This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 30 March 2019

Uma maheshwari's என்னுள் இருப்பவன் நீயே.. 12


Click here to get all parts

அவன் அணைப்பினில் அவள் மயங்கிக் கிடந்த நொடி "சுமி மா என் மேலே இருந்த கோபம் போச்சா"என்று ஷ்ரவன் கேட்க சட்டென அவன் பிடியில் இருந்து விலகினாள்..


" போகல" என்றாள் கோபமான குரலில்..


" சுமி ப்ளீஸ் மா.. நான் பண்ணது ரொம்ப தப்பு டா.. அதை நானே உணர்ந்துட்டேன்.. உன்னையும் ராமையும் சேர்த்து வைச்சு நான் பேசி இருக்கக்கூடாது.. ரியலி சாரி டா"


" என்னாலே மன்னிக்கவே முடியாது ஷ்ரவன்.. ரொம்ப ஈஸியா சாரினு கேட்டுட்டே ஆனால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?" 


"நானும் தான் சுமி ரொம்ப கஷ்டப்பட்டேன்... என்னோட சுமி இன்னொருத்தவனுக்கு சொந்தமாகிட்டானோனு நினைச்சு ரொம்ப கஷ்டப்பட்டேன் டா... ஆனால் ஒரு நல்ல ஃப்ரென்ட்ஷிப்பை தப்பா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சுடு மா" என அவன் சொல்ல இவள் அதிர்ந்து நின்றாள்...


"என்னது உன்னோட சுமியா"


"ஆமாம் நீ என்னோட சுமி தான்.. இதுல என்ன சந்தேகம்"


"இது என்னை சமாதானப்படுத்துறதுக்காக நீ போடுற பிட்டா"


" ஐயோ சத்தியமா இல்லைடி.. நீ காலேஜ் வந்து சேர்ந்தல.. அப்போல இருந்தே நீ என்னோட சுமியா மாறிட்டேடி"


" ஷ்ரவன் என்னாலே நம்ப முடியல.. அப்போ நான் காலேஜ்ல சேர்ந்ததுல இருந்தே உனக்கு என்னைப் பிடிக்குமா" என கேட்டாள் நம்ப முடியாத பார்வையோடு 

" அடியே உண்மையா தான் சொல்றேன்.. நீ எனக்கு அப்படியே opposite ஆ இருப்பியா..நீ பண்ற எல்லாத்தையும் உனக்கு தெரியாம நான் கவனிப்பேன்... என்னை அறியாமேயே உன்னைப் பத்தி அதிகமா யோசிக்க ஆரம்பிச்சேன்.. ஆனால் அப்போ லவ்னு நான் உணரல... லேப்ல வைச்சு உன் கண்ணைப் பார்த்தேன் பாரு அதுவும் பிரம்மை பிடிச்சா மாதிரி ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டு இருந்தோம்ல அப்போ தான்டி எனக்கு இது லவ்வுனே புரிஞ்சது"


அட அப்போ நம்ம விஷயத்தில opposite poles attract each other theory பொய் ஆகிருச்சுனு நினைச்சு தப்பா ஃபீல் பண்ணிட்டோமே அது உண்மை தான் ஆகி இருக்கு என மனதினுள் சந்தோஷமாய் நினைத்துக் கொண்டாள்.. 


" சுமி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நான் பேசுறதை நீ கவனிக்குறியா இல்லையா.."


" கவனிக்கிறேன் கவனிக்கிறேன் ஷ்ரவன்.. எப்படிடா எல்லாத்தையும் கவனிச்சுட்டு முகத்தில எந்த ரியாக்ஷனும் காட்டாம வெச்சு இருந்தே.. அப்போ நான் விஷ்வா கிட்டே டீஷர்ட்டை பத்தி பேசுனதை நீ கேட்டுட்டு தான் அதே கலர்ல ஷர்ட் போட்டுட்டு வந்தியா.. நான் அதை கோ இன்சிடன்ஸ்ன்னு நினைச்சேனேடா... ப்ளான் பண்ணி தான் பண்ணியா... சரியான திருடன் நீ... என்று சொன்னவள் அவன் கையை வேகமாக கிள்ளி "அப்போ அப்புறம் ஏன்டா என் கிட்டே நீ லவ்வை சொல்லல.. லவ் பண்றேனு கொஞ்சம் கூட காட்டிக்கல" என்றாள் கோபமாக...


ஆ வலிக்குது டி ராட்சஷி.. என கையை தேய்த்தபடி " லவ்னு சொல்லி படிப்புல இருந்து உன் கவனத்தை திருப்பிடக்கூடாதுனு தான் நான் சொல்லல.. நீ லேட்டரல் என்ட்ரீ வரேயா.. அதனாலே நீ நல்லா நிறைய effort போட்டு படிச்சாக வேண்டிய கட்டாயம்.. நானும் வேணும்னே உன் கூட போட்டி போடுவேன்.. நீ என்னை ஜெயிக்கனும்றதுக்காகவே நல்லா படிப்ப.. நம்மக்குள்ளே சைலண்ட் போட்டியே நடந்துட்டு இருக்கும்... அப்புறம் நீ படிப்புல ஸ்ட்ராங் ஆகிட்டே.. காலேஜ் முடிஞ்ச அப்புறம் திடீர்னு லவ்னு சொல்றதுக்கு பதிலா என் லவ்வை முதல்ல உணர்த்தனும்னு நினைச்சேன்.. அதனாலே உன்னை பார்த்துட்டே இருப்பேன்.. ஆனால் மேடம் நீங்க தான் கீழே குனிஞ்சுடுவீங்களே... அதனாலே நான் சைலண்ட்டா போயிடுவேன்" என ஷ்ரவன் சொல்ல


" அதுக்கும் காரணம் இருந்தது ஷ்ரவன்.. நீங்க சொன்னீங்களே அந்த லேப்ல பார்த்த அப்போ தான் காதல்னு உணர்ந்தேனு நானும் அப்போ தான் உணர்ந்தேன்.. அதுக்கு அப்புறம் உங்களைப் பார்த்தாலே எனக்கு வெட்கம் வந்துடும்.. உங்கள் கண்ணை நேருக்கு நேராக பார்க்க முடியும் வெட்கம் என்னை பிச்சு திண்ணும்.. அதான் தலையைக் குனிஞ்சுக்குவேன்" என சொல்ல ஷ்ரவன் அருகே வந்து அவளின் முகத்தை நிமிர்த்திக் கண்களைப் பார்த்தான்.. அந்த கண்ணில் அவன் மீது கொண்ட காதல் தெளிவாய் தெரிய அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.. அவள் வெட்கப்பட்டு விலக முயல " ப்ளீஸ்.சுமி எனக்காக ரெண்டு நிமிஷம்" என கெஞ்சும் குரலில் சொல்ல அவனை இன்னும் இறுக்கி அணைத்தபடி அவன் மார்பில் சாய்ந்து அவன் இதயத் துடிப்பைக் கேட்டாள்.. அந்த இதயம் துடிப்பது தனக்காக தான் என கர்வமும் கொண்டாள்..


அவன் கேட்ட இரண்டு நிமிடம் ஐந்து நிமிடமாகி பின் பத்து நிமிடமாகவே மாறியது.. அவள் அணைப்பு தந்த மயக்கத்திலேயே ஷ்ரவன் " சுமி ஐ லவ் யூ டி" என்றான் கிறக்கமான குரலில்.. உடனே அவனைப் பிடித்து தள்ளியவள் " அப்போ ஏன் டா வைஷ்ணவியை உன்னோட க்ரஷ்னு சொன்ன?" என்றாள் கோபமான குரலில்..


" ஹே நான் ஃபேர்வெல் அன்னைக்கு உன் கிட்டே ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தேன்... ஆனால் லைட்டா பயமா இருந்தது... உனக்கு என்னை பிடிக்குமானு தெரியலயே.. அதான் க்ரஷ்னு கேட்ட அப்போ வைஷ்ணவி பேரை சொல்லிட்டு உன் முகத்தைப் பார்த்தேன்.. மேடம் கண்ணுல இருந்து அழுகையே வந்துடுச்சு.. அப்பாடா அப்போ இவளுக்கும் நம்ம மேலே லவ் இருக்குனு ப்ரொபோஸ் பண்ண ரெடியா நின்ன அப்போ தான் நீ என் முன்னாடி வந்து நீ யாரு எனக்கு எப்படி என் பர்செனல் விஷயத்துல எல்லாம் தலையிடலாம்னு கழுவி கழுவி ஊத்திட்டுப் போன" என்றான் சோகமான குரலில் உடனே அவனைத் தன்னருகே இழுத்து கண்ணத்தில் இதழ் பதித்தாள்..


" சாரி ஷ்ரவன் செல்லம்.. அது வைஷ்ணவி உன்னை ஏற்கெனவே சைட் அடிச்சுட்டு இருந்தாளா.. அவள் கிட்டே போய் பார்க்கக்கூடாதுனு சண்டை போட்டேன்.. அந்த வைஷ்ணவி நீ எதுக்கு சொல்ற பார்க்கலாம் ஷ்ரவனுக்கு யாரைப் பிடிக்குதுனு சவால் விட்டா.. நீ ஸ்டேஜ்ல நின்னு அவள் தான் க்ரஷ்னு சொன்னியா.. அதான் எனக்கு கோபம் வந்துருச்சு.. அப்போனு பார்த்து விஷ்வா கிட்டே லவ் பண்றியானு கேட்டதை சொன்னானா... எனக்கு நீ என்னை லவ்வே பண்ணல நம்ம தான் கற்பனை பண்ணிக்கிட்டோம்னு முடிவே ஆகிருச்சு.. செமயா கோபம் வந்தது அதை உன் கிட்டே வந்து காட்டிட்டேன்.. ஆனால் நீ விஷ்வா கிட்டே அப்படி கேட்டு இருக்கக்கூடாது ஷ்ரவன்.. அப்புறம் ராம் பத்தியும் தப்பா பேசியிருக்கக்கூடாது" என்றாள்..


" இல்லை சுமி நீ விஷ்வா கிட்டே போன்ல நாள் கணக்கா பேசிக்கிட்டே இருப்பே.. ஆனால் நம்ம நேர்ல ஒரு வார்த்தைக் கூட பேசினது இல்லை.. அந்த கோபம் வேற லைட்டா இருந்தது.. அப்புறம் லைட்டா ஒரு நட்பாசை.. ஒருவேளை நீ விஷ்வா கிட்டே என்னை பிடிச்சு இருக்குனு சொல்லி இருந்தா அதான் அதைப் போட்டு வாங்கலாம்னு தான் நீ அவனை லவ் பண்றீயானு கேட்டான்.. ஆனால் சந்தேகப்பட்டு கேட்கல மா.. கொஞ்சம் பொஸசிவ்னெஸ் ல தான் கேட்டேன்.. "


" விஷ்வா வீட்டுல நிறைய பிரச்சனை ஷ்ரவன்... ஆனால் அவன் வெளியே யாரு கிட்டேயும் சொன்னது இல்லை.. அவனைக் கொஞ்சம் தனியா விட்டா அதிகமா ஃபீல் பண்ணுவானு தான் போன் பண்ணி அவன் கூட பேசுவேன்.. கொஞ்சம் அவன் மனசை டைவர்ட் பண்ணுவேன்.."


" சாரி சுமி மா.. எனக்கு அது தெரியாது.."


" பரவாயில்லை ஷ்ரவன்.. ஆனால் ராம் விஷயத்திலே ஏன் அப்படி பேசின.. நான் எவ்ளோ தான் மனசை சமாதானப்படுத்தினாலும் மனசு ஆறவே மாட்டேங்குது"


" இல்லை சுமி அன்னைக்கு நீ கவிதை சொன்னலே.. அது என்னை நினைச்சு தானே சொன்ன.. அப்போ தான் நான் உணர்ந்தேன்.. நீயும் என்னை காதலிச்சு இருக்கேனு.. ஆசையா உன்னைப் பார்க்கலாம்னு தேடி வந்தேன்.. அப்போ ராம் உன்னை அணைச்ச படி நின்னுட்டு இருந்தைப் பார்த்தேன்.... மறுபடியும் நான் ஏமாந்துட்டேன் நீ என்னை காதலிக்கல நான் தான் தப்பா நினைச்சுட்டேனு என் மேலே இருந்த கோபத்தை அப்படியே உன் மேலே காட்டிட்டேன்.. சாரி மா.. அதுக்காக ரெண்டு அடியாவது அடிச்சுக்கோ.. நான் அப்புறம் அதை தப்புனு மனசார உணர்ந்துட்டேன்.."

" அன்னைக்கு கவிதை சொன்னதும் ஏன் என் காதல் தோத்து போயிடுச்சுனு அழுகை வந்துருச்சு.. ரொம்ப நாள் அழக்கூடாதுனு தேக்கி வைச்ச கண்ணீர் எல்லாம் வெளியே வந்துருச்சு.. நான் தனியா நின்னு அழறதை ராம் பார்த்தான்.. நான் ஆறுதலுக்காக என் நண்பனோட தோளைத் தேடினேன் ஷ்ரவன் அவ்ளோ தான்"


" அம்மு எனக்கு explanation லாம் வேணாம் டா... நான் கொஞ்ச நாள் முன்னாடியே உணர்ந்துட்டேன்.. என் மேலே தான் எல்லா தப்பும்னு.. நீ எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுடா நான் அதுல தலையிட மாட்டேன்... ஆனால் மத்தவங்க மேலே அன்பை காமிக்குறதுலேய மேடம் கவனம் செலுத்திட்டு மாமா மேல காதலை காமிக்குற டைமை குறைச்சிங்கனா பிச்சுபுடுவேன் பிச்சு.."


"சரிங்க சார் உங்களுக்கு எக்ஸ்ட்ரா டைம் கொடுத்துறலாம் ஓகே"


"டபுள் ஓகே செல்லம்... "


"டேய் உராங் உடான் நீ இவ்வளவு ஜாலியாலாம் பேசுவியா... ப்ரோக்ராம் பண்ணி வைச்ச ரோபோ மாதிரி இருப்ப.. நிறைய மாறிட்ட டா.. என் முன்னாடி.நிக்குற ஷ்ரவனே வர மாதிரி தெரியுறேன்.."


" ஆமாம் ஊர்க்காரி நான் மாறிட்டேன் தான்.. அதுக்கு காரணம் நீ தான்... அப்பா என்ன வாலு பண்ணுவ தெரியுமா க்ளாஸ் ரூம்ல உட்கார்ந்துட்டு... அதைப் பார்த்தே நான் நிறைய மாறிப் போனேன்டி"


"என்னது நான் ஊர்க்காரியா"


"அப்போ நான் மட்டும் உராங் உடானா"


"ஆமாம் நீ எப்போ பார்த்தாலும் முசுடா உர்ருனு இருப்பே"


" ஆமாம் நீ கூட தான் ஊர்க்காரி மாதிரி நீட்டா அழகா முடி வைச்சுக்கிட்டு.. ஷால்க்கு பின்னைக் குத்திட்டு அடக்கமான பொண்ணாட்டம் தெரியற... ஆனால் வாயைத் திறந்தா தான் வாயாடினு தெரியும்.. உன் உருவத்துக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லைடி"


"சீ போடா... ஷ்ரவன் நம்ம மட்டும் காலேஜ் படிக்கும் போதே லவ்வை சொல்லி இருந்தா.. இவ்ளோ கஷ்டம் இருந்து இருக்காது இல்லைல" என அவன் தோள் சாய்ந்தபடி கேட்க அவள் முகத்தை மெதுவாக வருடிய படி


" இல்லைமா இந்த கஷ்டம் நல்லதுக்கு தான்.. அப்பவே காதலிக்க ஸ்டார்ட் பண்ணி இருந்தாலும் நம்ம பொழுதை எல்லாம் காதலிக்கிறதுலேயே செலவு பண்ணி இருப்போம்.. ஆனால் அந்த பிரிவு லைப்ல நம்மளை உயர்த்தி தான் இருக்கு. இப்போ நான் மேனேஜரா இருக்கேனா அந்த பிரிவு தான் காரணம்.. இனி வர போற மீதி காலம் முழுக்க காதலிக்க தான் இனி நமக்கு டைம் இருக்கப் போது.. நம்ம கேரியர்ல சாதிச்சாசு.. இனி லைப்ல சாதிக்க ஆரம்பிக்கலாம்.. அப்படி சாதிக்கனும்னா நீ மனசு வெச்சா தான் முடியும்.. உன்னை மாதிரி துரு துரு னு ஒரு பொண்ணை பெத்து தருவியா டி" என கிறக்கமாய் அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தபடி கேட்க


" இல்லைடா மாட்டேன்"


" ஹே என்னடி " என அவன் அதிர்ந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்க


" நான் பையன் தான்டா பெத்து தருவேன்"


" உன் ஆசையை ஏன் கெடுப்பானே.. ஒரு பையன் ஒரு பொண்ணு ஓகே வா"


" டபுள் ஓகே டா.. ஷ்ரவன் இந்த பிரிவில உன் லைப் மட்டும் தான் உயர்ந்து இருக்கு.. நீ மேனேஜர் ஆகிட்டே ஆனால் நான் சாதாரண டீம் லீடரா தானோ இருக்கேன்" என்று இறங்கிய குரலில் சொல்ல


" அடியே நடிக்காதடி.. நீ தான் என்னை விட லைப் ல இப்போ உயரமான இடத்துக்கு போய் இருக்கீங்க மிஸ்.சுமிரவன்.. " என ஷ்ரவன் சொல்ல ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்..


" டேய் நான் தான் ரைட்டர் சுமிரவனு உனக்கு எப்படி தெரியும்.."


" அதெல்லாம் தெரியும்.. நான் கேரியர் நோக்கி ஓடுனேன்.. நீ உன் passion ஆ நோக்கி ஓடுன.. அது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்"


" ஆமாம் டா நான் கவிதை எழுதவேனு உனக்கு எப்படி தெரியும்?"


" எல்லாம் விஷ்வா சொல்லித் தான்"


" ஓ அப்போ ரைட்டர் மேட்டரும் அவன் மூலமா தான் தெரிஞ்சு இருக்கும்... விஷ்வா தானே என் புக்கோட பப்ளிஷர்.. அவன் கிட்டே இருந்து நீ இன்ஃபர்மேஷனை கலெக்ட் பண்ணி இருப்ப"


" ஆமாம் ரைட்டர் மேடம்"


" டேய் ஷ்ரவன் ப்ளீஸ் இந்த ரைட்டர் விஷயத்தை மட்டும் வெளியே சொல்லிடாத .. அப்புறம் எனக்கு பெர்சனல் லைப்னே ஒன்னு இல்லாம போயிடும்.. சரியா?"


" சரி சொல்லாம இருக்கனும்னா எனக்கு கமிஷன் வேணுமே"


" எவ்வளவு வேணும்"


" ஒரு லட்சம் வேணும்"


" அடேய் உனக்கே ஓவரா தெரியல அவ்ளோ காசுக்கு நான் எங்கே போவேன் "


" அடியே நான் ஒரு லட்சம்னு சொன்னது பணத்தோட எண்ணிக்கையை இல்லை.. முத்தத்தோட எண்ணிக்கையை..."


" உராங் உடான் இது பெரிய கமிஷன்.. என்னாலே அவ்ளோலாம் முடியாது"


" ஐயோ ஊர்க்காரி உன்னால முடியும்.. நான் ட்ரைனிங் தரேன்.."


" ஷ்ரவன் உராங்குடான் நேம் ரொம்ப பெரிசா இருக்குல"


" ஆமாம் ஊர்க்காரி பேரு கூட தான்"


" ஷார்ட்டா சுருக்கி வச்சிடலாம் உராங் ல இருந்து o வையும் குடான் ல இருந்து k வையும் எடுத்து ok னு பேர் வைச்சிடலாம்"


" ஹே ஊர்க்காரியை சுருக்கினா கூட ok னு தான்டி வருது"


" டேய் ok பேரு எனக்கு தான்"


" இல்லை எனக்கு தான்"


" சரி சரி ப்ரச்சனை வேணாம் நீ மிஸ்டர். OK வா இரு நான் மிஸஸ்.OK ஆகிடுறேன் ஓகே..."


" ok ok"


" ஹே நான் கேட்ட கமிஷன் எப்படி தருவ"


" ஐயோ mr. Ok " என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் இதழை இவன் சிறைபிடித்தான்.. அவனுடைய கமிஷனுக்கான முதல் முத்தத்தை பெற ஆரம்பித்தான்.. நீண்ட நேரம் கழித்து மூச்சு விடுவதற்காக அவளை விடுதலை செய்ய


" டேய் பாவி நான் ஓகே னு உன் பேரை கூப்பிட்டேன் டா.. சரியான ஃப்ராடு நீ... ஏமாத்தி முத்தத்தை வாங்கிட்டேல இரு உன்னை வைச்சுக்குறேன்"


"நான் ரெடி டி"


" செருப்பு"


"சரி வாடி மீதி இருக்குற தொன்னுத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுத்து ஒன்பது கிஸ்ஸை கொடு"


" போடா முடியாது"


" அப்போ நான் சுமிரவன் நீ தானு வெளியே சொல்லிடுவேன்"


" சொல்லிக்கோ"


" அவ்ளோ ஆகிருச்சா.. உதய் ராம் என கூப்பிட்டுக் கொண்டு வெளியே கிளம்ப 


"வேணாம் ஷ்ரவன்"


"நீ என்னே வேணாம் சொல்றது. இரு அவனுங்களை கூப்பிடுறேன்.. உதய் ரா" என அவன் வார்த்தை பாதியிலேயே முடிந்தது சுமி தந்த முத்தத்தினால்.. இந்த கதையும் இனிதாய் முடிந்தது..



- சுமிரவன்-

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.