This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 7 March 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 10


Click here to get all parts


விஜய்யும் சதிஷூம் கிளம்பினர்.....



சதிஷ் அவன் பைக்கில் ஏறப்போக அவனைக்கூப்பிட்ட விஜய்"டேய் பைக் நிக்கட்டும் என்னோட வா"என......



நீ எங்க போறேன்னு தெரியும் நான் வரலை என்னை விட்டுடு.நீயே போய் திட்டு வாங்கு கன்னத்துல்ல அறை கூட விழலாம்.

அதுக்கு உனக்கு மனதைரியம் இருக்கலாம் எனக்கு இல்ல என்று அவன் அலற...




வேம்மா அவனிடம் வந்த விஜய் அவன் ஃபைக் சாவியை உறுவி கொண்டான்...



டேய் சாவியை தாடா நான் போகனும் என கத்த......



வாடா நான் சாரலை பார்க்க போறேன் நீ வராமல் இருந்தா எப்படி.....



அந்த பாவ காரியத்தை பண்ண நான் வரமாட்டேன்ப்பா....



பாவம்மோ புண்ணிய்யம்மோ ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்....



நான் தான் வரமாட்டின்னு சொல்றேன்ல்ல நீ பைக் கீயைக்கொடு....




நீ வந்தே ஆகனும்....



திட்டு வாங்க நான் ரெடி இல்லடா ப்ளிஸ் விஜய் என்னை விட்டுடுடா நான் போயிற்றேன் என்று அழாத குறையாய் சதிஷ் கெஞ்ச ....



திட்டோ அடியோ சேர்ந்தே வாங்கலாம் வா என்று அவனை பரபரன்னு இழுத்து போய் காரினுல் தள்ளினான்......



காரில் போய் கொண்டுருந்த போது விஜய்"சதிஷ் அங்க போய் பேச்சை எப்படிடா ஆரம்பிக்கிறது...



அது உன்பாடு ஆனா நான் போனதும் ஒன்னு செய்யப் போறேன். ..



என்ன செய்ய போற... . 




இதுக்கும் எனக்கும் சம்மதம் இல்லை சாபம் குடுக்குறதா இருந்தா அவனுக்கு குடுன்னு அவள் கால்ல விழப்பேறேன்....




நான் எப்படி சொல்வேன் தெரியும்மா"சாரல் இதுவெல்லாம் சதிஷ்சோட ஐடியா தான் இதுக்கும் எனக்கும் சம்மதம்மே இல்லை என சொல்லுவேன் அவன் முகத்தைப்பார்த்தாள் யாரும் நம்புவார்கள் அப்படி கண்களை சிமிட்டி பாவம்மாய் சொண்ணான் விஜய்...ஆவென பார்த்தான் சதிஷ்....



ஒன்னும்மே தெரியாதுன்ற மாதிரி வச்சிக்குற இந்த முகத்தை எங்கடா வாங்கன என கடுப்பாய் கேட்க்க.....



நம்ம மேல மாசி வீதியில.......



போடா இவனே" என்று பல்லை கடித்த சதிஷ் முகத்தை திருப்பிக்கொண்டான்......



ஹாஸ் பெட்டல் வந்தனர் இருவரும் ரிஷப்சனுக்கு சென்ற விஜய்"நான் சாரலைப் பார்க்கனும் என சொண்ணான்....



நீங்க....



விஜய்.....




சாரலிடம் விசயம் போக வரமுடியாது எனக்கு நிறைய வேல இருக்கு என சொல்லி அனுப்பினாள்....




இவன் எதற்க்கு என்ன பார்க்க வந்துருக்கான் எதாவது பேச வந்துருப்பானோ என்ன பேச வந்துருப்பான் எதுவா இருந்தாலும் பேசவும் கூடாது அவனை பார்க்கவும் கூடாது.இருந்தாலும் அவனை பார் என்று தறிக்கெட்டு ஓடிய மனசை அடைக்கியவள் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார் ...




"அவங்களுக்கு நிறைய வேல இருக்காம் நம்ம அப்பறம் வரலாம்" என்று இது தான் தப்பிப்பதற்க்கு வாய்ப்பு என என்னிய சதிஷ் போக போக அவன் பின் காலரை பிடித்து முன்னே இழுத்தான் விஜய்.....




இப்போ அலறிட்டு என்னிட்ட வருவா பார் என்ற விஜய் ரிசப்சனில் இருந்த பேனாவையும் பேப்பரையும் எடுத்து எதோ ஒன்றை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்தான்."இப்போ இதை நான் கொடுத்ததா சொல்லி கொடுங்க என்றான்...





அந்த பெண்ணும் கொடுப்பாதாக போனாள்......




டேய் என்னத்தடா எழுதி கொடுத்த அவன் காதை கடித்தான் சதிஷ்.....




இப்போ நீ வரலை நீயும் நானும் விரும்புறதா இந்த ஹாஸ்பெட்டலில் ஒருத்தர் விடாம சொல்லுவேன் என எழுதிருக்கேன்....என்றான் அமர்த்தலாக....



அடப்பாவி இன்னைக்கு அவ உன்னை கொலப்பண்ண போறது உறுதி என்று சத்தியம் செய்தான் சதிஷ்.....



பரவ்வாயில்ல அவக்கையில்ல சாவதுக்கூட சுகம் தான் என்று சிலிர்த்தான் விஜய்.....




இது மட்டும் மென்டல் ஹாஸ்பெட்டலா இருந்தா உன்னை அட்மிட் பண்ணிட்டு தான் போயிருப்பேன்....காண்டாய் கத்தினான் சதிஷ்.....



என்னை மென்டல் ஆக்கியவளே வர்றா பார் எனவும் சதிஷ் திரும்பி பார்த்தான் அங்கு சாரல் விஜய்யை கொல வெறியுடன் பார்த்தபடி வந்து கொண்டுருதாள் "அதை பார்த்த சதிஷ் பயந்து போனான் "விஜய் இப்படியே நான் ஓடி போய்றேன்டா நீ பேசிட்டு வாயேன் என்றான். விஜய் அவன் பேச்சை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை...




சாரலை நோக்கி தனது பார்வ்வையை ரசனையாய் விட்டுருந்தான்.இரு முறை இங்கு வந்துருக்கிறான் ஆனால் அந்த இருமுறையும் அவள் கலர் உடையில் தான் பார்த்துருக்கிறான். ஆனால் இன்று தனது வேளைக்கான வெள்ளை உடையை அணிந்துருந்தாள்.அந்த வெள்ள உடையில் அவளது ஜொலிக்கும் கோதுமை நிறம் மின்னியது.நெற்றியில் சின்னதாய் கருப்பு பொட்டு அதற்க்கு மேலே சின்னதாய் குங்கும்மம் ,காதில் அந்த வெள்ளை உடைக்கு பொறுத்தமாய் ஒற்றை வெள்ளை பாசி வைத்த தோடு அப்படியே தேவதையே வர மாதிரி இருந்தது விஜய்க்கு.....




"ஏன் சதிஷ் அப்படியே தேவதையே வர மாதிரி இருக்குல்ல என்று சதிஷை கடுப்படித்தான் விஜய்.....



நான் வேணா ஃபேக்ரவுண்ட் மியூசிக் போடட்டும்மா...



ம்ம் போடு இந்த பாட்டைப்போட்டு "ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே"அந்த ஷாங்கை போடு அதான் அவளுக்கு மேட்ச்சா இருக்கும் என்ற போதே சாரல் அவனை நௌருங்கிருந்தாள்...



அதை அந்த பொண்ணு பாடும் இனிக்க இனிக்க காதில் வாங்கிக்க என்றவன் சற்று தள்ளியே நின்று கொண்டான் சதிஷ்.....



என்ன நினைச்சிட்டு இருக்கிங்க விஜய்யைப்பார்த்து அடி குரலில் சீறினாள்...



ஒரு நொடிக்கூட ஓயாமல் உன்னை தான் நினைச்சுட்டு இருக்கேன் சாரல் என்றான் அசராம்மல்....



உள்ளுக்குள் எழுந்த பரவசத்தை அடக்கியவள்"அவனிடம் சீறினாள்"என்னது இது இதைமட்டும் யாராவது படிச்சுருந்தா என்னை பத்தி தப்பா பேசிறுக்கமாட்டாங்களா என்றாள் பல்லை கடித்து....



"அதற்க்கு பதில் சொல்றேன்.என்னுடன் வர்றியா உன்னிடம் கொஞ்சம் பேசனும் தனியா வா" என்ற அவன் முன்னே போனான்"திமிரப்பார் வாரியான்னு கேட்காம்மா வான்னு சொல்லிட்டு போறான்"அப்படி அவன் சொண்ண தோரனை வெகு ஸ்டையிலாக இருந்ததை அவள் மனம் ரசிக்க தவறவில்லை.



அப்படி என்னத்த பேசப்போறான்.இந்த ஒரு வருடத்தில் அவன் இப்படி பேசனும் என்று வந்ததில்லை.இப்பொழுது தன் காதலையும் சொல்ல போவதில்லை ஏன் என்றாள் அதையும் சொல்லி விட்டான்.அந்த நினைவு வர மெலிதாய் சிரித்து கொண்டாள்.சில நொடி மனதில் பாரம் ஏறியது.அதையும் மீறி அவன் மீதான காதல் ஊற்றடுக்க அவன் அப்படி என்ன பேச போறான் என்று எண்ணியவள் அவன் பின்னே போனாள்.அவள் மனதை சுக்கு நூறாக உடைக்க போவது தெரியாமல்.....



ஹாஸ்பெட்டலுக்குள் சற்று தள்ளி இருந்த மரத்தடியில் நின்றுந்தான் விஜய்...

சாரல் எதுவும் பேசவில்லை அமைதியாக பேசாமல் நின்றுருந்தாள்.அதைப்பார்த்த விஜய் "பேசனும் என்று சொண்னேன் என்ன பேசனும் என்று கேட்குறாளா பார் என நினைத்த விஜய்க்கு அவளது இந்த திமிர் தனம் தான் பிடித்துருந்தது.இதே வேற பொண்ணாக இருந்துருந்தாள் அவனது அழகுக்கு இல்லையென்றாலும் அவனது அந்தஸ்த்துக்காகவே அவன் காதலை சொண்ண அடுத்த நொடியே அவன் காலடியில் விழுந்துருப்பார்கள் ஆனால் இவளோ தனது அழகுக்கும் மயங்கவில்லை தனது அந்தஸ்த்திற்க்காகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.தன்னை விரும்பிருந்தாள் கூட தனக்காக மட்டும்மே விரும்பிருப்பாள் ஆனா தன்னை விரும்புவளா என்ற கேள்வி எழுந்தது....



அந்த மடயனுக்கு தெரியாது.அவள் அவனுக்காகவ்வே விரும்புகிறாள்.இப்பொழுதுக்கூட அவளது எண்ணம் அவனுக்கும் அவளுக்கும்மான வானளவு இருக்கும் தகுதி ஒன்று மட்டும்மே..தன் தகுதிக்கு மீறி ஆசைப்படாத சாரலை தூக்கி வழுக்கட்டாயம்மாக தாலி கட்டிருந்தாள் கூட அவள் அவன் மீதான காதலை வெளி இட்டிருப்பாள்.ஆனால் இப்பொழுது விஜய் செய்யப் போகும் செயலால் அவன் மிதான தன் நெஞ்சில் விழுந்த காதல் விதை அடி ஆழத்தில் அமுங்கி அவள் மனதில் துளிர் விடாமலையே செய்ய போகிறான் என்பதை அறியாமல் அவளிடம் பேச ஆரம்பித்தான் விஜய்.....



சர்மிக்கும் சமித்திற்க்கும் சம்பந்தம் பேசப்போறில்ல....



அவனை ஆழ்ந்து நோக்கினாள்"இது எப்படி உங்களுக்கு தெரியும் .பின்னே ஆள் விட்டு பார்க்குறிங்களா இது தான் நீங்க பாரினில் மெத்த படிச்ச படிப்பா" இகழ்ச்சியாய் கேட்டாள்.......



"நான் எதற்க்கு ஆள் விடனும் நடு ரோட்டுல்ல கத்திட்டு இருந்தா எல்லாருக்கும் தான் கேட்க்கும்"அவனும் இகழ்ச்சியாகவே பதில் சொன்னான்.. 



நான் சொல்றதை கேளு சாரல் சமித் குடும்பம் உங்களை விட பல மடங்கு வசதியானவங்க அதைவிட சமித்தின் அப்பா அந்தஸ்த்து பார்க்கறவரு.....



"அதனால்ல" விஜய்யை வெறித்து பார்த்தாள் சாரல்......



"சதிஷ்ற்க்கு ஐய்யோ என இருந்தது"



அவர்கள் எதிர் பார்ப்பதை உன்னால் செய்ய முடியாது.அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேல செய்து "இல்லை நான் ஒரு வார்த்தை சொன்னால்லே போதும் இந்த கல்யாணம் நடக்கும் அதுக்கு ஃபேவரா" 



"ஃபேவரா புருவத்தை நெறுத்து விஜய்யை ஏறீட்டாள் சாரல்......



நீ என்னை கல்யாணம் பண்ணிக்கனும் ....



சொல்லிட்டான் சொல்லியே விட்டான் பெரிய பூகம்பம்மே வெடிக்க போகுது என்று கலவரமானான் சதிஷ்....



"அந்த நொடி தூக்கி வாரி போட சாரல் அவன் மீது கொண்ட நேசம் மெனும் கோட்டை உடைந்து சுக்கு நூறாகியது...

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.