கையில் இருந்த மஞ்சள் பையை இறுக்கி பிடித்தபடியே லஷ்மி யம்மா சிறுகீரை கொண்டுவந்திருக்கேன் என குரல் கொடுக்க இந்தோ வரேன் என பதில் குடுத்து விட்டு மெல்ல மெல்ல கெந்தி கெந்தி நடந்து வந்தார் பாலு தாத்தா
அவர் அவ்வாறு நடந்து வந்ததை பார்த்த லஷ்மி ஐயோ என்னாச்சுபா என பதற ஒண்ணுமில்லை லஷ்மி என் பால்ய சினேகிதனை பாக்க ஊருக்கு போய் இருந்தேன் திரும்பிவர டிரைன் கிடைக்கலை பஸ்ல காலை தொங்க போட்டு கிட்டே வந்தேன் அதோட ராத்திரி பாத்ரூமுக்கும் போகலை அதுதான் கால் நல்ல வீங்கி போச்சு என சொல்ல அதோட கண் எரிச்சல் வேற மாலுவும் அசந்து படுத்துண்டு இருக்கா ஆத்துலயும் அங்கய பொடி காலி ஆயிடுச்சு
அதுக்கென்ன தாத்தா இப்போ உங்களுக்கு கவலை என கவுண்டர் கொடுத்த வாரே வந்தாள் வத்சு வந்தவள் அந்த சிறுகீரையை இப்படி கொடு லக்ஷ்மி என கேட்டு வாங்கி கொண்டு உள்ளே சென்றாள் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்த பின் லக்ஷ்மி கிளம்பி விட பிரயாண அலுப்பில் தாத்தா நித்ரா தேவியுடன் டூயட் பாட சென்றார் அறைகுறை தூக்கத்தில் தாத்தாவுக்கு மாலுபாட்டியும் வத்சுவும் பேசுவது போல தோன்ற அதை அலட்சிய படுத்திவிட்டார்
கொஞ்ச நேரம் கழித்து வத்சு அவரையும் பாட்டியையும் எழுப்பி சாதம் போட சாதத்தின் மேல் விழுந்த சிறுகீரை பருப்பில்லா கூட்டின் சுவை அவரை மயக்கியது திருப்தியாய் சாப்பிட்ட தாத்தா வத்சு இன்னைக்கு நீதான சமைச்சே என கேட்க எதுக்கு தாத்தா கேக்குறீங்க என பதில் கேள்வி போட்டாள் வத்சு இல்லடி சிறுகீரை பருப்பில்லா கூட்டு நல்ல ருசிய மணமா இருக்கு சிக்கனமாவும் தெரியுது இந்த மாதிரி சமைக்க இந்த கிழவிக்கு வராதே எதோ புது மாதிரியா செஞ்சிருக்கையேனு கேட்டேன் நு சொல்ல
அதை கேட்ட வத்சு தாத்தா இன்னைக்கும் உங்களுக்கு அடி கன்பார்ம் இது மாலு பாட்டி எங்க சிக்கன சமையல் குரூப்புக்காக சொல்லி கொடுத்த ரெசிபி என சொல்ல இப்போ தாத்தா திருதிருவென முழித்தார் அதை கண்ட மாலு பாட்டி பக்கென சிரித்து விட தாத்தாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல நிம்மதியாய் இருந்தது
அதை கண்டு மேலும் மாலு பாட்டியை ஐஸ் வெக்கும் நோக்கத்தில் இது எப்போ நடந்தது டி என கேட்க வத்சுவோ தாத்தாவுக்கு மாலு பாட்டி சிறுகீரை பருப்பில்லா கூட்டு செய்த வீடியோ ஓடியது அதை பார்த்து முடித்த உடன் பாலுதாத்தா சூப்ப்ர் என சொல்லி மாலு பாட்டிக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக அனுப்பினார்
சரி வாங்க வழக்கம் போல செய்முறையை பார்ப்போம்
சிறுகீரை பருப்பில்லா கூட்டு
நறுக்கின சிறு கீரைய ஒரு தக்காளியோட சேத்து துளி வெல்லம் போட்டு வேக விடணும் ஊறவெச்ச கடலை பருப்போட மிளகாய் வத்தலும் சீரகமும் சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காயும்,உப்பும் வெச்சு மைய அரைச்சு வெந்த கீரைல சேர்த்து ஒரு கொதி விட்டு கடுகு உளுந்து பெருங்காயத்தை தேங்காஎண்ணெய் ல தாளிச்சு கொட்டுனா கிடைக்குமே ஒரு கூட்டு அது எனக்கு ரொம்ப பிடிக்கும் பருப்பு செலவு கம்மி வெயிலுக்கும் ஏத்தது சாதம் சப்பாத்தி ரெண்டுக்குமே பெருத்தமான தொடுப்பு நீங்களும் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்கோ
மலச்சிக்கல் நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைககளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது. –
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது நல்லது..
கல்லீரல் சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.
ஊட்டச்சத்து
வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறுகீரை சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்
செரிமானமின்மை
சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை சிறுகீரை அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்திகரிப்பானாகவும் சிறுகீரை சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது சிறுகீரை ஆகும்.
இரத்தசோகை
நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது
கண்கள்
முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். சிறுகீரையில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.
புண்கள்
உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்ப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை.
நோய் எதிர்ப்பு
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.
சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
பலன்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் இந்தக் கீரையைக் கொடுத்துவரலாம். கூடவே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சியும் செய்துவந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு, சிறுகீரை மிகவும் நல்லது. கல்லீரலுக்கு நன்மையை செய்யும்.
டிப்ஸ்: 4 இலையுடன் 4 மிளகைச் சேர்த்து சாப்பிட்டு வர, சரும அலர்ஜி குணமாகும்.
கவனிக்க: பித்த உடல்காரர்கள், அதிக உடல் வெப்பம் கொண்டவர்கள், இந்தக் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்
No comments:
Post a Comment