This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 2 April 2019

Anubama karthik's என் நிழல் நீயடி 12


Click here to get all parts

பாலில் குளித்த தேனின் நிறம் கருவண்டு கண்கள் மிதமான உயரம் என அழகியலின் இலக்கணமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கிய ஸ்வேதா தன்னை அழைக்க வந்த ஷியாமை கண்டு முகத்தை சுழிக்க உடன் வந்த சக்தியோ உஷ்ணத்தின் எல்லைக்கு சென்றாள் 


ஆம் சந்தோஷின் ஏற்பாட்டின்படி சுமித்ராதேவி கேட்டுக்கொண்டதின் பெயரில் அந்த பின்னிரவு நேரத்தில் ஸ்வேதாவை அழைக்க வந்திருந்தான் ஷியாம் அவனுக்கு எதிராக சதி செய்ய வந்திருக்கும் அவளின் நோக்கம் அறிந்தவன் என்பதால் அவளை முதன் முறை சந்திக்கும் போதே அவளை பற்றிய தன் நாயகியின் கருத்தையும் அறிந்துவிட எண்ணியும் மேலும் பின்னிரவு நேரம் என்பதால் ஒரு பெண்ணை அழைத்து செல்ல இன்னொரு பெண் துணையாகவும் சக்தியையும் உடன் அழைத்து வந்திருந்தான்.


தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு காரில் ஏறிய ஷியாமின் அருகில் டக்கென ஸ்வேதா அமர முயல தன் முகத்தில் கோபத்தை காட்டிய ஷியாம் சக்தியை நோக்கி ஏன் சக்தி உனக்கு ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா ? நீ வந்து இந்த பக்கம் உக்காரு மாம் ரிலேக்ஸ்ட்டா பின்னாடி உக்காந்து வரட்டும் என கத்த அதில் துணுக்குற்ற ஸ்வேதா தானாக பின்புறம் போய் அமர்ந்தாள்.

 

அந்த பின்னிரவு நேரத்திலும் சாலையின் போக்குவரத்து நெரிசலால் சற்றே நிதானமாக காரோட்டிய ஷியாம் மாளிகையை அடைந்தபின் ஸ்வேதாவை இறக்கி விட்டுவிட்டு சென்றான் அவர்களை எதிர்கொண்டு அழைத்த சந்தோஷின் முகத்தில் கண்ட புன்னகையும் கனிவும் சக்தியின் யோசனையை தூண்டி விட்டது.


சொல்லு சக்தி என்னவோ என்கிட்ட பேசணும் நு கூப்பிட்டையே என கேட்ட தன் தோழியிடம் சந்து சந்தோஷ் உன்கிட்ட பேசணும் நு சொன்னான் அதோட உன்கூட பேசும்போது நானும் இருக்கணும் நு சொல்றான் மீட்டிங்க டின்னரோடவும் ஏற்பாடு பண்ணி இருக்கறதா சொல்றான் அதுமட்டுமில்லாம ஷியாம் சொல்றபடி பாத்தா அந்த இடத்தில் எதோ ப்ளான் பண்ணி இருப்பான்னு தோணுது என்ன செய்யலாம் நு சொல்லு என கேட்க


ஒண்ணும் பிரச்சனை இல்ல சக்தி ஏற்பாடு பண்ணு நான் பாத்துக்கறேன் என சொல்லி விட்டு மௌனமாய் இருந்தவளை தட்டி கொடுத்த சந்தனா ஹேய் கவலை படாத உனக்கு துணைக்கு ஷியாமை வர சொல்லிட்டா போகுது உன்னையும் ஷியாமையும் மீறி அவனால என்னை ஒண்ணும் பண்ணிட முடியாது என சிரித்தாள் அவளின் சிரிப்பிலும் தானும் மன நிம்மதி அடைந்த சக்தி வீட்டுக்கு கிளம்பினர்.


வழக்கம் போல சந்தோஷின் உளவாளி மூலமாக அவனின் காதுகளுக்கு சென்று விட இம்முறையாவது வென்றுவிட எண்ணி மிக கவனமாக திட்டம் தீட்டினான் சந்தோஷ் சக்தியும் சந்தனாவும் தாங்கள் சந்திக்கும் நேரத்தை உறுதிபடுத்திவிட அந்த சந்திப்பில் ஷியாம் கலந்து கொள்ள முடியாமல் செய்யும் பொறுப்பை ஸ்வேதாவிடம் கொடுத்தான்.

 

அந்த நாளும் வந்தது ஆயிரம் முறை அந்த சந்திப்பை ஷியாமுக்கு நினைவுபடுத்தி அனுப்பினாள் சக்தி அவளின் உள்மனம் அன்று ஏதோ நடக்க போவதாக எச்சரிக்க மிகவும் பதட்டமாக இருந்தாள் அதற்கு நேர் எதிர்மாறாக இருந்தது சந்தனாவின் மனநிலை விசித்திரமாக பார்த்த தன் தாயிடம் சந்தோஷுடன் நடக்கவிருந்த சந்திப்பை சொன்னாள் சந்தனா அதை கேட்ட சீதாவோ தன் மகள் மனம் மாறிவிட்டதாக கருதி சந்தோஷபட்டார்


யாரும் எதிர்பாராத அளவில் மிக அழகாக தன்னை அலங்கரித்து கொண்ட சந்தனா முகம் முழுவதும் புன்னகையுடன் கிளம்பிச்சென்றாள் அந்நேரம் தனது இல்லத்தில் ஷியாமினை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த சக்தி அவன் நேராக டின்னர் நடக்கும் இடத்துக்கு வந்து விடுவதாக அனுப்பிய குறுஞ்செய்தியால் சற்றே சமாதானமானாள் அவளுக்கும் கூட இன்று சந்தனா முகத்தில் காணப்பட்ட புன்சிரிப்பும் அவளின் அலங்காரமும் வித்தியாசமாக பட ஆர்வமாக தன் தோழியின் செயலை நோட்டமிட்டாள்.

 

ஹோட்டலை அடைந்த பின்னும் ஷியாம் வராததால் சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த சக்தியை சந்தோஷின் வரவு சலனபடுத்தியது ஹாய் அக்கா ஹலோ சந்து எப்படி இருக்கே? என நலம் விசாரித்த சந்தோஷும் கூட அன்றைய சந்தனாவின் அலங்காரத்தில் அசந்துதான் போனான் சந்து யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் என வாய் விட்டு பாராட்டவும் செய்தான் .


புன்னகை மாறாமல் அவன் பாராட்டை ஏற்ற சந்தனா தாங்யூ சந்தோஷ் என சொல்லிவிட்டு சக்தியை பார்க்க அவள் சந்தோஷிடம் எங்கே ஷியாம் உங்க கூட வரதா சொன்னாரே ? என வினவினாள் ரிலாக்ஸ் அக்கா ஷியாம் காரை பார்க் பண்ணீட்டு இன்னொரு முக்கியமான கெஸ்ட்ட கூட்டிட்டு வருவாரு என சொல்லி சிரித்தான் .


சாரி கைஸ் இன்னொரு கெஸ்ட் வரத முன்னாடியே சொல்லமுடியாம போச்சு எக்ஸ்ட்ரீம்லி சாரி என சொன்னவனிடம் இட்ஸ் ஓகே பா வீயார் செய்லிங் சேம் போட்  உன்னை கேட்க்காம நானும் ஒரு கெஸ்ட்ட கூப்பிட்டு இருக்கேன் என புதிர் போட்டாள் சந்தனா.


ஷியாமுடன் வந்த அந்த இரு விருந்தாளிகளை கண்ட அனைவருக்கும் அதிர்ச்சிதான் வந்தது


ஆம் ஸ்வேதாவும் சரத்தும் தான் அந்த இரு விருந்தாளிகள் ஷியாமுடன் ஸ்வேதாவை கோர்த்துவிட்டு அவனுக்கு பிரச்சனையை கொடுக்க ஏற்பாடு செய்து விட்டு விருந்துக்கு வரவிடாமல் திட்டம் போட்ட சந்தோஷுக்கு அவள் எதிர்பாராமல் இன்னொருவர் உதவியுடன் ஷியாம் பிரச்சனை சமாளித்து விட்டதையும் தன்னையும் விருந்தினராக அழைப்பதையும் ஸ்வேதா தெரிவித்திருக்க 


ஷியாமுக்கு உதவிய அந்த இன்னொருவர் யாராக இருக்கும் என  யோசித்த வண்ணமிருந்தானே தவிர அங்கு சரத்தை பொருத்தி பார்க்க தோன்றவில்லை தன்னுடன் சரத்தையும் அழைத்து செல்ல ஷியாம் கிளம்பியபோது உள் விவகாரம் தெரியாத ஸ்வேதாவும் சரத்தை அழைத்து விட சந்தோஷுக்கு அதை மறுக்க வழியில்லை


இனி  வரும் அத்தியாயங்களில் ஷியாம் சரத்தின் சதுரங்க நகர்த்தலுக்கு சந்தோஷின்  பதில் என்ன என பார்ப்போம்


தொடரும்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.