இனிய மாலை நேரம் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் மாலை தீபாராதனைக்காக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் ஆம் அன்று அவர்களுக்கு திருமணபொன் விழா ஆண்டு வருடம் 364 நாட்களும் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டாலும் கல்யாண நாளில் மட்டும் இருவரும் ஒரு வாய் முகூர்த்தமாக அவரவர் பெற்றவர்களை திட்டிவிட்டு மாமனார் மாமியாரின் புகழ் பாடுவர் அன்று காலை ஹீம் உங்கப்பாவும் அம்மாவும் நமக்கு கல்யாணம் ஆன அன்னிக்கே சொன்னார் அம்மாடி மாட்டுபொண்ணே உனக்கு இருக்கற திறமைக்கு இந்த மண்டூகத்துக்கு கழுத்தை நீட்டி இருக்கயே உன்னை ஆண்டவன் தான் காப்பாத்தணும் சொன்னார் இப்போ வரைக்கும் அவாதான் என்னை தெய்வமா இருந்து காப்பாத்திண்டு வரா என முதல் பாலைபோட்டு சண்டையை ஆரம்பித்து வைக்க ஏன் உங்கப்பாவும் அம்மாவும் கூடத்தான் மாப்பிள்ளே இந்த ராட்சசிய கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையவே தியாகம் பண்ணிட்டீங்களே உங்களுக்கு தியாகி பட்டம் தான் குடுக்கணும் நு எங்கிட்ட கண்ணைகசக்குனாங்க என சிக்ஸர் அடிக்க அதெல்லாம் இப்போ எதுக்கு என சமாதான உடன்படிக்கைக்கு வந்தார் மாலுபாட்டி.
அப்போது மாமா என எதிராத்து சத்யமூர்த்தியும் சகுந்தலாவும் அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்த பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் கையில் பயண பெட்டிகளுடன் அவர்களின் 8 வயது பெண் சௌமியாவுடன் நிற்பதை பார்த்து ஒருமித்த குரலில் வாங்கோ என அழைத்தனர்.
அவர்கள் முகத்தில் தெரிந்த பரபரப்பும் சிறுமியின் கலவரம் தோய்ந்த முகமும் சேர்ந்து ஏதோ அசம்பாவிதம் என தெரிவிக்க அவர்களை அமர செய்து மேற்கொண்டு விஷயத்தை கேட்டறிந்தனர் பெருசா ஒண்ணுமில்லிங்க சகுந்தலாவோடஒண்ணுவிட்ட சித்தப்பாவீட்டுல எதோ குடும்ப பஞ்சாயத்து அதை தீர்த்து வைக்க பொண்ணையும் மாப்பிள்ளையயும் கூப்பிட்டு இருக்காங்க போனில் கேட்ட தன் சித்தியின் அழுகுரல் சக்குபாயயும்(சகுந்தலாவுக்கு தாத்தா வெச்ச செல்ல பேர்) அழ வைக்க மனசு கேட்க்காமல் பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு போக பொட்டி கட்டிட்டார் நம்ம சத்துமாவு (இது சத்யமூர்த்திக்கு தாத்தா வெச்ச செல்ல பேர்) கிளம்பும் போதுதான் பிள்ளைக்கு நாளைக்கு பரிட்சை இருக்குறது நியாபகம் வர...
என்ன பண்ணுறதுனு புரியாம முழிச்சபோதுதான் நம்ம பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் இருக்காங்களே அவங்க கிட்ட விட்டுட்டு போலாமே என ஐடியா தோண...
அவங்க ஐடியாவை செயல் படுத்த இங்க வந்திருக்காங்க சக்குபாயும் சத்துமாவும் இதை கேட்ட பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் டபிள் டன் சொல்லிவிட சந்தோஷமாக சக்குபாயும் சத்துமாவும் ஊருக்கு இந்தபுறமும் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் சௌமியாவுடன் கோவிலுக்கு இந்தபுறமும் ஜீட் விட்டனர் சௌமியா நன்கு படிக்கும் சூட்டிக்கையான குழந்தையாகையால் அடுத்த நாள் தேர்வு பயம் இன்றி கோவிலுக்கு புறப்பட்டாள் கோவிலுக்கு சென்று வரும் வழியில் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் அனைவரின் வாழ்த்துக்களை பெற்றவண்ணம் வர விஷயம் புரிந்த சௌமியாவும் வாழ்த்து சொல்லிவிட்டு மாலு பாட்டி பாலுதாத்தா டீரீட் எங்கே என அடம் பிடிக்க சரி என்று அனைவரும் ஹோட்டலுக்கு சென்று ஒரு பிடிபிடித்து விட்டு வீடு திரும்பினர்.
வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துகெல்லாம் மாலு பாட்டிக்கு அஜீரணத்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட தவித்து போனார் இதை கண்டவுடனே சௌமியா சட்டென பாலுதாத்தாவிடம்சென்று ஒண்ணுமில்ல தாத்தா அஜீரணம் தான் பாட்டிக்கு ஹோட்டல்சாப்பாடு ஒத்துக்கலை போல கிச்சனுல போய் வெதுவெதுப்பாகொஞ்சம் வென்னீர் போட்டு பாட்டிக்கு குடிக்க கொண்டு வாங்கோ குடிச்ச கொஞ்ச நேரத்துல சரியாபோயிடும் என சொன்னாள் எக்கசக்க தவிப்பிலிருந்த தாத்தாவோ சேமியா (பட்ட பேர்தாங்க ) இதெல்லாம் நீ சொல்லாதடி நீ குழந்தை உனக்கு என்ன தெரியும் என் மால்ஸுக்கு என்னாமோ ஆயிடுத்துடி அவ அனாதையா என்னவிட்டுட்டு போயிடுவாளோ பயமா இருக்குடி என அழத்துவங்க தலையில் அடித்துக்கொண்டு கிச்சனுக்கு போய் வெந்நீர் போட்டு வந்து மாலு பாட்டிக்கு குடிக்க குடுத்தாள்.
வென்னீர் குடித்த சிறிது நேரத்தில் மாலு பாட்டி சரியாகி எழுந்து உட்கார எழுந்து உட்கார்ந்த உடனே பொறுப்பாக பாலுதாத்தாவின் சின்ன புள்ளைதனத்தை பத்த வைத்தாள். சேமியா அப்புறம் என்ன வழக்கம் போல ஒரே இடி மின்னல் மழைனு திருமண பொன்விழா கொண்ட்டாட்டம் அமளிதுமளி பட்டது.
எல்லாம் முடிஞ்சப்பறம் கடைசியா சேமியா தாத்தாக்கு வென்னீரின் மகத்துவத்தை பற்றி ஒரு லெக்ச்ர் குடுத்தா பாருங்க அதுதான் ஹைலைட்டே வென்னீருல இவ்வளவு விஷயம்மானு தோணிபோச்சுனா பாருங்களேன்.
வெந்நீரின் பயன்கள் !
1. ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
2.வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
3. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும்.
4.உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
5.எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
6.மூக்கு அடைப்பா? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!
7.வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
8.வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
9.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
10.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
11.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.
12.நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
13.மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
14.கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
15.ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
16.இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
17. அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
No comments:
Post a Comment