This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 8 March 2019

Uma maheshwari's என்னுள் இருப்பவன் நீயே.. 4


Click here to get all parts

"ராமா ஒதையா இது தான் நம்ம ப்ளானோட ப்ளூ ப்ரிண்ட்... ப்ளான் ஏ உதய்க்கானது.. ப்ளான் பி ராம்க்கானது... இந்தாங்க... "என அவள் கைகளில் இரண்டு காகிதங்களை கொடுக்க அதைப் படித்து பார்த்த இருவரும் ஆச்சர்யப்பட்டனர்...


"செம சுமிமா கண்டிப்பா இதை எக்ஸிக்யூட் பண்றேன்.. நான் என் ஆளோட சேர்ந்து ஜோடியா வரேன்.. பாவம் ராமோட நிலைமை தான்.." என உதய் சொல்லியவாறே அமைதியாய் இருந்த ராமை சீண்டினான்...


" மச்சான் கவலைப்படாதே எனக்கு லவ் செட் ஆனதும் நான் உன் லவ்வை செட் பண்ணி விடுறேன்.. அதுக்காக முகத்தை நாலு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வைச்சுக்காதே" என சொல்ல ராமிற்கு சப்போர்ட்டுக்கு சுமி வந்தாள்..


" அடேய் அனுவுக்கு அவன் மேலே ஏற்கெனவே ஒரு இது இருக்கு.. ஆனால் என்ன வெளியே அவள் காமிச்சுக்க மாட்டேங்குறா.. நீ என்ன பண்ற ராம் கொஞ்சம் அவளோட பொசஸிவ்நெஸ் ஆ தூண்டி விடு... அது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்.. அவள் பார்க்கும் போதுலாம் நீ வேற யாருக்கிட்டயாவது சிரிச்சு பேசு.. கண்டிப்பா அவள் முகமே காட்டிக் கொடுத்துடும்... அதை வெச்சே கண்டுபிடிச்சுறலாம் சரியா.... ஆனால் உதய் உன் நிலைமையை நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு... " என சுமி சொல்ல இப்போது முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது உதயின் முறையானது... அதைக் கண்ட சுமி சிரித்துக் கொண்டே... 


" உதய் அவளுக்கு நீ அவளைப் பார்க்குறேனு கூட தெரியாது.. அதனாலே ஒழுங்காகப் போய் அவள் கிட்டே பேசு.. பவி கொஞ்சம் அமைதியான கேரக்டர் தான்.. அதுக்காக நீயும் அமைதியானவனா மாறனும்னுலாம் இல்லை.. இயல்பா நீ எப்படி பேசுவீயோ அப்படியே அவள் கிட்டே பேசு.. உன்னோட இயல்பான குணம் தான் அவளுக்கு பிடிக்கனும், அவளுக்காக நீ அமைதியா இருக்குறா மாதிரி நடிச்சு அது அவளுக்கு முதலே பிடிச்சு இருந்தாலும் லைப் ஃபுல்லா உன்னாலே அந்த நடிப்பை தொடர முடியாது.. அதனாலே எப்பவும் இருக்கிற உதயா அவள் கிட்டே ஜோவியலா பேசு.. எனக்கு தெரிஞ்சு அவளுக்கும் அது பிடிக்கும்.. "Because opposite poles attract each other"... என சுமி சொல்லி முடிக்க


" சரிங்க சுமித்ராயேத்ரேய சாமியே.. நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்.. ஆமாம் எப்படி opposite character set ஆகும்னு சொல்றே அது முதலிலே ஈர்க்குமே தவிர வாழ்க்கை முழுக்க நிறைய சண்டை தான் போட வேண்டியது வரும்" என ராம் சொல்ல" அப்போ சார் எதுக்கு அனுவை லவ் பண்றீங்க" என நேரிடையாய் அவள் கேட்க "அது தெரியல சுமி நானும் முதலில ரொம்ப என்னை கட்டுப்படுத்திக்கிட்டேன்.. இது செட் ஆகதுனுலாம் நினைச்சேன்.. ஆனால் அவளை ரொம்ப பிடிச்சுருச்சு.." என ராம் சொல்ல 


" அதான் ராம் லவ்வ கன்ட்ரோல் பண்ண முடியாது.. நம்ம எவ்ளோ முயற்சி பண்ணாலும் மனசு அவங்க பக்கம் சாய்றதை தடுக்கவே முடியாது... எனக்கு தெரியல ராம் ஆனால் என் மனசுலே அடிக்கடி opposite character தான் சரியா இருக்கும்னு தோணும்" என சொன்னவள் திடீரென முகம் மாறி.. "சரி கொஞ்சம் வொர்க் இருக்கு நான் கிளம்புறேன்" என சொல்லி அவளின் கேபினுக்குள் நுழைந்தாள்... அவள் மனதினுள் மீண்டும் சஞ்சலம் குடியேறியது..


" ராம் ஆனால் என் விஷயத்தில மட்டும் opposite pole theory பொய் ஆகிடுச்சு.. ஆனால் நீயும் உதய்யும் கண்டிப்பா சந்தோஷமா வாழுவீங்க.. நான் உங்களுக்கு ஆதரவா இருப்பேன் என நினைத்தவளின் மனம் தனது கல்லூரி நாட்களை மீட்டிப் பார்த்தது...


"காலேஜ்ல ஒருத்தர் இல்லனா ரெண்டு பேர் டாப்பரா இருப்பாங்க.. இங்க என்னடி ஒட்டு மொத்த க்ளாஸே டாப்பரா இருக்காங்க.. " என அருகில் இருந்த இன்னொரு லேட்டரல் என்ட்ரீ மாணவி அனிதாவைக் கேட்டாள்..


" எல்லாருமே மெரிட் சீட்ல உள்ளே வந்தவங்க.. நான் சேர்ந்த ரெண்டு நாளா பார்க்கிறேன் ஃப்ரொபஸர் போர்ட்ல கேள்வியை எழுதி முடிக்கிறதுக்குள்ளே எல்லோருமே பதிலை கத்துறாங்க.. எனக்கு எதுவுமே புரியல.. நம்ம டிப்ளமோல முழுசா தியரியா படிச்சோம் ஆனால் இங்கே பார்த்தா முழுசா ப்ராப்ளமா இருக்கு... எனக்கு அரீயர் வெச்சுடுவேனோனு இரண்டே நாளிலே பயம் வந்துடுச்சு" என அனிதா சொல்ல ஆதரவாய் அவள் தோளைப் பற்றிக் கொண்டாள்...


" அனிதா 99% டிப்ளமோல எடுத்துட்டு இப்படி பயப்படலாமா .. நம்ம ஒரு கை பாத்துறலாம்.. இங்கே நாம தான் படிச்சுக்கணும்.. ஸ்கூல் மாதிரி டீச்சரை எதிர்பார்க்காம நம்ம முயற்சி பண்ணா கண்டிப்பா மார்க் எடுத்துறலாம்" என அவளை தேற்றிக் கொண்டு இருந்த பொழுது " சார் நான் முடிச்சுட்டேன்.. இதோட பதில் இது தான்" என சொல்லிக் கொண்டு இருப்பவனைப் பார்த்து என்னடா பசங்கலாம் இவ்ளோ டெடிகேஷனோட க்ளாஸ கவனிப்பாங்களா என ஆச்சர்யமாய் அவன் முகத்தைப் பார்த்தாள்..


லேப் இல் எந்த சந்தேகம் என்றாலும் ஷ்ரவன் என அவனை அழைத்து சந்தேகம் கேட்க அவன் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்த்தவள் இதே நம்மளா இருந்தா கொஞ்ச நேரமாவது என்னை லேப் பண்ண விடுறீங்களானு கத்தி இருப்பேன்.. ஆனால் இந்த பையன் எவ்வளவு அமைதியா சொல்லித் தரான்..


எல்லாமே தெரிஞ்சு இருந்தா கூட அமைதியா இருக்கான்... ஆனால் நம்ம க்ளாஸ்ல சார் என்ன கேட்டாலும் முந்திரி கொட்டை மாதிரி கத்தி கத்தி பதில் சொல்லிட்டு இருக்கோம்..


இப்போலாம் எல்லா சாரும் முதல் பென்ச்ல உட்கார்ந்துட்டு இருக்குற என் முகத்தைப் பார்த்து தான் க்ளாஸ் நடத்துறாங்க.. ஆனால் அவன் க்ளாஸ்ல எங்கே உட்கார்ந்துட்டு இருக்கானு தெரியாத அளவுக்கு சைலண்டா இருந்துட்டு எல்லா டெஸ்ட்லயும் முதல் மார்க் எடுக்குறான்... நம்ம பார்டர் ல பாஸ் ஆகிட்டு இருக்கோம்.. ஆனால் லேட்டரலா இருக்குறதாலே ரொம்ப போராட வேண்டியதா இருக்கு.. இங்கே லேட்டரலாம் பாஸ் ஆகுறதே கஷ்டம்னு சீனியர்ஸ் பேசிக்குறாங்க.. ஏதோ பாஸ் ஆவது ஆகி வைக்கிறோமே.. என மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்...


பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் தோழன் ராகவ் ஒரு ஜோக் சொல்ல சத்தமாய் சிரித்தவள் ஷ்ரவனை திரும்பி பார்க்க அவன் ரோபோ போல் லேப்பில் எக்ஸ்பரிமென்ட் செய்து கொண்டு இருந்தான்...


அட என்ன இவன் சரியான உராங் உடானா இருக்கான்.. சிரிக்க கூட கத்து கொடுக்கனும் போல.. சரியான முசுடு.. என அவனை மனதினுள் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலேயே அவனின் ஒவ்வொரு செய்கைகளையும் கவனிப்பதை பற்றி அவளும் அன்று யோசிக்கவே இல்லை.. அவன் செய்வதில் எல்லாவற்றிலுமே தப்பைக் கண்டுபிடித்துக் கொண்டு இருந்தாள்... 


என்ன இவன் பொண்ணுங்க கிட்டேவே பேசவே மாட்டான் போல.. என்ன இவன் எதுக்குமே ரியாக்ஷனே கொடுக்க மாட்டேங்குறான்.. அவன் மனசிலே என்ன நினைக்குறானு கொஞ்சம் கூட காமிக்க மாட்டாங்குறான்.. ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா பேசுறானானு பாரு.. இல்லை அட்லீஸ்ட் பொண்ணுங்களை சைட் ஆவது அடிக்கிறானு பாரு... எப்போ பார்த்தாலும் படிப்பிலேயே இருக்கான் லைப்ப கொஞ்மாவது என்ஜாய் பண்றானானு பாரு.. சரியான உராங் உடான்.. என மனதினில் அவனைப் பற்றி தான் அதிகமாக நினைத்தாள்..


நீ எனக்கானவனாக 

இல்லாவிட்டாலும் பரவாயில்லை

நான் என்றும் 

உனக்கானவள் தான்...


💐💐💐💐💐

அவனைப் பத்தி யோசிக்க காரணமே அவன் எனக்கு அப்படியே opposite அதுனாலே தான் அவன் மேலே என்னை அறியாம ஈர்ப்பு இருந்தது.. ஆனால் நான் அதை லேட்டா தானே புரிஞ்சிக்கிட்டான்.. புரிஞ்சிக்கிட்டு என்ன ப்ரயோஜனம் எல்லாம் தான் முடிஞ்சு போச்சே என பெருமூச்சு விட்டாள்...


அந்த நேரம் பார்த்து அனு "மேம் உங்களை ஷ்ரவன் சார் கூப்பிடுறாரு" என சொல்ல அவன் அறைக்கு சென்றாள்...


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.