விசாலி நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன் வேற என்ன வேணும் சொல்லு என சங்கு தாத்தா கேட்க மார்கெட்டுல பிரண்டை கிடைக்கும் அண்ணா அதுவும் வாங்கிட்டு வாங்க என குரல் கொடுத்த படியே உள்ளே நுழைந்தார் மாலு பாட்டி கூடவே பாலு தாத்தாவும் வா மாலு வாடா பாலு ஏது அதிசயமா இந்த பக்கம் காத்தடிசிருக்கு என சங்கு தாத்தா கேட்க பாலு தாத்தாவோ அதை கண்டு கொள்ளாத பாவனையில் சங்குதாத்தாவை சுற்றி வந்து பார்த்தார் மாலு பாட்டியை தவிர மற்ற இருவரும் கண்களில் கேள்வியுடன் பார்க்க மாலு பாட்டியோ பாலு தாத்தாவின் செய்கையில் வாய் விட்டு சிரித்தார் .
ஒன்றும் புரியாத சங்கு தாத்தாவோ பாலுதாத்தாவை நிறுத்தி என்னடா செய்யறே மாலு வேற சிரிக்கரா? சொல்லேண்டா என கேட்க அது ஒண்ணுமில்லடா சங்கு உன்னை சுத்தி இலை தழை குச்சி சுள்ளி எதையும் காணோமேனு பார்த்தேன் என சொல்ல என்னடா சொல்றே ஒண்ணும் புரியலையே என் சங்கு தாத்தா திரும்பியும் வினவினார் அதற்கு பாலு தாத்தாவோ இல்லடா நாங்க உங்க வீட்டு வந்ததை அதிசயமா இந்த பக்கம் காத்தடிசிருக்கு சொன்னியிலே அதான் உன்னை சுத்தி இலை தழை குச்சி சுள்ளி நு எதாவது இருக்கானு பாத்தேன் டேய் சொல்ல வந்ததை நேரா சொல்லு சுத்தி வளைச்சே கடுப்பாயிடுவேன் நான் என சங்கு தாத்தா எகிற போடா உன் கோபம் என்னை என்ன செய்யும் என மேலும் கடுப்படித்தார் பாலு தாத்தா இப்போது சங்கு தாத்தா நிஜமாகவே டென்ஷன் ஆக ,
அது ஒண்ணுமில்லை அண்ணா உங்களை மரமண்டைனு கலாய்க்கிறார் என போட்டு விட்டார் மாலு பாட்டி இப்போது அனைவரும் கொல் என சிரிக்க வெக்கத்தில் சங்கு தாத்தா முகம் சிவப்பானது அனைவரும் சிரித்து முடித்த பின் பாலு இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கூட உன் குறும்பு குறையல டா என சரி வா அப்படியே மார்கெட் போயிட்டு வரலாம் என சொல்லி கிளம்பினார் இருவரும் .
அவர்கள் போனபின் ஆமாம் மன்னி ஏன் ஆத்துக்கு வர மாட்டேங்கிறேள் என மாலு பாட்டி விசாலி பாட்டியிடம் கேட்க அது ஒண்ணுமில்லடியம்மா போன மாசம் தான் கீழ விழுந்து எலும்பு முறிஞ்சதுல அதுல இருந்து இன்னமும் எப்பவானும் வலி இருக்கு அதுபோக முதுகு வலி வேற படுத்தறதுடி அதுதான் சரி மன்னி நான் இப்பொ பிரண்டை துவையலை பண்ணி தரேன் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கோ அப்புறம் பாருங்கோ வலியாவது ஒண்ணாவது என தைரியம் கொடுத்த மாலு பாட்டி கூடவே துவையலையும் அரைத்து கொடுத்தார்.
சரி வாங்க வழக்கம் போல மாலு பாட்டி பண்ற பிரண்டை.துவையல் ரெசிபிய நாமளும் கத்துக்குவோம்.
பிரண்டை. துவையல்.
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு உளுந்து சேர்த்து வறுத்து அரைக்க வேண்டும். பிறகு, துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்
பிரண்டை வகைகளும் பயன்களும்
சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டை உதவும்.
No comments:
Post a Comment