இல்ல இல்ல நீங்க எவ்வளவு சொன்னாலும் சரி எக்காரணம் கொண்டும் சந்தனா சரத்தை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்க மாட்டேன் எவ்வளவு பெரிய சம்பந்தம் அந்த சக்ரவர்த்தி தம்பி அவர் தான் என் மாப்பிள்ளைனு நான் முடிவெடுத்துட்டேன்.
என் முடிவை மீறி நீ நடக்கனும் நினைச்சா என் பிணத்தை தாண்டிதான் நீ போகணும் சந்து பதிலுக்கு நீயும் செத்துடுவேன் நு மிரட்டினுனேனு வை என் பொண்ணு ராணி மாதிரி வாழறதை விட்டுட்டு அவஸ்தை படறதை விட செத்து போறதே மேல் அதுனால நானே உனக்கு விஷத்தை குடுத்துடுவேன் என ஆவேசமாய் கத்தினார் சீதா.
விழிகளில் கங்கை நதி பிரவாகம் எடுக்க மனதினில் ஊழிக்கால பிரளயம் வெடிக்க தன் தாயின் ருத்ர தாண்டவத்தை கண்டபடி செய்வதறியாது அமர்ந்திருந்தாள் சந்தனா.
கோபம் கொண்ட மனைவியை சமாதான படுத்துவதா ? இல்லை வருத்தம் சுமந்து நிற்கும் மகளுக்கு ஆதரவாக நிற்பதா? என தெரியாமல் தவித்தார் குமார்.
வாயிலில் வந்து நிற்கும் அந்த வெளிநாட்டு காரின் ஓசை அனைவரையும் சட்டென இயல்புக்கு கொண்டுவந்தது.
சந்தனாவின் வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றும் அவர்களை கண்காணிக்கும் சந்தோஷின் உளவாளி மூலம் அவனை உடனுக்குடன் சென்றடைந்தது.
இதுதான் தக்க சமயமென நினைத்த சந்தோஷ் குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்து உடனே சந்தனாவின் வீட்டை அடைந்தான்.
ஆனால் அவன் அறியாதது பெண் மனது குழம்பும் குட்டையல்ல ஊழிப்பேரலைகளை உள்ளடக்கிய சமுத்திரம் என்று...
முதலில் அவன் வருவதை உணர்ந்தது சீதாதான் சட்டென இயல்பாக முகத்தை வைத்து கொண்ட அவர் இங்கே நடந்தது அந்த தம்பிக்கு தெரிய வேண்டாம் நான்.
முன்னாடி போய் அந்த தம்பிய கூப்பிடுறேன் ரெண்டுபேரும் முகத்தை சரியாக்கிக்கிட்டு வாங்க என வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு புன்னகை முகமாய் அவனை வரவேற்கசென்றார்.
கணநேரத்தில் அவரது நடவடிக்கை மாறியதைகண்ட சந்தோஷோ அவர் வாயிலிருந்தே உண்மையை வரவழிக்க வேண்டி என்ன ஆண்ட்டி நேரம் கெட்ட நேரத்துல வந்துட்டேன் போல வாசல் வரைக்கும் உங்க குரல் கேட்டுகிட்டிருந்துச்சு என கேட்க
அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி என சிரித்தவாறே உக்காருங்க தம்பி இருங்க குடிக்க பால் எடுத்துகிட்டு வரேன் என சொல்லி சென்றார் .
அவர் சென்ற உடன் உள்ளிருந்து வந்த குமாரோ வாங்க தம்பி ஏது இந்த நேரத்துல இவளோ தூரம் வந்திருக்கீங்க ? என கேட்க
அடுப்படியில் இருந்தபடி அவர்கள் பேச்சிலேயே கவனமாக இருந்த சீதாவோ என்னங்க கேள்வி இது தம்பி நம்ம வீட்டு புள்ளை மாதிரி அவர் எந்த நேரத்திலும் நம்மை பாக்க வரலாம் நான் தான் சொன்னேன் எனசொல்லி தன் கணவரின் வாயை அடைத்தார் சீதா.
பாலை குடித்தவாறே எங்கே ஆண்ட்டி உங்க பொண்ணை காணோம்? எப்பொ வந்தாலும் அவங்களை மட்டும் கண்ணுல காட்ட மாட்டேங்கறீங்க ? என கேட்க இரு தம்பி அவளை கூட்டிகிட்டு வரேன் என சொல்லி உள்ளே சென்றார் சீதா.
சீதா உள்ளே செல்லவும் குமார் வீட்டு அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது முகத்தில் யோசனையுடன் கதவை திறக்க சென்ற குமார் உள்ளே வந்தவர்களை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆம் உள்ளே வந்தது ஷியாம் சக்தி மற்றும் சரத் ஆகிய மூவரும் தான்
வாங்க பா என ஷியாமையும் சரத்தயும் சக்தியையும் கூப்பிட்டு வந்த அவர் சந்தோஷை அவர்களுக்கு அறிமுக படுத்தும் விதமாக இவர் என துவங்க அதற்கு பதிலாக சந்தோஷ் சக்ரவர்த்தி என ஒலித்தது சந்தனாவின் குரல் எங்க பாஸ் .
சொல்ல போனா ஷியாம் மாதிரியே எனக்கும் சரத்துக்கும் நல்ல நண்பர் என சிரித்த முகமாக வந்தாள் சந்தனா அது மட்டுமில்ல சக்திக்கு நல்ல தம்பி என சொல்லி முடித்தாள் .
அவள் விழிகள் சொல்லிய சேதி புரிந்த சரத்தோ புன்னகை பூக்க கண்களில் கனலைக் கண்ட சந்தோஷோ அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்தான்.
நிலைமையை சமாளிக்க எண்ணிய சீதா வாங்க ஷியாம் தம்பி ஏது இந்த நேரத்துல இவளோ தூரம் வந்திருக்கீங்க ? என கேட்க
அது வா ஆண்ட்டி சந்தனா அவ பைய எங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டா அதுதான் குடுத்துட்டு போலாம் நு வந்தோம் என சக்தி சொல்ல
ஏன்மா அதுக்காவா இவ்வளோதூரம் வந்தே ? போனுல சொல்லகூடாதோ? நான் இவரை அனுப்பி வாங்கிட்டு இருந்திருப்பேனே? என்ன பொண்ணுமா நீ ? நீ அலைஞ்சதும் இல்லாம கூடவே ஷியாம் தம்பியையும் சரத் தம்பியையும் அலைய விட்டிருக்கையே என சொல்ல
அதுக்கென்ன ஆண்ட்டி சரத் நீ எதோ கொண்டு வந்தியே சந்தனாவுக்கு கொடுக்க அதை கொடு முதல்ல என சொன்னாள் சக்தி .
ஆமாம் சரத் நம்ம அதிர்ஷ்டம் நம்ம பாஸ் கூட இங்கதான் இருக்கார் என ஒத்தூதினான் ஷியாம் .
நடப்பவை யாவையும் தடுக்க முடியாமல் சீதா திணற அவர்களின் திட்டம் புரியாமல் சந்தோஷ் திகைக்க மெல்ல சந்தனாவை நெருங்கி வந்த சரத்தோ தன் கைகளில் இருந்த சிகப்பு ரோஜாவுடன் கூடிய சாக்லேட் கூடையை சந்தனாவிடம் கொடுத்து
சந்து நீ இன்னைக்கு என்கிட்ட பீச்சுல உன் காதல சொன்னே? பதில் சொல்லம போயிட்டேனு உனக்கு ரொம்ப கோபமில்ல? மைடியர் சுவீட் ஹார்ட் ஐ லவ் யூ மோர் தென் மை சோல் என் உயிர் உலகத்துல இருக்கற வரைக்கும் நீ என் காதலி மனைவி .
இத்தனை நாள் உன்கிட்ட நான் சொல்லாம இருந்ததுக்காக என்னை மன்னிச்சுடு தனா டார்லிங் என் சொன்னான் முகமெல்லாம் மலர்ந்து விகாசிக்க அவன் கொடுத்த கூடையை வாங்கி கொண்ட சரத்தின் தனா சந்தோஷை நோக்கி வெற்றி பார்வையை வீசினாள்.
இனி.....
No comments:
Post a Comment