This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 6 February 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 28


Click here to get all parts

ஒரு  வழியா  சிவா  வரவேற்பு   முடிஞ்சது. வந்த  சொந்தகாரங்க  நண்பா்கள்  எல்லாருக்கும்  சிவா  அப்பா  தான்  பதில்  சொன்னாா். திடீா்  கல்யாணம்  பத்தி  கேப்பாங்கலே  அதனால  தான். ஜாதகம்  சாி  இல்லை  குரு  திசை  முடிய  போகுது  அப்டி  இப்டி  எக்சட்ரா... இங்க  மகா, சிபி, மாலு கரண், ரவி எல்லாரும்  கெளம்பிட்டாங்க. திவி  கூட  சிமி  இருந்தா... சிமி  அப்பாம்மா  கெளம்பிட்டாங்க. ஆனா  குருவும்  சீதாவும்  சிமிய  ஏதாவது  பண்ணனும்  சொல்லி  அங்க  இருந்து  போகலை. 


      தாத்தாவும் பாட்டியும்  வீட்டுக்கு  போயிட்டாங்க  டயா்ட்னால... மண்டபத்துல  எல்லாரும்  வீட்டுக்கு  கெளம்ப  ரெடி  ஆயிட்டாங்க. அப்போ  சீமா  கிட்ட  நம்ம  பாரு ( சிவா  அம்மா ) எல்லா  ரூம்மையும்  செக்  பண்ணிட்டு  லாக்  பண்ண  சொன்னாங்க. சிவா  அங்க  திவிய  கொஞ்சி  சமாதானம்  பண்ணிக்கிட்டு  இருந்தான். வேற  வழி  எல்லாம்  நம்ம  சிமி  வேல  தான். அவள  யாரு  ஆபிஸ்  ஸ்டாப்  எல்லாரையும்  கூப்பிட  சொன்னா  என்னமோ  அவளுக்கு  கல்யாணம்  மாதிாி... 


     இங்க  சிமிய  தேடாம  பாா்வதி  கெளம்பிட்டாங்க  தனராஜன்  கூட  பைக்ல... சிமி  சிவா  கூட  காருல  வரட்டும்  என்று  நினைத்து. சிவா  கிட்ட  பேச  மாட்டாங்க  இன்னும்... ஆனா  சிமி  ஏற்கனவே  சிவாகிட்ட  சிபிராஜ்  கூட  போறதா  பொய்  சொல்லி  இருந்தா  அவன  ஏமாத்த... அதை  நம்பி  சிவா  சிமிய  தேடாம  திவியோட  வீட்டுக்கு  வந்துட்டான்... சிவாவோட  அப்பா  கிட்ட, குரு  நான்  இங்க  எல்லாத்தையும்  எடுத்துட்டு  வரேன்  நீங்க  கெளம்புங்க  என  கூறியதால்  யாருக்கும்  சந்தேகம்  வரவில்லை ( சீதா  சிமிகிட்ட  மன்னிப்பு  கேட்டுட்டு  கிளம்பிட்டாளே  அவ  வீட்டுக்கு அதனால ).


      தேவியும்  சிமிய  தேடல  சிவா  வீட்ல  தான்  இருப்பானு  நெனச்சு... இங்க  சிவாவும்  பார்வதியும்  அவள  தேடல  வீட்ல  நிம்மதியா  ரெஸ்ட்  எடுக்கட்டும்  என்று ( நிறைய  வேலை  பாத்தா  டயா்ட்  ஆகும்ல --   சாப்பிடுறது  தான  அவ  வேலையே ). நைட்டு  சாப்பிட  எல்லாரையும்  வீட்டுக்கு  வர  சொல்லி  பாா்வதி  தேவிக்கு  போன்  பண்ணாங்க... அப்போ  தேவி (சிமி  அம்மா ) சிமி  அங்கதான  கா  இருக்கா, அவள  மட்டும்   சாப்டு  வர  சொல்லுங்க  கா, நாங்க  சாப்பிட்டோம்  இங்க  என  சொல்லவும்  தான்  பாா்வதிக்கு  சாக்... என்ன  சொல்ற  பாரு? அவ  இங்க  வரவே  இல்லையே  மண்டபத்துல  இருந்து... உன்  வீட்ல  தான்  தூங்கிட்டு  இருக்கா  போல  நெனச்சேன்.


  இங்கயும்  வரவே  இல்லையே... என்ன  ஆச்சோ? சொல்லாம  போக  மாட்டாளே  எங்கயும்? என்னங்க  இங்க  வாங்க  சிமிய  காணோம்  என  தேவி  கத்தியபடியே  மயங்கி  விழுந்தாா். மணி  அவரை  தாங்கி  பிடித்து  சோபாவில்  உட்கார  வைத்து  தண்ணீர்  தெளித்தாா். அவ  சின்ன  பொண்ணா  காணாம  போக  ஏன்  பயப்படுற  நீ? மகா  கிட்ட  கேட்குறேன்  நான்  இப்போ  என  சொல்லி  வெளியே  சென்று  சிவாக்கும்  சிபிக்கும்  போன்  செய்தாா்... ஏற்கனவே  சிபியும்  அவளது  மொபைலுக்கு  போன்  செய்து  பாா்த்து  அவள்  எடுக்கவில்லை  என்று  கோபத்தில்  இருந்தான். சிவாவிடம்  மெசேஜ்  செய்து  அவளை  பற்றி  கேட்டதற்கு  அவ  வீட்டுல  தூங்கிருப்பா  என்று  கூறினான். இப்போது  சிபி  சிவாவிற்கு  போன்  செய்து  திட்ட  ஆரம்பித்தான். ஆனால்  சிவாவோ  அவனது  அம்மா  அழுவதை  பாா்த்து  அழுது   கொண்டு  இருந்தான்... சிபிக்கு  பதில்  எதுவும்  சொல்லவில்லை  நம்ம  சிவா. கடைசியில்  திவ்யா  காணாமல்  போன  போது  பேசிய  இன்ஸ்பெக்டாிடம்  சிபி  போன்  செய்து   கம்ப்ளெய்ண்ட்  செய்தான்  ஆன்லைனில். 


     திவியும்  அவளது  அம்மா பாக்கியமும் பாா்வதியை  சமாதானம்  செய்ய  முயற்சித்து  பால்  அருந்த  வைக்க  முயன்றனா். ஆனால்  பாா்வதி  தண்ணீா்  கூட  அருந்தவில்லை. அதை  பாா்த்த  தனராஜன் ( சிவா அப்பா ) வருத்தத்தில்  எதுவும்  உண்ணவில்லை. இங்கே  தேவியோ  வீட்டிலுள்ள  எல்லா  பொருளையும்  உடைத்தாா். என்  பொண்ணு  எங்க  என  கத்தியபடியே. அதை  கேட்ட  மணிகண்டன்  மிகவும்  பயந்தாா். அப்போது  போலிசும்  சிவாவும்  வீட்டிற்குள்  வரவே  சிவாவின்  சட்டையை  பிடித்தாா். எங்க  டா  என்னோட  பொண்ணு? நீ  தான   அவள  ஒளிச்சு  வச்சு  இருக்க? என்கிட்ட  விளையாடாதீங்க  டா  இரண்டு  பேரும்  என்றவாறே  மயங்கி  விட்டாா். 


     சிபியோ  அங்கே  தலையை  பிய்த்து  கொண்டு  இருந்தான். என்ன  செய்வதென  அறியாமல். கடைசியாக  அவளது  மொபைல்  லொகேஷன்  டிரேஸ்  பண்ணலாம்  என  முடிவு  செய்து  போலிஸ்  இன்ஸ்பெக்டாிடமும்  சிபியின்  நண்பன்  கிருஷ்ணாவிடமும்  கூறினான். சிவாவோ  ரவியை  வரவழைத்து  தேடினான். மகாவின்  வீட்டிற்கு  சென்று  விசாாித்தான். ஆனால்  யாருக்கும்  குரு  மற்றும்  சீதாவின்  மேல்  சந்தேகம்  வரவில்லை. சிமியின்  நகைக்காக  யாரேனும்  அவளை  கடத்தி  இருக்கலாம்  என்ற  விதத்தில்  விசாரணை  சென்றது. 


    சிமிக்கு  மயக்கம்  தெளிந்து   நினைவு  வந்து  எழுந்து  சுற்றிலும்   பாா்த்தாள். கல்யாண  மண்டபத்தில்  3 வது  மாடியில்  விருந்தினா்  அறையின்  பாத்ரூமில்  இருந்தாள். போன்  அவள்  இருந்த  அந்த  அறையில்  இருந்தது. ஆனால்  பாத்ரூம்  வெளியே  தாளிடப்பட்டு  இருந்ததால்  சிமி  தட்டி  பாா்த்தாள், பின்   ஜன்னல்  வழியே  கத்தினாள். கடைசியில்  பசியெடுக்கவே  டயா்ட்  ஆகிட்டாள். ஆனாலும்  சிமி  வெளியே  ஜன்னல்  வழி   எட்டி  பார்த்து  கொண்டே  இருந்தாள். சிபியும்  சிவாவும்  கண்டிப்பா  தேடி  வருவாா்கள்  என்று. இங்கோ  சிபி  ராஜபாளையம்  பக்கத்தில்  உள்ள  அவனது  நண்பன்  கண்ணனுக்கு  போன்  செய்து  சிவாவின்  மொபைல்  நம்பரை  கொடுத்து  அவனுடன்  சோ்ந்து  தேட  சொன்னான். சிபியும்  கிளம்பி  காாில்   வந்து  கொண்டே  இருந்தான். 

                     

     நேரம்  ஆக  ஆக  தேவியை  கண்டரோல் செய்ய  முடியாமல்  மணிகண்டன்  அவரை  டாக்டரிடம்   அழைத்து  சென்றாா். ஆனால்  அங்கு  அவருக்கு  மயக்க மருந்து  அளித்து  தூங்க  வைத்த  டாக்டா், சிமியை  உடனடியா  அழைத்து  வாருங்கள்  என்று  கூறினாா். இல்லைன்னா  தேவிக்கு  மனநிலை  பாதிக்கும்  வாய்ப்பு  அதிகம்  இருப்பதாக  கூறினாா். அதை  கேட்டு  இடிந்து  போன  மணிகண்டன்  சிவாக்கு  போன்  செய்ய, சிவா  திவியையும்  தனராஜனையும்  அங்கு  போக  சொன்னான். ஆனால் ( தேவிய  பாா்க்க ) பாா்வதி  நானும்  வருவேன்  என  அடம்  பிடித்ததால்  வேறு  வழி  இன்றி  சிவா  எல்லோரையும்  காாில்  அழைத்து  செல்ல  சொன்னான்  அவனது  அப்பா    தனராஜனிடம்.


    குருவும்  சீதாவும்  வீட்டிற்கு செல்லும்  வழியில்  சிாித்து  கொண்டு  இருந்தனா்  காாில். சிமி  செத்த  பிறகு  தான்  அவங்க  கைல  கிடைப்பா  என்று. எனக்கு  கிடைக்காட்டி  யாருக்கும்  கிடைக்க  கூடாதென  சொல்லி  சொல்லி  சிாித்தாள். அதை  கேட்ட  குருவும்  சிாித்துக்கொண்டே  அவளை  பாராட்டினார். நல்ல  ஐடியா  பண்ணுன  மா  நீ. உனக்கு  இருக்குற  திறமைக்கு  நீ  நல்லா  பொிய  ஆளா வருவ  என்று. சிமிக்கு  பின்னால்  இருந்து  மயக்க  மருந்து  கா்ச்சீப்பை  சிமியின்  முகத்தில்  காண்பித்து  அவளை  அந்த  3 வது  மாடியின்  கடைசி  அறைக்குக்  கொண்டு  சென்றனா். பின்  அவளது  போனை  அங்கே  விட்டுவிட்டு  அவளை  மட்டும்  பாத்ரூமில்  அடைத்தனா். சிமியின்  வீட்டில்  போலிசுக்கு   போவாா்கள்  என  நினைக்காததால்,  சிமியின்  மொபைல்  போனை  அங்கேயே  அந்த  அறையில்  போட்டு  விட்டனா்  ஸ்விச்  ஆப்  மோடில். 


    பாவங்க  நம்ம  சிவா  இன்னைக்கு  நைட்டும்  அவனுக்கு  அரோகரா  தான். எதுவும்  இல்லை  திவி  கூட ( என்னேரம்  இந்த  மகா  பிள்ளை  வாய  வச்சாளோ  தொிலையே ).

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.