கூண்டு புலி போல தன் அறையுள் உலவிக்கொண்டிருந்தான் சந்தோஷ் அவன் கோப முகமும் சிவந்த கண்களும் கண்ட அனைவரும் அவனை நெருங்க பயந்தனர் முன்னிரவில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் அவன் மனதில் ஆழிபேரலையும்(அதுதாங்க சுனாமி) ஊழிப்பிரளயமும் கோரதாண்டவம் ஆடியது .
மிகவும் சாமர்த்தியமாக ஷியாமும் சரத்தும் செயல்பட்டு தன் திட்டங்களை தவிடு பொடியாக்கியதும் அவனை மிகவும் பாதித்தது . தன் திட்டங்கள் தவிடு பொடியானாலும் சக்தியின் மூலம் சரி படுத்திக்கொள்ளமுடியும் என்ற நினைவிலேயே அவன் தன்னை நிதானபடுத்திக்கொண்டான்.
மீண்டும் ஒரு முறை அவனுக்கும் சக்திக்கும் நடந்த வாக்கு வாதத்தை நினைத்து பார்த்தான் சக்திக்கு பிடித்த பெண் யாரோ அவளே அந்த வீட்டின் மருமகள் என்றல்லவா சொல்லி இருக்கிறான் சக்தியின் உயிர் தோழியல்லவா சந்தனா எனவே அதை கொண்டு சக்தியின் மூலம் சந்தனாவை அடைய முடியும் என நம்பினான் .
விதியின் விளையாட்டின் முன்னே அவன் நிலை அந்தோ பரிதாபம் அவன் சுமித்ரா தேவியின் மகவு என்பது அவனுக்கு தெரியாதல்லவா ? சரத்தின் மனைவிதானே அந்த வீட்டின் மருமகளாக முடியும் .
சந்தனாவினை அடைய மேலும் நிதானமாக செயல்பட எண்ணினான் . அதன் முதல் படியாக சரத் சந்தனா இருவரின் காதலுக்கு வாழ்த்து சொன்னான் விசித்திரமாக பார்த்த அவ்விருவரிடமும் உங்கள் இருவரின் காதல் பற்றி முன்னமே தெரியாது என சொல்லி சமாளித்தான்.
அவர்களின் நட்பில் தன்னை இணைத்து கொள்ள வேண்டினான் உள்ளே வஞ்சமும் வெளியே நட்புமாய் கை நீட்டிய அவன் கரங்களை சரத் பற்றி நட்பினை உறுதி செய்தான் முழுமனதுடன் அல்லாது நட்பினை வேண்டியவனுக்கு மனமே இல்லாது தலை அசைத்தாள் சந்தனா.
சந்தனாவை சரத்திடம் இருந்து பிரிக்கவும் தக்க சமயத்தில் அவன் திட்டங்களை சாமர்த்தியமாக செயல்பட்டு தவிடு பொடியாக்கிய ஷியாமை பழிவாங்கவும் நினைத்த அவன் அதன் முதல்படியாக ஷியாமையும் சரத்தையும் பிரிக்க திட்டம் தீட்டினான்.
தன் அதிகாரத்தை பயன்படுத்தி சரத்துக்கு ஷியாமுக்கு இணையான பதவியை கொடுத்து கொடைக்கானல் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் தந்தான் அதன் மூலம் சந்தனாவும் சரத்தும் சந்திக்கும் வாய்ப்பை குறைத்தான் கண்ணில் படாதது கருத்தில் இருந்து மறைந்து விடும் என நினைத்து செய்தது ஆனால் அவன் அறியாதது உண்மைக் காதல் பிரிவில் கூட அதிகரிக்கும் என்பது
அடுத்த படியாக ஷியாமின் வேலைப்பளுவை அதிகரித்தான் அதையும் சுமித்ரா தேவியின் மூலம் ஷியாமிடம் தெரிவிக்க செய்து அவன் மறுக்க வாய்ப்பேதும் தராமல் மிக சாமர்த்தியமாக செயல்பட்டான் அதன் மூலம் சந்தனாவுக்கு இருந்த ஷியாமின் பாதுகாவலை குறைத்து விட்டதாகவே எண்ணினான் .
ஆனால் அவனே எதிர்பாராத விதமாக சரத் கொடைக்கானல் சென்றபின் சந்தனா வேலையை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்ப இதை சமாளிக்க தெரியாது ஒரு கணம் திகைத்தான் .
சற்றே யோசித்த அவன் சந்தனாவை மடக்க சக்தியை ஆயுதமாக்க எண்ணினான் சக்தியிடம் நேரில் வந்த அவன் சக்திக்கா என் கூட வரமுடியுமா? நான் சந்தனாகிட்ட அவ ராஜினாமா விஷயமா பேசனும் .
ஏற்கனவே அவள் என்ன நம்ப மாட்டா அதுவும் இல்லாம ஆபிசுல இதை பத்தி நான் அவகிட்ட பேசுனா எதோ நான் தோழிக்காக தனியா சலுகை குடுக்கறமாதிரி தப்பான ஒரு முன்னுதாரணம் ஆயிடும் அன்னைக்கு அவங்க அம்மா பேசுனத கேட்டதுக்கு அப்புறமா அவளை வீட்டுல போய் சந்திக்கவும் யோசனையா இருக்கு அதனால என நிறுத்த
அதனால ? என்றாள் சக்தி
நீங்க என் கூட வரணுமே அவகிட்ட சொல்லி நம்ம பேச ஏற்பாடு பண்ணிதாங்கக்கா என பவ்யமாக கேட்டான் யோசனையாக அவனை பார்த்த சக்தியோ இதுபத்தி நான் சந்தனாகிட்ட கேட்டு சொல்றேன் என சொல்லிவிட்டாள் .
வீட்டுக்கு வந்த பின்னும் அதே நினைவில் சக்தி இருக்க அவளை விசித்திரமாக பார்த்த ஷியாமோ ஹே ஆங்ரி பேர்ட் உன்மண்டைக்குள்ளே என்ன குழப்புது என வினவ
சூ ஒண்ணுமில்ல மாம்ஸ் இன்னைக்கு அந்த சந்தோஷ் பையன் என்னை ஒரு ஹெல்ப் கேட்டான் என ஆரம்பித்து அவனுக்கும் சக்திக்கும் நடந்த பேச்சுவார்த்தையை அப்படியே கூறினாள் .
அதை கேட்ட ஷியாமின் முகம் இப்போது யோசனையை தத்தெடுத்தது என்ன மாம்ஸ் உங்களுக்கும் ஒண்ணும் புரியலையா? என சக்தி கேட்க
ஹேய் அப்படி இல்லடி அவன் சொல்றது ஓரளவு உண்மைதான் சந்தனா திடீர்னு ராஜினாமா பண்ணா அதனால குழப்பம் வரும்தான் ஆனா அவனை எந்த அளவுக்கு நம்பறது நு தெரியலை என சொல்ல
செல்லம் ஒரு யோசனை பேசாம சந்தனாகிட்டையும் சரத்கிட்டையும் பேசி முடிவெடுத்துட்டா என்ன? ஒருத்தருக்கு நாலுபேர் யோசிச்சி முடிவு எடுத்தா நல்லது தானே என சொல்ல
ஸோ ஸ்வீட் மாம்ஸ் நீங்க என அவள் கொஞ்ச இப்போது ஷியாமின் பார்வையில் காதல் பூகம்பம் பூத்தது அவளை ஆட்கொள்ளும் வேட்கை எழுந்தது தம்பி என குரல்கொடுத்தபடியே வந்த கலாவின் குரல் கேட்டு சட்டென்று சுதாரித்து கொண்டனர் இருவரும்.
சொல்லுங்கம்மா என குரல் கொடுத்த ஷியாமிடம் கலா கொஞ்சம் கீழே வரமுடியுமா பா உங்க பாஸ் வந்திருக்காங்க என சொல்ல அப்படியே சக்தியையும் வர சொல்லுப்பா என சொல்லிவிட்டு சென்றார் .
யோசனையாய் பார்த்தபடியே கீழே வந்த இருவரையும் ஹால் சோபாவில் கலக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த சுமித்ராதேவி கண்ணில் பட அவரை இந்தநேரம் எதிர்பார்க்காததால் வாங்கம்மா என வரவேற்றனர் இருவரும்
சக்தி உன் தாத்தா பேரை சொல்லி திடீர் நு பாட்டி புலம்பிட்டு இருக்காங்க என்ன சொல்லியும் அவங்களை சமாதான படுத்தமுடியல சந்தோஷும் அவன் ப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருக்கான் ஸோ உன்னால கொஞ்சம் வரமுடியுமா? என கேட்க
இதோ என உடனே கிளம்பினாள் சக்தி இருசக்தி நானும் வரேன் என ஷியாமும் உடன் கிளம்ப நிம்மதி பரவிய முகத்துடன் நானே கேக்கணும்னு நினைச்சேன் ஷியாம் ரொம்ப தேங்ஸ்பா நான் கார்ல வெயிட் பண்ணுறேன் வாங்க என சொல்லி விட்டு முன்னால் நடந்தார்.
மின்னல் விரைவுடன் கிளம்பி வந்த ஷியாமும் சக்தியும் வீட்டை அடையும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை வீட்டை அடைந்த பின்னோ சக்தி முன்னால் உள்ளே சென்று விட தனக்கு வந்த போனுக்கு பதிலளிக்க துவங்கிய ஷியாம் சற்றே பின் தங்கிய ஷியாம் பேச்சு சுவாரசியத்தில் சந்தோஷின் அறை ஜன்னல் அருகே வந்து விட்டான் அவன் அங்கே நிற்பது அங்கே படர்ந்திருந்த இருளின் உதவியால் யாருக்கும் தெரியவில்லை.
வீட்டினுள் எப்போதும் போல நுழைந்த சந்தோஷ் தன் அறைக்கு செல்ல யத்தனிக்க அவன் முன் பணிவுடன் வந்த வேலையாளோ ஐயா உங்களை அம்மா கூப்பிட்டாங்க என சொல்ல இதோ ட்ரெஸ் மாத்திக்கிட்டு வரேனு சொல்லு என சொல்லிவிட்டு தன் அறைக்குள் புயலென நுழைந்தான்.
அவன் அறையில் நுழைந்ததுமே அவன் செல் பேசி சங்கீதம் பாட அதை எடுத்து ஸ்பீக்கரில் வைத்தவன் என்னடா எல்லாம் ரெடியா என கேட்க மறுமுனையின் குரலோ எல்லாம் ரெடிடா மச்சி என பதில் சொன்னது டேய் நல்லா யோசிச்சுகோடா எனவும் சொல்லவும்
மச்சான் ஒரு தடவைக்கு பல தடவை நான் யோசிச்சுட்டேன் டா நீ ஸ்வேதாவை அனுப்பி வை நானும் அவளும் சேர்ந்து கொடுக்கற தொல்லைல இந்த ஷியாம் சந்தனா மட்டுமில்ல S S குரூப்பையே மறந்துடனும் பாதுகாப்பு குடுக்கறானாம் பாதுகாப்பு இனி அவனை பாதுகாக்கவே ஒரு ஆள் வேணும் என சொல்ல
டேய் எல்லாம் சரி ஆனா ஸ்வேதாவை அவனோட பொறுப்புல விட போறியே அவளோட நிலைமை என கேட்க ஏண்டா அவள் எனக்கும் தோழிடா எனக்கும் அவ மேல அக்கறை இருக்கு அதை மறந்துடாதே அப்புறம் என்ன கேட்டே அவளோட பாதுகாப்பா ? ஷியாமை நம்பி நடுராத்திரில கூட ஒரு பொண்ணை தனியா அனுப்பலாம் அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் என சொல்லி
சரி ஹோட்டல் ல நானும் சந்தனாவும் பேச ஏற்பாடு பண்ணி இருக்கோமே அங்கே எல்லாம் பக்காவா ரெடியா ? என கேட்டுக்கொண்டே அவன் தாயை பார்க்க நடந்தான் தன் காதில் விழுந்தவற்றை கேட்டு திகைத்த ஷியாமோ சத்தம் காட்டாது ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.
ஷியாமை சுற்றி பின்னபடும் சதியில் இருந்து அவன் தப்பினானா? சந்தனா சந்தோஷின் பிடியில் இருந்து எப்படி மீள போகிறாள் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்
No comments:
Post a Comment