This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 29 March 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 18


Click here to get all parts


என்னடி சொல்ற நிசாம்மாவா.... 


ஆமாக்கா .......


என்னால்ல நம்பவ்வே முடியலடி இன்னமும்.உன்னோட நல்ல மனசுக்கு தான் கடவுள் நல்ல வாழ்க்கையை அமைச்சு தந்துருக்கார்.உன் அம்மா இருந்து பார்க்க குடுத்து வைக்கமா போயிட்டாங்க அவங்க ஆசிர்வாதம் உனக்கு இருக்கவும் தான் இப்படி தங்கமான வாழ்வ்வு கிடச்சுருக்கு என உண்மையிலயே சந்தோஷப்பட்டார் தாமரை....



பய்யனை நேர்ல்ல பார்த்ததுல்ல ஆனா பேப்பர்,நீயூஸ்,கூகுல்ல பார்த்துருக்கேன் உனக்கு நல்ல மேட்ச்,விட்டுறாதே நல்லா புடுச்சுக்க முந்தானையில்ல முடுஞ்சு வச்சுக்க என கிண்டல் பண்ண சாரலோ..




நான் விட நினைச்சாலும் அவன் விட மாட்டான்,நான் முத்தானையில முடிய தேவையில்லை அதுவ்வே முடுஞ்சுக்கும் என நினைத்தவள் தாமரையிடம் சிரித்து வைத்தாள்.....



அப்போ நான் கிளம்பட்டும்மாக்கா....




"ம்ம்ம் பார்த்து போ.." இல்ல இனி உன்னிடம் தான் எல்லாரும் பார்த்து இருக்கனும் எனவும் போங்கக்கா என்றவள் கிளம்பினாள்....




பஸ் டாண்ட் நோக்கி போக அங்கு சர்மி அவளுக்காக காந்துருந்தாள்.அவளும் பார்த்து விட சர்மி சாரலிடம்."நான் இப்பதான் உனக்கு போன் பண்ண நினனச்சேன்க்கா தாமரை அக்கா வந்துட்டாங்களா....



ம்ம்..என்று சாரல் சொண்ண போது அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நிக்க அதிலிருந்து அரவிந்த் இறங்கினான்."அக்கா என்றபடி இரு அக்காக்களும் அவனை எதிர்பார்க்காததாள் அவனிடம்"அரவிந்த் நீ என்னடாப்பண்ற இங்க அதுவும் கார்ல்ல..என சாரல் வினவ...



நான் தான் அவனை கூட்டிட்டு போனேன் என்றப்படி வந்து நின்றான் விஜய்.அவனைக்கண்டதும் சாரலின் முகம் சுருங்க சர்மியின் முகம் மத்தாப்புவாய் மலர்ந்தது."மாமா என வந்தவளை பட்டுபடாமலும் கண்ணியமுமாய் அவளை தோளில் சாய்த்தவன் தள்ளி நிறுத்தினான்....



மாமா நீங்க எப்படி இவனை பார்த்திங்க...



ப்ரண்ஸ்சோட கடைவீதி வந்துருந்தான்.பார்த்தேன் அப்பறம் அவனுக்கு சிலது ஷாப்பிங் பண்னோம்.என்றான்...


ஆமாக்கா எனக்கு ட்ரெஸ் ,வாட்ஜ்,செப்பல் என நிறையா வாங்கி தந்தாங்க மாமா வா வீட்டில்ல வந்ததும் காமிக்கிறேன் என்று சொண்ண அரவிந்திடும் என்றுமில்லா துள்ளல்....


"

காலையிலக்கூட நான் இவனுக்கு சில புது துணிகள் எடுக்கனும் என நினைச்சேன்னே ஆனா இப்போ இவன் அதை செய்துட்டு வந்து நிக்கிறான்.எண்ணங்கள் கூட இவ்வளவு ஒற்றுமையா இருக்கும்மா என அவள் யோசனையில் ஆழ்ந்துருக்க அவளை கலைத்தது சர்மியின் குரல்....



அக்கா வா போலாம் மாமா கூப்பிட்றாங்க என்றாள்...




அவருக்கு எதுக்கு சிரமம் நம்ம பஸ்லயே போலாம் என்றாள் அவனை ஓரம்மாய் பார்த்து.....



ரொம்ப தான் பிகு பண்றா என நினைத்தவன்"சர்மி உன் அக்காவை நான் தூக்கிட்டு போல கார் தான் அவளை செமக்க போது அதனால்ல வரச்சொல் அப்படி உன் அக்காவுக்கு ஏற சிரம்மமாய் இருந்தாக்கூட சொல் நான் தூக்கி வைக்கிறேன் என்றான் குறும்பாய்....



அக்கா வா என்ற இருவரும் பின்னே போய் அமர்ந்து கொண்டனர்.....



இப்போ வரியா இல்லை உன்னை தூக்கி வைக்கட்டும்மா என அவளை நெருங்கி தூக்க போவது போல் பாவ்லா செய்ய....



ஐய்யோ என்னை விடுங்க வர்றேன் என கத்தியவளை சிரித்தபடி பார்த்தவன் காரில் அமர்ந்து கொண்டான்....



பின்னே ஏறப்போனாள்..."சர்மி தள்ளி உட்காருடி என சொல்ல.. .



அக்கா இங்க இடம்மில்லை அப்படி எவ்வளவு தான் வாங்குனானோ இங்க பார் குமுச்சு வச்சுறுக்கான் எனக்கே உட்கார இடமில்லை நீ வேற தள்ளி உட்கார சொல்ற...முன்னாடி போய் மாமா பக்கத்துல்ல உட்கார்..எனவும் விஜய்யைப்பார்த்தாள் சாரல்....



வா சாரல் வந்து உட்கார் என்றான் விஷமமாய் சிரித்து."இவன் பக்கதுல்ல உட்கார்றதா எனக்கு பயம்மா இருக்கு சர்மி என நினைத்தவள் பிறகு"சரி உட்காருவோம் இன்னைக்கு தான் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே அப்பறம் எப்படி இவன் அப்படி நடந்துப்பான் என நினைத்தவள் பின் முன்னே அமர்ந்து கொண்டாள்....



பின் காரை கிளப்பிறுந்த வேளையில் சர்மி விஜய்யிடம்"மாமா இவனுக்கு எப்படி ட்ரெஸ் எடுத்திங்க இவனுக்கு எது போட்டாலும் சோலைக்காட்டு பொம்மை மாதிரியே இருப்பான் இவனுக்கு எதுக்கு இவ்வளவு செலவு பண்ணிங்க மாமா எனவும் அரவிந்த் சும்மா இருப்பானா என்ன....




"ஏய் காலேஜ் போற காட்டேறி" எனவும் விஜய் சிறியதாய் அதிர்ந்து அவர்களை பார்க்க சாரலோ அவள் பாட்டிற்க்கு அமர்ந்துருந்தாள்.இது விஜய்க்கு தான் புதிது அவளுக்கு இல்லையே....



உன்னிட்ட எதாவது கேட்டாங்களா என் ட்ரெஸ் எப்படி இருந்தா உனக்கென்ன உன் வேளையைப்பார்.உனக்கு பொறாமை மாமா இவ்வளவு எடுத்து குடுத்துட்டாங்கன்னு.....



டேய் யாருக்கு பொறாமை நீதான்டா அப்படி என சண்டை ஹைய் ஸ்பிடில் போய் கொண்டிருக்க விஜய் இதையெல்லாம் சுவாரஷ்யம்மாய் கேட்டபடி வந்தான்....




மாமா அப்பறம் இவள் ஒரு ரெட் கலர் சுடி போடுவா அதைப்பார்த்தா அப்படியே காஞ்சனா படத்துல்ல வரப்பேய் மாதிரியே இருப்பா அக்காக்கூட ஒரு நாள் பயந்துடுச்சு கேளுங்க என சாரலையும் சண்டையில் கோர்த்து விட்டான் அரவிந்த்...



அக்கா நீயே சொல்....



அவளும் "ம்ம் என்றாள்..அவ்வளவு தான் "அக்கா என காரே அதிரும் படி கத்தினாள் சர்மி......



அவன் சும்மா சொல்றான் சர்மி அந்த ட்ரெஸ்ல்ல எவ்வளவு அழகா பேய் மாதிரி இருந்த தெரியும்மா என்றாள் சாரல் கண்களை.சிமிட்டி...



மறுபடியும் காது ஜவ்வு அந்து போகும் அளவு "அக்கா என கத்தினாள் சர்மி.அதற்க்கு சாரலும் அரவிந்தனும் குளுங்கி குளுங்கி சிரித்தனர்...



இந்த மாதிரி குடும்ப சூழ்நிலையில் வளராத விஜய்க்கு இவர்களது சண்டையும் பேச்சும் ,கிண்டலும் ரொம்ப பிடிச்சுருந்தது.அதை விட அவனுக்கு ஆச்சர்யம் சாரலின் இந்த மணியை சிதர விட்டதைப்போன்ற சிரிப்பை இன்று தான் பார்க்கிறான்.அதுவும் இவ்வளவு இயல்பாக அவளை பார்க்க பார்க்க தெவிட்டவ்வே இல்லை விஜய்க்கு.... 



அப்பொழுது தான் விஜய்க்கு கால் வந்தது.சதிஷ் தான் பண்ணிருந்தான்....




சொல்லு சதிஷ்...



.............


"

வாட்"என்றவனின் குரல் அதிர்ந்தது...



அவனைப்பார்த்த அனைவருக்கும் ஏதோ ப்ரச்சனை என புரிந்தது .ஆனால் என்னதுன்னு தான் தெரியலை...




விஜய் அவனிடம் கத்தினான்."இடியட் நான் தான் சொண்ணில்ல அவங்களை கவனம்மா வாஜ் பண்ணுடான்னு" என்றவன் காரை விட்டு இறங்கி அந்த நெடுஞ்சாலையில் இறங்கி நின்றான்...




"சதிஷ் நமக்கு எதும் ஆகலாம் நம்மள சுத்தி இருக்கிற யாருக்கும் எதுவும் ஆயிடக்கூடாது."எல்லாரையும் ஹாஸ்பெட்டல் கொண்டு போ பிறகு ஏதோ ஒன்றை சொண்ணான்....




அவன் பேசியதை இவர்களும் கேட்டனர்.மிகப்பெரியப்பிரச்சனை என மட்டும் யூகித்தனர்.அவன் காரை விட்டு இறங்கும் போதே முகம் இறுகி கடும் கோபம்மாய் இருந்ததை கவனித்தனர்.




சாரலும்"என்ன பிரச்சனையா இருக்கும் இவன் ஏன் இவ்வளவு கோபத்தில் இருக்கான்.எல்லாரையும் ஹாஸ்பெட்டல் கூட்டிட்டி போக சொல்றான்.அப்படி அவ்வளவு பேருக்கு என்ன,தான் நடந்துருச்சு அதற்க்கு மேலும் அவளால் அமர்ந்துருக்க முடியவில்லை கீழே இறங்கி அவன் முகம் பார்த்தாள்....




தாடைகள் இறுக,கை புஜங்கள் புடைக்க,தோளும் மார்பும் அவனது கோபத்தில் மேல கீழே என இறங்கி கொண்டிருக்க சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் வெளிச்சங்கள் அவனது முகத்தில் வாரி அடிக்க அவன் முகம் கடும் கோபத்தில் பயங்கரம்மாய் இருந்ததை பார்த்த சாரலுக்கே இப்போ அவனை பார்க்கும் பொழுது பயம்மாக இருந்தது...




கனிவாய் பார்த்த முகம் கடும் கோபம்மாய் இருந்தது.அன்று அவள் ஹாஸ்பெட்டலில் தொட்ட அவனது விரல்கள் இன்று இருகி போய் இருந்தது.அவள் நேற்று பற்றிருந்த அவனது மார்பகங்கள் தனது கோபத்தாள் மேலே கீழே இறங்கிகொண்டுருந்தன....


வெறி கொண்ட வேங்கையாய் அவன் சாலையில் நடந்து கொண்டுருந்தான்.அவனிருகில் போய் என்ன வென்று கேட்க்க கூட பயம்மாக இருந்தது.ஆனால் அவனது இந்த கடும் மனஉளைச்சலை அவளால் ஏனோ காண முடியவில்லை மனது பிசங்க தைரியத்தை கூட்டி விஜய்யை நெறுங்கும் வேளையில் என்ன நினைத்தானோ....


"வீ ஆர்" என அவனது உறுமலில் அந்த நெடுஞ்சாலையே குளுங்கியது....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.