Click here to get all parts |
யம்மா பால் என குரல் கொடுத்து கொண்டே வந்தான் மாதவன் வாடா அம்பி மாது படிப்பெல்லாம் எப்படி போகுது என கேட்டுக்கொண்டே வந்தார் பாலு தாத்தா போகல தாத்தா நல்லா வருது என அவன் பதில் சொல்ல அதெல்லாம் ரிசல்ட் வரப்பதானா தெரிஞ்சிட்டு போகுது என கவுண்டர் கொடுத்தார் பாலு தாத்தா
ஆமாம் பாட்டி எங்க காணோம் என அவன் கேட்க அவளா பக்கத்து ஊருல இருக்குற அவ சினேகிதிக்கு உடம்பு சரியில்லைனு தகவல் வந்தது பாக்க போயிருக்கா நாளைக்கு தான் வருவா என சொல்ல ஐயோ என தலைமேல் கை வைத்து கொண்டான்
ஏண்டா தலேல கை வைச்சிக்கற என பாலு தாத்தா கேட்க
எல்லாம் என் நேரம் தாத்தா என அலுத்துக்கொண்டான் மாது
மொதல விஷயத்தை சொல்லுடா என பாலு தாத்தா வற்புறுத்த
மெதுவாக சொல்ல ஆரம்பித்தான் கேட்டரிங் படிக்கற அவனுக்கு அவன் படிக்குற காலேஜ்ல சிம்பிளா, பாரம்பர்ய ரெசிபி ஒன்னு தயார் பண்ண சொல்லி அஸைண்மெண்ட் கொடுத்திருந்தாங்க அதுவும் நாளைக்கு கடைசி நாள் வேற எதேதோ முயற்சி பண்ணி எதுவும் எடுபடாம போகவே அவன் மாலு பாட்டி உதவியோட பண்ணிடலாம் நு நினைச்சு வந்தா மாலு பாட்டி இல்லயே அதுதான் நு சொல்ல அதை கேட்ட தாத்தா கடகடனு சிரிக்க ஆரம்பிச்சார்
சிரிச்சு முடிச்ச ஒடனே கொஞ்சம் இருடா அம்பி மடபள்ளி மாதவா என கிண்டல் செய்து விட்டு உள்ளே சென்ற அவர் கையில் நோட்டில் இருந்து கிழித்த ஒரு தாளுடன் வர அதிலிருந்த சமையல் குறிப்பை பார்த்த மாது தாத்தாவிடம் கண்கள் கலங்க விடை பெற்றான் அப்படி அதுல என்ன இருந்துச்சுனு கேக்கரீங்க தானே வாங்க பாப்போம்
வேப்பிலை கட்டி செய்முறை
தேவையான பொருட்கள்:
கொழுந்தாக உள்ள நாரத்தை இலைகள் : இரண்டு கைப்பிடி அளவு
பெருங்காயம் : ஒரு பட்டாணி அளவு.
புளி : நெல்லிக்காய் அளவு.
மிளகாய் வற்றல் : பெரிதாக இருந்தால் நான்கு, சிறிதாக இருந்தால் ஐந்து
உப்பு : தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தைக் கொழுந்து இலைகளை, சுத்தமான நீரில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். இலைகளில் உள்ள நரம்புகளை, கத்திரிக்கோல் கொண்டோ அல்லது விரல் நகங்களை உபயோகித்தோ இலைகளின் நரம்பை நீக்கி விடவும்மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயம் இவற்றை சிறிதாக எண்ணெய் வாணலியில் விட்டு, லேசாக வாட்டிக்கொள்ளவும்.
நாரத்தை இலைகள் (நீரை வடித்து, வெறும் இலைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்), மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு இவைகள் எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரைக்கவேண்டும்.
அவ்வளவுதான்! வேப்பிலைகட்டிதயார்.
நாரத்தை இலையுடன் இரண்டு மூன்று எலுமிச்சை இலை , இரண்டு மூன்று கறிவேப்பிலை இலைகளையும் கலந்து செய்து பாருங்கள்.
மிகவும் ருசியாக இருக்கும். அப்படியே சுடுகின்ற சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
வாந்தியை நிறுத்தி, பசியைத் தூண்டி விடும். பித்ததிற்க்கு நல்லது
வேண்டாத சோத்துக்கு வேப்பிலைக்கட்டி என்று ஒரு சொலவடை உண்டு
No comments:
Post a Comment