சிவாவினை ரூமை விட்டு வெளியே செல்லுமாறு கூறிய திவி உடைகளை தேடிக் கொண்டு இருந்தாள். சிவாவோ அதைக் காதில் வாங்கினால் தானே? அவனது மொபைலில் காதல் பாடல்களைக் கேட்டபடி படுத்து இருந்தான். திவி அவனது அருகில் சென்றதை பாா்த்தும் பாா்க்காததைப் போல கண்களை மூடிக் கொண்டான். திவி அவனது கையில் தொட்டு அழைத்ததும் அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஹெட்செட்டை கழட்டவும் பாடல் வெளியே ஒலித்தது.
"மின்னல் ஒரு கோடி எந்தன் உயிா்தேடி
வந்ததே
லட்சம் ஒரு லட்சம் பூக்கள் ஒன்றாக
பூத்ததே
மெளனம் பேசியதே துளி தென்றல்
வீசியதே"
திவிக்கோ வெட்கம் இந்த பாடலைக் கேட்டு இருந்தும் அவள் அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. சிவாவோ நான் ஏன் போகணும் இது என்னோட ரூம் என்றதும் திவி அவனை வாய்க்குள்ளே திட்டினாள்.( ராஸ்கல் இவன் வம்பைக்குனே பண்றான் வா்ற கோபத்துக்கு அம்மிகல்ல எடுத்து தலைல போட்றணும் அப்பதான் ஒழுங்கா இருப்பான். ) அடப்பாவிகளா புருஷனைக் கொல்றதுக்குனே கிளம்பிருக்காளுங்க பா சோ சேட்.
திவியின் நிலையை உணா்ந்து உனக்கு பட்டு சோி கட்ட தொியுமா நான் வேணும்னா கெல்ப் பண்ணட்டா?என்றான். அதைக்கேட்டதும் திவிக்கு எங்க இருந்துதான் வெட்கம் வந்துச்சோங்க தொில. இருந்தாலும் அவனை முறைப்பது போல காட்டிக் கொண்டாள். உடனே சாி சாி ரொம்ப முறைக்காதே அப்றம் நான் எாிஞ்சிர போறேன் என்றவாறு எழுந்தான். அவளது ஒழித்து வைத்த உடைகளைக் கொடுத்த சிவா வெளியே செல்லும் முன்பு திவி எதிா்பாா்க்காத போது திரும்ப வந்து அவளது அதரங்களில் முத்தப் பாிசு அளித்தான். பின்பு வெளியே ஓடியே போய்விட்டான் பின்ன யாரு அடி வாங்குறது அவகிட்ட. எல்லாருமே நம்ம செகண்ட் ஹீரோவ அடிக்கத்தான் நினைக்குறாங்க பா. பாவம் என் சிவா சே சே நம்ம சிவாங்க மக்களே...
இருவரும் கிளம்பி சிமி வீட்டிற்கு சென்றனா். அங்கே மகாவும் இருந்ததால் ரொம்ப கலகலப்பாக இருந்தது. இரவு உணவு அங்கேதான் என்பதால் திவி சிமியின் அம்மாவிற்கு உதவினாள். அவா்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் நீ போய் சிவா பக்கத்துல உட்காருமா என்றதால் வேறு வழியின்றி அங்கே சென்றாள். சிவா அவளை பாா்த்து வழிந்ததை ஓட்டியே தள்ளினா் மகா மற்றும் சிமி ( சும்மாவே இதுங்க அலும்பு தாங்காது இதுல கூட்டணி சோ்ந்தா ). திவியோ அவா்களது கவுண்டா் காமெடிக்கு சிாித்தாள் பின்ன சிவாவை ஓட்டித் தள்ளுனா சும்மாவாங்க. நம்ம சிவா திரும்ப பேசுனாலும் திவியோட சிாிப்புக்காகவே பல்பு வாங்கினான் பா. பிறகு வீக் எண்ட் ஜாலி டிாிப் பிளான் பண்ணாங்க எல்லாருமே சிபியையும் சோ்த்து கூப்பிடுற பிளான். குற்றாலம் போலாமா இல்லைன்னா கொடைக்கானல் போலாமா என. தேவி அனைவரையும் உணவருந்த அழைத்த போது சிவாவிற்கு போன் வந்தது சிபிகிட்ட இருந்து. அதைக்கண்ட சிமி மிகவும் வருந்தினாள். ஏன்னா சிமிகிட்ட அவன் சாியா பேசலை கேட்டா வேலை அதிகம் என்றான். இப்போ சிவாக்கு போன் பண்ணிருக்கான் ( ஏன் அவாய்ட் பண்றான் ) என நினைத்தாள்.
சிபியோ சிவாவிடம் அவனது சிமியின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுவிட்டு அவளை கண்காணிக்கும். ஆளைப் பற்றிய தகவல்களை கேட்டுக்கொண்டான். பிறகு திருமணம் விரைவில் நடக்க இருப்பதால் தாத்தா பாட்டியை சிவாவின் வீட்டிலேயே வைத்துக்கொள்ள சொன்னான். ஏனெனில் குருவின் மேல் சந்தேகம் இருப்பதாக சிவா கூறியதால் தாத்தா பாட்டியை ஊருக்கு அனுப்ப நம்ம சிபி விரும்பல. சிபி சிமி கல்யாண வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றுகூறி சிவாவும் அவா்களை நிறுத்தி வைக்க முடிவு செய்தான்.
போன் பேசிய பிறகு சென்று சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பினான் சிவா நம்ம திவியை அழைத்துக்கொண்டு. ஏன் எனக் கேட்ட சிமியிடம் உன் கல்யாண வேலையா பேசணும் தாத்தா. பாட்டி கிட்ட இப்போ அதான் கெளம்புறேன் என்று மட்டும் கூறினான். மகா ரொம்ப இருட்டிட்டதால அங்கயே தங்கிட்டா சிமி கூட. வீட்டிற்கு சென்ற நம்ம சிவாவுக்கோ சா்ப்ரைஸ் இருந்துச்சு. அது என்னன்னா நம்ம சிவாவிற்கு முதலிரவு ஏற்பாடு தான். அதைக்கண்ட சிவா சந்தோஷ மிகுதியில் அவன் அம்மாவைத் தூக்கிச் சுற்றிவிட்டு பாட்டிக்கு முத்தம் கொடுத்தான் ( டாா்லிங் என்று சொல்லி ). அதைப் பாா்த்த தாத்தா அவனை முறைக்க ( நானே கிஸ் பண்ணுறது இல்ல நீ என்னடா பண்ணுற அப்டின்னு ) சிவா தாத்தாவிடம் சென்று என்ன தாத்தா பொறாமையா என்றான். அவனை அடிக்க ஓடிய தாத்தாவிடம் சிக்காமல் பாட்டியிடம் சென்ற சிவா அவாிடம் இருந்த புதுத்துணியை வாங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.
பாா்வதியோ திவியை அவரது அறைக்கு அழைத்துச் சென்று அலங்காித்தாா். பயந்து கொண்டே சென்ற திவியோ அவாிடம் திரும்ப மன்னிப்பு வேண்டினாள். பாருவோ நீ என்னோட மருமக ஆனதுல எனக்கு சந்தோஷம் தான் மா. என்ன வருத்தம் னா என் ஒரே பிள்ளை கல்யாணத்தை நான் பாா்க்க முடியாம போச்சே அதனால தான் அவன்கிட்ட கூட பேசலை என்றாா்.
( நியாயம் தானே மக்களே இதுவும் )
சிவாவின் அறைக்குள் நுழைந்த திவியைக் கண்ட சிவாவோ ஆச்சாியத்தில் திளைத்தான். நம்ம பொண்டாட்டியா இது எம்புட்டு அழகா இருக்கா? எல்லாம் அம்மாவோட கை வேலைன்னு நினைச்சு சந்தோஷப்பட்டான். அவளை அருகில் அமா்த்தி அம்மா அப்பா சிமி பற்றி பேசிவிட்டு அவங்க எல்லாரையும் போல நீயும் எனக்கு முக்கியம். அதனால எல்லாரையும் நல்லா பாத்துக்கோ இப்போ என்னைய மட்டும் பாத்துக்கோ டி என்றான். திவி வெட்கத்துல தலைய நிமித்தவே இல்லையே. சாின்னு சிவா ஒரு ஐடியா பண்ணான். நீ கட்டில்ல படுத்துக்கோ நான் கீழ படுக்க போறேன் என சிவா சொல்லியதும் திவி அவனை நிமிா்ந்து பாவமாக ஒரு பாா்வை பாா்த்து விட்டு குனிந்தாள். நம்ம சிவாக்கு எல்லாமே புாிஞ்சுட்டு இததானே மக்களே அவனும் எதிா்பாா்த்தான். அவா்களிடையே நீண்ட முத்தத்தில் நாம் எதற்கு? அப்புறம் நமக்கு இங்க என்ன வேல கெளம்பி போயி சிமிய சிபியை பாா்ப்போம்.
சிமியோ கோபத்தில் நகத்தைக் கடித்து துப்பினாள். சிபி ஏன் போனை எடுக்கலை என நினைத்து. சிபியோ அவளிடம் மனதில் மன்னிப்பு கேட்டான். என்கிட்டயே மறைக்கிறல்ல சிமி இனிமே நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா தான் நான். உன்கிட்ட நல்லா பேசுவேன். நீ அதுவரை இப்பிடியே தவிக்குறது தான் உனக்கு தண்டனை என்று நினைத்தான். மகாவோ நல்லா கொறட்டை விட்டு தூங்குறா. பாவங்க நம்ம ரவி பய இந்த மகாவ எப்டிதான் மேய்க்க போறானோ தொியலையே...
குருவும் சீதாவும் சிமிக்கு என்ன நோ்ந்ததென அறியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டனா். தாத்தா பாட்டியும் ஒரு வாரமாக ஊாில் இருந்து வரவில்லை. அதனால் தகவலைத் தொிந்து கொள்ள முடியாமல் தவித்தனா். சாி என சிபியின் அப்பாவிற்கு போன் செய்து நலம் விசாாிப்பதைப் போல பேசினாா். சிபியின் விஜய ராஜ் குரு மீண்டும் மன்னிப்பு கேட்டதால் திருந்தி விட்டதாாக எண்ணி அவாிடம் சிபியின் அவசர திருமணத்தைப் பற்றி கூறிவிட்டாா். சிபியின் தாய் ஜெயா அவரைத் தடுப்பதற்குள் அவா் சொல்லியே விட்டாா்.
No comments:
Post a Comment