பெண்ணே....
பெண்ணே.....
அடிமை தலையில்
உடைத்து வெளியில் வா....
உனக்கான உலகம் காத்துகொண்டு
இருக்கிறது,
சாதனை புரிய வா....
அடுத்த அடியை எடுத்து வைத்தால்
ஆயிரம் கதவுகள் உனக்காக திறந்திடும்.....
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமம் என கொள்....
ஈட்டியின் பார்வை கொண்டு
எதிர் வரும் தடைகளை
உடைத்து எறிந்து விடு.....
அச்சம், நாணம் தவிர்...
அனைத்து பிரச்சனைகளையும்...
வீரம் கொண்டு எதிர்கொள்.....
நிமிர்த்த நன் நடையும்
நேர்கொண்ட பார்வையும்
யாருக்கும் அஞ்சா வாழ்வு
வாழ்...
சமைப்பதும் படுக்கை
விரிப்பதும் பெண்ணின்
தொழில் இல்லை......
கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவதும்...
விண்ணிலும்
மண்ணிலும் சாதனை
புரிவதும் பெண்ணின்
தொழில் என உரக்க கூறு...
மழலை மனம் மாறாத உன்னை
காம இச்சை கொண்டு
வன்புணர வருவான் ஆயின்
மாற வேண்டியது நீ இல்லை
அவனும்
இந்த சமூகமும் தான்.....
இனி....
உனது கற்பினை
நிரூபிக்க நீ
சீதை போன்று
வேள்வி தீயில் தீ
குளிக்க வேண்டியது
இல்லை.....
பெண்ணே...
நீ காட்சி பொருள் அல்ல...
குலம் காக்க வந்த தேவதை....
நீ சாதிக்க பிறந்தவள்
சளித்துபோகதே....
நீ ஒளிர பிறந்தவள்
யாருக்காகவும் ஒளிந்து
கொள்ளாதே....
அச்சம் கொள்ளாதே
நீ ஆள பிறந்தவள்.....
பயந்து பணித்து மிரண்டது போதும்...
இனி தெளிந்து துணிந்து
மீண்டு எழ வேண்டும்....
அழுகை அதனை துடைத்து
எறிந்து புயல் என வெளியில் வா,
பெண்ணே.....
விதி என முடங்கிடாமல்.....
கேலி பேசினாலும் உன்னை
ஏசினாலும் அவர்கள் முன்பு
புதுமை பெண்ணாக
வாழ்ந்து காட்டிடு பெண்ணே......
No comments:
Post a Comment