" சுமி உன் கிட்டே ஒன்னு சொல்லனும்.."
" சொல்லு ராம்"
" என்னையும் அனுவையும் இரண்டு நாளுக்கு முன்னாடி பேச வைச்சலே.. அது சக்சஸ் ஆகிருச்சு"
" ஹே ராம் செம பா காங்கிராட்ஸ்"
" தேங்க்ஸ் சுமி.. இது எல்லாத்துக்குமே நீ தான் காரணம்.. நீயும் நானும் பேசிட்டு இருந்ததை வெச்சு தான் அனுவுக்கு கோபம் வந்துருச்சாம்... அதனாலே தான் மேடம் என் கிட்டே பேசாம அவாய்ட் பண்ணி இருக்காங்க... அப்புறம் அவள் ஏன் அப்படி பிஹேவ் பண்றேனு அவளே யோசிச்சு பார்த்த அப்போ தான் அது லவ்னு அவளுக்கு புரிஞ்சுதுனு சொன்னா.. அப்புறம் நீ எங்க ரெண்டு பேரையும் பேச வைச்சதாலே மனசு விட்டு பேசி எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டோம்... ரொம்ப தாங்க்ஸ் சுமி மா"
" ஐயோ போதும் ராம்..எவ்ளோ தேங்க்ஸ் சொல்லுவே.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க எப்பவும் ஹேப்பியா இருக்கனும்.. "
" சுமி நானும் பார்க்குறேன்.. என்ன ஆச்சு உனக்கு ஏன் இரண்டு நாளா ரொம்ப டல்லா இருக்கே.."
" ஒன்னுமில்லை ராம்.."
" சுமி நீ என்னை ராமா னு கூப்பிடாம ராம்னு அமைதியா கூப்பிடுறதிலையே தெரியுது நீ சரியில்லைனு .. என்ன தான் மா ஆச்சு உனக்கு..."
ஆமாம் ராம் சொல்றதும் கரெக்ட் தான்.. ரெண்டு நாளா ரொம்ப சைலண்ட்டா இருக்கேன்.. சுமி உன் மனசில வருத்தம் இருக்கிறதுனாலே நீ வேறொரு ஆளா மாறிட கூடாது.. எப்போவும் போல இயல்பான சுமியா இருக்கணும்.. என மனதினுள் நினைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்..
"அட ராமா எதுவுமில்லை.. ரொம்ப யோசிக்காத இருக்கிற நாலு முடியும் கொட்டிட போது" என சிரித்த முகமாய் சொன்னாள்... அப்போது அருகில் இருந்த சேரை இழுத்து போட்டுக் கொண்டு உதய் சாப்பிட அமர்ந்தான்...
" மே ஐ கம் இன்... "
" ஒழுங்கா ஓடிடு.. அடேய் ஒதையா கமிட் ஆன அப்புறம் இந்த பக்கம் தலையை காமிச்சுயா நீ... இப்போ மட்டும் சார் எதுக்கு வரீங்களாம்.. என்னை பவித்ராவோட மூட்டிக்கிட்டியா...."
" ஐயோ சுமி மா நீ தீர்க்கத்தரிசி"
" தீர்க்கத்தரிசியோ இல்லை வாய்க்கா அரிசியோ இல்லை நான்.... ராமா நீ ஒதை கிட்டே பேசக்கூடாது.. இது தான் என் கட்டளை.. என் கட்டளையே என் சாசனம்"
" நீ சொல்லிட்டல அப்படியே செஞ்சுரலாம் சுமி மா"
" ஹயோ நான் ரொம்ப பாவம்.. சுமி உன் கிட்டே இருந்து ஒரு ஹெல்ப் வேணும்"
" அதான் எனக்கு தெரியுமே.. ஹெல்ப் னா தானே உனக்கு சுமி நியாபகம் வரும்" என சுமி முகத்தை திருப்பிக் கொள்ள..
" சுமி இந்த ஹெல்ப்பை உன் கிட்டே தான் கேட்க முடியும்.. ஏன்னா நீ மட்டும் தான் எனக்கு தங்கச்சி.. நீ தான் என் கல்யாணத்துக்கு நாத்தனார் முடிச்சு போடனும்.. எனக்கு இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணேன்"
" ஹே உதய் அண்ணா.. நிஜமாவா... கல்யாணத்துக்கு வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா?"
" ஆமாம் சுமி.. பவித்ரா கிட்டே நான் லவ் ப்ரொபோஸ் பண்ணதும் எனக்கும் உங்கள் மேலே லவ் இருக்கு... ஆனால் எங்கள் வீட்டில எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கன நம்ம சேர முடியுமானு எனக்கு பயமா இருக்கு அப்படினு சொன்னா.. அவளுக்கு நம்பிக்கையை கொடுத்துட்டு எங்கள் வீட்டில இருக்குறவங்களை சம்மதிக்க வைச்சுட்டு அவங்க வீட்டு ஆளுங்க கிட்டே போய் குட்டிக் கரணம்லாம் போட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிட்டேன்.. இந்த டென்ஷன்ல தான் உங்கள் கிட்டே சரியா பேச முடியல..சாரி" என குற்ற உணர்ச்சி கலந்த குரலில் சொல்ல
" மிஸ்டர். உதய்.. அப்படியே இந்த முகத்தை கேமிராவுக்கு நேரா காமிங்க ஒரு போட்டோ எடுத்துக்குறேன்... சோகமான டைம்ல லாம் சிரிக்க யூஸ் பண்ணிப்பேன்"
" கொழுப்பா உனக்கு.. எவ்ளோ பீல் பண்ணி சொல்றேன்"
" அதான் எதுக்கு பீலீங்ன்றேன்.. உன்னோட situation எங்களுக்கு புரியுதுனா.. உன் மேலே கோபம்லாம் இல்லைனா.. உன் லைப் ஹாப்பியா இருந்தா தான் எங்களுக்கு சந்தோஷம் புரியுதானா"
" ஹலோ ஹலோ போதும் உங்க பாசமலர் படத்தை நிறுத்துருங்கிளா.. டேய் உதய் உண்மையை சொல்லனும்னா கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன்டா.. இனி உங்கள் மொக்கை ஸ்டார்ட் ஆகிடும்.. இதுக்கு அப்புறம் என் நிலைமை தான் மோசம்" என ராம் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல மற்ற இருவரும் சிரித்தனர்....
" ஆமாம் அனுவையும் பவித்ராவையும் இங்கேயே நம்ம கூட ஒன்னா சாப்பிட கூப்பிடலாம் ல"
" நோ சுமி மா" என்றனர் இருவரும் கோரசாய்.. அவள் ஏன் என புருவம் உயர்த்தி கேட்க
" இல்லை சுமி.. நம்ம எப்போவும் போல ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்.. எங்கள் காதலிகள் லைப்ல வந்துட்டாங்க தான்.. ஆனால் அதுக்காக எங்க க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் கூட எப்போவும் இருக்கிற பழக்கத்தை மாத்திக்கக் கூடாது.. நம்ம மூனு பேரும் ஒண்ணா சேர்ந்து முன்னாடி எப்படி லன்ச் சாப்பிடுவோமோ அதே மாதிரி தான் இனியும் சாப்பிடனும்." என ராம் சொல்ல
" அட ராமா.. அந்த டைம்ல அனு கூடேயும் பவித்ரா கூடேயும் இன்னும் நான் கொஞ்சம் நல்லா பேச முடியும் இல்லை"
" இல்லை சுமி மா.. அவங்க கூட நீ எந்த டைம்ல வேணாலும் நல்லா பேசிக்கலாம்.. நாள் முழுக்க ஆபிஸ் ல தானே இருக்க போறாங்க.. அப்போ பேசிக்கோ.. அதுக்காக நம்ம மூனு பேரும் க்ளோஸா ஜாலியா உட்கார்ந்து பேசுற டைம்ல வேணாம் சுமி.. நாங்கள் எங்க சுமி கூட உட்கார்ந்து ஜாலியா பேசுறது இந்த டைம் ல தான்.. அதெல்லாம் எங்களாலே தியாகம் பண்ண முடியாது.. " என உதய் சொல்ல அவள் மனம் அவர்களின் பாசம் கண்டு விக்கித்து நின்றது...
" சுமி நீ சரிபட்டு வர மாட்டே.. ராம் அந்த சுமிரவன் புக்கை எடுறா..." என்று சொல்ல சுமி கோபமாய் " நம்ம அரட்டை அடிக்கிற இந்த நேரம் யாருக்கும் அனுமதி இல்லை அந்த சுமிரவனுக்கும் தான்" என்றாள்..
" எப்படி வழிக்கு வர வைச்சேன் பார்த்தியா சுமி உன்னை" என உதய் சொல்ல மூவரும் சிரித்தனர்..
சுமி சந்தோஷமான குரலில் " இந்த ரெட்டை தொல்லைங்க கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கணும்.." என்றாள் சந்தோஷம் நிறைந்த குரலில்
" நாங்கள் தான் இந்த அறுந்த வால் கிடைக்க கொடுத்து வெச்சு இருக்கனும்" என சொல்ல அவர்களின் வயிறும் மனதும் சேர்ந்து நிறைந்தது...
ஷ்ரவனின் காதுகளில் ராமும் அனுவும் காதலிக்கும் விஷயம் தெரிய வர "இது தெரியாமல் சுமியிடம் வார்த்தைகளை வீசி விட்டோமே" என எண்ணி நொந்தான்.. அவளைப் பார்க்க அவன் கேன்டீனுக்கு வர மகிஷ்ச்சியாய் பேசிக் கொண்டு இருந்த அவர்களைக் கண்டு குற்ற உணர்வு கொண்டான்.. சே எவ்வளவு ஃபிரண்ட்லியா பேசிக்கிறாங்க.. அதுவும் சுமி தான் ராமின் காதலை சேர்த்து வைச்சா இருக்கா சே இதை தெரியாம அவள் கிட்டே கோபப்படட்டுமே என அவன் மேல் அவனுக்கே வெறுப்பு வந்தது.. "சீ சுமியை வார்த்தையாலே கொன்னுட்டோமே" என எண்ணி தவித்துக் கொண்டு இருந்த போது சுமி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள்..
" சார் நீங்க சொன்ன ப்ரொஜெக்டை நான் முடிச்சுட்டேன்.. நீங்க கொடுத்த ஒன் வீக் பர்மிஷன்க்குள்ளேயே.. சோ இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கூத்தடிச்சுடுச்சுட்டு வேலையும் சரியா செய்வேன் அப்படினு"
"சுமி, சாரி சுமி.. அன்னைக்கு நான் உன் கிட்டே அப்படி பேசி இருக்கக்கூடாது" என ஷ்ரவன் உணர்ந்து கூற
" சார் ப்ரொஜெக்ட் சமிட் பண்ணிட்டேன்.. என் வேலை முடிஞ்சுது.. நான் கிளம்புறேன்"
" ப்ளீஸ் சுமி.. நில்லு நான் உன் கிட்டே பேசனும்"
" சாரி சார் கம்பெனி விஷயங்களைத் தவிர உங்க கிட்டே நின்னு பேச எனக்கு எந்த அவசியமும் இல்லை" என அவள் கதவை படாரென்று சாத்திவிட்டுப் போக அவன் கண்ணத்தில் அடித்ததுப் போல் இருந்தது.. உனக்கு இது வேணும்டா.. அவள் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்.. என்ன ஆனாலும் சரி சுமி கையில காலிலே விழுந்தாவது அவளை சமாதானப்படுத்தியே ஆகனும் என முடிவெடுத்தான்...
சுமியின் முன்னால் ப்ளொவர் போக்கெவோடு நிற்க அவள் அதனை கையில் கூட வாங்கவில்லை..
"சுமி நம்ம காலேஜ் டேஸ் உனக்கு நியாபகம் இருக்கா.."
" ஓ நம்ம ஒரே காலேஜ்ல தான் படிச்சோமா.." என பல்ப் கொடுத்துவிட்டு சென்றாள்..
அவள் வருவதற்கு முன்பே அவளுடைய கேபினுக்கு சென்று லாவண்டர் கலராய் மாற்றினான்.. அவளுக்குப் பிடித்த பொருட்களை எல்லாம் மேஜையின் மேல் வைத்தான்.. ஆனால் அடுத்த தினமே எல்லா பொருட்களும் மீண்டும் ஷ்ரவனின் டேபிளில் வந்தது.. ஐயோ இந்த ப்ளானும் ஊத்திக்கிச்சா...
என்ன தான் பண்ணி இவளை சமாதனப்படுத்துறது என யோசித்துக் கொண்டு இருக்கும் போது பூஜா உள்ளே வந்தாள்..
" சொல்லுங்க பூஜா.. என்ன விஷயம்"
" இல்லை சார் கொஞ்சம் பர்சனலா பேசணும்.."
" ம்ம் சொல்லுங்க.."
" ஐ லவ் யூ சார்" என்றாள் பட்டென்று
" சாரி பூஜா நான் உங்களை லவ் பண்ணல..இதை தவிர்த்து பேச வேற ஏதும் இல்லைனா.. நீங்க வெளியே போகலாம்.." என முகத்தில் அடித்தாற் போல் சொன்னான்.. அவளும் சளைக்காமல் " பரவாயில்லை சார்.. உங்களுக்கு லவ் இல்லைனா என்ன.. வேணா நான் உங்களுக்கு வேற மாதிரி சர்வீஸ் பண்றேன்"
" சீ என்ன மாதிரியான பொண்ணு நீ.. கெட் அவுட்" என கோபக் குரலில் கத்த பூஜாவுக்கு கோபம் தலைக்கேறியது..
" ஹலோ யாரை கெட் அவுட்னு சொல்ற.. உன்னையே என்னாலே இந்த கம்பெனியை விட்டு போக வைக்க முடியும் பார்க்குறீயா?"
" போக வைக்க முடியும்னா.. போக வை டி பார்க்கலாம்" என்ற அடுத்த நொடி பூஜா அவளுடைய உடையை தன் கையால் கிழித்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியே காப்பாத்துங்க காப்பாத்துங்க என்றபடி ஓடினாள்..
அவளுடைய கூக்குரலைக் கேட்டு எல்லோரும் ஒன்று கூடினர்.. அந்த மேனேஜர் ஷ்ரவன் என் கிட்டே தப்பா நடந்துக்க ட்ரை பண்ணேன் என அவள் அழுகை குரலில் கூற அவன் நான் செய்யவில்லை என எவ்வளவோ போராடி பார்த்தான்.. ஆனால் எல்லோரும் சேர்ந்து இவனை அடிக்க வந்த அந்த சமயம் தான் சுமி,உதய்,ராம் எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்குள் வந்தனர்... அங்கே நடப்பதைக் கேட்ட சுமி ஷ்ரவனின் அருகில் வந்து யாரும் அவனை அடிக்காதது போல் தடுத்து நின்று கத்த ஆரம்பித்தாள்...
" ஒரு பொம்பளை சொன்னா எல்லோரும் உண்மைனு நம்பிடுவீங்களா.. ஷ்ரவனைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.. அவர் மேலே கை வெச்சீங்க தொலைச்சுடுவேன்.."
என சொல்ல அங்கிருந்த ஒருவன் "நீ எப்படி அவ்வளவு உறுதியா சொல்றா உனக்கு அவரை தெரியுமா?" என்று கேட்டான்..
"எனக்கு ஷ்ரவனை முன்னாடியே தெரியும்.. என்னோட க்ளாஸ்மேட் தான்.. அவன் பொண்ணுங்க கிட்டே பேச கூட மாட்டேன்.. அவங்களுக்கு அதிகமா ரெஸ்பெக்ட் கொடுத்து தான் நான் பாத்து இருக்கேன... இதுவரை அவன் வேற ஒரு பொண்ணை சைட் அடிச்சு கூட நான் பார்த்தது இல்லை.. அப்படி பட்டவனை தப்பா நடந்துக்கிட்டானு சொன்னா யாரு நம்புவாங்க.."
" சுமி சொல்றது கரெக்ட் தான்.. நான் ஷ்ரவனுக்கு தான் சப்போர்ட் பண்றேன்.. ஏன்னா எனக்கு பூஜாவை பத்தி தெரியும்.. அவள் என் கிட்டேயே தப்பா பிஹேவ் பண்ணா.. ஆனால் நான் வெளியே சொல்லல.. ஒரு பொண்ணோட மானம் போகக்கூடாதுனு அமைதியா இருந்தேன்... ஆனால் இவள் எப்போ இன்னொருத்தவங்க மானத்தை எடுக்கவே துணிஞ்சுட்டாளோ நான் அதை சொல்லாம அமைதியா இருக்கிறது தப்பு.. இவள் என்னோட டீம் மேட் தான்.. எனக்கு இவளைப் பத்தி நல்லா தெரியும் இவள் எப்படி பட்டவனும் எனக்கு தெரியும்.. அதனாலே பொம்பள கண்ணீரை நம்பி நிரபராதியான ஷ்ரவனை தண்டிச்சுடாதீங்க" என ராம் சொல்ல அனைவரும் பூஜாவின் மீது கோபப்பார்வையை செலுத்திவிட்டு ஷ்ரவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வேலையைப் பார்க்க சென்றனர்..
ஷ்ரவன் சிலையாய் நின்று இருக்க அவனது அறைக்கு அழைத்துச் சென்று குடிக்க தண்ணீர் கொடுத்தாள் சுமி....
" சுமி அது நான்" என அவன் தடுமாற
" பேசாத ஷ்ரவன்.. நல்லா தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கேலே... அடிக்க வந்தவங்கள நாலு அறை விட வேண்டி தான.. எதுக்கு அப்படியே இடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் நின்னுட்டு இருந்தா"
" சுமி நான் உண்மையா அவளை எதுவும்"
" போதும் ஷ்ரவன்.. எனக்கு உண்மை தெரியும்.. அப்படி பண்ணேனு நீயே சொன்னா கூட நான் நம்ப மாட்டேன்"
" தேங்க்ஸ் சுமி.. நீ ஒருத்தி என்னை நம்புனா போதும்.. வேற யாருக்கும் நான் உண்மையை விளக்கனும்னு அவசியம் இல்லை " என சொன்னவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்...
No comments:
Post a Comment