மூடுவதால் மின்சார  செலவு அதிகமாகிறது. அடிக்கடி திறந்து மூடுவதை  குறைத்துக்கொண்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

*    ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்காமல் இருப்பது நல்லது. மற்றும்  அதன்மேல் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


*    பின்புறம் படியும் ஒட்டடையை அடிக்கடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுத்தப்படுத்தி வைத்தால் நிறைய  அழுக்கு சேராமல் இருக்கும்.


*    ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஸ்பான்ச் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது.  உலர்ந்த துணி கொண்டு துடைக்க ேவண்டும். மற்றும் ஃப்ரிட்ஜை சுத்தமாக காலி செய்துவிட்டு கதவுகளை காற்றாடத்  திறந்து வைத்துவிட்டால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.


*    ஐஸ் டிரேயை பழைய குக்கர் கால்கெட் மீது வைத்தால் எளிதில் எடுக்க வசதியாக இருக்கும்.


*    ஐஸ்கட்டி வைக்கும் டிரேயை முதலில் வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தாலும் டிரேயில்  இருந்து எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்

.

*    ஃப்ரிட்ஜ் திடீரென்று ஓசை எழுப்பினால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.  அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்காமல் இருக்கும் இடத்திற்கேற்ப பொருட்களை வைக்கலாம்.


*    ஃப்ரிட்ஜுக்கு கண்டிப்பாக எர்த் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும்.


*    ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு சோப்பு நீரை உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் சோப்பு நாளடைவில்  உட்சுவர்களை உடைத்துவிடும். இதற்குப்பதில் சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.


*    உணவுப் பொருட்களை சூட்ேடாடு வைக்காமல் குளிர வைத்தபின்தான் வைக்க வேண்டும்.


*    ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ அடுப்புக்கரி  ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ மூடிகளையோ வைக்கலாம்.


மேலும் சில டிப்ஸ்கள்

ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும் பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

 

அதிக குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கப் கூடியது காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாட்கள்வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.

 

மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின்  சத்துக்கள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும் உலர்ந்து  போகாமல் இருக்கும்.

 

வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதிலுள்ள ஃபோலிக் ஆசிட் குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும் வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துக்களும் மாறாமல் இருக்கும்.

 

உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் காற்றோட்டமுள்ள இடங்களில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்துவிடும்.

 

தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும் ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாட்கள் மட்டுமே ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.

 

எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.


*    தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு தயிரை கடைந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் வெண்ணெய்  தானே தனியாக பிரிந்துவரும்.


*    சப்பாத்தி மாவின் மேல் சிறிது ரீபைண்டு ஆயிலை தடவி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு  நாட்களானாலும் பிரஷ்ஷாக இருக்கும்.


*    வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்துவிட்டால்  நறுக்கும்போது கண் கலங்காது.


*    ஃப்ரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை சமைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே எடுத்து  வைத்துவிட்டு சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.


*    காய்கறிகளை நறுக்கி அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் வைட்டமின்  சத்துக்கள் அப்படியே இருக்கும்.


*    முழு தேங்காயை ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்துவிட்டு உடைத்தால் டக்கென உடைந்துவிடும்.


*    வெண்ணெய், பால் கட்டி போன்ற பால் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில்தான்  வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் அதிலுள்ள சத்து குறையாமல் இருக்கும்.


*    கத்தரிக்காயை எப்போதும் காகிதப் பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.


*    பழங்களை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள் அடுக்கி வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் உறையிலோ அல்லது  டப்பாவிலோ போட்டு வைக்கலாம். பழங்கள் சுருங்கிப் போகாது.


*    வெண்டை, அவரை, பட்டாணி போன்றவை நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்க வேண்டுமானால்  ஃப்ரிட்ஜில் பழுப்புநிற அட்டையில் சுற்றி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.