Click here to get all parts |
சாரல் கோபம் வந்து அவள் கன்னத்தில் பளார் என அறை விட இன்னொரு அறை விட தான் நினைத்தாள்.ஆனால் "அக்கா என தன்னை கட்டிக்கொண்டு அழுபவளை என்ன சொல்வது என தவித்து போனாள் சாரல்.....
பின் நிதானம்மாக " சரி எப்ப போய் பேசட்டும் என கேட்க்க நிமிர்ந்த பார்த்த சர்மியின் முகம் வெளிச்சத்தாள் பிராகாசித்தது....
ஞாயிற்றுக்கிழம்மை வந்து பேச சொன்னார்....
அப்படி பேசுறதா இருந்தா அவங்க தான் வந்து பேசனும் சர்மி நம்மள வந்து பேச சொல்றது என்ன முறை என்று சொண்ணதும் சர்மியின் முகம் வாட....
ஓ பணக்கார வீட்டு முறை போல என இகழ்ச்சியாய் சொல்ல பிறகு "ம்ம் வேற வழி என்ன பண்றது உன் உயிர் போகவ்வா அப்பா நம்மள கஷ்டப்பட்டு வளர்த்தார்.....
மறு நாள் காலையில் சமித் சர்மியிடம் வந்தான் "நான் அக்காட்ட சொல்லிட்டேன் அவ வந்து பேசுவா"என்றவள் எதுவும் பேசவில்லை கிளம்பி விட்டாள்.....
"உலகத்திலையே காதலிக்கிறதை இவ்ளோ சோகம்மாய் சொண்ண இவள் தான் ''என நினைத்தான் சமித்
இரண்டு நாள் கழித்து சதிஷ் விஜய் வீட்டிற்க்கு வந்தான்.என்னடா காலையிலையே வீடு தேடி வந்துருக்க எதாவது முக்கியம்மா எதாவது பேசனும்மா...
ஏன் எதாவது முக்கியம்மா இருந்தா தான் வரனும்மா"சரி அப்படி எதுவும் இல்லை நான் கெளம்புறேன் என்றவனை "சரிடா தெரியாமல் சொல்லிட்டேன் நீ எப்ப வேணாலும் வரலாம் இது உன் வீடு என்றான் சிரித்து.......
அதான்டா அந்த சமித் பத்தி விசாரிக்க சொண்ணல்ல அவனை பத்தி சிலதை தெரியமுடிஞ்சது அதான் சொல்லிட்டு போலாம்னு......
ம்ம் சொல்லு......
அவன் ஃபேங்ல்ல ஒர்க் பண்றான்.உன் மச்சி நிச்சியை விரும்புறான் போல கல்யாணம் பண்ண ஆசைப்பட்றான்.....
ஓ...அதான் என் வீட்டில் வந்து பேச சொல் எனக்கு சரியான பதில் சொல்லிட்டு போன்னு அவன் அவள்ட்ட கத்திட்டுறுந்தானா என அவர்கள் பேசியதை அறைகுறையாய் கேட்டுறுந்தான் விஜய்......
ஆனா சர்மிளா அவனை விரும்புறான்னுதான் தெரியலை என்றதற்க்கு விஜய்யோ"அதல்லாம் பயங்கரம்மா நான் அவள் கையை பிடிச்சான்னு நான் அவனை அடிக்க போனா அவள் அவன் முன்னாடி வந்து நிக்குறா....
அப்போ லவ்வோ லவ்தான் என்று சிரித்தான் சதிஷ்....
ஆனா பொண்ணு வேணும்னா இவன் தான்னே போய் பேசனும் ஆனா இவங்கள வந்து பேச சொல்றேன்.....
அப்படி போய் கேட்டா இவங்க கெளரவம் என்ன ஆகறது......
இப்படி இருக்கிறவன் நாளைக்கு கல்யாணம் பண்ணா அவன் அவங்க அம்மா அப்பாவுக்கு பயந்திட்டே அவளுக்கு ப்ரீடம் தரவும் மாட்டான் அவளை சந்தோஷம்மாவே வச்சிக்க மாட்டானே சதிஷ்......
நான் கல்யாணம்மே நடக்காதுன்னு சொல்றேன்.நீ ப்ரீடத்துக்கு போயிட்ட.....
ஏண்டா அப்படி சொல்ற.....
சமித் பய்யனோட அப்பன் இருக்காரே அவருக்கு பெரிய லாடு லபக்குதாஸ்ன்னு நினைப்பு.அவர் யார்ட்ட வேல பார்க்கிறார் தெரியும்மா உன் அப்பாவோட ப்ரண்ட் துரை இருக்காருல்ல அவர்ட்ட தான் வேளைப்பார்க்கிறார்.சம்பளம் அள்ளி கொடுப்பார் போல ஹய் ஃபை லைஃய்ப்.தகுதி,தராதரம்,கெளரவம்னு பார்க்குறவனுங்அ மாத சம்பளத்தை எதிர் பார்த்து வாழ்க்கையை ஓட்டும் சர்மி குடும்பத்தில் எப்படி தன் பய்யனுக்கு பொண்ணு எடுப்பார் சொல்லு ....
ஆனா என்னோட திங்கிங் சரினா இன்னியாரம் சர்மி சாரல்ட்ட தன்னோட லவ்வ சொல்லிருப்பா"சாரலை பத்தி நான் தெரிஞ்ச வரைக்கும் தான் தகுதியை மீறி ஆசைப்படமாட்டா அனால் தன் தங்கச்சி விஷயத்துல்ல அப்படி இருக்க மாட்டா கண்டிப்பா சமித் வீட்டுல்ல போய் பேசுவ்வா என்றான் விஜய்....
பேசுவாங்கதான் ஆனா அவங்க கேட்ப்பாங்க சர்மிக்கு நூறு பவுன் போடுங்க ஒரு கார் வாங்கி குடுங்கன்னு அதல்லாம் சர்மி குடும்பத்தால்ல என்னைக்கும் செய்ய முடியாது அதனால்ல இந்த கல்யாணமும் நடக்க வாய்ப்பே இல்லை என்றான் சதிஷ்.....
விஜய்யின் மூளை எதையோ கணக்கு பண்ணிக்கொண்டு இருந்தது."அப்போ இந்தக்கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைக்கிறியா என்றான் விஜய் விஷம்மாய் சிரித்து......
அவனது சிரிப்பை பார்த்த சதிஷ் "என்னவ்வோ ப்ளான் பண்ணிட்டான்"அவனிடம்"என்னடா சிரிப்பே ஒரு மாதிரி இருக்கு என்னதுன்னு சொல்லு நானும் தெரிஞ்சுக்கிறேன்.சமித் சர்மிளா கல்யாணத்தைப்பத்தி யோசிக்கிறியா....
ம்கும் என்றான் தலையை ஆட்டி.....
"பின்ன"எனக்கேட்டான் சதிஷ்.....
என் கல்யாணத்தைப்பத்தி .....
என்னடா "சாரலோட மனசை மாத்தமுடியாது.அதனால்ல அம்மா அப்பா பார்க்கிற பொண்ணயே கல்யாணம் பண்றதே மேல்ன்னு நினைச்சிட்டய்யோ என்றான் சதிஷ் நக்கலாய்...
அவனை முறைத்தவன் அவனிடம்"என் கல்யாணம்"ஐ மீன் சாரலும் நானும் பண்ணப்போற கல்யாணத்தைப்பத்தி....
என்னம்மோ அந்த பொண்ணு உன்னை இப்பவ்வே கல்யாணம் பன்ன ஒத்த கால்ல நிக்கறமாதிரி சொல்ற....
அவளே வந்து சொல்லுவ்வா என்னை கல்யாணம் பண்ணிகிங்க விஜய்ன்னு.....
எப்படி .....
டீல் பேசப்போறேன்......
என்ன டீல் என்னதுன்னு சொல்டா.....
சாரல் அவ குடும்பத்து மேல உயிரையே வைத்துருப்பவள்....
அதனால்ல "சதிஷ் அவனை கூர்மையாக நோக்க...
அவளிடம் நேரில் போய் பேசப்போறேன்.....
என்ன பேசப்போற "சதிஷ் படபடக்க.....
அதைப்பார்த்த விஜய் "நீ ஏண்டா இவ்ளோ டென்ஷன் ஆகுற.....
ஆமா நீ பேசுறதைப்பார்த்தா டென்ஷன் தலைக்கு ஏறுது.ஆனா எனக்கு ஒன்னும்மட்டும் தெரியுது.நீ பெரிய குண்டைத் தூக்கி தலையில போடப்போறேன்னு மட்டும் நல்லா தெரியுது.....
சாரல்ட்ட போய்.....
போய்.....
சமித் சர்மிளா கல்யாணம் நீ பேசி நடக்க போறதுல்ல.நான் அவங்க கல்யாணத்தை நடத்தி வக்கிறேன் அதுக்கு ஃபேவரா....
"அதுக்கு ஃபேவரா" சதிஷ்ற்க்கு இதயப் துடிப்பு எகிறியது.....
அதுக்கு ஃபேவரா என்னை நீ கல்யாணம் பண்ணிக்கனும் என சொல்லப்பேறேன் என்றதும் சதிஷ் அதிர்ச்சியில் உறைந்தே போனான்......
No comments:
Post a Comment