சாரல் ஆட்டோ ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டாள்.அவள் போய் நின்ற இடம் விஜய்யின் ஹோட்டல்.....
மனமும் உடலும் தளர்ந்து போனது போன்ற உணர்வ்வு.அந்த விஜய்யிடம் அப்படி வீராப்பாய் பேசிட்டு அவனிட்டயே வந்து இந்த கல்யாணத்திற்க்கு சம்மதிக்கிறேன் என்று அவன் முன் நிற்க்க பெருத்த அசிங்கம்மாய் இருந்தது...
இப்படியே போயிரலாம்மா எனக்கூட யோசித்தாள்.போக முடியாதபடி அந்த கடவுள் இவன் கால்லையே விழ வைத்து விட்டாரே....விஜய்யை நினைக்க நினைக்க பத்திக்கிட்டு வந்தது.நினைச்சதை சாதிச்சிட்டான்...
யோசித்தபடி அவள் நிமிர்ந்து பார்க்க ஹோட்டலை பார்த்து பிரமித்து விட்டாள் ஆ வென பார்த்துருந்தாள்.இவ்வளவு பெரிய ஹோட்டலா.இது வரை இந்த ஏறியாவில் இந்ந ஹோட்டல் இருக்கும் என்பது தெரியும்.ஆனால் இது வரைப்பார்த்ததில்லை.இதல்லாம் நம்ம பார்க்க முடியும்மா என்ற எண்ணம் வேறு.ஆனால் இன்று பார்த்து பிரமித்து விட்டாள்...
இவ்ளோ பெரியப்பணக்காரன் என்னை மட்டும் இல்லை என்ன மாதிரி எத்தனைப்பொண்ணுங்களை வேணாலும் வாங்குவான் அப்பொழுதும் விஜய்யை சரியா தப்பா புரிந்து கொண்டாள்.....
கண்ணாடி கதவை திறக்க சில்லன்றக்காற்றை ஏசி அவள் மீது வீசியது.ஆனால் விஜய் மீதான கோப அனலை அணைக்கவில்லை.ரிசப்சனில் இருந்த பெண்ணிடம் தயங்கி நின்றாள்...
அந்தப்பொண்னோ சாரலிடம்"ஹலோ மேம் நீங்க யாரைப்பார்க்கனும்...
நான் விஜய் அந்த பெயரைக்கூட சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.கசப்புடன் விஜய் அவங்களைப்பார்க்கனும் என்றாள்...
நீங்க சாரை பார்க்கனும்னா அப்பாய்மெயின்ட் இருக்கனும் இருக்கா....
ஐயோ இது வேறையா என்று தலையைப்பிடித்துக்கொண்டாள்.
அதல்லாம் இல்லை என்னோட பெயர் சாரல் அதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள் அவருக்கு தெரியும்....
ஓ காட் நீங்கதான் சாரலா டேபிலை சுற்றி அறக்க பறக்க வேகம்மாய் அவளிடம் ஓடி வந்தாள் அந்த பெண். சாரி மேம்.இதை ஏன் முதலிலையே சொல்லலை.விழாதக்குறையாய் கவனித்தாள்.வேறு ஒரு எம்ளாயிடம் "வினித் மேம் வந்தாச்சு சாருக்கு இன்ஃபாம் பண்ணுங்க என்றவள் அவளை ஒரு ஏசி அறையில் அமர வைக்கப்பட்டாள்.மேம் நீங்கதான் சாரல்லன்னு சொல்லிருந்தாள் நான் அவ்வளவு கேள்வி கேட்டுறுக்க மாட்டேன்னே என்றாள் மிக பணிவாக....
இதை சாரிடம் சொல்ல வேணாம்.தெரிந்தா என்னை வேலையை விட்டு தூக்கிடுவார் என்றாள் அந்த பெண் பயந்த குரலில்.....
சாரலுக்கு தன்னைக்கவனித்தில் ஆச்சிர்யம் இல்லை.தன்னிடம் இவ்வளவு கேள்வி கேட்டதாள் இவளை வேலையை விட்டு தூக்கிடுவானா கேள்வி கேட்பது தானே இவளது வேலையே .அப்படி ஒன்னும் இவள் தன்னிடம் கேள்வி கேட்களையே என்றவள் அவளுக்கு கனிவான புன்னகையை சிந்தினாள்....
சார் சிக்ஸ்த் ஃப்ளோர்ல்ல இருக்கார் வந்துடுவாங்க.நீங்க என்ன சாப்பிட்றிங்க...
எனக்கு ஏதும் வேணாம் ....
அப்படி சொல்லாதிங்க நீங்க வந்தா உங்களை நல்லா கவனிச்சிக்க சொல்லிருக்காங்க சார்.நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன் என்று ஓடினாள்...
அப்போ இவனுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கு அவங்க அவ்ளோ நகை கேட்பாங்க என்னால்ல போடமுடியாது இங்க தான் நான் வருவீன்னு எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பன்னுறான்.விஜய்யை நினைக்க நினைக்க மனதில் வெறுப்பு தான் மண்டியது.இந்த சர்மிளா மட்டும் சரியா இருந்தா இவனிடம் வந்து மாட்டிருக்க மாட்டேன் மனம் நொந்து போனது...
தலை வெடிப்பது போல் இருந்தது.தலையை தன் இருக்கைகளாலையும் தாங்கி பிடித்தபடி அமர்ந்துருந்தாள்...
என்னாச்சு சாரல் பேபி தலை வலிக்குதா
விஜய்யின் அக்கறையையான குரல் காதில் விழ திடுக்கிட்டு எழுந்து நின்று விட்டாள் பதட்டத்துடன்....
அவனைக்கண்டதும் வழிய வந்து மாட்டிக்கொண்டம்மே கழிவிரக்கத்தில் அழுகையே வந்து விடும் போல் இருந்தது.இவன் முன் நிற்பதுக்கு செத்தே விடலாம் என்று எண்ணியவளுக்கு அழுக வரும் போல் இருக்க கஷ்டப்பட்டு அதை அடக்கி கொள்ள அதில் அவள் முகம் இன்னும் சுணங்க...
விஜய்யோ அவளிடம் "என்னாச்சு சாரல் தலை ரொம்ப வலிக்குதா உண்மையிலயே கவலைக்கொள்ள தாரணி என கத்தினான்...
சார் என்றவள் அவனிடம் நடுங்கி நின்றாள்....
வந்தவளுக்கு காபி ஏதும் குடுக்கறது இல்லையா இடியட் காட்டமாய் கத்த..
"அவள் அதைதானே எடுக்க போனா இவன் ஏன் இவ்வளவு சீன்ன போட்றான்" என்றவளுக்கு எரிச்சலாய் வந்தது
சாரி சார் இந்தாங்க மேம் என்றாள் அழாத குறையாய்.வாங்கி கொண்ட சாரலுக்கு தான் பாவம்மாய் இருந்தது.வந்ததில் இருந்தே அவள் தன்னை நல்லா தான் கவனிச்சிக்கிட்டா இப்போ கூட எனக்கு காபி எடுத்துட்டு வரத்தான் போனாள் அது தெரியாமல் திட்டித்தீர்த்து விட்டான் ராஸ்கள்.திமிரு உடம்பு பூறாம் திமிரு என்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்ற தெனாவட்டு வளந்த மாடு என நல்லா மனதுக்குள் திட்டி தீர்த்தாள் சாரல்.....
காபியை குடி சாரல் தலை வலி குறையும்....
எனக்கு இருக்குற தலைவலியே நீ மட்டும் தாண்டா தடியா என நினைத்தவள் அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை...
என்னாச்சு சாரல் டோபுலட் ஏதும் போட்றியா தாரணி என மறுபடியும் கத்தபோனவனை தடுத்தவள்....
போதும் உங்க ஆர்பாட்டம்.எனக்கு எந்த தலைவலியும் இல்லை.நீங்க பண்ற அலம்பலில் தான் எனக்கு நிஜம்மாவே தலை வலி வந்துடும் போல அவள் சிடுசிடுக்க அதை வழக்கம் போல அதை
பெரிது படுத்தாமல்"என்ன சாரல் பேபி இது என்னை திட்டுவதற்க்கு மட்டும் தான் வாயை திறப்பேன்னு இருக்கியோ இதல்லாம் உன் மேல் எனக்கு இருக்கும் அக்கறை பேபி...
என் மேல் அக்கறை பட நீங்க யாரு என கத்த..
"மறுபடியும் மறுபடியும் அதையே கேட்கிறியே பேபி நான் உனக்கு யார்ன்னு நீ முடிவு பண்ணிட்டு தானே நீ என்ன பார்க்க வந்துருப்ப"புருவங்களை உயர்த்தி உதடுகள் புன்னகையில் வளைய படு அமர்த்தலாக வினவினான் விஜய்...
சாரலின் முகம் அப்படியே வாட.....
அதற்க்கு நானே பதில் சொல்றேன்.என்னை கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு சொல்ல தானே நீ இங்க வந்த.அப்போ உனக்கு ஹஸ்பன்ட் ஆகப்போறவன்றவன்ற முறையில் உன்னை கேர் பண்ணறது என்னோட கடமையில்லையா ம்ம் நீயே சொல்லு....
ஏன் சாரல் இதைத்தானே சொல்ல வந்த....
ம்ம் நடக்கட்டும் இந்தக்கல்யாணம் நடக்கட்டும் என் கல்யாணம் நடக்கட்டும் ஜீவனே இல்லாமல் வந்தது வார்த்தை....
என் கல்யாணம்னு சொல்லாத நம்ம கல்யாணமுன்னு சொல்லு பேபி....
சரி நம்ம கல்யாணம் நடக்கட்டும் பல்லை நறநறவென கடித்துக்கொண்டு சொண்ணாள்......
அவளுக்கு தோற்று போன உணர்வ்வு ஆனால் விஜய்யிக்கு அவள் என்னிடம் தோற்று விட்டாள் எண்ணம் துளிக்குளிக்கூட இல்லை.என்னவள் என்னிடம் வந்து விட்டாள் என்ற உணர்வ்வு மட்டும்மே அது அவனை மிதக்க செய்தது.இதை சொண்ணால் அவள் நம்புவாளா....
சரி சரி ஏன் நிக்கிற உட்கார் அவன் கைக்காட்டிய ஷோபாவில் அமர்ந்தாள்...
என்ன சாரல் எதுவும் பேசாம்ம இருக்க...
என்ன பேச அதான் கல்யாணத்திற்க்கு சம்மதம் சொல்லிட்டேன்ல முகத்தை திரும்பி கொண்டு பதில் சொண்ணாள்....
ஓ கே பேபி நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் நீயே சொல்லு...
எல்லாத்தையும் நீங்கதானே சொல்றிங்க இதையும் நீங்களே சொல்லுங்க....
என் சாரல் பேபிக்கு அது தான் இஷ்டம்னா நானே சொல்லிற்றேன்.சரியா ஒரு மாதத்தில் நம்ம கல்யாணம் நடக்கும். மிஸ் சாரல் மிஸ்ஸஸ் விஜய்யா ஆக போறாங்க இல்லையா சாரல் என அவளை கேள்வி கேட்டு இன்னும் கோபத்தை கிளப்பினான் கூலாக......
அதுக்கு முன்னாடி எங்க வீட்டுல்ல வந்து நீங்க உங்க அம்மா அப்பாவோட வந்து என் அப்பாட்ட பேசனும்...
எப்ப வரட்டும்....
அவள் சொண்ணாள்.....
சமித் சர்மிளா கல்யாணம்...
காரியத்துல்லயே கண்ணா இருக்கியே சாரல்மா நம்ம கல்யாணம் முடிந்த மறுமாதம்மே நீ ஆசைப்பட்டாள் மறு நாளே கூட நடத்த நான் தயார்....
எழுந்த சாரல் நான் கிளம்புறேன் என்றாள்...
இரு இந்த சிட்டியோட ஒன்னாப் த பிசினஸ் மேன் விஜய்யோட ஒய்ப் ஆகப்போறவள் நடந்து போலாம்மா கார்ல்ல ட்ராப் பண்றேன் எனவும்.....
இரு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் வைத்து ஒரு கும்பிடு போட்டாள் அவனைப்பார்த்து"நானே போய்க்குவேன் என்றவளின் செய்கையில் புன்னைகைத்தவன் அவளை மேலும் சீண்ட வேணாம் என எண்ணி சரி கிளம்பு என்றான்.....
ஓட்டமும் நடயும்மாய் வந்து கதவை திறந்தவள் வெளியே வந்து நின்றாள்.உள்ளே அவனுடன் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருந்தது அவளுக்கு. இவனோட வாழ்க்கை முழுதும் எப்படி இருப்பது ஆயாசம்மாய் இருந்தது அவளுக்கு....
அவள் ஓடியதைப்பார்த்த விஜய் இவள் ஏன் இப்படி ஓட்றா என்னம்மோ இவளை இந்த ரூம்க்குள்ள வச்சு என்னம்மோ பண்ண மாதிரி"விஜய் மிஸ் பண்ணிட்ட அவளை உள்ள வச்சு கிஸ் அடிச்சுறுக்கனும்.அவள் லிப்ஸ் என்ன டேஸ்ட்டுன்னு பாத்துருக்கனும். மிஸ்ஸஸ் விஜய்யை மிஸ் பண்ணிட்டியே என விஜய் சலித்துக்கொண்டான்...
அவள் வெளியே வர சதிஷ் எதிரே வந்தான்.அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.ஆனால் அவள் முகம் வேதனையை அப்பிக்கொண்டு இருந்தது அதை சதிஷ்ஷால் பார்க்க முடியவில்லை அவள் சென்று விட விஜய்யிடம் பாய்ந்தான் சதிஷ்.....
No comments:
Post a Comment