சென்னை பன்னாட்டு விமான நிலையம்... பலமொழி பேசும் பலநாட்டு மக்களும் வந்துபோகுமிடம் மனிதனை சுமந்து கொண்டு பறவையை போல பறக்கும் இயந்திர பறவைகளின் வேடந்தாங்கல். சரத்தும் சந்தனாவும் இருபுறமும் நிற்க இருவரிடமும் சிரித்து பேசி கொண்டிருந்தாலும் சுமித்ரா தேவியின் காதுகள் ஒலிபெருக்கியின் குரலில்தான் கவனமாய் இருந்தது .
இதோ அவர் எதிர்பார்த்த அறிவிப்பை கேட்டவுடன் பரபரப்புடன் அவரின் கண்கள் சென்றது வருகை வாயிலை நோக்கிதான். அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் வெளியே வந்த அவனுக்கும் சரத்தின் வயதுதான். ஒரு கையில் மடித்து போடப்பட்ட கோட்டும் மறுகையில் பயணசுமைதாங்கிய தள்ளுவண்டியுமாய் கண்ணில் போடவேண்டிய குளிர்கண்ணாடி தலையில் இருக்க யாரையும் மயக்கும் கம்பீர அழகுடன் அவர்களை நோக்கி வந்தான் சந்தோஷ். இவந்தாங்க நம்ம கதையில குட்டி வில்லன்...
ஹலோ ஹலோ மேடம் ஒரு நிமிஷம் கொஞ்சம் நிறுத்தரீங்களா? சந்தனா எங்கிருந்து இங்க வந்தா அதுவும் சுமித்ரா தேவியோட? அப்படினு நீங்க கேக்குறது புரியுது.
இதுவும் நம்ம ஷியாம் வேலைதாங்க கொடைக்கானலுல இருந்த பாட்டிய சென்னைக்கு கூட்டி வந்ததுக்கு அப்புறமா வசுந்தரா அவங்க கிராமத்துக்கே திரும்பி போய்ட்டாங்க. அவங்க இடத்துக்கு பாட்டிக்கு காம்பேனியனா சக்திய சேத்து விட்டுட்டான் அதுமட்டுமா செஞ்சான்
சந்தனா சரத்தை காதலிக்கறதையும் அதை சரத் புரிஞ்சுக்காம இருக்கறதையும் பக்குவமா சுமித்ரா தேவிகிட்ட போட்டும் குடுத்துட்டான். இதை கேள்விப்பட்ட உடனே சுமித்ரா தேவி செஞ்ச முதல் வேலை சந்தனாவ தன்னோட PA வா அப்பாய்ண்ட் பண்ணதுதான்.
சுமித்ரா தேவி நினைச்சதென்னவோ புத்திசாலியான சந்தனா தன்னோட காதலை சரத்துக்கு புரிய வெச்சிருவானுதான். அவங்க என்னமோ ரெண்டு பேருக்கும் நல்லது பண்ணறதுக்குதான் அப்படி ஒருமுடிவு எடுத்தாங்க. ஆனா அதுகுள்ள அவங்க எல்லாரும் எவ்வளவு சோதனைய சந்திக்கணுமோ? அப்புறம் சரத் பையன் மனசுல என்ன எண்ணம் இருக்கோ? இது ரெண்டும் என்ன பண்ண போகுதுகளோ எல்லாம் ஆண்டவனுக்குதாம்பா வெளிச்சம்....
சரி இப்பொ நம்ம நடப்புக்கு வருவோம், கண்ணுல தன்னைமீறி வழியற கண்ணீரகூட தொடைக்கணும்னு தோணலை சுமித்ராதேவிக்கு. எங்கே கண் சிமிட்டினா எதிரே தெரியர தன் மகனோட உருவம் மறைஞ்சிடுமோனு பயந்தாங்க. ஆனா பாருங்க சந்தோஷ் அந்த அளவுக்கு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறவனா தெரியல.
பக்கத்தில் வந்த அவன் உதடுகள் புன்னகைத்தாலும் கண்களிலும் குரலிலும் கடுப்பை காட்டியபடியே, "ஆண்ட்டி போதும் இது ஏர்போர்ட் என கடுகடுத்தான்."
தான் பெற்ற மகன் தன்னை ஆண்ட்டி என அழைத்ததை கேட்ட சுமித்ராதேவியின் முகம் கன்றியது. பின்னர் எதோ நினைத்தபடி சந்தோஷின் தோள்களுக்கு பின்னே யாரயோ சுமித்ரா தேவியின் கண்கள் தேடின. கேள்வியாக அவரை பார்த்த சந்தோஷிடம் அவர் வரலையாப்பா என கேட்க, யாரை கேட்க்கின்றார் என புரிந்துகொண்ட சந்தோஷின் முகம் கனிவுடன் மலர்ந்தது.
"இல்லை ஆண்ட்டி பாஸ் வரல, கிளம்பும் போது கொஞ்சம் தொழில்ல இருந்த விவகாரங்கள் பத்தி தெரிய வந்தது, அதை சரி பண்ணிட்டு வருவார். இது பத்தி நேரம் கிடைக்கும் போது உங்க கிட்ட அவரே பேசுறதா சொல்லி இருக்கார்" என பதில் சொன்னான்.
ஏனோ இதை கேட்ட சுமித்ராதேவியின் முகம் வாடிவிட, மெல்ல யாருமறியாது தன்னை சுரண்டிய சந்தனாவின் செயலில் சுய உணர்வு பெற்ற அவர் சரத்தை ஏறிட்டு பார்க்க அவரின் பார்வயின் அர்த்தம் புரிந்த சரத்தோ, "ஹாய் சார் ஐயாம் சரத் நான் உங்க கம்பெனி மேனேஜர்கள்ல ஒருத்தன்" என தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
பதிலுக்கு அலட்சியமான தலையசைப்புடன் அவனை பார்த்த சந்தோஷின் தோரணையில் என்ன தோன்றியதோ சரத்துக்கு...
சுமித்ராதேவியிடம் திரும்பி, "மேம் நீங்க எல்லாரும் பின்னாடி வாங்க. நான் முன்னாடி போய் காரை எடுத்துட்டு வரேன்" என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான். இதை பார்த்து கொண்டிருந்த இருபெண்களின் மனநிலையோ இருவேறுவிதமாக இருந்தது.
சரத்தின் கண்களில் தெரிந்த வலியும் சந்தோஷின் அலட்சியமும் சுமித்ரா தேவிக்கு அதிர்ச்சியை தந்தது, என்றால் சந்தனாவிற்குள்ளே மினி எரிமலையையே வெடிக்க செய்தது. தன்னை கட்டுபடுத்தி கொண்ட சுமித்ராதேவி சந்தனாவை அறிமுகம் செய்யத்துவங்கினார்.
அழகும் குறும்பும் மின்னும் தேவதைப்பெண்ணாய் இருப்பவளை யாருக்குதான் பிடிக்காது சந்தோஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?
முதல் அறிமுகத்திலேயே ஆர்வம் மின்னும் பார்வையை அவள் மீது செலுத்தியவாரே கை குலுக்க கைகளை நீட்டினான் சந்தோஷ். ஆனால் சரத்திடம் அவன் காட்டிய அலட்சியத்தில் மனம் கொதிக்க நின்றிருந்த சந்தனா நாசூக்காக பதிலுக்கு கரம் குவித்து வணக்கம் வைத்தாள்.
ஆராய்ச்சியாக அவளை பார்த்த சந்தோஷுக்கோ உதட்டளவே எட்டிய புன்னகையும் கண்களில் கண்ட எரிமலையும் சரியாக புரியாமல் போனது அவன் துரதிர்ஷ்டமே.
அவளின் கைகூப்பலையும் கன்னத்தில் கண்ட கோபசிகப்பையும் வெட்கம் என தவறாக எண்ணிக்கொண்ட அவன் தன் தோற்றமும் செல்வநிலையும் அவளை கவர்ந்ததால் தன்னை கண்டு வெட்கப்படுவதாக எண்ணி கர்வம் கொண்டான்.
ஹாய் மிஸ் சந்தனா, "டோண்ட் பீ ஷை யா, பீல் ப்ரீ டொ ஸ்பீக் வித் மீ" என சொல்லி அவளின் கவனத்தை பெற முயன்றான்.
அதற்க்குள் காரை வாயிலில் கொண்டு வந்து நிறுத்திவிட்ட சரத் சுமித்திராவுக்கு போன் செய்ய, "போலாமாப்பா?" என கேட்டவாறே நகர துவங்கிய அவருடன் சந்தனாவும் இணைந்து கொண்டாள்.
தனக்கு பதில் எதுவும் சொல்லாததையும் சுமித்திராவுடன் இணைந்து நடந்ததையும் புதிரான பார்வையுடனும் யோசனையுடனும் கடந்தான் சந்தோஷ்.
காரின் அருகில் வந்தவுடன் சுமித்திரா பின்புறம் ஏற அவருடன் வந்த சந்தனாவோ டக்கென முன்புறம் டிரைவிங் சேட்டில் அமர்ந்திருந்த சரத்தின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள். அவர்களின் பின்னால் போன் பேசியபடி வந்த சந்தோஷுக்கோ சுமித்ராவின் அருகில் அமரவதை தவிர வேறுவழி இல்லை.
சந்தனாவின் அருகே அமர ஆசைப்பட்டவன் அதை செயல் படுத்த விடாக்கண்டனாக, சரத்தை அப்புறபடுத்தும் முயற்சியாக சரத்தை பார்த்து, "ஹேய் சரத் நீ இறங்கி வேற டேக்சி பிடிச்சு கிளம்பு. நானும் ஆண்ட்டியும் கொஞ்சம் பெர்சனலா பேசணும், ஸோ நானே டிரைவ் பண்ணிக்கறேன்" என சொல்ல கன்றிய முகத்துடன் காரில் இருந்து இறங்கினான் சரத்.
அவன் இறங்கும் முன்னே இந்தபக்கம் அமர்ந்திருந்த சந்தனாவும் இறங்கி விட அதை எதிர்பாராத சந்தோஷோ, "நோ சந்து யூ ஸ்டே தேர் ஐ வில் டிராப் யூ" என சொல்ல.
"இல்லை சார் நீங்களும் மேமும் எதோ பெர்சனலா பேசனும்னு சொன்னீங்களே, ஸோ இட்ஸ் ஓக்கே சார் நான் சரத்தோட போய்க்கிறேன். ஹீ வில்ல் டிராப் மீ டோண்ட் ஒரி. ஒன் மினிட் சரத் நானும் வரேன்" என சொல்லி விட்டு கிளம்பிவிட்டாள்.
அவள் கூறியதை கேட்ட சந்தோஷ் சரத்தை பார்த்த பார்வையில் அவளை அழைத்து செல்ல மறுக்கும்படியான கட்டளை இருந்தது.
அதை கவனிக்காத சரத்தோ, "பை சார், பை மேம், வா சந்தனா..." என கூறியவாறே விடைபெற்றான்.
இப்போது சந்தோஷின் பார்வையில் இருந்த அனலோ ஆயிரம் சூரியனின் வெப்பத்துக்கு இணையாக இருந்தது அதன் விளைவு சரத்தை பொசுக்கும் போது பீனிக்ஸ் பறவையாய் அதிலிருந்து அவனால் மீளமுடியுமா? காலம் மட்டுமே அறியும்...
இனி....
No comments:
Post a Comment