This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 18 March 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 15


Click here to get all parts


ஒரு வாரம் ஓடியிருக்க....


கணேஷ் விஜய்யிடம்...."விஜய் ஐயர் நல்ல முகூர்த்தம் நாளா குறுச்சு குடுத்துருக்கார் நீ இதை சமந்திட்ட சொல்லிட்டு கல்யாண இன்விடோஷன் அடிக்க சாரலை அழைச்சிட்டு போய் டிசையின் கொடுத்துட்டு வந்துடு சரியா அப்பறம் உன் அம்மா சாரலுக்கு நகை எடுக்கனும்னு சொண்ணா நேரா நகைகடைக்கு அழைச்சிட்டு வா சரியா .....சரி என்றான்....


சிறுது நேரத்தில் சாரலின் வீட்டிற்க்கும் வந்துருந்தான். ராமமூர்த்தி அவனை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார். "வாங்க மாப்பிள்ளை என்றவர்" சாரல்ம்மா மாப்பிள்ளை வந்துருக்காங்க பாரு எனவும் அரவிந்த் சாரல்,சர்மி என எல்லாரும் வந்தனர்....


மாமா வாங்க என அரவிந்தும் சர்மியும் உற்சாகம்மாய் வர சாரல் உணர்ச்சியற்ற குரலில் வாங்க என்றாள் அதுவும் தன் அப்பாவுக்காக அதை அவளை ஆழ்ந்த பார்வ்வையுடன் உதட்டில் வலிந்த புன்னகையுடன் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டான்..


அது அவளை ஏதோ பண்ண அவனுக்கு எதாவது கொண்டு வர எண்ணி அதை சாக்காக்கி கொண்டு ஓடி விட்டாள்...


அவன்"மாமா அது வந்து கல்யாணத்திற்க்கு இன்விடேஷன் அடிக்க டிசையின் பார்க்கனும் அப்பறம் அம்மா சாரலுக்கு சில நகை எடுக்க ஆசைப்பட்றாங்க என்னோட அனுப்பி வச்சா நான் ஒரு ஒன்னார்ல்ல சாரலை வீட்டில் விட்டுடுவேன்...


அப்பொழுது சாரல் காபி கொண்டு வந்து கொடுத்தாள். "தைங்யூ என வாங்கி கொண்டான். அவனை பார்த்த அந்த ஒரு நொடி அவன் கண்களில் வழியே ஏதோ மின்சாரம் பாய்ந்தது போண்ற உணர்வ்வு பட்டன்ன தலையை தாழ்த்தி கொண்டாள் சாரல்....


சாரல் மாப்பிள்ளை சொண்ணது கேட்டுச்சா...


அவரே செலஃக்ட் பண்ணட்டுப்பா நான் எதுக்கு அது இல்லாமல் நகையெல்லாம் எதுக்கு அதல்லாம் வேணாம் என்றதும்மே விஜய்யின் முகம் வாடி விட்டது...


அதை பார்த்த ராமமூர்த்திக்கு சாரல்ம்மா போய்ட்டு வா சமந்தி தான் ஆசையா கூப்பிட்டுறாங்கள போய்ட்டு வா எனவும் விஜய் குறுக்கிட்டு...


"இட்ஸ் ஓகே மாமா அவளுக்கு பிடிக்காதுன்னா எனக்கும் பிடிக்காது"என அவன் சொண்ண தோரணையே சாரலுக்கு திடுக்கன்று இருந்தது.காரணம் விளங்க "அவசரம்மாய் நான் வரேன் என்றதும் விஜய் விஷம்மாய் சிரித்து வைத்தான் அவளைப்பார்த்து அனைவரும் அங்கு இருந்ததாள் முறைத்து கூட பார்க்க முடியலை"எப்படி மிரட்டுறான் எனுபோதே அவளுக்கு அழுகையே வரும் போல இருந்தது...



அதான்னே என்னோட சாரல் பேபிக்கா புரியாது.சாரி பேபிம்மா இப்பவும் எனக்கு வேறவழி தெரியல்ல உன்னை என் கூட வரவைக்க என்ன வில்லனாவே ஆக்குறியே பேபி நான் உன்னோட ஹீரோ அதை என்னைக்கு புருஞ்சுக்க போற என நினைத்தவன் ராமமூர்த்தியிடம் "நாங்க கிளம்புறோம் மாமா  என்றான்..


அந்த நேரம் சர்மி சாரல் காதில்"அக்கா மாமாவோட தனியா போற முகத்தை உற்றுன்னு வச்சிக்காதே சிரிச்சு பேசு சரியா....


போடி எருமை என்றவள் அவன் மிரட்டுறது தெரியாமல் இவள் வேற சிரிச்சு பேச சொல்றா அது தான் இப்போ குறச்சல் அவனோட என நினைத்து கொண்டவள் அவனுடன் போக சாரல் பின் சீட்டில் அமர போக"நீ லக்கேஜ் இல்லை சாரல் முன்னாடி வா அது இல்லாமல் எனக்கு உன்னோட பேசனும் கொஞ்சம் முன்னாடி வர்றியா என கட்டளையாய் சொல்ல எரிச்சலுடன் முன்னோ அமர்ந்து கொண்டாள்....


காரை கிளப்பிருந்தான் விஜய்.அவளிடம் "இனி நீ வேலைக்கு போக வேணாம் சாரல் அது எனக்கு கெளரவமா இருக்காது அதனால்ல  போகாதே சரியா"அவன் சொண்ணதே இனி போகதே என்ற கட்டளை இருந்தது..


அதிர்ந்து போய் அவன் முகம் பார்க்க சாரலின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது. எவ்வளவு திமிர் இத்தனை நாள் என் குடும்த்திக்கு சோறு போட்ட வேலை,நான் ஆசைப்பட்டு சேர்ந்த வேலை  ஒரு செகன்டில் அந்த வேலையை விட்டுடு எனக்கு கெளரவம்மா இருக்காதுத்துன்னு சொல்றான் அப்படி என்ன நான் கேவலமான வேலையா பாக்குறேன் என உள்ளம் கொதித்தது ஆனால் அதை அவனிடம் காட்ட முடியாது இப்பொதைக்கு அவன் கையில் சிக்கின நூல் பொம்ம நான் அவன் கைக்கு தக்கணை  நான் ஆடத்தான் வேணும் என நினைத்தவள் அவனிடம்....


நான் ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்த வேலை அது ஒரு ரெண்டு வாரம் போறேன் அதுக்கப்பறம் போகலை என்றாள் பாவம்மாய்..


அது அவனை ஏதோ செய்ய"சரி நீ எப்ப நிக்க நினைக்கிறியோ அப்ப நில் என்று விட்டான்...


அவனுடன் போனது என்று தான் பேர் அவன் தான் இன்விடேசன் கார்டை செலக்ட் செய்தான். வெறுமனே அமர்ந்துருந்தவளை பார்க்க விஜய்க்கு டென்ஷன் ஏறியது...


பிறகு அழைத்துக்கொண்டு கிளம்பினாள். காரிலும் அப்படியே அமர்ந்துருக்க அதற்க்கு மேலூம் விஜய்யால் பொறுமையை இழுத்துக்க முடியவில்லை அவளிடம் .....


அவளிடம்"ஏன் இப்படியிருக்க...."


"எப்படி இருக்கேன். எரிச்சலையாய் கேட்டாள்..."


நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் உனக்கு துளிக்கூட சந்தோஷம் இல்லையா....


அது என்னோட விருப்பத்துடன் நடந்துருந்தாள் என நினைத்தவள் எதுவும் சொல்லவில்லை அவனிடம்....


உன்னை இப்படிப்பார்த்தாள் என்னோட பேரண்ட்ஸ் என்னை நினைப்பாங்க உன்ன நான் உன்னை கட்டாயப்படித்தி கல்யாணம் பண்றதா நினைக்க மாட்டாங்களா..


"பின்ன இல்லையா"என அவன் முகம் பார்த்துக்கேட்டாள் கோபத்துடன்....


"ஓ அப்போ நான் உன்னை இந்த கல்யாணத்திற்க்கு கம்பெல் பண்றேன் அப்படி தானே சொல்ல வர்ற.."..


ஆமா போதும்மா என்று அவள் கத்த விஜய் காரை ஒடித்து ஓரம்மாய் நிப்பாட்டினான்..


"அப்போ என் ஆபீஸ் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு சொண்ணது உன்ன மாதிரியே இருந்த வேறப்பொண்ணா "அவன் என சந்தேகம் கேட்டான்...


எனக்கு வேறவழி சமித் சர்மி கல்யாணம் நடக்கனும்மே.அதுமட்டும் இல்லாமல் இருந்தாள் நான் ஏன் உங்கட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்குறேன். அது மட்டும் இல்லை எனக்கு இந்தக்கல்யாணத்தில துளிக்கூட விருப்பம் இல்லை அதை தெரிஞ்சுகோங்க என அவளும் காட்டம்மாய் பதில் சொண்ணாள் ....


"ஓ அப்படியா உனக்கு பிடிக்கலையின்னா இந்த கல்யாணத்தை நிறுத்திறுலாம். அப்பறம் சமித் சர்மிளா கல்யாணத்தையும் நிறுத்திறல்லாம் என்றான் அமர்த்தலாய்...".


"அவனை திக்கென்ன அதிர்ந்து அவள் பார்க்க கண்கள் குளம் கட்டியது.எப்படி மிரட்டுறான் எனும் போதே அழுகையும் வர சிரமப்பட்டு அடக்கி கொண்டாள்." நேராகப்பார்த்தவள் போலாம் என்றாள்....


அப்பப்ப கண்களை துடைத்து கொண்டு வந்தவளைப்பார்த்த, விஜய்க்கு இதய்யம்மே வலித்தது. என்னை மன்னிச்சுடு சாரல். நீதான்டி என்னை இப்படி பேசவைக்கிற இதல்லாம் உன் கழுத்தில் தாலி கட்டுற வரதான் அதுக்கப்பறம் நான் உன்னை எப்பவும் நோகடிக்க மாட்டேன். நீ என் பக்கதில்லயே இருக்க போற நாள எதிர்பார்த்து நான் தவம் கிடக்கேன். நீ என்னடான்னா புருஞ்சுக்காம்ம பேசுற என நினைத்தவன் நகைகடையில் வண்டியை நிப்பாட்டினான்......

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.