ஜோடி ஜோடியாக தம்பதிகள் பக்தியுடன் வலம் வரும் குறிஞ்சி ஆண்டவர் கோயில். முதலிரண்டு நாட்கள் ஊர் சுற்ற மனமின்றி அறையிலேயே ஹனிமூன் கொண்டாடிய ஷியாமும் சக்தியும் கடைசி நாளான இன்று ஊர் சுற்றி பார்க்க வந்தனர்.
கடவுளிடம் மனமுருகி வேண்டியபடியே தம்பதிகள் பிரகாரம் சுற்றி வர உச்சி கால பூஜை முடிந்து கோவில் நடைசார்த்தும் நேரமும் நெருங்கியது.
அப்போது அவசர அவசரமாக வந்த ஒரு மத்திய வயது பெண்ணுக்கு "ஏம்மா இன்னைக்கு இவளோ நேரம் ஆயிடுத்து" என விசாரித்தபடியே அர்ச்சனையை முடித்து பிரசாதம் கொடுத்தார் அர்ச்சகர்.
அதற்க்கு அவரோ "நியாபகம் இல்லாம தூங்கிட்டேன் சாமி. என்னதான் இருந்தாலும் எனக்கும் வயசு ஆகுது இல்லயா ? முதலாளியை கவனிச்சுட்டு வரத்துக்குள்ளா இன்னைக்குகொஞ்சம் லேட் ஆயிரிச்சு" என சொன்னார்.
"சரிமா போய் பிரகாரம் சுத்திட்டு வாங்கமா பிரசாதம் ரெடி பண்ணி வைக்கிறேன்" என சொன்னார்.
பிராகாரம் சுற்றி முடித்து ஷியாம் தம்பதி அமரவும் சுற்ற ஆரம்பித்த அந்த அம்மாள், அவ்விடம் வந்ததும் மயங்கி விழவும் சரியாக இருந்தது. அவர் மயங்கி விழுந்ததை கவனித்த சக்தி ஒடி சென்று தாங்கி பிடித்தாள்.
பின்னாடியே ஒடி வந்த ஷியாமிடம் "தண்ணி எடு ஷியாம்" என கேட்டு வாங்கி அவரின் முகத்தில் தெளித்தாள்.
அவளை போலவே அவர் மயங்கி விழுந்ததை பார்த்து ஒடி வந்தவர்களின் உதவியுடன் மயக்கம் தெளிவிக்க சற்றே தன்னை நிதானபடுத்திக் கொண்டு மெல்ல கண் திறந்த அவர் சக்தியை கண்டு அதிர்ச்சியானார்.
மெல்ல கண் விழித்த உடன் "எப்படியம்மா இருக்கேங்க?" என சக்தி கேட்க ஷியாமின் கண்களுக்கு அவரின் அதிர்ச்சி தப்பாது தெரிந்தது.
"இப்ப பரவா இல்லமா" என அவர் பதில் கொடுத்தார்.
"உங்களால தனியா வீட்டுக்கு போக முடியுமா ? கூட யாராவது வந்து இருக்காங்களா? இல்ல நாங்க கொண்டு வந்து விடவாமா?" என கேட்ட படியே அவர் எழ உதவி செய்தனர் சக்தியும் ஷியாமும்.
"இங்க பக்கத்துல தான் அம்மா எனக்கு வீடு, என் கூட யாரும் வரல. என் முதலாளி தான் இருக்கார், உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பலமா நானே போய்க்கிறேன்..."
"இதுல என்ன இருக்கு? வாங்க மா" என அழைத்து கொண்டு நடக்க துவங்கினர் சக்தியும் ஷியாமும்.
அங்கே வீட்டை அடைந்த போதோ சாதரண வீட்டை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அவர்களை வரவேற்றது பிரம்மாண்ட மாளிகை.
வீட்டின் வாசலியே "அம்மா பத்திரமா உள்ள போயிக்குங்கமா, நாங்க கிளம்பறோம்" என்று கூறிய படியே கிளம்பிய சக்தியையும் ஷியாமையும் "இருங்க பா வீட்டுக்குள்ளே வந்து ஒரு வாய் தண்ணியாவது குடிச்சிட்டு போங்கப்பா" என அவர் கெஞ்ச சரியென உள்ளே சென்றனர் தம்பதிகள்.
வந்தவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு உள்ளே சென்றவர் ஒரு வயதான பெண்மணியை கூட்டி கொண்டு வந்தார். அவர் கூடவே கையில் காபி டம்ளர்களுடனும் ஒரு சமையல்காரரும் வர மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர் ஷியாமும் சக்தியும்.
தள்ளாடியபடி வந்து நின்ற அந்த பெண்மணி கூர்ந்து கவனித்தது சக்தியைத்தான். அவளை பார்த்த மாத்திரத்தில் "நீ பாரதி -பரதன் பொண்ணுதானே?" என கேட்க ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினாள் சக்தி.
"உனக்கு கல்யாணம் எப்போ ஆச்சு? உன் புருஷன் பேர் என்னமா?" என கேட்டார்.
"மேடம் உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமா ?" என சக்தி கேட்க
"மேடம்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் பா எனக்கு உங்க பாட்டி வயசு தான் இருக்கும் என்ன பாட்டினே கூப்பிடலாம் அப்புறம் என்ன கேட்டே? உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமானு தானே? உங்கம்மாவ நல்லா தெரியும், அத விட உன் அத்தை கலாவையும் தெரியும்" என சொல்ல
"என்ன உங்களுக்கு எங்க அம்மாவயும் தெரியுமா ?" என ஷியாம் கேட்க
"ஓ கலாவதி பையனா நீ?" என கேட்டார்.
"ஆமாம் பாட்டி" என கோரசாக இருவரும் பதில் சொல்ல அங்கே ஒரு மௌனம் நிலவியது.
மெல்ல மௌனத்தினை கலைத்த அந்த பெரியவர் முதலில் இவர்களை கூட்டி வந்த பெண்ணை பார்த்து "வசுந்தரா என்னால ரொம்ப உக்கார முடியல" என சொன்னதும்,
"நீங்க போங்க பெரியம்மா, நான் அவங்களை கவனிச்சு அனுப்பறேன்" சொல்லி பெரியவரை ஓய்வுக்கு அனுப்பினார்.
பின்னர் ஷியாமிடம் "தம்பி நீங்க இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பீங்க ? உங்ககிட்ட பேசனுமே" என்றார்.
"நாங்க இன்னைக்கு கிளம்பறோம் அம்மா நான் SS குரூப்ஸ் ல ஜென்ரல் மனேஜரா இருக்கேன் என் தம்பியும் அங்கதான் வேல பாக்குறான் லீவு இன்னையோட முடியுதுமா? அதுனால நாங்க கிளம்பிதான் ஆகணும். ஆமாம் அவங்க யாரு அம்மா?" என்றான்.
"தம்பி எந்த SS குரூப்ஸ் ல நீங்க ஜென்ரல் மனேஜரா இருக்கீங்களோ? அந்த SSகுரூப்ஸ் முதலாளி சுமித்ரா தேவியோட அம்மா நந்தினி தேவிதான்பா இவங்க..."
"சரிம்மா நாங்க கிளம்பறோம்" என எழ
"இருப்பா மேல வந்து பெரியம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு" என்றார் வசுந்தரா.
தலையை ஆட்டியபடியே சக்தியும் ஷியாமும் அவரை பின் தொடர்ந்து பெரியவரின் அறைக்குள் அவரிடம் சொல்லி கொண்டு கிளம்பினர்.
அப்போது அந்த அறையில் இருந்த ஆளுயர படத்தை பார்த்த ஷியாம் "இது யார்?" என கேட்டான்.
"இது எங்க சின்னையா தம்பி, அவர் இப்போ இல்லப்பா "என சொன்னார் வசுந்தரா.
"ஆனா அவர நான் எங்கயோ பாத்திருக்கேன் மா" என சொன்னான்.
வசுந்தராவோ "தம்பி அவர் இறந்து கிட்டதட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சுபா. இது பத்தி மேல எதுவும் இங்க வெச்சு பேச வேண்டாம். இன்னமும் கொஞ்ச நாளுல நானும் பெரியவரும் சென்னைக்கு வந்திருவோம். அதுக்கப்புறம் ஒருநாள் சவகாசமா பேசலாமே..." என அவர் பேச்சை முடித்துவிட தோளை குலுக்கியவாறே விடைபெற்றான் ஷியாம்.
தங்கி இருந்த அறையை அடைந்த பின்னும் ஷியாம் மௌனமாகவும் யோசனையுடனும் இருந்ததை பார்த்த சக்தி "ஹேய்... என்ன ஆச்சுப்பா?" என்றாள்.
"சக்தி, அந்த பாட்டிமா ரூமுல இருந்த படத்துல இருந்தவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி தோணுது, அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன்."
"ஆமாம் ஷியாம் எனக்கும் அது தோணிச்சு. சரி விடு எப்பயாச்சும் நினைப்பு வரும். இப்போ வந்த வேலைய பாப்போம்."
"என்ன வேல மா பாக்கணும்?" என கேட்ட ஷியாமின் முகத்தில் குறும்பு கூத்தாட, கேள்வியின் அர்த்தம் புரிந்த சக்தியோ அவன் முகத்தினை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்தபடி "போதும்டா மாமு நாளைக்கு கிளம்பனும் பிளீஸ்" என முணங்கினாள்.
"ஹே ஆங்ரி பேர்ட்... என்னனு கூப்பிட்ட? மாமுவா? கேக்கும்போதே கிக்கா இருக்குடி... இன்னொரு தடவை கூப்பிடேன்..."
" ம்ஹீம் மாட்டேன் போ" என சொல்லி விட்டாள் சக்தி
"இப்போ நீ கூப்பிடலேனா பாரேன்" என அவளை நோக்கி ஷியாம் நடக்க தொடங்க அவன் கைகளில் சிக்காமல் இருக்க மங்கையவள் பின்னோக்கி நகர துவங்கினாள்.
அந்த அறையின் சுவர் மேலும் அவளை பின்னோக்கி நகர விடாது தடுக்க முன்புறம் அவனின் வலிய கரங்களின் சிறையில் தன் இதயதுடிப்பின் ஓசையை கேட்டபடி நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க உதடு கடித்து நின்றாள்.
அவனோ தாபத்தில் "ஹேய் ஒரு தடவை மட்டுமாவது கூப்பிடுடீ.." என கெஞ்ச துவங்க அவளின் இதழ்கள் மெல்ல அசைந்து "மாமூ..." என்றது.
தன் ஆசையை நிறைவேற்றிய அவ்விதழ்களுக்கு பரிசளிக்க நினைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அந்நேரம் அவனின் செல்பேசி சிணுங்க துவங்க அதன் ஓசையில் கவனம் கலைந்தான். யாரென எடுத்து பார்த்த போது சரத் அழைப்பதாய் அது அறிவிக்க சக்தியிடம் இருந்து பேசும்படி சைகை வர எடுத்து பேசதுவங்கினான். ஆனால் அதில் பேசியவர் சுமித்ரா தேவி அவரின் குரல் உச்ச பட்ச பதட்டதில் இருக்க அது தம்பதிகளை நடப்புக்கு கொண்டு வந்தது.
"ஹேய் ஷியாம் சாரிமேன் உன்னோட பர்சனல் டைம்ல தொந்தரவு பண்ணிட்டேன். நீ கொடைக்கானல் ல இருக்கறதா சரத் சொன்னான். அங்கதான் எங்கம்மா இருக்காங்க அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்னு போன் வந்தது. நான் அங்க வர்ற வரைக்கும் நீ அங்க போய் ஹெல்ப் பண்ண முடியுமா?" என கேட்டார்.
"ஷுயூர் மேடம்" என பதில் சொன்னான்.
"தென் நான் உனக்கு இப்பொ டீடைல்ஸ் மெசெஜ் பண்றேன். கொஞ்சம் அங்க போய் எனக்கு அவங்க ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு பா..."
"ஓகே மேடம்" என சொல்லி விட்டு சக்தியை பார்த்து "நீ தனியா இருந்துப்பியா சக்தி? பாட்டிமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம். பாஸ் போன் பண்ணி ஹெல்ப் கேக்குறாங்க" என கேட்டான்.
" நானும் உங்களோட வரேன் ஷியாம்" என அவள் சொல்ல இருவருமாக கிளம்பினர்.
அங்கே ஹாஸ்பிட்டலில் ஐசியூ வாசலில் வசுந்தரா கவலையுடன் நிற்க வேகமாக அவரிடம் சென்று "என்னாச்சுமா?" என கேட்டாள் சக்தி. அவரின் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்ணோ சக்தியை கண்டவுடன் உறைந்து நின்றார்.
தொடரும்.....
No comments:
Post a Comment