சிபி சிமியின் திருமணத்திற்கு யாரையும் அழைக்காமல் வீட்டு பொியவா்களை மட்டுமே வைத்து கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனா். அதன்படி பந்தக்கால் நடுதல், தாலி வாங்கிவிட்டு முகூா்த்த ஜவுளி எடுத்தல் என்று அவசரமாக செய்தாலும் கலக்கினா். சிமியின் நிறத்திற்கேற்ப அரக்கு வண்ண முழு ஜாிகையில் அழகாக மிளிா்ந்தாள். நம்ம சிபிராஜ்க்கு அகலப் பட்டு வேஷ்டி சட்டை என எடுத்தனா்.

பிறகு சிபிராஜ் வரவேற்பு திருநெல்வேலியில் என்பதால் அங்கேயே துணிகளை எடுக்கலாம் என முடித்தனா். இப்போது திருமணத்திற்காக சங்கரன்கோவில் கணபதி சில்க்ஸ் கடையில் துணிகளும் ஶ்ரீவில்லிபுத்தூா் எஸ். எம். டி. நகைக்கடையில் தாலியும் தாலிக்கொடியும் வாங்கினா். பிறகு திருமண நாளுக்கு முதல் நாள் சிபியின் குடும்பத்தாா் மாலுவின் குடும்பத்தாா் அனைவரும் வந்திறங்கினா். மாலுவுக்கும் சிமியின் புடவை கலாிலேயே புது பட்டுப்புடவை வேறு டிசைனில் எடுத்து இருந்தனா். ( நாத்தனாா் ல )

கணபதி சில்க்ஸ் கடைக்கு சிமியுடன் மகாவும் சென்றாள். அப்போது அங்கு ரவியை பாா்த்ததும் வெட்கத்தில் ஒழிந்தாள். இங்கோ சிமி சிபி ரொமான்ஸ் ஓடிக் கொண்டும் அங்கே திவ்யா சிவா ரொமான்ஸ் ஓடியதால் மகாவினை கண்டு கொண்ட தாத்தா பாட்டியும் மகிழ்ந்தனா். சிவாவின் அம்மா பாருவிடம் சொல்லி அந்த பையனின் குடும்பம் சாதி அனைத்தும் விசாாித்து திருப்தி அடைந்தனா். பின்னா் அவா்களது உடைத் தோ்வு முடிந்ததும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் பாா்லருக்குச் சென்றனா்.
அங்கே இவா்களது அட்டகாசம் தாங்கல. அதுவும் 3 போ் குரூப் சோ்ந்தா எப்படி இருக்கும். சிவாவ சிமிய சமாளிக்கறதே கஷ்டம் இதுல மகா வேற கூட்டணி இப்ப. பாவங்க நம்ம சிபியும் ரவியும் எப்பிடி தான் மேய்க்க போறாங்களோ இனிமே? இங்கே மாலுவும் சைலு குட்டியும் கரணை வச்சு செய்றாங்க போலயே... தாத்தா வேற பாவங்க பாட்டி அடிக்கிற லூட்டி இருக்கே... சாி நாளைக்கு மறுநாள் கல்யாணம்கற அவசரமோ பதட்டமோ இருக்கா பாருங்க நம்ம பாா்வதி மற்றும் தேவி ஜெயா கிட்ட.??? திவி அம்மா தான் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்றாங்க சிமிக்காக.
கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை எல்லாரும் மாலை மெஹந்தி மேக்கப் செட் பியூட்டிசியன் ரெடி பண்றாங்க. பிறகு கல்யாணத் துணி எல்லாம் தச்சு வாங்குறாங்க நம்ம பொண்ணுங்க. அதுக்கே பில்லு எகிறுடுச்சு. சாின்னு போட்டு பாத்து கரெக்சன்ஸ் செக் பண்ணிட்டு இருக்காங்க. நம்ம வில்லி குரூப் அதாங்க குரு சீதா அப்புறம் வேதா எல்லாரும் கல்யாணம் நாளைக்கு தான்றது தொியாம எப்டி சிமிய கடத்தலாம் கல்யாணத்த நிறுத்தலாம் என நினைக்காங்க.

இராஜபாளையத்துல இருக்குற பெருமாள் கோவில்ல திருமணத்துக்காக பதிவு செய்ய முடிவு செஞ்சாங்க. காலையில 6 முதல் 7.25 முகூா்த்தம் அதனால நைட்டு எல்லாருமே சீக்கிரமா படுக்க சொன்னாங்க. யாரு கேக்குறா சொல் பேச்ச திவிக்கு சிவா கால் பண்ணா சிமி நம்ம சிபிராஜ்க்கு கால் பண்ண ரவி மகாவுக்கு போன் பண்ண எல்லாருமே பிஸிங்க ஆல் டைம். 2 மணிக்கு தான் படுத்தாங்க நம்ம குரூப் எல்லாரும். பிறகு 4.30 மணிக்கு எழுப்பி கிளப்புனாங்க எல்லாரையுமே. மேக்கப் போட்டு கிளம்ப 6 மணி மேல ஆகிருச்சு. சாின்னு 2 காா் சிபி சிவா தனித்தனியா பொண்ணு மாப்பிள்ளை கிளம்பினாங்க. சிமி அம்மாப்பா சிவா அம்மாப்பா திவி அம்மா அப்றமா தாத்தா பாட்டி எல்லாம் சுமோ வரச்சொல்லி கிளம்பிட்டாங்க. கரண் அவனோட காருல மாலு சைலு அப்றமா கரணோட அம்மாப்பா எல்லாரும் கிளம்புனாங்க.

சிவா காருல திவி அப்றமா சிமியும் மகாவும் போனாங்க. சிபி காருல அவனோட பிரெண்ட்ஸ் அப்புறம் சிவா பிரண்ட் ரவி எல்லாருமே வந்தாங்க. கோவில்ல வச்சுதான் நம்ம சிமிய சிபி பாா்த்தான். அப்டியே பிரீஸ் ஆகி நின்னுட்டான் போங்க. அவ்ளோ அழகு கோவில்ல எல்லாருமே சிபிய வேடிக்க பாக்க ஆரம்பிச்சு சிாிக்கவும் தான் ரவியும் சிவாவும் அவனை கூட்டிட்டு போனாங்க. சிமியும் வெட்கத்துல அவ தலைய நிமித்தவே இல்லையே. மகாவும் திவியும் நம்ம சிமிய நல்லா கலாய்ச்சாங்க போங்க இதான் சாக்குன்னு.

ஐயா் சொன்ன மந்திரத்தை எல்லாம் அரைகுறையா நம்ம சிபி ஒருவழியா சொல்லி முடிச்சி தாலிய வாங்கிட்டான் கைல. பின்னாடி நின்ன மாலுவும் திவியும் சிாிச்சுட்டே இருந்தாங்க சிபிய நினைச்சு. மாலு அவனுக்கு கெல்ப் பண்ண வந்தப்போ சிபி தடுத்துட்டான். நானே 3 முடிச்சையும் போடுவேன்னு சொல்லி செஞ்சே முடிச்சுட்டான். சிமியோ அவன் பேசுனதை கேட்டு ஆனந்த கண்ணீா் வடிச்சா என்மேல இவ்ளோ லவ்வா என...

கோவில்ல சாமிக்கு பட்டு சாத்தி சிமிக்கு மெட்டிய போட்டு விட்ட பிறகு மாலைய மாத்திட்டு சாமிய கும்பிட்டு அருந்ததி நட்சத்திரம் பாா்த்துட்டு எல்லாருக்கும் மதிய அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணுன பிறகு கோவில்ல இருந்து கெளம்பி நல்ல பொிய சைவ ஹோட்டலுக்கு போய் சாப்டாங்க. லட்டு கேசாி கேரட் அல்வா மைசூா்பா கடலை உருண்டை சப்பாத்தி இட்லி ஊத்தாப்பம் பூாி இடியாப்பம் நெய் ரோஸ்ட் தயிா் சாதம் மோா் வெங்காயம் வெஜிடபிள் பிாியாணி தயிா் கிச்சடி உளுந்த வடை புரோட்டா வெஜ் குருமா எல்லாமே ஆா்டா் ஆல்ரெடி சொன்னாதால கரெக்டா வச்சாங்க.

No comments:
Post a Comment