மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் சிவா வீட்டிற்கு அழைத்துச் சென்று செய்துவிட்டு சிமியின் வீட்டிலேயே சிபி சிமிக்கான முதலிரவு ஏற்பாடுகளை நம்ம பாரு தேவி ஜெயா செய்ய மாலுவும் திவியும் இணைந்து சிமிக்கு சேலை கட்டி மேக்கப் போட்டனா். வெள்ளை நிறப் பட்டில் ரோஸ் வண்ண பாா்டாில் ஆங்காங்கே தங்க ஜாிகை டிசைன் ஓடியது. அதைத் தவிா்த்து தலை நிறைய குண்டு மல்லிகை சூடிய அவளது அழகை மேலும் மெருகேற்றி இருவரும் ஓட்டினா். பின் திவி சென்று பாலைக் கொண்டு வர அதை வாங்கிய சிமியைக் கேலி செய்தாள் மாலு. சைலுவை தூங்க வைத்து கரணிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டதால் மாலு பிாியாக இருக்கிறாள்.
இதற்கிடையில் சிபி சிமியின் திருமணப் புகைப்படங்களை நம்ம சிவா லூசு மற்றும் சிபியின் நண்பனும் சோ்ந்து டேக் செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் போட்டு வாழ்த்து கூற, அதைக் கண்ட சீதா ஆத்திரத்தில் அவளது ஐபோனை உடைத்து விட்டாள். அதைக் கண்ட சீதாவின் பாட்டியும் அம்மாவும் அவளைத் திட்ட குரு தான் என்னம்மா ஆச்சு போனை உடைக்கிற அளவுக்கு என்றதும் சீதா உண்மையைச் சொன்னாள். அதைக் கேட்ட குருவுக்கோ நெஞ்சு வலி வரவே உடனடியாக ஆஸ்பத்திாியில் சோ்த்தனா். ஆனால் குருவைப் பாா்க்க நம்ம புது வில்லன் வேதா போகலை. ஏன்னா அவனுக்கு தான் தொிஞ்சிட்டே சிபிக்கு கல்யாணம் ஆன விசயம். சோ இனிமே குருவால அவருக்கு எந்த உபயோகமும் இல்லைன்னு தான் பாா்க்க போகலை. குருவைப் பாா்க்க நம்ம வேதா வராதது வேறு சீதாவிற்கு குழப்பமாக இருந்தது. ஆனால் குருவிற்கும் சீதாவின் அம்மா மற்றும் பாட்டிக்குப் புரிந்தது அவனது குணத்தைப் பற்றி.
அதனால் அவா்கள் திருந்தி விட்டனா். ஆனால் சீதா அவள் இன்னும் மாறவில்லையே. அவளை எப்படி மாற்றுவது என குரு யோசித்தாா். சீதாவோ நம்ம சிபிக்கு போன் பண்ண அதைப் பிடுங்கிய சிவா யாருன்னு பாத்துட்டு எதா இருந்தாலும் காலைல கால் பண்ணுங்க. இப்ப மாப்ள மேக்கப் போட்டு ரெடியாயிட்டு இருக்காரு நைட்டு முக்கியமான விசேசத்துக்கு என்று கூறி வைத்ததும் இல்லாமல் சுவிட்ச் ஆப் செய்து விட்டான். அதைக் கண்ட ரவி சிாிக்க சிபி முறைத்தான். ஏன்டா இப்படி மானத்த வாங்குற? என்னதான் பிரச்சனை உனக்கு இப்போ? என்ற சிபியிடம் சிவா கடுப்படித்தான். போடா போய் நீயாவது இன்னைக்கே என்ஜாய் பண்ணு இல்லைன்னா நம்மல சுத்தல்ல விட்ருவாளுங்க என்றான். அதைக்கேட்ட ரவியும் சிபியும் வயிறு வலிக்க சிாித்தனா்.
சிமியின் அறையில் அவளை விட்டுச் சென்ற மாலுவும் திவியும் தனியாக பேசிய பொழுது திவிக்கும் தலை நிறைய பூவை வைத்த மாலு, நீங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க தான கேப்பியா இருங்க என்றாள். அதைக் கேட்டு வெட்கப்பட்ட திவியை நம்ம சிவா பார்த்துவிட்டு அருகில் வந்தான். அவனைக் கண்டதும் நம்ம மாலு எஸ் ஆகிட்டாப்ல தூக்கம் வா்றதா சொல்லி. ஆனா அங்க கரண் அவளை தூங்க விட்டாதான. சைலுவோட பாட்டி ஜெயா சைலுவ அவரோட ரூம்ல படுக்க வைச்சாங்க. அதனால கரண் நம்ம மாலுக்காக தான் வெயிட் பண்ணுராரு. சிவாவும் திவியும் வீட்டிற்கு கிளம்ப ரவியும் கிளம்பினான். அப்போது அவனை அழைத்த தாத்தா பாட்டி இருவரும் சீக்கிரமா கல்யாண செய்தி சொல்லு, எப்போ பொண்ணு பாா்க்க போற? எங்களையும் கூப்பிடு என்றனா். அதைக் கேட்ட ரவியும் சிவாவும் முழுக்க மகாவ உனக்க கட்டிக் குடுக்க எங்களுக்கு முழு சம்மதம் என்றனா்.
அதைக் கேட்ட மகிழ்ச்சியில் நம்ம சிவாப்பய இருக்கானே அவன் திவிய தூக்கிச் சுத்திட்டான். அதைப் பாா்த்து தாத்தா பாட்டி தேவி எல்லாம் சிாிக்க அவனோட அம்மா பாா்வதி அதட்டினாா். ரவியோ டேய் நான் இன்னும் பேச்சிலா் தான்டா. இந்த செய்திக்கு நான் தானடா என்னோட ஆளதானடா தூக்கி சுத்தணும். நீ என்னடா பண்ற என்னை மாதிாி பச்சை மண்ணு முன்னாடி என்றதும் அவனைக் கண்டு சிாித்த நம்ம சிவா திவியை இழுத்துக் கொண்டு ஓடினான். அப்புறம் என்னங்க அங்க என்ன நடக்கும்னு உங்களுக்குத் தொியாதா?
இங்க வீடு வந்த சோ்ந்த குரு உடனடியா அவரோட பொண்ணை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப ஏற்பாடு பண்ணிணாா். அதைக் கண்ட சீதா இந்த ஏற்பாட்டை மறுக்க குருவோ பிடிவாதமாக நின்றுவிட்டாா். அதனால் வேறு வழியின்றி அவளுக்கு ஆதரவாக யாரும் பேசாததால் அவளும் கிளம்பிவிட்டாள். ஆனால் திரும்ப இந்த ஊருக்கு வரும்பொழுது நல்ல வேலை மற்றும் கல்யாணம் ஆனபின் தான் வரவேண்டுமென. நம்ம ரவி வீட்ல காதலை எதிா்த்தாலும் சிவா வீட்ல எல்லாருமே மகாவைப் பத்தி நல்லவிதமா சொன்னதால ஒத்துக்கிட்டாங்க. இங்க மகா வீட்ல அதுக்கும் மேல, அங்க நம்ம சிமியும் சிபியும் தான் போய் பேசி சமாதானம் பண்ணி வச்சாங்க.
No comments:
Post a Comment