விஜய் என்னடா சொல்றா நிஜம்மாவா....
ம்ம்ம் என தலையாட்டினான்....
எங்க பார்த்த...
அப்பாவோட ப்ரண்ட் ஹாஸ்பெட்டலில் அட்மிட் ஆகிருந்தார் அவரைப் பார்க்க அம்மா அப்பா எல்லாரும் போனம் அங்கதான்....
ஓ டாக்டரா....என சதிஷ் கேட்க்க விஜய் இல்லையென தலையாட்டியவன் நர்ஸ்ஸா வேளைப்பார்க்குறா எனவும்....
என்னடா சொல்ற ,நர்ஸா என்றான் அதிர்ந்து...
ஏண்டா இவ்வளவு அதிர்ச்சி என்றதற்க்கு..
ஏண்டா உன் டேட்டஸிற்க்கு டாக்டர் இன்ஜினியர்ஸ் என வருசைக்கட்டி நிப்பாங்கடா ...
ஆனா என் மனசுல பச்சுன்னு நின்னது அவதானடா... என்றான் விஜய்.
அப்போ முடிவு பண்ணிட்ட....
ஆமா அம்மா அப்பா கிட்ட கூட சொல்லிட்டேன் எனறதும் சதிஷ் என்னது என்றான்...அதிர்ந்து....
ஆ...ஊன்னா ஏண்டா ஷாக் ரியாகஷன் குடுக்குற ,கூல் மச்சான்....கூல்.....
சரிடா அம்மாவும் அப்பாவும் என்ன சொண்ணாங்க....முதலில் அதச்சொல்லுடா என சதிஷ் பறபறக்க....
அப்பா திட்டினார் அம்மா சமாதானம் பண்ணாங்க அப்பறம் அப்பாட்ட பேசுறதா சொண்ணாங்க....
ரொம்ப அழகுடா இதில் என்ன லவ்லி ன்னா என்னை வந்து திட்டினா அப்போ அவள் முகத்தை பார்க்கனும்மே ஐய்யோ நிஜம்மா நான் விழுந்துட்டேன்...என விஜய் சொல்ல..
திட்டு வாங்குனதை எப்படி சந்தோஷம்மா சொல்றான்னு பார் என்னடா இப்படி ஆகிட்ட உனக்கு புத்தி ஏதும் கெட்டுப்போச்சா...ஆமா உன்னை எதுக்கு திட்டினா பார்த்ததும் நா உன்னை லவ் பண்றதா சொல்லிட்டியா அதுக்கு உன்னை கழுவி கழுவி ஊத்திட்டாளா...என சதிஷ் அவனை வார...
ஏண்டா அவள் என்னை திட்டுறதுல்ல உனக்கு என்ன அப்படி சந்தோஷம்டா இது வேற...என்றான்...
அது என்னதுன்னு சொல்லு நானும் கேட்குறேன் என சதிஷ் இழுவைத்தோரனையில் கேட்க்க....
அவள் எதற்க்கு திட்டினாள் என்பதை சொல்ல வெரி ஃப்யூட்டி புல் என்றான் விஜய்....
எது உன்னை அவள் திட்டினதா என்று கேட்டான் சதிஷ்....
அவளை சொண்னேன்டா...என்றான் விஜய்...
சதிஷின் எண்ணம்மோ நேற்று வரை கல்யாணம் வேண்டாம் என்று சொண்ணவன் நேத்து ஒருப்பொண்ணை பார்த்தேன் அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்றான் அவளைப்பத்தி உருகி உருகி பேசுறான்...எப்படிடா பார்த்ததும் ஒருப்பொண்னை கல்யாணம் பண்ற அளவு நிர்ணயிக்குற அதான் எனக்கு புரியல...இந்த விஜய் என் நண்பன் இல்லையே என சதிஷ் தலையை ஆட்டிக்கேட்க்க..
அதற்க்கு சதிஷைப்பார்த்து அழகாய் புன்னகைத்தவன் நினைவில் சாரலின் முகம் வர அவனிடம் இது என்னை பிசினஸ்ஸா ஒரு இலக்கை நோக்கி பயனப்பட இது வாழ்க்கையடா அதை நாம ஆத்மார்த்தம்மா உணரனும் அதை அவளை பார்த்ததும் நான் என் நாடி நரம்பல்லாம் உணர்ந்தேன் சதிஷ் அதை விளக்கி சொல்ல முடியாது என்றவனிடம் சதிஷ்...
நீ என்னம்மோ பேசுற எனக்கு ஒன்னுவிளங்கல என்று சொண்ணபோது அவர்கள் சாப்பிட நூடூல்ஸ் வந்தது அதை பார்த்த சதிஷ் என்னதுடா நூடூல்ஸ்ஸா நீ இதை சாப்பிடமாட்டியே என கேட்க்க விஜய்யோ....
எல்லாம் காரணம்மாதான் வரச்சொல்லுருக்கேன் என்றான்...
நீ சாப்பிட மாட்ட நான் சாப்பிடுவேன் என சதிஷ் கூற விஜய்யோ...ஆமாண்டா உனக்காகத்தான் இதை வரவச்சேன் இதை சாப்பிட்டு ரெடியா இரு உன்னால்ல எனக்கு ஒரு வேளை ஆக வேண்டுறுக்கு....
என்ன வேளைடா என்று நூடூல்ஷை வாயுக்குள் தள்ளியபடியே கேட்டான் சதிஷ் .....
சாப்பிட்டு முடி சொல்றேன்...ம்ம்ம் என்றான்...சதிஷ்...
விஜய்....
சொல்லுடா சதிஷ்....
எனக்கு அந்தப்பொண்ணைப்பார்கனும்மே உன்னையே மயக்குற அளவு அவளிடம் என்ன இருக்குன்னு நான் பார்க்கனும் எனவும் விஜய்யோ மனதில் ஆஹா மீன் வலையில மாட்டாம்ம கரைக்கே வந்து பிடிச்சுக்கன்னு சொல்லுதே என நினைத்தவன் சதிஷிடம்.....
ஹாஸ்பெட்டல் போனால் பார்க்கலாம்...
ஹாஸ்பெட்டல் எப்படிடா போறது சதஷ் கேட்டான்...
கார்ல்ல தாண்டா சதிஷ்....விஜய் பதில் சொண்னான்...
காருல்ல தான் ஆனா காரணம் வேண்டாம்மா என சதிஷ் கேள்வி எழுப்ப....
அதான் ரத்தம் வருதே சதிஷ்...
யாருக்கு உனக்கா என சதிஷ் பதற....
இல்லை உனக்கு என்றவன் தன் இருந்த ஸ்போர்க் கரண்டியில் அவன் முழங்கையில் கீறி விட்டான்...லேசாதான் அதில் இருந்த நான்கு கூர்மையாண பற்களும் நாளுக்கோடைப்போட்டு விட்டது...
ஆவென அலறி விட்டான் சதிஷ் என்னடா பண்ற கொலைகாரப்பயலே ஏ இப்படி பண்ண...
அசராமல் ஷோபாவில் கால் மேல் கால் அமர்ந்துருந்த விஜய் அவனிடம் நீதானடா அவளைப்பார்க்கனும்னு சொண்ண இப்போ நாம போறதுற்க்கு காரணம் கிடைச்சுடுச்சுல்ல...
அதுக்கு கொதித்து விட்டான் சதிஷ்...
அதுக்கு உன் கையை கிழுச்சுக்கனும்டா இடியட் என்னை ஏண்டா இப்படி பண்ண...ஐயோ என் அம்மா பார்த்து பார்த்து சமைச்சு ,வச்சு என் ரத்தத்தை ஊற வச்சாங்க ,இப்படி கிழிச்சு வீணா ஆகிட்டியடா பாதகா
என சதிஷ் கத்த அதை காதில் வாங்குவேணா என்றிருந்தான்.....
நீதானடா அவளை பார்க்கனும் என்ற இப்போ நான் உன் கையை கிழிச்சு விட்டேன்னா ரத்தம் வருதா இப்போ நம்ம ஹாஸ்பெட்டல் போலாம் எப்படி என்னோட ஐடியா என சிரிக்க கடுப்பாகி போனான்.....
மண்ணாங்கட்டி அவனை கொல்லும் வெறி வந்து விட்டது சதிஷ்ற்க்கு அதுக்கு உன் கையை கிழிச்சுக்கனும் படவா எனவும் விஜய்யோ...
எனக்கு வலிக்கும்மே...
அப்போ எங்களுக்கு மட்டும் சுகம்மா இருக்குதாடா...
என்னடா எனக்காக எதையும் தாங்கும் இதையமடா என் நன்பனின் இதயம் இதை எனக்காக செய்ய மாட்டியாடா என பொய்யாய் ஃபீல் பண்ண....
செய்யமாட்டேண்டா என்றான் சதிஷ்....
அப்படியெல்லாம் சொல்லாதேடா பார் ரத்தம் வருது ஹாஸ்பெட்டல் போலாம் வாடா என் தங்கம் வா...
நான் அந்த ஹாஸ்பெட்டல் போனா தானே நீ அந்த பொண்னை பார்ப்ப நா அந்த ஹாஸ்பெட்டல் வரமாட்டேன்..முதலில் சாரலை அவள் இவள் என்று தான் பேசினான் சதிஷ் விஜய் அவளை மனைவியாக்குவேன் என தீவிரமாய் இருப்பதாள் இனி நான் அப்படி கூப்பிடுவது முறையல்லவ்வே அதனால் வா போ என மாறிருந்தது பேச்சு சதிஷிற்க்கு....
அதையும் பார்ப்போம் என்றவன் சதிஷை இழுத்துக்கொண்டு போய் காரினுள் தள்ளி கார் கதவை மூடினான்...
கடவுளே இவன்னிட்ட இருந்து என்னைக்காப்பாத்தும் இவன் கல்யாணம் பண்றதுக்குள்ள என்னை கொன்னுறுவான் போலயே இவன் ஃப்ரண்ஷிப்பை கட்பண்ணி விடு முதலில் என கடவுளை வேண்ட....
ம்கும் அது நடக்கவே நடக்காது ஏழு ஜென்மத்துக்கும் நீதான் என் தோழன் என்னிட்ட இருந்து தப்பவ்வே முடியாது என வில்லன் மாதிரி விஜய் பேச....
ஊருக்குல்ல பத்து ப்ரண்ட்ஸ் வச்சுறுக்கவன்னல்லாம் சந்தோஷம்மா இருக்கான் ஒரே ஒரு ப்ரண்டை வச்சிட்டு நான் படும் அவஷ்த்தை தாங்க முடியலடா சாமி என கத்த விஜய் இதழில் புன்முறுவள்....பூத்தது....
ஹாஸ்பெட்டல் வந்தனர் சதிஷ் விஜய்யிடம் டே முதலில் எனக்கு டிரிட்மெண்ட் அப்பறம் தான் எல்லாம்மே எனவும் பொளச்சு போ என்றான்...
டாக்டர் இந்த காயம் எப்படி வந்தது என கேட்க சதிஷ்ஷோ ..
டாக்டர் இப்ப அதுவ்வா முக்கியம் எரியுது டாக்டர்...
இந்த சின்ன காயத்தைக்கூட உங்களால் தாங்க முடியாதா மிஸ்டர் சதிஷ் என டாக்டர் கேட்க விஜய்யும் சேர்ந்து...
ஆமா டாக்டர் நான் கூட அதைத்தான் சொண்னேன் என்றவனை சதிஷ் முறைக்க வாயை மூடிக்கொண்டான் விஜய்....
சிஸ்டர் இங்க வாங்க இவரை அழைச்சிட்டு போய் காயத்தைக் கிளின் பண்ணி ஆயில்மென்ட் போட்டு விடுங்க..
ஓக்கே சார் என்னோட வாங்க எனவும் சிஸ்டரை பின் தொடர்ந்தனர் அறையை விட்டு வந்ததும் விஜய் கண்கள் சாரலை தேடி சுற்றும் முற்றும் துலாவ அவன் கண்களுக்கு அவள் தென் படவ்வே இல்லை...இப்பொழுவது யாரிடம் கேட்பது என யோசனை ஓட இந்த, பொண்ணுட்டவே கேட்கலாம் என தங்களை அழைத்து வந்த நர்ஸ்ஸிடம்மே கேட்டான்....
சிஸ்டர் சாரல் இல்லையா....
இருக்காங்க நீங்க யாரு அந்த அக்காவுக்கு....
அவங்க கசிண்ஸ் பட்டென்ன பொய்சொண்னான் விஜய்.." சதிஷ் அவனைப்பார்க்க எப்படி" என்பதைப்போல் பார்த்தவன் மீண்டும் அவளிடம் அவங்க இருந்தா வர சொல்ல முடியும்மா தங்கச்சி என்றான்....
சிஸ்டர் வார்த்தைக்கு வேல்யூ
ஜாஸ்தி அங்க அடித்தான்
விஜய்...அந்த பொண்னும் அந்த வார்க்கு அடங்கி ஓ..இப்பவ்வே
நர சொல்றேன்னா என்றப்படி ஓடி விட்டாள்....
விஜய் சதிஷ்ஷிடம்
பாவம் சின்னப்பொண்னு எது சொண்ணாலும் நம்புது என அவளுக்காக பாவப்பட்டான் விஜய்...
இனி வரப்போறப்பொண்ணும் பாவம் தான் என இப்பொழுது சாரலுக்கு வருத்தப்பட்டான் சதிஷ்...
அவனைப்பார்த்து முறைத்தவன் பின்பு சாரலை எதிர் பார்த்து வாயிலுக்கு கண்களை விட்டான்...
அக்கா உங்க கசிண்ஷ் வந்துருக்காங்க எனவும் சாரலோ என்னது கசின்ஷ்ஷா யாரா இருக்கும் எங்க இருக்காங்க மதி...அதோ மெடிக்கலில் எனவும் யாராருக்கும் என்றபடி அவள் அந்த அறைக்குள் வர விஜய்யைப்பார்த்து அதிர்ந்தவள் போக எத்தனிக்கையில் சாரலைப்பார்த்துவிட்ட விஜய் சதிஷ்ஷின் கையை நன்கு கிள்ளி விட்டான்..
ஆ..வென அவன் கத்த வலியில் கத்துவதாய் எண்ணிய சாரல் அதற்க்கு மேலும் போக மனமில்லாமல் திரும்பி அவனிடம்மே வந்தாள்...
ஹாய் என சொண்ணவனை கோபத்துடன் பார்த்தவள் இப்ப என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு என்னைத் தொந்தரவு பண்ணிறுங்க என சற்று காட்டம்மாகவே கேட்டாள்....
அதுக்கெல்லாம் அசர்ரவன்னா நம்ம விஜய் தொந்தரவ்வா நானா இல்லவ்வே இல்லை இவன் என் ப்ரண்ட் இவனுக்கு அடிப்பட்டிருச்சு அதற்க்கு தான் வந்தோம் என பாவம்மாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல....
அடிப்பட்டது என்னவ்வோ உண்மைதான் ஆனால் இவன் சொல்வது பொய் என நன்கு தெரிந்தது அவளுக்கு....
சீட்டைக் கொடுங்க என கடுப்புடன் கேட்டாள்....
கொடுடா சதிஷ் பாவம் ரத்தம் வருது வலிக்குதுன்னுக்கூட சொண்ணா என்று சொண்ணவனின் கவனம் சாரலை சுவாரஷ்யம்மாய் பார்க்க ஆரம்பித்தது...
தன் நண்பனின் இந்த அழகான சேட்டையிலும் குறும்பு செயலையும் பார்த்த சதிஷ்ற்க்கே இப்பொழுது சிரிப்பு தாள முடியவில்லை பெரும் பாடுப்பட்டு அடக்கி கொண்டான்....
விஜய் கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வித கம்பிரம்மான நிறம். சாரல் தங்கமென ஜொலிக்கும் கோதுமை நிறம் பிரம்மன் இவளை எனக்காக படைச்சுறுப்பார் போல ஆனாலும் இவளுக்கு நான் கொஞ்சம் மேட்ச் இல்ல தான் ஆனால் இவளுக்கு என்னத்தானே மேட்ச்சரா போட்டுறுக்கார்..அது வரைக்கும் கடவுளுக்கு ஒரு கும்பிடு என்றவனை கலைத்தது சாரலின் குறள்...
ஆயில் மெண்ட் மட்டும் தான் என்றவள் அவனது கையை பதம்மாகப் பிடித்து மருந்தை தடவி விட்டாள்..அந்த பிடியிலையே தெரிந்து விட்டது இவள் எவ்வளவு மென்மையானவள் என்று விஜய்யின் தாக்குதலை எவ்வாறு எதிர் கொள்ளபோகிறாள் என்று எண்ணும் போதே சதிஷ்ற்க்கு கவலை வந்தது...
கொஞ்சம் எரியும் பொறுத்துக்கோங்க எனவும் சதிஷ் ஓக்கே சிஸ்டர் என்றான்..
உனக்கு சிஸ்டர் தான்டா மச்சான் என விஜய் சொல்ல இப்பொழுது சாரலும் சதிஷும் ஒரு சேர முறைக்க மெல்லிய சிரிப்புடன் விஜய் வாயை மூடிக் கொண்டான்....
அவளை எடைப்போட்ட படி தான் இருந்தான் சதிஷ் விஜய்க்கு இவளை விட பொருத்தமாக யாரும்மே இருக்க முடியாது என்று தான் எண்ணினான் ஆனால் மனப்பொருத்தம் என நினைக்கும் பொழுது வெறும் வெற்றிடம்மே தோண்றியது அது நண்பனின் வாழ்வ்வை வளமாக்காமல் விட்டு விட்டாள் மனதில் பெரும் பாரம் ஏறியது சதிஷ்க்கு......
No comments:
Post a Comment