சந்தோஷின் கண்களில் சரத்தை கண்டவுடன் தோன்றிய கண நேர அதிர்ச்சியே அவன் அங்கு சரத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை தெரிவித்திட அதை அவன் மறைக்கும் நொடிக்குள் கண்டுகொண்டன ஷியாமின் விழிகள்
தடுமாற்றத்தை மறைத்துகொண்ட சந்தோஷோ முகமெங்கும் புன்னகை பூசியவண்ணம் வா சரத் என ஆர தழுவி வரவேற்றான் அந்த சமயம் அவன் கண்களில் மின்னிய வெறியும் குரோதமும் சந்தனாவை திகிலுற வைத்தது
அந்த உயர்தர உணவகத்தில் மெல்லிய விளக்கொளியில் ஷியாமின் ஒருபுறம் சக்தியும் மறுபுறம் சந்தனாவும் அமர்ந்திருக்க சந்தனாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தான் சரத் சந்தோஷ் அருகே அமர்ந்திருந்த ஸ்வேதாவோ சக்தியையும் ஷியாமையும் முறைத்த வண்ணமிருந்தாள்
முறைப்படி அறிமுகத்தை துவக்கிய சந்தோஷ் ஸ்வேதா இது சரத் - ஷியாமோட தம்பி சந்தனா நம்ம என சொல்ல துவங்க இருங்க பாஸ் நான் சொல்றேன் என இடைவெட்டிய சந்தனா ஹாய் ஸ்வேதா நான் சரத்தோட மனைவி என குண்டை தூக்கி போட்டாள்
ஆமாம் சந்தோஷ் நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் என் சொல்லி சந்தோஷின் கனவில் ஒரு பூகம்பத்தை விளைவித்தாள்
நம்பாமல் சக்தியை பார்த்த சந்தோஷிடம் ஆமாம் தம்பி அவங்க அப்பா சம்மத்தோட நாங்க எல்லாரும் சேந்துதான் அவளுக்கும் சரத்துக்கும் கல்யாணம் பண்ணிவெச்சோம்
அதுவும் சரத் கொடைக்கானலுக்கு போறத்துக்கு முன்னாடி தான் நடந்தது உங்களுக்கு சொல்ல முடியலை சாரி அதை தப்பா எடுத்துகாதீங்க என சொல்லிவிட மௌனிப்பது சந்தோஷின் முறையானது
சக்தியின் பேச்சை இடைவெட்டிய ஷியாம் யம்மா பாசமலரே பசிக்குது சாப்பிடலாமா ? பாஸ் டின்னருக்கு கூப்பிடீங்களேனு மதியத்துல இருந்து நம்ம சந்தனா கூட சாப்பிடாம வந்திருக்கா எதாவது வயத்துக்கு போடல அவ பத்ரகாளியாயிடுவா என சொல்ல எல்லாரும் சிரித்த ஒலியில் சந்தோஷின் ஏமாற்றம் அமுங்கியது
உணவு அருந்திக்கொண்டே பேச்சை துவக்கிய சந்தோஷ் மேலும் தனக்கு எதாவது வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறதா என அறிய சரத் அட்லீஸ்ட் எங்கிட்டயாவது நீ சொல்லி இருக்கலாம் நானும் உன் பிரெண்ட் தானே ஒருவேளை டிரீட் கேப்பேனு பயந்துட்டீங்களோ என கலாய்க்க
ஹே எனக்கே கலியாணத்தன்னிக்கு தான் தெரியும் என சொல்லிவிட்டு நாங்க ரெண்டு பேரும் தனாவோட அம்மா சம்மதிக்க தான் வெயிட் பண்ணறோம் அவங்க சம்மதிச்சதும் கட்டாயமா ஊரரிய பெருசா எங்க கல்யாணம் நடக்கும் அப்போ பாருங்க டீரீட் ஜமாய்ச்சுடலாம் என வெள்ளை மனதுடன் சொல்லி சிரித்தான்
சரிப்பா வாங்க சாப்பிடலாம் என சந்தனா சொல்ல அதானே சைரனாவது சாப்பிடாம இருக்கறதாவது என சக்தி கலாய்க்க சக்தி நீயுமா? என சந்தனா பொய்யாக அதிர்ச்சி அடைய ஆமா நானேதாண்டி என சொல்ல தோழிகளின் குறும்பில் அனைவரும் வாய் விட்டு நகைத்தனர்
புன்னகை முகமாய் இருந்த சந்தோஷை ஸ்வேதாவின் விழிகள் பருகியதை நோட்டமிட்ட சக்தியின் விழி சொன்ன செய்தியை புரிந்ததாக மொழி பெயர்த்தது ஷியாமின் விழிகள்
எல்லாம் முடிந்தபின் ஷியாமும் சரத்தும் தங்கள் ஜோடிகளுடன் கிளம்பிவிட தனக்கு சற்றே வேலை இருப்பதாக பின் தங்கினான் சந்தோஷ் தானும் அவனுடயே வந்து விடுவதாக சொல்லிவிட்டாள் ஸ்வேதா
தொல்லை விட்டது என நினைத்தவாறே ஷியாம் அனைவரையும் அழைத்து கொண்டு கிளம்ப காரை அடைந்தபின் அதை ஓட்டியவாரே பேச்சை துவக்கினான் ஏன் சந்து உனக்கும் சரத்துக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆனதா பொய் சொல்ல சொன்ன? என கேட்க அதுவா சக்தி ஐடியாதான் அது என சக்தியை நோக்கி கை காட்டினாள் சந்தனா
சக்தியின் முகத்தை அனைவரும் கேள்வியாய் பார்க்க அவளோ ஒண்ணுமில்லபா சந்தோஷ் சந்தனாவை விட்டு சரத்தை பிரிக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டு ரொம்ப புத்திசாலிதனமா அவனை கொடைக்கானல் அனுப்பினான் உங்களுக்கு வேலைய ஜாஸ்த்தி பண்ணி தேவைப்பட்டாகூட சந்தனாவ காப்பாத்த முடியாதபடி ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சான்
ஆனா அவனெ எதிர்பார்க்காத விஷயம் சந்தனாவோட ராஜினாமா அதுலயும் அவளை ரிலீவ் பண்ண முடியாதுனு பல காரணம் சொன்னான் பிடிவாதமா சந்தனா ராஜினாமா பண்ணுற முடிவுல இருக்கவும் அவளோட இடத்துல ஸ்வேதாவ வெச்சி உங்கள டார்சர் பண்ண பாக்குறான் அதுதான் ஒரு அதிர்ச்சி வைத்தியாமா இருக்கட்டுமேனு இப்படி பிளான் பண்ணினேன்
சரி அண்ணீ மேற்க்கொண்டு என்ன பண்ணலாம் ? என சரத் கேட்க பொறு சரத் நம்ம ஆட்டத்துக்கு அவன் எப்படி பதில் கொடுக்கறான் பாத்துக்கிட்டு மேற்கொண்டு காய் நகர்த்தலாம் என சொன்னாள் சந்தனா
ஆமா குமார் அங்கிளுக்கு நம்ம திட்டம் தெரியுமா? என ஷியாம் வினவ குலுங்கி குலுங்கி சிரித்தனர் தோழிகள் இருவரும் சகோதரர்கள் இருவரும் முழிக்க சரத் தனா சொல்லிட்டு சிரிச்சா நாங்களும் சேந்து சிரிப்போமில்ல என குறைபட
அது ஒண்ணுமில்ல இந்த திட்டத்தை அப்பாகிட்ட சொன்னபோது அவர் எதுக்கு பொய் நிஜமாவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாமேனு கேட்டாரா? அப்போ சக்தி முகம் போன போக்கை நினைச்சா என சொல்லிவிட்டு சந்தனா சிரிப்பை தொடர அசடு வழிந்த முகத்துடன் சக்தியும் அதில் இணைந்து கொண்டாள்
எல்லாரும் கிளம்பியபின் தன் உளவாளியை அழைத்த சந்தோஷ் நாளைக்காலை தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்கும் படி சொல்லிவிட்டு ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான் காரில் போகும் வழியில் அவள் சக்தியை பற்றியும் ஷியாமை பற்றியும் புகார் சொல்லிக்கொண்டு வர அவளின் பேச்சுக்கு ஊம் கொட்டியபடி வந்தாலும் அவனின் சிந்தனையோ இன்று நடந்த விஷயங்களை சுற்றி சுற்றி வந்தது அவனின் கூரிய அறிவு அங்கு நடந்த நாடகத்தை கண்டு கொண்டது ஆனால் தக்க ஆதாரம் எதுவுமில்லாமல் மேற்கொண்டு எதையும் செய்யமுடியாதவானாக தன் யூகத்தை உரிய முறையில் உறுதி செய்ய நினைத்தே தன் உளவாளியை அழைத்திருந்தான்
அங்கே காரில் சரி ரிஜிஸ்டர் மேரேஜ் திட்டம் நம்ம அப்பா அம்மாவுக்கு இது தெரியுமா ? என சரத் கேட்க அங்கு சிரிப்பு மறைந்து அமைதி தோன்றியது மெல்ல குரல் கொடுத்த சக்தி இப்படி ஒரு பனிப்போர் நடக்கறதே அவங்களுக்கு தெரியாது பெரும்பாலும் சந்தோஷ் அவங்களை சந்திக்க வாய்ப்பு கிடையாது இருந்தாலும் நாம கவனமாதான் இருக்கணும் என சொல்லி முடித்தாள் சக்தி
நான் எதுக்கு இருக்கேன் அவ்வளவு சுலபமா நீங்க நினைச்சபடி நடக்க விட்டுடுவேனா என விதியும் சதிசெய்ய கிளம்பியது இவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் சரி இல்லையென்றால்?
தொடரும்
No comments:
Post a Comment