This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 9 March 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 11


Click here to get all parts


சாரலின் நெஞ்சம் கொதித்தது. இவனும் சாராசரி பணக்காரன் தானா இவனும் எல்லாத்தையும் பணத்தை வச்சுதான் எடை போடுவானா. பணத்தை விட உன்னதமானது உறவுகள் என்பது இவனுக்கு தெரியாதா. பணத்தை வச்சு எதையும் வாங்கிடலாம்னு நினைச்சிட்டானா இவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கும் ........


இவன் மீது அவள் கொண்ட நேசம் நொறுங்கி போனது போன்ற உணர்வ்வு.அதனிடையில் தன்மானம் தலை தூக்கியது. பொங்கி எழுந்தது கோபம். சீற்றம்மாய் வந்தது வார்த்தை....


ஓ...உங்க திமிரை காட்டிறிங்களா பணத்தால எதையும் வாங்களாம்னு நினைச்சிட்டிங்களா ஆனால் என்னை வாங்க முடியாது.என்னோட தங்கச்சி சர்மிளா அவள் கல்யாணத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும். இதில் மூனாவது மனிஷன் நீங்க தலையிடுவது எனக்கு பிடிக்கல்ல. இதில் உங்க உதவியும் தேவையில்ல என்று காட்டமாவே சொண்ணாள் சாரல்.....


பார் சாரல் சர்மிளா வாழ்க்கை நல்லா இருக்கனும் அவள் மீதான அக்கறையிலதான் சொல்றேன்.....


இல்ல தெரியாம்ம தா கேட்குறேன் .என் தங்கச்சி மேல அக்கறைப்பட நீங்க யாரு. அவளோட பிறந்தவன்னு நான் இருக்கேன். அவளைப்பெத்த என் அப்பா இருக்காரு அதுக்கிடையில் அவள் மீது அக்கறைப்பட நீங்க யார்.....


"அவள் அக்காவை கல்யாணம் பண்ண போறவன் என்ற முறையில் நான் தானே அக்கறைப்படனும் அவள் கோபத்தை சட்டை செய்யாமல் படு கூலாக பதில் சொண்ணான் விஜய்....


"இந்த உலகத்தை விலக்கி வாங்கி கொடுத்தாலும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.யாருக்கு வேணாலும் நான் கழுத்தை நீட்டுவேனே தவிர உங்களுக்கு நீட்ட மாட்டேன் இனி என்று சிடுசிடுத்தவளை ரசித்து பார்த்த விஜய் அவளிடம்.....


அப்படியா அதையும் பார்ப்போம் இதோ பார் உன் கழுத்துல்ல என்னை தவிர யாரும் தாலி கட்ட முடியாது.அதே மாதிரி சமித்,சர்மிளா கல்யாணத்தை என்னைத்தவிர யாராலையும் நடத்தி வைக்க முடியாது"சற்று திமிராகவே வந்தது வார்த்தை.....


கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் வார்த்தையை விட்டாள் சாரல்."பணத்திமிர் ம்ம் பணத்தாலே விலக்கி வாங்க நான் ஒன்னும் வேசி இல்லை"அவ்வளவு தான் .....


"ஏய் என்ற விஜய் அவளை அடிக்க கை ஓங்கி விட்டான்"அவனது இந்த கர்ஜிப்பில் சாரல் மட்டுமில்லை சதிஷ் கூட ஆடிப்போனான்.....


விஜய்யின் முகம் கடுமையாய் மாறிருந்தது.அதில் சாரலின் முகம் அப்பட்டமாய் பயத்தைக்காட்ட தனது கோபத்தை கட்டிப்படித்தியவன் அவளிடம்"ஏய் திட்டுறதா இருந்தா என்ன திட்டு உன்னை ஏண்டி அசிங்க படித்திக்கிற நீயே என்னைத் தேடி வருவ" என்றவன் சதிஷை இழுத்துக்கொண்டு போய் விட்டான்....


சாரல் தலையில் கை வைத்துக்கொண்டு அந்த இடத்திலையே அமர்ந்து கொண்டாள்.பணம் படைத்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போய்.தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போகும் கீழ் குணம் படைத்தவர்கள் என்ற எண்ணம் வந்து மனதில் வெறுப்பை விதைத்தது....


என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன். இவனிட்ட வந்து என் தங்கச்சி கல்யாணத்தை பிச்சைப்போடுன்னு கேட்டேன்னா.இவன் தயவு இல்லாமல் என் தங்கச்சி கல்யாணத்தை நடத்த முடியாதாவா.....?? எவ்வளவு திமிர் நெஞ்சலுத்தம் இருந்தா பணத்தால்ல அடிப்பான்.இவன் முகத்துல்ல முழுச்சாலும் ஆகாது...


எவ்வளவு திமிரா சொல்லிட்டு போறான் நீயே என்ன தேடி வருவேன்னு.எல்லாம் இந்த சர்மி நால வந்தது அவள் மட்டும் சரியா இருந்தா இவனல்லாம் இப்படி பேசுவானா என்றவள் இப்பொழுது விஜய்யை மட்டுமில்லை சர்மியையும் திட்டி தீர்த்தாள்......


சதிஷ்க்கு விஜய்யின் செயல் சுத்தம்மாக பிடிக்க வில்லை. எவ்வளவ்வோ சொல்லியும் பார்த்தாச்சு இனி அவன் வாழ்க்கை அவன் கையில் என்று எண்ணியவன் முகத்தை இறுக்கமாகவே வைத்துருந்தவன் விஜய்யிடம்"விஜய் என்ன இகனயே இறக்கி விட்டுடு நான் பஸ்ல போய்க்கிறேன்"என்றதற்க்கு அவனைப்பார்த்த விஜய்...


ஏண்டா உன் ஃபைக் வீட்டுல தானே இருக்கு வந்து எடுத்துட்டுப்போ.....


"வேணா என்னை இங்கயே இறக்கி விடு ஃபைக்கை அப்பறம் வந்து எடுத்துக்குறேன் அவன் முகம் பராமலே சிடுசிடுக்க...விஜய் காரை நிப்பாட்டினான் அவன் போட்ட ஃப்ரேக்கில் காரே தூக்கி போட்டது. அவன் புறம் திரும்பியவன்"இப்போ உனக்கு என்னடா பிரச்சனை நீ ஏன் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க .......


உனக்கு என்னடா ப்ரச்சனை அந்த பொண்ணுட்ட ஏண்டா அப்படி நடந்துக்கிட்ட "நீ அன்னைக்கு சொண்ணியே இது பிசினஸ்ஸா ஒன்ன ஏய்ம் பண்ணி போகன்னு அப்படி சொண்ணவன் இன்னைக்கு அந்த பொண்ணுட்ட என்ன பேசிட்டு வந்துருக்க தெரியும்மா பிசினஸ் பக்கா பிசினஸ் நீங்க பணத்தைக்கொடுங்க நாங்க கட்டடம் கட்டித்தரம்முன்ற மாதிரி"நீ என்னைக்கல்யாணம் பண்ணிக்க நான் உன் தங்கச்சி கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு 


இந்த பேச்சு உனக்கு சரின்னு படுதா"அந்த பொண்ணு மனசை ஒடச்சுட்டு வந்துட்ட அதை ஒட்ட வைக்கலாம் ஆனா அந்த தழும்பை மாத்த முடியாது...இனி உன் இஷ்டம்....


இப்பொழுது விஜய்யும் கத்தினான்."அப்போ நீயும் என்னை புருஞ்சுக்கிட்டது இவ்வளவு தானா சதிஷ் இப்பவ்வும் சொல்றேன் என்னோட நோக்கம் சமித் சர்மிளா கல்யாணம்மில்லை "சாரல் மட்டும் தான் இப்பவும் சொல்றேன் அவள் எனக்கு கிடைக்க எதைவேணாலும் செய்வேன்."உடைஞ்ச மனசை என்னால்ல ஒட்ட வைக்கவும் முடியும் அந்த தழும்பை மறைய வைக்கவும் தெரியும்... 


எதனால பணத்தாலயா" சதிஷ் உதட்டை சுழித்து கேட்க்க.....


"என் காதல்லால்" ஒரு வார்த்தையில் பதில் சொல்ல சதிஷ் வாயடைத்து போனான்.....


ஞாயிற்றுக்கிழமையும் வந்தது.சாரலிடம் வந்த சர்மி "அக்கா என்று தயக்கத்துடன்....


என்ன சொல்....


சமி...சமித்..வீட்டுக்கு போறியாக்கா....


அவளை நிதானம்மாய் ஒரு பார்த்தவள்"ம்ம்ம் என்றாள்....


அப்பாவுக்கு இந்த விஷயம்.....


தெரிய வேணாம் நான் பேசிட்டு வர்றேன். அதன் பிறகு சொல்லக்கலாம்....


அக்கா என்று அவளைக்கட்டிக்கொண்டவள்"அக்கா சமித் மட்டும் இல்லையின்னா என்னால்ல..என்றபோதே...


சர்மி உனக்கும் சமித்திற்க்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்....


ஆனா அப்பா இதற்க்கு ஒத்துக்க மாட்டாரே .....


நான் பேசுறேன் அப்பாவுக்கு நம்ம சந்தோஷம் தான் முக்கியம் அதனால்ல இதற்க்கு கண்டிப்பா ஒத்துப்பார் சரியா.....


நான் போட்டும்மா அங்க போய் பேசிட்டு போன் பண்றேன். போகும் போதாவது சிரிடி எனவும் சர்மி சிரித்தாள்...


பஸ்டாண்டில் பஸ்க்காக வெயிட் பண்ண விஜய்யின் குரல் காதில் ஒலித்தது. நீ என்னைத்தேடி வருவ. அவங்க எதிர்பார்க்குறதை உன்னால்ல செய்ய முடியாது என்றானே....


சமித்திற்க்கு நல்ல ஃபைக் வாங்கி கொடுக்க முடியும். அம்மா உயிருடன் இருக்கும் போதே இருவருக்கும் அப்பாவின் சிறுது சம்பாத்தியத்திலும் தன்னுடைய சிறுது உழைப்பாலும் இருவருக்கும் சரிசமமாக பிரித்து எட்டு எட்டு பவுன் பேங்கில் சேமித்து வைத்துருந்தார். அதைமுழுவதும் சர்மிக்கே போட்டு விடலாம். மாதம் தனக்கு வந்த சம்பளத்தை சேமித்து வைத்ததில் அது அறுபதாயிரம் இருக்கும். அதில் அவளுக்கு நல்ல ரிச்சா துணி எடுக்கலாம். தேவைப்பட்டா அவங்க ஏதும் நகை கூடக்கேட்டா தெரிஞ்சவுங்ககிட்ட ஹெல்ப் கேட்க்கலாம் என தனக்கு தானே ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டாள்...


கடவுளே நான் எதிர் பார்த்த மாதிரி நடக்கனும். எக்காரணம் கொண்டும் அந்த விஜய் கால்ல மட்டும் என்னை விழ வச்சிடதே ப்ளிஸ் என கடவுளை வேண்டினாள்....


அவள் வருவான்னு நினைக்கிற....


வருவா கண்டிப்பா வருவா....


"எனக்கு என்னவ்வோ அவள் வரமாட்டான்னுதான் தோனுது"....சதிஷ் சொண்ணான்


சுவற்றில் அடுச்ச பந்து மாதிரி அங்க போயிட்டு இங்க திரும்பவும் வருவ்வா. ஆபிஸ் ரொம்ப தூரம் இவ்வளவு தூரம் அவள் அலைய வேணாம். வா நம்ம ஹோட்டல் போலாம். அவ அங்க தான் வருவா....


அவனை ஒரு மாதிரி பார்த்த சதிஷ்."இதுல உன்னோட ப்ளான் எதுவும் இல்லையே....


என்னடா இப்படி கேட்குற சாரல் ப்ராமிஸ் இதுல்ல என்னோட ப்ளான் எதுவும் இல்லை பச்சப்பிள்ளயாய் சொண்ணான் விஜய்.... அவனை நம்பாதப்பார்வ்வைப்பார்த்த சதிஷிடம்....


"டேய் அப்படி பார்க்காதடா உண்மையிலையே இதுல எனக்கு சம்பந்தம் இல்லை. ஆனா இனி நடக்க போவது எல்லாம் என்னோட ப்ளான் படி 

தான்" என்றவனை முறைக்கதான் முடிந்தது சதிஷால்.....


சமித் வீட்டை கண்ட சாரல் அரண்டு தான் போனாள். அவ்வளவு பெரிய வீடு .தங்களது வீட்டை விட என்பது சதவிதம் பெரிய வீடு இந்த வீட்டோடு ஒப்பிட்டால் அவர்கள் இருக்கும் வீடு வீடா என்ற சந்தேகம் வரும் அப்படி இருந்தது....


"அப்போ அந்த விஜய்யின் வீடல்லாம் எப்படி இருக்கும்"என தேவையே இல்லாமல் யோசிக்க என்ன நினைப்பு சாரல் இது என தன்னயே திட்டிக்கொண்டாள்......


இவர்களின் எதிர் பார்ப்பதை தன்னால் செய்ய முடியும்மா. சர்மிளாவின் ஆசையை தன்னால் நிறைவேத்த முடியும்மா அந்த சந்தேகம் எழ மனம் அப்பொழுதே சஞ்சலம் கொண்டு ஆண்டம் காண ஆரம்பித்தது...


கேட் திறக்க பட வாஜ் மேன் அவளிடம்"நீங்க தான் சாரலாம்மா எனவும்"ஆமா என்றாள்...


உங்களத்தான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க எனவும் சாரல் வீட்டை நோக்கி போக சமித் அவளை நோக்கி வந்தான்...

வாங்க என்றான். உள்ளே அழைத்து வந்தவன் அவளை அமர சொண்ணவன் அவளுக்கு குடிக்க கொண்டு வரச்சொண்ணான். அவனை தான் பார்த்துருந்தாள் சாரல்'"சர்மிக்கு நல்ல பொருத்தமாவன் என்றுதான் எண்ணினாள்....


அப்பொழுது மாடியில் இருந்து இறங்கிக்கொண்டுருந்தனர். சமித் அம்மாவும் அப்பாவும் அவர்கள் வந்ததும் எழுந்து நின்றாள். சாந்தாவைப்பார்த்தாலே தெரிந்தது மேல் தட்டு மக்களுக்கான மிடுக்கு அப்படியே இருந்தது. இப்படி பட்டவங்க நம்மளது எண்ணங்களை எப்படி ஏத்துப்பாங்களா. இவர்கள் எதிர்பார்ப்பதை செய்தாள் தானே இங்க சர்மி சந்தோஷம்மா இருப்பா என் எண்ணியவள் அவர்களுக்கு வணக்கம் சொண்ணாள்....


ம்ம் என்ற சாந்தா உட்கார் என்றார் சற்று அலட்ச்சியம்மாகவ்வே....


அம்மா இவங்க சாரல் சர்மியோட அக்கா....


சரி நீ போ நாங்க பேசிக்கிறோம் என்றதும் மறு வார்த்தைப்பேசாமல் கிளம்பி விட்டான் சமித்.


இவன் சம்பந்தப்பட்டதை தானே பேசப்போறோம். ஆனா இவன் போன்னு சொண்ணதும் போறான். தன் முடிவு இது தான் என ஒரு ஆண் மகனாய் உறுதியாய் நிக்க வேண்டாம்மா"எப்படி விஜய் நீதான் எனக்கு வேணும்னு ஒத்தகால்ல நிக்கிறானே அது மாதிரியா"சைய் என்னது இது அவனைப்பத்தியே நினைச்சிட்டு இருக்கேன்....

அப்பொழுது சாந்தா....


என்ன கல்யாணத்தை பத்தி பேச பெரியவங்க தானே வரனும் நீ வந்துருக்க. சின்ன பெண் நீ எப்படி.....


என் தங்கச்சிக்கு எது நல்லது எது கெட்டது என்று முடிவு பண்ற அளவு எனக்கு புத்தியும் இருக்கு அதிகாரமும் இருக்கு பெரிய மனிஷியாய் பதில் சொண்ணால் சாரல்...


என் முடிவும் என் அப்பா முடிவும் ஒன்னு தான்....


அவளது பேச்சில் புருவத்தை உயர்த்திய சாந்தா அப்போ பேசலாம் . என் பய்யனுக்கு நிறைய பய்யனுக்கு நிறைய இடத்தில்ல வரன் வருது. அதல்லாம் நீங்க நினைச்சு கூட பார்க்க முடியாத இடங்கள் என்றார் சற்று அலட்ச்சியம்மாகவே....


ஆனா உங்க பய்யன் என் தங்கச்சியை அல்லவா நினைச்சுட்டு இருக்கார் என்றவள் பட்டும் படாமல் புன்னகைத்தாள்....


அந்த பணத்தை விட என் தங்கச்சியோட குணம் அளவிட முடியாதது பண பிசாசுக்களா என மனதில் நினைத்து கொண்டாள் சாரல்...


என் பய்யனுக்கு நூறு பவுன் இருநூறு பவன் போட ரெடியா இருக்காங்க இருந்தும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டோம்...என்றதும்மே சாரலுக்கு இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லை என்ற சந்தேகம் எழுந்தது...


நீங்க அந்தளவு எல்லாம் போட முடியாது என தெரியும் ஏன் நினைக்க கூட முடியாதுன்னு தெரியும் என்றார் இளப்பமாக...


தங்களது ஏழ்மையை சுட்டிக்காட்டிறுக்கலாம். ஆனால் அது என்ன இளப்பமாய் சொல்வது சுள்ளன்று கோபம் வந்தது. எழுந்து போய் விடலாம் என எண்ணினாள் சர்மியின் முகம் மனக்கண்ணில் தோண்ற பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு அமர்ந்துருந்தாள்.....


நீங்க மத்தவங்க போடும் அளவெல்லாம் போடவேண்டாம் என்பது பவுன் போக வரக்கார் அது போதும் என சாதரணம்மாக சொல்லிமுடித்தார் சாந்தா.....


சாரலுக்கு தலை கிற்றென்ன சுத்தியது....


அது கூட ஏன் சொல்றேன்னா எங்க சொந்தபந்தம்மெல்லாம். அந்தஸ்துல்ல உயர்ந்து இருக்குறவங்க அவங்க வாயை அடக்க வேண்டாம்மா அதனால்ல தான் சொல்றேன். அது உன் தங்கச்சிக்கும் கெளரவம் தானே.....


இவ்வளவ்வா இவ்வளவுக்கு எங்க போறது. எதை வைத்து போடுவது என்று யோசிக்கும் போதே...சாந்தா அவளிடம்...


என்னம்மா யோசிக்கிற நாங்க இவ்வளவு இறங்கி வந்ததே பெருசு இல்லையின்னா இந்த கல்யாணம் நடக்காது என்றார் உறுதியாக....


விஜய்யின் பேச்சால் இவர்களிடம் முடிந்ததை செய்வோம். கூடகேட்டாள் இவர்களது காலிலாவது விழுந்து இந்தக் கல்யாணத்தை நடத்தலாம் என எண்ணினாள். இப்படி பணம் நகை அந்தஸ்த்து பிடித்த பேய்களிடம் அவர்கள் எதிர்பார்த்தை விட செய்தால் தானே அவள் இங்க சந்தோஷம்மா இருப்பா. இப்போ நான் இவங்க கால்லயே விழுந்து இந்தக்கல்யாணம் நடந்தாலும் அது சர்மிக்கு கெளரவ்வமாய் இருக்கும்மா எப்பொழுதும் அவளை" உன் அக்கா எங்க கால்ல விழுந்து தான் இந்த கல்யாணம் நடந்தது என்று இளப்பமாகவ்வே பார்ப்பார்கள்


கூடாது என் தங்கச்சி கெளரவ்வமாய் சந்தோஷம்மாய் வாழனும்.....


என்னம்மா யோசிக்கிற நான் சொண்ணது சொண்ணது தான். இல்லையின்னா எங்க பய்யன் மனசை எப்படி மாத்தி எங்க வழிக்கு கொண்டு வரத்தெரியும்....


என்ன நினைத்தாலோ"எப்போ இந்தக்கல்யாணத்தை வச்சிக்கலாம் என்றதும் இருவரும்மே வியப்புடன் அவளைப்பார்த்னர்.


இப்படியெல்லாம் பேசினா இவள் கல்யாணம்மே வேணாம் என ஓடி விடுவாள் என நினைத்தனர் சமித்தின் பெற்றோர். ஆனால் எப்ப கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்ப்பாள் எதிர்ப்பார்க்கவில்லை இருவரும்.....


சமித்தின் அப்பாவை பார்த்தாள் இவ்வளவு நேரம் சாந்தா தான் பேசினாரே தவிர இவர் ஒரு வார்த்தை பேசவில்லை. பொண்டாட்டி கைக்குள் இருப்பார் போல. இவரைப்போலத்தான் சமித் இருப்பானோ சர்மி முத்தானையை பிடிச்சிக்கிட்டு என்று எண்ணும் போதே இதழில் புன்னகை வந்தது....


அதை நீயே சொல்லிடு என்றனர் இருவரும்....


நான் வீட்டுக்கு போய் அப்பாட்ட பேசிட்டு பதில் சொல்றேன் என்று கைகூப்பியவள் நான் வரேன் என்று சொண்ணவள் அவர்கள் முன் சற்று நிமிர்வாகவே நடந்தாள்......

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.