"வாவ் கூர்க் எவ்ளோ அழகா இருக்குல ராம்.....ஆனால் எனக்கு லைட்டா குளிருது... "
" என்ன சுமி இந்த குளிரை கூட நீ தாங்கிக்க மாட்டியா? இரு நான் ஷால் தரேன் அதைப் போத்திக்கோ.. ரூம்க்கு போனதும் ஸ்வட்டரைப் போட்டுக்கோ"
" ஹ்ம்ம் சரிங்க ராமா.. அங்கே பாத்தியா உதய் உதய்னு ஒரு ஜீவன் நம்ம கூட சுத்துமே.. இப்போலாம் ஐயா பவித்ராவோட செம பிசியா இருக்கார்..."
" ஆமாம் ஆமா இந்த பக்கம் திரும்புறானானு பாரேன்.. நம்மள கழட்டி விட்டுட்டான்"
" சரி ராம் உன் மேட்டர் என்ன ஆச்சு.. நீ அனு கிட்டே பேசவே இல்லையா?"
" என்னனே தெரியல சுமி.. அவள் இப்போலாம் பேசவே மாட்டேங்குறா. டெரரா ஒரு லுக் விடுறா.. "
" பார்த்துக்கலாம் ராமா.. நீ அவளைக் கண்டுக்காத என் கூடவே அதிகமா பேசு.. அவள் அதைப் பார்த்து எப்படி ரியாக்ட் பண்றானு நான் கண்டுபிடிச்சு சொல்றேன்"
" ஓகே சுமி மா.."
அடுத்து எங்கே போகலாம் என எல்லோரும் யோசித்துக் கொண்டு இருக்கும் போது சுமி தலகாவிரி போகலாம் என்றாள்..
" ஹே சுமி நீ கூர்குக்கு வந்து இருக்கியா?.." என ராம் கேட்க " ஹ்ம்ம் வந்து இருக்கிறேன்" என ஷ்ரவனைப் பார்த்து சொன்னாள்.. அவனும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.. இருவரின் கண்களும் அழகான அந்த கல்லூரி சுற்றுலாவை மனதினில் அசைப் போட ஆரம்பித்தனர்..
💐💐💐💐💐
"டேய் விஷ்வா ரொம்ப குளிருது"
" என்ன இது இந்த குளிரைக் கூட தாங்க மாட்டியா நீ.... இன்னும் கூர்க்ல இருக்குற ஹில்ஸ் க்குலாம் போன குளிர்ல சிலையாவே மாறிடுவ போல"
" கொழுப்பு தான்..' என்றாள் சுமி.
ஐயோ என் ஊர்க்காரி லேப்ல போடுற ஏசி குளிரை கூட தாங்க மாட்டாலே.. இங்கே இந்த குளிரை எப்படி தான் தாங்கப் போறாளோ என அவளுக்குப் பின்னால் நடந்து வந்த ஷ்ரவன் கவலைப்பட்டான் மனதினுள்...
என்னடா என்ன ஆச்சு ஏன் அமைதியாகிட்ட என ஆனந்த் கேட்க "ஒன்னும் இல்லைடா மச்சான் இதான் நம்ம கடைசியா வர டூர்ல இனி இந்த மாதிரி ஒன்னா போக முடியாதுல" என்றான் ஷ்ரவன்... " சார் ரொம்ப ஃபீல் பண்றீங்க போல.. இனி சுமி கூட போக முடியாதுனு.. டேய் எப்போ தான்டா சொல்ல போற உன் லவ்வை.. அவள் பார்க்கும் போது நீ பார்க்க மாட்டேங்குறே.. நீ பார்க்கும் போது அவள் பார்க்க மாட்டேங்குறா.. நல்லா கண்ணாமூச்சு விளையாடுறீங்கடா"
" என் காதலை நான் சொல்ல போறேன் டா.. ஆனால் வார்த்தையால லாம் இல்லை.. கண்ணாலேயே சொல்லப் போறேன்.. அவளும் என்னை புரிஞ்சுப்பா" என்று நம்பிக்கையாக சொன்னான் ஷ்ரவன்..
அபே ஃபால்ஸில் மொத்தமாய் சின்ன குழந்தையாய் மாறி சுமி செய்யும் வால்தனத்தை கண்களால் பருகிக் கொண்டு இருந்தான்.. யாரோ தன்னைப் பார்ப்பது போல் தோன்ற சுமி திரும்பிப் பார்த்தாள் அங்கே ஷ்ரவன் உருவம் தெரிய தன்னையறியாமல் உடலில் ஏதோ புது நடுக்கம் ஏற்பட்டது.. அவன் கண்களை பார்த்தால் எங்கே காதல் தெரிந்துவிடுமோ என இது வரை சந்திக்காமல் தவிர்த்து வந்தவள் முதல் முறையாய் அவள் கண்களை அவன் கண்களுக்குள் படரவிட்டாள்.. இருவரது கண்கள் செய்த வசியத்தால் அப்படியே வெகு நேரம் மயக்கநிலையிலேயே நின்று கொண்டு இருந்தனர்...
மந்திரித்துவிட்டாற் போல்
தான் அலைகிறேன்
இந்த காதல் செய்து
வைத்த வசியத்தால்....
அதற்குப் பின்பு சுற்றி பலர் இருந்தாலும், சுற்றி ரசிக்க இயற்கை இருந்தாலும், இவர்களது இரு கண்களும் மாறி மாறி இருவரை. மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தன..
அவள் எங்கே என்ன செய்தாலும் ஷ்ரவனின் பார்வை தன்னை தொடர்வதாய் நினைத்தாள்.. அவனும் அவளது நினைப்பை பொய்யாக்காமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்..
என் ஒவ்வொரு பார்வைக்கும்
உன்னிடம் இருந்து
எதிர் பார்வை வேண்டும்
என்றே விரும்புகிறேன்...
இது வரை தன்னுடைய பிரம்மை தான் என நினைத்து இருந்தவள் முதல்முறையாய உணர்ந்தாள் அந்த உராங் உடானுக்கும் தன்னைப் பிடித்து இருக்கிறது தான் என்று.. அவள் மனம் அவன் மனதோடு இணைந்து ஐக்கியமாக தொடங்கியது..
வேதியியல் மாற்றம்
நிகழ்ந்து உன்னில் கலந்த என்னை பிரித்து எடுக்க
இன்னும் எந்த ஆய்வும் கண்டுபிடிக்கப்படவில்லை..
இரவு நேரம் எல்லோரும் வட்டமாக அமர்ந்துக் கொண்டு மெசேஸ் பாஸிங் கேம்( அதாவது ஒரு வாக்கியத்தை ஒருவர் காதுகளில் ரகசியமாய் சொல்ல வேண்டும்.. அதை எல்லோரும் காதுகளில் சொல்லி கடைசியாக இருப்பவர் அந்த வாக்கியத்தை எல்லோருக்கும் கேட்கும் படி சத்தமாக சொல்ல வேண்டும்.. முதலில் சொல்லப்பட்ட வாக்கியத்திற்கும் இறுதியாய் சொல்லப்படுகிற வாக்கியத்திற்கும் அதிகமாய் வித்தியாசம் இருக்கும்.. இது தான் அந்த விளையாட்டு" விளையாடிக் கொண்டு இருந்தனர்..
வட்டமாக அமரும் பொழுது சுமியின் ஒரு புறம் ஷ்ரவனும் இன்னொரு பக்கம் ஆனந்தும் அமர்ந்து இருந்தனர்... ஆனந்த் சுமியின் காதுகளில் சொல்ல அதை சுமி ஷ்ரவனின் காதுகளில் சொல்ல வேண்டும்.. முதல் வாக்கியத்தை ஆனந்த் சொல்ல அது அவளது காதுகளில் சுத்தமாய் கேட்கவில்லை.. இப்போது ஷ்ரவன் காதில் என்ன சொல்வது என கையைப் பிசைந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஷ்ரவனின் காதுகளில் " சத்தியமா எனக்கு ஒன்னும் கேட்கல ஷ்ரவன்.. நீயா எதையாவது டயலாக்க பக்கத்துல இருக்கிறவங்க கிட்டே சொல்லிடு" என மெதுவாக சொல்லிவிட்டு பாவமாய் முகத்தை வைத்துக் கொள்ள அவன் சிரித்தே விட்டான்.. பரவாயில்லையே உராங் உடான் சிரிக்கும் போது செம அழகாக இருக்கான் என அவன் சிரிப்பினில் தன்னை மறந்துப் பார்க்க அவனும் அவளை விழுங்குவதைப் போல் பார்த்தான்...
உன் கண்கள் பேசும்
மொழியைப் புரிந்து கொள்ள
எனக்கு தனியாய் ஒன்றும்
அகராதி தேவையில்லை...
அடுத்த ரவுண்ட் வர ஆனந்த் சுமியின் காதுகளில் " ஐ லவ் ஷ்ரவன்" என்று சொல்ல அதிர்ச்சியானாள்.. அடப்பாவி இதைப் போய் எப்படி டா ஷ்ரவன் கிட்டே சொல்ல முடியும் என்பதைப் போல் அவனைப் பார்க்க " எனக்கு எதுவும் தெரியாது வைஷ்ணவி தான் இந்த டயலாக்க ஆரம்பிச்சா" என சொல்ல எரிப்பது போல் வைஷ்ணவியைப் பார்த்தாள்.. அவள் ஷ்ரவனை சைட் அடிப்பதை அவளும் பல முறை பார்த்து இருக்கிறாள்.. சரி அவளை அப்புறம் கவனிச்சுக்கலாம் இப்போ எப்படி இவன் கிட்டே இதை சொல்றது ரொம்ப வெட்கமா வேற இருக்கே.. ஆனால் வேற வழி இல்லை.. சொல்லி தான் ஆகனும் என முடிவெடுத்து அவன் காதுகளில் வெட்கம் தயக்கம் என மொத்தமும் கலந்த குரலில் " ஐ லவ் யூ ஷ்ரவன்" என்றாள்.. அதைக் கேட்டவன் கனவா நனவா என புரியாமல் கையை கிள்ள அவனுக்கு வலித்தது.. அப்போ இது உண்மை தானா.. என் ஊர்க்காரி என் கிட்டே ஐ லவ் யூ சொன்னாளா.. ஐயோ எனக்கு இந்த ஹில்ஸ்க்கு போய் கத்தனும் போல இருக்கே என யோசித்தவனுக்கு அப்புறம் தான் புரிந்தது "அட இது கேம்ல யாரோ சொல்ல சொன்னதை தானே இவள் என் கிட்டே சொல்லி இருக்கா... ஆனால் அந்த குரலிலே உண்மை இருந்துதே" என யோசித்தவன் அந்த வார்த்தையை அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் சொல்லிவிட்டு சுமியைப் பார்த்தான்.. அவள் தலையை கீழே குனிந்து கொண்டு ஏதோ புதையலை தேடி கொண்டு இருந்தாள்.. ஐயோ அவள் முகத்தைப் பார்த்தாவது நிம்மதியா இருக்கும் ஆனால் முகத்தைப் பார்க்க மாட்டேங்குறாளே.. ஏதோ ஒன்னு உண்மையோ பொய்யோ என் ஊர்க்காரி எனக்கு ஐ லவ் யூ சொல்லிட்டா அது போதும் என அவன் மனம் ஆனந்த கூத்தாடியது... ஆனால் அந்த சந்தோஷம் சில நாட்களில் முடியப் போகிறது என்று அவனும் அறியவில்லை கீழே குனிந்து வெட்கப்பட்டு கொண்டு இருந்த அவளும் அறியவில்லை...
உன்னிடம் காதலை
சொன்ன அந்த நொடியில்
தான் உறைந்து போய்
நிற்கின்றது என் காலம்...
💐💐💐💐💐
இருவரும் அந்த கல்லூரி சுற்றுலா நினைவிலேயே மொத்த கூர்க்கையும் அலுவலக நண்பர்களோடு ரசித்தனர்.. ஒவ்வொரு இடமும் அவர்களது கடந்த காலத்தை நினைவுப்படுத்த சந்தோஷமாய் அதை மீட்டிப் பார்த்துக் கொண்டனர்...
இவள் அபே ஃபால்ஸ் அருவியில் குளித்தபடி அவனைப் பார்க்க அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்... பல நாட்கள் கழித்து ஷ்ரவனுடைய வெற்றுப் பார்வை மாறி அவளை ரசிக்கும் பார்வையாய் மாற்றம் கொண்டு வந்தது.. இருவரும் இருவரது கண்களையும் மோதவிட்டுக் கொண்டு இருந்தனர்... அந்த கண்களின் சங்கமிப்பில் இருவரும் திளைத்தபடியே அலுவலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்தனர்..
அவள் தினமும் சென்று அவளுடைய ப்ரொஜெக்டைப் பற்றி சொல்லும் பொழுது எல்லாம் முன்னே இருக்கும் கடினத்தன்மையான பார்வையும் உதட்டோடு இருந்த அழுத்தத் தன்மையும் விலகி இப்போது எல்லாம் புன் முறுவலோடு அவள் சொல்வதைக் கேட்டான்... அவள் ஏதாவது கருத்து சொன்னாலும் அதை ஆமோதித்தான்... அவளுக்கு முன்பு இருந்த ஷ்ரவனைப் பார்ப்பது போல் இப்போதா தோன்றியது... அவனிடம் இயல்பாக பேச தொடங்கி இருந்தாள்.. அவனும் இயல்பாய் அவளிடம் நடந்து கொண்டான்...
அலுவலகத்தில் ஒவ்வொருவருடைய தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடைபெற்றன.. அதில் சுமி எல்லோரையும் உற்சாகப்படுத்தி அவர்கள் செய்வதை ஊக்கப்படுத்திக் கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் மைக்கை வாங்கிய ஷ்ரவன் இப்போ சுமி நம்ம எல்லோருக்காகவும் கவிதை சொல்லப் போறாங்க என சொல்ல ராம் " அடியே உனக்கு கவிதைலாம் எழுத தெரியுமா " என்றான்.. " லைட்டா எழுதுவேன்" என்றவள் ஷ்ரவனுக்கு எப்படி நம்ம கவிதை எழுதுறது தெரியும் என யோசித்தாள்... சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் அவளை மேடைக்கு அழைக்க முதலில் மறுத்தவள் பின்பு அனைவரும் வற்புறுத்தவே மேடைக்கு ஏறி மைக்கை வாங்கினாள்... "நான் முதலிலேயே சொல்லிடுறேன்.. கொஞ்சம் சுமரா தான் கவிதை எழுதுவேன்.. அதனாலே யாரும் கல்லோ இல்லை முட்டையோ எடுத்து என்னை அடிக்கக்கூடாது" என்று சொன்னவள் ஷ்ரவனைப் பார்த்தபடி கவிதையை சொல்ல ஆரம்பித்தாள்..
தொடுகை ஒன்றில் என்
மனதை தொட்டு சென்றவனே...
மோதலில் எனக்குள் காதலை
விதைத்துவிட்டு சென்றவனே..
உன் கண்களை நேராக
பார்க்கும் சக்தியை
மொத்தமாக பறித்தவனே..
என் கண்கள் காணாத
உன்னை என் கரங்கள்
பற்றிக் கொள்ளுமோ?
என்று சொன்னவள் கண்களில் கண்ணீர் அரும்ப அதை மறைத்துக் கொண்டு கீழே இறங்கி மறைவான இடத்திற்கு ஓடினாள் "ஏன் ஷ்ரவன் என்னை விட்டுட்டு போன.. நீ இல்லைனு நான் எவ்ளோ ஃபீல் பண்ணேன் தெரியுமா..இவ்ளோ நாளா அழக்கூடாதுனு நான் சேர்த்து வெச்ச மொத்த அழுகையும் இப்போ வெளியே வந்துருச்சு" என உடைந்து அழுதாள்....
இங்கோ ஷ்ரவன் அவள் கவிதைகளில் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பார்த்தவாறே ஸ்தம்பித்து போய் நின்றான்.. அவள் கவிதையிலே நான் தான் இருக்கேன்.. முதல் முறை அவள் மேலே தெரியாம என் கைபட்டது.. இரண்டு பேரும் யாரு ஜெயிக்குறோம்னு மோதிக்கிட்டது.... அப்புறம் எங்கள் கண் ரெண்டும் பேசினதுனு... அவள் என்னைப் பத்தி தான் சொல்றா.. அப்போ அவளும் என்னை நேசிச்சு இருக்காளா.. என நினைத்தவன் மனதினிள் சந்தோஷம் தோன்ற வேக வேகமாய் அவளைத் தேடினான்..
இங்கோ சுமி காணாமல் போக ராம் அவளைத் தேடி வந்தான்.. சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தவளை ராம் என்னவென்று உலுக்கி கேட்க அவள் ஓவென அழுதபடி அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.. அவனும் எதுவும் இப்போதைக்கு கேட்க வேண்டாம் என ஆதரவாய் அணைத்தபடி நின்றான்...
சுமியைத் தேடி வந்த ஷ்ரவனுக்கு அவளின் முதுகுப்புறமும் ராமின் அணைப்பும் கண்ணில் பட கொதித்துப் போனான்... அவன் உள்ளம் எரிமலையாகி வெடிக்க ஆரம்பித்தது.. டேய் முட்டாள் இந்த வாட்டியும் நீயா அவள் உன்னை காதலிச்சு இருக்கானு தப்பா கற்பனை பண்ணிக்கிட்டே.. அவள் உன்னை காதலிக்கவே இல்லை என மனம் சொல்ல வேகமாய் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்...
எனக்கு பிடித்து இருந்ததால்
தான் என்னவோ இல்லாத
காரணங்களை எல்லாம்
இருப்தாய் நினைத்து
கனவு கோட்டை கட்டிவிட்டது
இந்த இதயம்...
No comments:
Post a Comment