கவலைகளை பகிர்ந்து கொண்ட பின் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த சுமித்ரா தேவியின் தோள்களை பரிவாக வருடியபடி அமர்ந்திருந்தார் வசுந்தரா பிறகு மெல்ல சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்த சுமித்ராவோ அனைவரிடமும் பொதுவாக இதுவரைக்கும் உங்க யாருக்கும் சொல்லம சமாளிச்சுடலாம் நு நினைச்சேன்.
எதோ ஒரு வகையில என் புருஷன் பண்ண தப்பை சரி பண்ணிடமுடியும் நு தோணிக்கிட்டு இருந்துச்சு அதுனாலதான் என் தம்பி பையன் நு தெரிஞ்சும் சரத்தை இது வரைக்கும் என் ஸ்டாப்சுல ஒருத்தரா வெச்சிருந்தேன்.
எங்கப்பா உயில் படி என் தம்பி மகனுக்கு என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அன்னையோட எங்க கார்டியன்ஷிப் முடிவுக்கு வந்திடும் என் மகனுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சாச்சு அதுனால கல்யாணத்துக்கு பிறகு அவனுக்கு வர சொத்தை வெச்சு என்ன பண்ணனும் நு திட்டம் போட்டு இருக்காருனு தெரியல என சொன்னார்.
அதோட இனி எங்கம்மாவையும் ரொம்பநாள் இங்க வெச்சிருக்க முடியாது வசுந்தரா திரும்ப எங்க கிட்ட வேலைக்கு வந்தது அவருக்கு தெரியாது அவர் வரத்துகுள்ளே வசுந்தராவுக்கும் ஒரு நல்ல வழி காட்டணும் என்ன பண்ணுறதுனு ஒண்ணும் புரியலை என்றபடி பெருமூச்சு விட்டு கொண்டார்.
பிறகு கலாவின் கைகளை பிடித்து கொண்டு என் நன்றிய வார்த்தைல சொல்ல முடியாத அளவுக்கு உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கேன் நீங்க மட்டும் சரியான நேரத்துல சரத்தை காப்பாத்தி உங்க பிள்ளையா வளர்க்கலேனா அவன் எப்படி எங்க இருந்திருப்பானோ? என சொல்ல...
தொண்டையை கனைத்து கொண்டு பேச துவங்கினார் கலா ஆரம்பத்துல என்னவோ குழந்தையை காப்பாத்துறதுக்காகதான் நான் வளர்க்க ஆரம்பிச்சேன் நாளாகநாளாக சரத்தையும் நானும் அவரும் எங்க சொந்த பிள்ளையாதான் பாத்தோம் அன்னைக்கு உங்களை சக்தி ஷியாம் கல்யாண மண்டபத்துல உங்களை பாத்த உடனே எங்கே உங்க கணவரும் வந்திருப்பாரோனு பயந்துதான் போனோம் அவருக்கு எங்களை தெரியாதுனாலும் சரத்தை பார்த்தா சந்தேகம் வரவும் வாய்ப்பிருக்கு என சொல்ல...
ஓ அதுனாலதான் முன்னால வராம இருந்தீங்களா? என வினவினாள் சக்தி.
நான் உங்ககிட்ட இது பத்தி கேட்டப்போ ஏன் கோபப்பட்டீங்க நு இப்போ புரியுது சாரி அத்தை உங்களை நான் தப்பா நினைச்சுட்டேன் – சக்தி.
பரவாஇல்லை சக்தி அதை அன்னைக்கே நான் மறந்துட்டேன் -கலா.
பிறகு ஸ்ரீதர் சரத்தை பார்த்து தம்பி எங்களை தப்பா நினைக்காதே உன் கிட்ட உண்மைய சொல்லணும்னு நினைக்கும் போதெல்லாம் எங்க நீ அதுக்கு அப்புறம் எங்க கூட இருக்க மாட்டியோனு தோணும் அதனாலதான் நாங்க சொல்லலியே தவிர உங்கிட்ட மறைக்கனும்னு நினைச்சதில்லை இப்போவரைக்கும் உன்னை என் சொந்தமகனாதான் பாக்குறேன்.
இப்போ வரைக்கும் உங்களை தான் என் சொந்த அப்பாம்மானு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆன அது பொய்னு தெரியவரும் போது எனக்கு சங்கடமா இருக்கு.
இதுக்கப்புறம் எப்படி நான் நம்ம வீட்டுல இருப்பேன் உங்கள எந்த உரிமைல நான் அம்மானும் அப்பானும் கூப்புடுறது என சொல்ல துவங்க அங்கே வேகமாக வந்து அவன் வாயை தன் கையால் பொத்திய ஷியாமோ போதும் பிதற்றாதே சரத் என்ன நடந்திருந்தாலும் எப்பவும் நீ என் தம்பிதான் உனக்காக நாங்க இருக்கோம் என சொல்ல ஆமாம் சரத் ஷியாம் சொல்றது சரிதான் என வழி மொழிந்தனர் கலாவும் ஸ்ரீதரும் அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஆமோதிக்கவே செய்தனர்.
சுமிம்மா என மெல்ல குரல் கொடுத்த வசுந்தரா ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சுமா எல்லாரும் சாப்பிடவாங்க என கூப்பிட வீட்டாளாய் அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார் ரத்னா.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் வீட்டிற்க்கு பெரியவராக எல்லாரும் இப்போ ரெஸ்ட் எடுங்க எதுவாய் இருந்தாலும் நாளைக்கு காலையில பேசிக்கலாம் என சொல்லிவிட்டு சென்றார் ரத்னா.
மறுநாள் பொழுது விடிந்த நேரம் அனைவருக்கும் முன்னே வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர் ஸ்ரீதரும் கலாவும் பின்னர் அங்கே காலை பானம் குடுக்க வந்த வசுந்தரா மூலம் அனைவரையும் வரவழைத்தனர்.
அனைவரும் வந்தபின் பேச்சை துவங்கிய ஸ்ரீதர் அம்மா நீங்க வர சொன்னீங்க நு சொன்னவுடனே போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம் இன்னைக்கு நாங்க ஊருக்கு கிளம்பறோம் மேற்கொண்டு என்ன பண்ணனும்னு சொல்லி அனுப்புங்கமா அதுபடியே நடக்க ரெடியா இருக்கோம் என சொல்ல அங்கே கையில் பெட்டிகளுடன் வந்த ஷியாமும் சக்தியும் கிளம்பதயாரானார்கள்.
நில்லுங்க என குரல் கொடுத்து கொண்டே வந்த சரத் என்ன விட்டுட்டு எல்லாரும் கிளம்பதயாராகிட்டேங்க இல்ல என சொல்ல அவன் முன்னே வந்த கலா அது அப்படி இல்ல சரத் இது வரைக்கும் உன்னை பெத்தவங்க கிட்ட இருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் உன்னை பிரிச்சு வெக்கவேண்டிய நிர்பந்தம் இனிமேலாவது நீ அவங்களோட சந்தோஷமா இருக்கணும் அதுனாலதான்.
அப்போது அங்கே நிலவிய அமைதியை உடைத்தது ரத்னாவின் குரல் கலாக்கா நான் வளத்திருந்தா கூட இப்படி வளத்தமுடியாது அவ்வளவு நல்லபடியா அவனை நீங்க வளத்துருக்கீங்க என்னதான் பெத்தது நானா இருந்தாலும் என் முகத்தை பார்க்கமுன்னே அவனை நான் அவனை தொலைச்சிட்டேன் இப்பொ அவனை பாக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு.
ஆனா அவன் சந்தோஷம் உங்க கூட இருக்குறதுதான் அதுனால இதுவரைக்கும் இருந்த எதையுமே மாத்த வேண்டாம் அவன் உங்க கூடவே இருக்கட்டும் இதோ இன்னமும் கொஞ்ச நாளுல நாங்களும் சென்னைக்குதான் வரப்போறோம் எனக்கு அவனை பார்க்கணும்னு தோணிச்சுனா நான் அங்க வந்து பார்த்துக்கறேன் என முடிக்க அனைவரின் முகத்திலும் நிம்மதி நிலவியது.
சுமித்ரா மேடம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நீங்க இல்லாட்டி என்னை பெத்த அம்மாவும் பாட்டியும் என்னவாகி இருப்பாங்களோ தெரியாது அதே மாதிரி ரத்னா அம்மா சொன்னமாதிரி கலாம்மாவையும் விட்டுட்டு வர முடியாது எனக்கு இந்த சொத்து மேல எல்லாம் ஆசையே கிடையாது.
அதுனால நீங்க பயப்படாதீங்க என் அப்பா உயிரோட இருந்தப்போ உங்க மேல பாசமா இருந்ததாகவும் உங்களுக்கா உங்க கணவரை பொறுத்துக்கிட்டதாகவும் சொன்னீங்க அவர் மகன் நான் மட்டும் விதி விலக்காக முடியுமா ? என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் அது உங்க மகன் கிட்டயே இருக்கட்டும்.
உங்க மனசை போட்டு குழப்பிக்காம தயவு செஞ்சு எப்பவும் போல இருங்க இங்க நடந்த இந்த விஷயம் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் எப்பவும் போல எல்லாம் நடக்குறபடியே நடக்கட்டும்என சொல்ல அனைவரும் அமைதி பெற்றனர்.
இது என்னடா சோதனை எல்லாம் அவன் நினைத்தபடி நடந்து விட்டால் மேல் கொண்டு எப்படிங்க கதைய தொடர்வது அவன் பாட்டுக்கு அவன் சொல்லட்டும் நம்ம வேலைய நாம பாப்போம் என்ன நான் சொல்றது சரியா? மக்களே....
No comments:
Post a Comment