நகைகடையில் மிதுலா அவர்களுக்காக காத்திருந்தார்...
அவர்களைப்பார்த்ததும் காருக்கிட்டயே வந்து விட்டார்.சாரல் மிதுலாவ்வை பார்த்ததும் ஒட்டிக்கொண்டாள்.எப்படி இருக்கம்மா சாரல்..
நல்லா இருக்கேன்த்த நீங்க அவளும் அன்பொழுக கேட்டாள்.விஜய் அவள் முகத்தைதான் தான் பார்த்திருந்தான்.நம்ம சொண்ணதுக்காக அம்மாட்ட அன்பா பேசுறாளா அப்படி தெரியலையே உண்மையாவே அன்பா தான் பேசுறா.பாராவாயில்லை அம்மாட்டையவது நல்லா பேசுறாளே அது வரைக்கும் சந்தோஷம்."பின்ன நீ பண்ண வேலைக்கு உன்னிட்ட காதலைக்கொட்டி பேசுவாளா"என மனசாட்சி கேள்வி கேட்க்க அவனோ"பேச வேணாம் லேசா பார்க்க சொல்லுங்க போதும்"அசராமல் பதில் சொல்லி கொண்டான் விஜய்.....
டேய் விஜய்...
என்னம்மா.....
என்னடா அப்படி பாக்குற....
அது ஒன்னும் இல்லை உன் மருமகளுக்கு உன்னைப்பார்த்த பிறகு தான் சிரிப்பே வருது அது தான் எப்படின்னு பார்க்குறேன்....
"ஏன் உன்னை பார்த்ததும் முறைச்சாலா என்ன."...
"ஆமாமா" என அவன் உண்மையைத்தான் சொண்ணான்.ஆனால் மிதுலாவோ "இவன் இப்படித்தான் பேசுவான் நீ வா நம்ம உள்ள போலாம் என அவளை அழைத்துக்கொண்டு போக விஜய்யோ....
அம்மா நிஜம்மா சொல்றேன்ம்மா"என கத்த...
போடா டேய் என்றவர் கடைக்குள் போய் விட்டார்....
விஜய்யைக்கண்டதும் கடைமுதலாளி வந்து ஏக மரியாதைக்கொடுத்தார்.அதைக்கண்ட சாரல்"எல்லாரையும் காசை வச்சு மடக்கி வச்சுறுக்கான் என அப்பொழுதும் தப்பாகவே எண்ணினாள் விஜய்யை பற்றி....
பிறகு விஜய்யும் தோடு டிசையின் பார்த்துருக்க விஜய் கேஷூவலாக சாரலை ஒட்டி அமர்ந்து கொண்டான்...அவளுக்கு தான் பெரும் அவஸ்த்தையாக இருந்தது."இவன் என்ன இடம்மே இல்லாத மாதிரி இப்படி ஒட்டிக்கிட்டு உட்காந்துருக்கான்.அவன் நெருக்கம் அவளுக்கு ஒரு வித இம்சையை கொடுக்க நகர்ந்து உட்காரலாம் என நினைத்தாள் லேசாக நகர்ந்தாலும் மிதுலாவின் காலை சேர் பதம் பார்த்து விடும் என்பதாள் அமைதியாக அமர்ந்துருந்தாள்..
ஒரு தோடை எடுத்து அவள் காதில் வைத்து "எப்படி இருக்கு சாரல்."என கேட்க்க
சாரலுக்கோ இந்த நகை எடுப்பதில் துளியும் ஆர்வம் இல்லை விருப்பமும் இல்லை.ஆனாலும் நல்லாயிருக்கு அத்தை என சொண்ணாள்....
அம்மா அந்த டிசையின் சரியில்லை வேறப்பாருங்க.....
சரி நான் எடுத்த டிசையின் தான் சரியில்லை உன் பொண்டாட்டிக்கு நீ எடு பார்ப்போம் அது எப்படி இருக்குன்னு நானும் பார்த்துப்புடுறேன்....
மிதுலாவின்"சாரலை தன் பொண்டாட்டி என சொண்ண வார்த்தை கரும்பாய் தித்தித்தது.அவன் சாரலை பார்க்க அவள் பொம்மை போல் அமர்ந்துருந்தாள்.இவளுக்கு இந்த வெட்க்கம்ன்னு ஒன்னு பொண்ணுங்களுக்கு வரும்மே அது வரவ்வே வாராதோ விட்டா எந்தக்கடையில விக்குதுன்னு கேட்ப்பா போல எப்படி இருக்காபாரு பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி என நினைத்தவன் அவளுக்கு நகை தேர்வு பண்ண களத்தில் இறங்கி விட்டான்.....
இப்ப பாருங்க என்றவன்"மல்லிகைப்பூவை அடுக்கடுக்க கோர்த்த மாதிரி இருந்த ஒரு தோடை எடுத்து அவள் காதில் வைத்து பார்க்க அவன் விரல்பட்ட காது மடல்கள் மட்டும்மில்லை உடலே சிலிர்த்து போனது.அது தன்னவன் விரல் பட்டாள் மட்டும்மே சிலிர்த்து போகும் உணர்வ்வை பெண்கள் மட்டும்மே அறிவர்....
சிறுது நேரத்தில் தோடு வளையல் ஆரம் என எடுத்தவன் கடைசியில் செட் ஒன்றை எடுத்து போட்டு விட்டான்.அது அவளுக்கு பொருத்தம்மாய் இருந்தது.எப்பொலுதும் விஜய் கண்களுக்கு அழகாய் தெரியும் சாரல் இன்று பேரழகியாய் தெரிந்தாள்.இமைக்காமல் பார்த்தான் அவளை பிறகு...
எப்படிம்மா இருக்கு....
உண்மையிலையே நல்லாயிருக்குடா விஜய் லேடிஸ்க்கு நல்லாவ்வே செலஃக்ட் பண்ற எனவும்...
எல்லாருக்கும் எடுக்க தெரியாதும்மா ஆனா இவளுக்கு எடுக்க தெரியும் என்றவனின் குரலில் ஏதோ ஒன்று இருக்க அது தானாய் விஜய் முகம் பார்க்க வைத்தது.அவனும் பார்க்க சில நொடி அவளது கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான்...
விஜய்யின் இச்செயல்கள் அவளது மனதை தொடாமல் இல்லை ஆனால் அது தாமரை இலையின் நீர் போல் ஒட்டாமல் இருந்தது....
பிறகு மோதிரம் எடுக்கலாம் என மிதுலா சொல்ல...
"இதுல்லாம் எதுக்கு அத்தை "என மறுக்க...
"ம்ம் தெருவில் போடத்தான்"என சுள்ளறென்று விஜய் பதில் சொல்ல அதைக்கேட்ட சாரலின் முகம் அனல் பட்ட பூவாய் வாடியது..மிதுலாதான்..
விஜய் சும்மா இரு இவ்ளோ நகை முதன் முதல்லா போடப்போறா சங்கோஜம்மாய் தான் இருக்கும் அதற்க்கு ஏண்டா பிள்ளையை வெடுக்குன்னு பேசுற எனவும் விஜய் அமைதியானான்......
உன் அம்மா இருந்து இருந்தா இதுக்கும் மேலேயே எடுத்துருப்பாங்க.அது மட்டும்மில்லாமல் என் பொண்ணுக்கு நான் எடுத்து குடுக்க கூடாதா என்றதும் தன் அம்மாவின் நினைவில் கண்கலங்கி விட்டாள் சாரல்......
விஜய் பில் செட்டில் பண்ண அதைப்பார்த்த சாரல் மயக்கம் வராதா குறைதான் அவளுக்கு.....
அந்த நேரம் பார்த்து சதிஷ் போண் பன்ன எடுத்து பேசினான்."சொல்லுடா....
விஜய் டெண்டர் நமக்கே கிடச்சுருச்சு அந்த வீ ஆர் ஆளுங்க தான் பயங்கர கோபம்மா போனானுங்க எதாவது பெரியப்பிரச்சனை பண்ணுவானுங்கன்னு நினைக்கிறேன்.அவனுங்க சையிலண்டா போறத பார்த்தாலே அப்படித்தான் தெரியுது....
அப்படி என்ன பிரச்சனை பண்றாங்கன்னு நம்மளும் பார்ப்போம் அந்த வீ ஆர் வந்தாரா....
வரலை அவனுங்க ஆளுங்களும் தவ்வ நம்ம ஆளுங்களும் தவ்வ பெரிய பிரச்சினை வரத்தெருஞ்சது.அப்பறம் அவர் பின்னாடி ஒரு காண்டாமிருகம் திருயிம்மே அதுக்கு ஒரு போன் வந்தது அப்பறம் அமைதியா போயிட்டானுங்க....
ம்ம் எதையோ யோசித்த விஜய் அவனிடம்."கொஞ்சம் கவனம்மா இரு சதிஷ் அவனுங்க ஆட்களையும் நோட்டம் மிடு என்ன செய்யிற்றானுங்கன்னு பார்ப்போம்....
ம்ம் எங்க இருக்க நீ ஆபிஸ் வருவியா....
இங்க தான் சாரலுக்கு நகை எடுக்க வந்தோம்.அவளை வீட்டுல்ல விட்டுட்டு வந்துடுவேன்...
என்ன பண்றாங்க சிஸ்டர். ..
வழக்கம் போல தான் உற்றுன்னு இருக்கா சரிடா நான் போன வக்கிறேன்....
சாரலிடம் நகையெல்லாத்தையும் மிதுலா கொடுக்க தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லை நீங்க வச்சுறுங்க அத்தை என்றுவிட்டாள்.மிதுலா விஜய்யிடம்"நான் கிளம்பிறேன் நீ சாரலை பத்திரம்மா விட்டுட்டு வா என்றவர் இன்னொரு காரில் கிளம்பி விட்டாள்.. .
காரில் ஏறியதும் விஜய் அவளிடம் ஒரு நகைப்பெட்டி ஒன்றை நீட்ட அவனைப்பார்த்தவள் "என்ன என்பதைப்போல் பார்க்க....
அவள் கண்கள் அழகாய் கேள்வி கேட்டப்பிறகும் பதில் சொல்லாமல் இருப்பானா"சர்மிக்கு என்றான்."ஒரு நொடி உள்ளம் உருகியது என்னம்மோ உண்மைதான் ஆனால் அந்த நொடியே விஜய்யின் செயல் சீன சுவராய் எழுந்து நின்று தடுத்து நிறுத்தியது."இவன் எதை கொடுத்தாலும் வாங்கும் நிலைக்கு இளப்பமாய் போய் விட்டோம்மே என நினைத்தாள்..
உன்னிடம் தான் நீட்டிட்டுறுக்கேன் தெரியலை கடுமையாய் பேச ஆனால் இப்படியெல்லாம் பேச நினைக்கவில்லை விஜய்.வேறு வழியின்றி வாங்கிக்கொண்டாள்.அவன் காரை கிளப்பிருந்தான்...
அப்பொழுது சாரலுக்கு இருமல் வர அதைக்கண்டவன் முன்னே இருந்த தண்ணிர் பாட்டலை அவளிடம் நீட்ட அதை வாங்காமல் முகத்தை திருப்பிக்கொண்டாள்...
இப்போ இதை வாங்கி குடிக்கிறியா இல்லை வழுக்கட்டாயம்மா குடிக்க வைக்கட்டும்மா என்றதற்க்கு அவனை அலட்ச்சியம்மாய் பார்த்தவள் திரும்பி கொண்டாள்...
விஜய்க்கு வெறி வந்தது அவள் செயலில்"எவ்வளவு அலட்ச்சியம்மா பார்க்குறா திமிர் பிடிச்சவ்வ என நினைத்தவன் பட்டன்ன காரை நிறுத்தி அவள் என்னதன்று உணரும் முன்னே அவளை இழுத்து தன் மடியில் போட்டான்.அவனது இந்த எதிர்பராத சாரல் அவன் மடியில் இருந்து எழ முயர்ச்சிக்க அவளால் அசையக்கூட முடியவில்லை.. .
அதிர்ச்சியில் இருமலும் காணாமல் போயிருந்தது.அவள் அவனை பார்க்க அவனோ அவளது தேனுரும் இதழ்களில் தன் கண்களை மையல் இட்டுருந்தான்...
பிறகு அவள் முகம் பார்த்தவன் அப்படி என்னடி அலட்சியம். எதையும் உன்னால்ல புருஞ்சுக்க முடியாதா உனக்கு இப்படி தண்டனைக்கொடுத்தாள் தான் உன் திமிர் அடங்கும் என்ற போது சாரல்.....
"என்ன விடு......ங்க எனும் போதே அவளது பேச்சை தனது இதழ்களை கொண்டு அவளது இதழ்களை மூடி அடைத்துருந்தான்..
பட்டன்ன உணர்வுகளின் பேரலையில் அடித்து செல்லப்பட்ட சாரல் அவனது சட்டையை கொத்தாக பற்றிக்கொண்டாள்.சற்று தன்னை அவனது பிடியில் இருந்து தன்னை பிய்த்துக்கொள்ள போராட அவனது முரட்டுத்தனமான இதழ் தாக்குதழில் செயலற்று போனாள்....
அவளது இறுக்கமான பிடியில் சட்டை பட்டனே அறுந்து போனது.அவனது நீண்ட நாள் ஆசையோ தாபம்மோ அவளை விடுவிக்கவ்வே இல்லை.நொடிகள் கறைய நிமிடங்கள் மறைய அவனது வன்மையான முத்தம் நீண்டு கொண்டே போனது...அவள் மூச்சு விட சிரமம் கொள்ளவும் தான் அவளை விட்டான்...
அவள் இதழின் சுவையை அறிந்தவன் உடலும் சொல்லமுடியாத தித்திப்பில் ஆழ்ந்துருக்க அவனும் ஒரு பெரும் மூச்சை வெளியிட்டான்.
அவள் நிமிர்ந்து அவனை பார்க்க முதல் முத்தம் தந்த அதிர்ச்சி விலகாமல் மூச்சுவாங்க விஜய்யைப்பார்க்க "விஜய்யின் இதழ்களோ வெற்றிக்கழிப்பில் புன்னகை பூத்தது...
அவளை மயக்கத்துடன் பார்த்தவன்"என்ன சாரல் பேபிம்மா இப்படி ஷர்ட் பட்டனை அத்துட்டியே எப்படி நான் ஆபிஸ்போவேன் சொல்லி புன்னகைக்க..."இப்பொழுது சாரல் அழுகையில் இறங்கினாள்....
No comments:
Post a Comment