This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 8 March 2019

பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் -10


Click here to get all parts


பாலுதாத்தா மாலு பாட்டியின்

ஆரோக்கியம் காப்போம்-10

மாலு பாட்டி மாலு பாட்டி என ஏலம் விட்டு கொண்டே வீட்டுக்குள் வந்தார் நம்ம வரதன் (வத்சலாவோட வீட்டுக்காரர் ) வாப்பா இப்போதான் வரயா? டூரெல்லாம் முடிஞ்சதா ? வத்சு சாவி கொடுக்கும் போது கூட நீ வரதா சொல்லியே? நீ வரது அவளுக்கு தெரியுமா? என கேட்டார் மாலு பாட்டி இல்லபாட்டி அவளுக்கு தெரியாது நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் அதனால நான் சர்பிரைசா இருக்கட்டுமேனு இன்னைக்கே வந்துட்டேன் என சொன்னான் வரது ஓஹோ அதுதான் விஷயமா என சிரித்த மாலு பாட்டி அவ சமைச்சிருக்காளோ என்னவோ தெரியலயே? எதுக்கும் நீ ஆத்துக்கு போய் கொஞ்சம் குளிச்சு தெளிச்சுட்டு வா நான் சூடா சாதம் வெச்சு வைக்கறேன் சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தையானா சந்தியாகாலம் அவளை அழைச்சிண்டு வரத்துக்கே நீ போகலாம் என சொன்னார் மாலு பாட்டி இல்ல பாட்டி உடம்பு வலி, அசதி எல்லாம் இருக்கு வயறு வேற சித்த உப்புசமா இருக்கு பாட்டி நான் இதுல நேத்தி ராத்திரி வேற சாப்பிடல என சொல்ல

அதெல்லாம் உன் முகத்தை பார்த்தாலே தெரியறது என்றார் மாலு பாட்டி


நானே உனக்கு அங்காயப்பொடி சாதமும் ஜீரக ரசமும் தான் போட போறேன் அதுனால மொணமொணனு பேசிண்டு இருக்காம சட்டு புட்டுனு ஆறகாரியத்தை பார் தாத்தா எழுந்திருக்கற நேரம் ஆச்சு அவருக்கும் அதே மெனு தான் அதனால உனக்கு மட்டும் எதோ ஸ்பெசலா பண்ண போறது இல்ல சரியா நாழியாறது சட்டு புட்டுனு வா என சொல்லி விட்டு சமைக்க உள்ளே சென்றார் பாட்டி 


சிறிது நேரம் கழித்து வரதன் வரவும் பாலுதாத்தா தூக்கத்தில் இருந்து எழுந்து வரவும் சரியாக இருந்தது ஹலோ டியூட் எப்போவந்தே ? என பாலுதாத்தா நலம் விசாரிக்க இப்போதான் வந்தேன்  டியூட் என பதில் சொன்னான் வரது என்ன இன்னைக்கு உங்களுக்கும் பத்திய சமையலாமே? என வரது பாலுத்தாத்தாவை வம்பிழுக்க ஒண்ணுமில்லடா நம்ம கமலி இருக்காளோனோ அவ நேத்தைக்கு அடையும் வெண்ணையும் குடுத்தா அடை ரொம்ப நன்னா இருந்ததா நிறையா சாப்பிட்டுடேன் செமிக்கலை இது மாலு கிழவிக்கு தெரிஞ்சு போச்சு உடனே வயத்துக்கு ஆகாதுனு பத்திய சமையல் பண்ணிட்டா இப்போதான் நீ வந்துட்டேல உன்னை சாக்கா வெச்சு ஒரு பிடி பிடிசிற மாட்டேன் என பொங்க 


ஸாரி டியூட் Y BLOOD SAME BLOOD எனக்கும் இன்னைக்கு வயறு வேற சித்த உப்புசமா இருக்கு ஸோ எனக்கும் பத்திய சமையல் தான் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஆமா அது என்ன சொன்னீங்க நம்ம கமலியா அது உங்க கமலி அப்புறம் என்ன மாலு கிழவியா ? ரொம்ப ஏத்தம் தான்  டியூட்  உங்களுக்கு பாட்டி காதுல விழுந்தது அப்புறம் என்ன நடக்கும் நு மறந்து போச்சா ? என வரது மிரட்ட அவளோதான் தாத்தா பொங்கிட்டார் என்னடா பண்ணுவா ஒருதரம் இல்ல நூறுதரம் சொல்லுவேன் கிழவி நு யார் என்னை என்ன கேக்க முடியும் ? அவ்ளோ ஏன் போஸ்டர் கூட அடிச்சு ஓட்டுவேன் என்ன பண்ணிடுவா அந்த கிழவி என சொல்ல தாத்தா பாத்து பின்னால என வரது தந்தியடிக்க புரிந்து கொள்ளாத தாத்தா மேலும் மாலு பாட்டி இமேஜை டேமேஜ்  பண்ண இதெயல்லாம் கேட்டு கொண்டு தாத்தாவின் பின்னால் இருந்து முன்னால் வந்த மாலு பாட்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தாத்தாவையும் வரதனையும் சாப்பிட அழைத்தார் 


பாட்டி அந்தபுறம் போன பின் டேய் அவ பின்னாடி நிக்கறானு சொல்றதுக்கு என்ன? என வரதனிடம் காய ஏன் தாத்தா நாந்தான் பின்னால பாத்து பின்னால பாத்து நு ஜாடையா சொன்னேனே நீங்க புரிஞ்சுக்கல அதுக்கு  நான் என்ன பண்ண முடியும் ?என அசல்ட்டாக கேட்டான் வரது  அடப்பாவி உன் ஜாடை பேச்சுல தீய வைக்க இன்னைக்குனு பாத்து மாட்டிகிட்டேன்னே என்னை காப்பாத்த என் வானரபடை கூட இல்லையே எல்லாம் பரிட்சையில  பிசியா இருக்குதே என புலம்பிய வண்ணம் சாப்பிட போனார் 


இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த மாலு பாட்டி வரது இதுல கொஞ்சம் அங்காய பொடியும் அதோட செய் முறையும் இருக்கு அதை வத்சுகிட்ட கொடுத்துடு என சொல்ல 

ஏன் பாட்டி நீங்களே கொடுத்துடுங்களேன் என நழுவ முயன்றான் வரது இல்ல வரது தாத்தா காலேல பாத்ரூம் ல கால் தடுக்கினுட்டார் பார்த்தியா முகம் கை கால் எல்லாம் நன்னா வீங்கிருக்கு சாயங்காலமா டாக்டர் கிட்ட கூட்டிண்டு போணும் என சொல்ல ஆமாம் பாட்டி முகம் கை கால் எல்லாம் நன்னா வீங்கிருக்கு தான் எதுக்கும் நீங்க டாக்டர் கிட்ட கூட்டிண்டு போயிட்டு வாங்கோ எதாவது உதவி வேணுமினா என்னை கூப்பிடுங்கோ என எடுத்து கொடுக்க டேய் நீ வரதனா? இல்ல நாரதனா? என பல்லை கடித்தார் தாத்தா


எப்படியும் இன்னைக்கு தாத்தாவுக்கு உடம்பு வீங்கற அளவுக்கு அடி உறுதி அது தெரிஞ்சு போச்சு 

என்னது தாத்தா ஐயோ பாவமா? ஹலோ சகோஸ் அவங்க பஞ்சாயத்து நமக்கு எதுக்கு வாங்க பாட்டியோட அங்காய பொடி செய் முறையும் அதன் பலன்களையும் பாப்போம் 


தாத்தாவை நாளைக்கு வந்து பாப்போம் 

அங்காயப்பொடி


தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் - தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், நெய் - தலா அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 3 கிராம்.

செய்முறை: கடாயைக் காயவைத்து,  நெய் விட்டு, வற்றல்கள், வேப்பம்பூ, மிளகு, சீரகம், காயம் இவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியே போட்டு வாசம் வர வறுத்து, தட்டில் தனியாக வைக்கவும்.

வறுத்த பொருட்கள், இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்து, டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்த அங்காயப்பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டியதுதான்.


பலன்கள்:  

செரிமானத்துக்கு உற்ற நண்பன், இந்தப் பொடி.

மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவினால், செரிமானம் பாதிக்கப்பட்டு,  வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்தப் பொடி கட்டுப்படுத்தும்.  வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும். இந்தப் பொடியைப் போட்டுச் சாப்பிட்டால், உடம்பு வலி, அசதி எல்லாம் பறந்துவிடும்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.