ஆர்ப்பரிக்கும் அலைகளும் அதற்கு போட்டியாக மக்கள் பேசும் ஒலியும் இன்னிசையாய் விளங்கும் மெரினா கடற்கரை சரத் சந்தனா ஷியாம் சூழ்ந்திருக்க சந்தோஷின் நடத்தையை அவர்களிடம் கொட்டினாள் சக்தி பின்னர் உணர்ச்சியின் பிடியில் சிறிது நேரம் அமைதியாக செல்ல சரி இரு சக்தி நானும் சரத்தும் போய் எதாவது கொறிக்க வாங்கிட்டு வரோம் நீயும் சந்துவும் கொஞ்ச நேரம் இருங்க.
ஆபிஸ்ல இருந்து வந்ததுலேர்ந்து எதுவும் சாப்பிடல காலி வயறோட இருந்தா பிரச்சனை பெருசாதான் தெரியும் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பேசிக்கலாம் வா சரத் போலாம் என சொல்லிவிட்டு சக்தியிடம் கண்ணை காட்டிவிட்டு சரத்தை இழுத்துக்கொண்டு கிளம்பினான் ஷியாம் .
இருவரும் அவ்விடம் விட்டு நீங்கிய பின் சந்து உன் மனசுல என்ன இருக்கு ? உனக்கு சந்தோஷை பிடிச்சிருக்கா? என துவங்கிய உடனே அதிர்வெடி போட்டாள் சக்தி இது என்ன கேள்வி சக்தி என் மனசுல என்ன இருக்கு நு உனக்கு தெரியாதா? என சந்து கேட்க
எனக்கு தெரியும் டி ஆனா தெரிய வேண்டியவங்களுக்கு இன்னும் நீ தெரிய படுத்தலையே ? இதுக்கும் மேல நீ சரத்தா உன் கிட்ட வந்து காதல சொல்லணும் நினைக்கற அவனுக்கு உன் காதல் தெரியுமா ? தெரியாதானே புரியல நடுவுல சந்தோஷ் பார்வை வேற உன் மேல இருக்கு
அவனை பார்த்தாலும் நல்லகுணம் இருக்கற மாதிரிதான் தோணுது பணக்காரன் படிச்சவன் ஆளும் நல்ல இருக்கான் எல்லாத்துக்கும் மேல புத்திசாலினும் தெரியுது அதே சமயம் இங்க சரத்தும் சளைச்சவன் இல்ல ஸோ எல்லாமும் நீ எடுக்குற முடிவில்தான் இருக்கு
ஒண்ணு உன் வீட்டுல சொல்லி சரத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலி இல்ல சரத்கிட்ட உன் காதலை சொல்லி புரியவை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருந்தேனு வை அப்புறம் நிலைமை கை மீறி போயிடும் அது மட்டும் இல்ல சந்தோஷ் ரொம்ப புத்திசாலிதனமா என்னை அவன் அக்கானு சொல்லி உறவு கொண்டாடி என் மூலமா காய் நகத்த பாக்கறான் .
அவன் மூவ் ஒவ்வொண்ணையும் புரிஞ்சுக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு எங்கேயாவது கோட்டை விட்டோம் நு வை அப்புறம் கஷ்டம் தான் என அவள் சொல்லி முடிக்கவும் அவளின் பின்னால் இருந்த சரத் அண்ணி என குரல் குடுக்கவும் சரியாக இருந்தது .
அவள் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அவன் கையில் உணவு தட்டுக்கள் இருந்தன அவன் முகத்தில் உணர்வுகள் எதுவும் இல்லாது இருந்தான் அவனுக்கு சிறிது பின்னால் ஷியாம் உணவு தட்டுக்களை தூக்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
சக்தியின் பேச்சில் இருந்த உண்மை சந்தனாவை சுட அவள் யோசிக்க துவங்கினாள் அதன் விளைவாக அடுத்த நாள் மாலை அவள் சரத்தை தனியே சந்தித்தாள் தன் காதலையும் சொன்னாள் அவள் தன் காதலை சொன்ன மறுகணம் அவளை தன் வண்டியில் ஏறுமாறு பணித்த சரத் அவளுடன் தன் வீட்டுக்கு வந்தான்.
வந்தவன் சும்மா இல்லாமல் கலாவிடமும் ஸ்ரீதரிடமும் சென்று தனிமையில் ஏதோ பேசினான் பிறகு ஷியாமுக்கும் சக்திக்கும் அழைத்து இருவரையும் உடன் வீட்டுக்கு வரும்படியும் சொன்னான் அதே சமயம் ஸ்ரீதர் குமாரையும் சீதாவையும் அழைத்து வீட்டுக்கு வரும்படி சொல்ல கலாவின் போனிலிருந்து அதே தகவல் பரதன் பாரதிக்கும் பறந்தது .
வீட்டுக்கு முதலில் வந்த ஷியாமை கலா அழைத்து அனைவருக்கும் உணவை வெளியில் வாங்கி விடுமாறு சொல்ல விஷயம் புரியாது ஷியாமும் திகைத்தான் சக்தியை சந்தனாவுடன் இருக்க சொல்லி விட்டு சரத்துடன் சென்ற கலாவும் ஸ்ரீதரும் அறைக்கதவை அடைத்து கொண்டனர்.
வெகுநேரம் அடைத்தபடியே இருந்த அந்த அறைக்கதவு அனைவரும் வந்த பிறகே திறந்தது அதே நேரம் உணவும் வந்து விட அனைவரும் சாப்பிட்ட பின் பேசலாம் என கூறி அழைத்து சென்றார் கலா .
உணவு அருந்தி முடியும் வரை பேசாமல் இருந்த அனைவரும் அழைத்த விஷயம் பற்றி கேட்கத் துவங்க சரத் சந்தனாவை பார்த்து நீ என்ன விஷயம் என் கிட்ட பேச கூப்பிட்டையோ அதை எல்லார் முன்னாடியும் உன்னால சொல்லமுடியுமா ? என சவால் விடுவது போல கேட்க ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சந்தனா.
என்னவோ எதோவென எல்லாரும் பார்க்க சீதாவோ சந்தனாவை எரிக்கும் கண்களுடன் பார்த்தார் மற்றவர்கள் இதில் எதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாமூச்சி ஆட்டத்தினை கண்டு கொண்டனர் நடப்பது எதுவென்றாலும் நன்மையே என்ற மனநிலையோடு கவனிக்க துவங்கினர் .
என்னம்மா சரத் கிட்டே சொன்னே என குமார் கேட்க துவங்க இருங்க அங்கிள் அவளே பேசுவா என அவரை அடக்கினான் சரத் அவன் வார்த்தையை மதித்து அவர் சும்மா இருந்து விட சந்தனாவை அடிக்கும் எண்ணத்துடன் கைகளை ஓங்கியபடி அவள் அருகில் வந்த சீதாவை நில்லுமா சீதா என்ற ஸ்ரீதரின் குரல் தடுத்து நிறுத்தியது.
அதன் பின் சந்தனா பேச வாயெடுக்க அவளை பேச விடாமல் போதும் அண்ணா இதுக்குத்தான் எல்லாரையும் ஒண்ணா கூட்டுனீங்களா? என ஓங்கி ஒலித்தது சீதாவின் குரல் இப்போது அவரை அடக்கியது குமாரின் கோபம் இரு சீதா சரத் நம்ம பாப்பா கிட்ட எதோ சொல்ல சொல்லி கேக்குறானில்ல அது என்னனுதான் பார்ப்போம் என சொல்ல செய்வதறியாது திகைத்தார் சீதா.
தன் தாயின் பதற்றத்துக்கும் மற்றவர்களின் அமைதிக்கும் சரத்தின் நடத்தைக்கும் எதோ ஒரு தொடர்பு உள்ளதை சந்தனா சட்டென கிரகித்து கொண்டாள் தன் உயரம் முழுமைக்கும் நிமிர்ந்து பார்த்த அவள் தன் தந்தையிடம் சென்று அப்பா நீங்களும் அம்மாவும் அங்கிள் ஆண்ட்டியோட பக்கத்துல ஜோடியா நில்லுங்கப்பா என சொல்ல ஒரளவு அதை எதிர் பார்த்தவர் போல நடந்து கொண்டார் குமார் .
அவர்களுடன் பரதன் பாரதியும் சேர்ந்துகொள்ள மடமடவென வந்த சந்தனா சரத்தின் கைகளுடன் தன் கைகளை பிணைத்து கொண்டு பெரியவங்க எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் நான் சரத்தை ரொம்ப விரும்பறேன் அவனோட காலமெல்லாம் ஒண்ணா வாழணும் நு ஆசைப்படறேன் பெரியவங்க எல்லாரும் எங்களுக்கு முறையா ஆசீர்வாதம் பண்ணி முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைக்கணும் என சொல்லிவிட்டு நிற்க.
கொஞ்சம் இரு சந்தனா என் விருப்பம் என்னனு உனக்கு தெரிய வேண்டாமா? நீதான் என் கிட்ட உன் காதலை சொல்லி இருக்கியே தவிர நான் இன்னும் என் பதிலை உனக்கு சொல்லலை அதுக்குள்ளே நீயே ஒரு முடிவெடுத்தா என்ன அர்த்தம் என சரத் சீற .
அவனின் இத கோப முகமும் ருத்ர அவதாரமும் எல்லாருக்கும் புதியது என்பதால் அனைவரும் வாயடைத்து நின்றனர் முதலில் சுய உணர்வுக்கு வந்த சந்தனா நீ என்ன விரும்பலேனா இப்போ இங்கே நடந்த நாடகத்துக்கு என்ன அர்த்தம் என கேட்க.
அதுக்கு நான் பதில் சொல்றேன் என குறுக்கே புகுந்த சீதா ஏன்ப்பா சரத் நீயும் உங்க அம்மாவும் கோவிலுல என்னை பார்த்து சந்தனாவை பொண்ணு கேட்டீங்க எனக்கு இஷ்டம் இல்லத்தால பிடி கொடுக்கல அதுக்காக எத்தனை நாளாப்பா எங்க குடும்பத்தை அவமான படுத்த திட்டம் போட்டிருந்த ? என ஆவேசபட இதை கேட்ட அனைவரும் திகைத்தனர்
சந்தனாவின் பார்வை கேள்வியுடன் சரத்தை நோக்க அவளின் விழி விடுத்த வினாவுக்கு இமை மூடிதிறந்து பதிலளித்தான் சரத் அதில் அவனுக்கு அவள் மீது இருந்த காதல் புரிய பாவையவளோ புத்தம் புது பிறப்பெடுத்தாள்இப்போது கண்களில் புத்தம் புது ஓளியுடன் சரத்தை பார்த்த சந்தனா சொல்லு சரத் என் கேள்விக்கு உன் பதில் என்ன? சரியோ தப்போ உண்மையை மட்டும் பேசு என சொல்ல
ஆமாம் தனா நான் உன்னை விரும்பினேன் விரும்பறேன் விரும்புவேன் என் வாழ்க்கையில மனைவினு ஒருத்தி வந்தா அது நீதான் இது மாற்ற முடியாத முடிவு ஆனா இது உன்னை பெத்தவங்க சம்மத்தோட நடக்கணும் அதுக்காக அவங்களை நீ வற்புறுத்தவோ மிரட்டவோ கூடாது இது நம்ம காதல் மேல ஆணை என சொல்ல
சரி சரத் உன் வார்த்தையை நான் மதிக்கறேன் ஆனா உன்னை தவிர வேற ஒருத்தன் என்னை பெண் பார்க்க வர கூட நான் ஒத்துக்க மாட்டேன் அப்படி எதாவது நடந்தா அடுத்த நிமிஷமே நான் உனக்கு மனைவியா இல்லாம போனாலும் உங்க வீட்டுக்கு பொண்ணா உங்கப்பா அம்மாவுக்கு பெறாத மகளா இங்க வந்திடுவேன் சம்மதமா? என கேட்க அதுக்கு நானும் சம்மதிக்கறேன் மா என்றது குமாரின் குரல்
எனக்கு உன்னை இந்த வீட்டுக்கு சரத்தோட மனைவியா அனுப்பறதுல பரிபூரண சம்மதம்மா ஆனா இதுல உங்கம்மாவோட சம்மதமும் முக்கியம் நு மாப்பிள்ளை விரும்பறதால அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கு சரிப்பா வா வீட்டுக்கு கிளம்பலாம் நம்ம வீட்டுல போய் மிச்சத்தை பேசிக்கலாம் என சொல்லி கிளம்பினார்
இனி.....
No comments:
Post a Comment