சதிஷ் உள்ளே ஹாஸ்பெட்டலுக்குள் நுளைய எதிர்லையே வந்தவளை அழைத்தான்..
சாரல் ஒரு நிமிஷம்...
அவனை பார்த்ததும்"இவங்க இங்க இருக்காங்கனா அவங்களும் இங்க தானே இருக்கனும் ஆனா அவள் கேட்கவில்லை.இவன் முன்னயே எப்படி திட்டிருக்கோம் இப்போ போய் கேட்டா நம்ம இமேஜ் தான டேமேஜ் ஆகும்...இவனா எதையாவது அவனைப்பத்தி பேசுறானான்னு பார்ப்போம்."ஆனாலும் மூளை சும்மா அவனையே நினைக்காதே சாரல் உன்னை ஏற்கனவ்வே பணத்துக்கு விலை போற அளவு சீப்பா ஆக்கட்டான்.இன்னும் அவனைப்பத்தி நினைச்சி கவலைப்பட்டுட்டு உன்னை நீயே இளப்பமாக்கிடாதே அவனைப்பத்தி நினைக்காதே எப்படி உன்னை மிரண்டுனான்.உனக்கு ரோசம்மே வாரதா நீ இவ்வளவு தானா என யோசிக்க வைக்க."அதானே என்னை எப்படி மிரட்டுனான் கூடாது அவனைப்பத்தி நினைக்க கூடாது அவனைப்பத்தி கவலைபடவும் கூடாது.எங்கேடும் கெடட்டும் என நினைத்தவள் அவனிடம் "சொல்லுங்க "என்றாள்.....
அவன் இங்க தான் இருக்கான்...என்றதும்மே....
ஆனா நான் தேடுனேனே"என்று விட்டாள் ஆவள் மிகுதியில் தன்னையும் மீறி...
அப்போ அவனை தேடினிங்களா என்றுக்கேட்டப்பிறகு தான் அவனைப்பற்றிய பெரும் ஆவளில் அப்படி கேட்டதை உணர்ந்தவள் நாக்கை கடித்துக்கொண்டாள் இருந்தும் சமாளித்தாள்.....
இல்லை அது வந்து இங்க வந்ததும் என்ன பிரச்சனையின்னு தெரிஞ்சது.அப்பறம் நீங்க இங்க இருக்கவும் அவர் இங்க இருப்பார்ல்ல அதான்...அதான் அப்படி சொண்னேன் என ஒரு வாறு சமாளித்தாள்.ஆனால் அவள் சமாளிக்கிறா என்பது நன்கு தெரிந்தது அவனுக்கு மெதுவாய் புன்னகைத்தவன்....
ஏனோ மனதில் இருந்த நெடுநாள் பாரம் குறைந்ததைப்போன்று இருந்தது அவனுக்கு
சரி நீங்க தேடலதான் ஒத்துக்கிறேன்.ஆனா உங்களால மட்டும்மே செய்யமுடியுற ஒரு ஹெல்ப் இருக்கு செய்ய முடியும்மா என கேட்க்க....
சரி சொல்லுங்க......
அவன் இவங்க எல்லாருக்கும் என்னால்ல தான் இப்படி ஆச்சுன்னு நினைச்சுட்டு சாப்பாடாம்ம இருக்கான்.ஆண்டியும் இல்லை இருந்தாங்கனா கண்டிப்பா அவனை கன்வின்ஸ் பண்ணி தேத்தி இருப்பாங்க நானும் எவ்வளவ்வோ சொல்லி பாத்துட்டேன் சாப்பிடவ்வே மாட்டிங்கிறான் நீங்க சொண்ணா தட்டமா செய்வான்....
அவன் இன்று காலையில மட்டும் தான் சாப்பிடாம இருப்பான் என நினைத்து"நீங்களே சொல்லுங்க அதை நான் வேற சொல்லனும்மா மணியும் ஒன்பது தானே ஆகுது பசிச்சுருக்காது பசிச்சா அவரே சாப்பிடுவார் என வேதாளம் முருங்கை மரம் தாவ......
அவளுக்கு சாமானியத்தில் கோபம் குறையாது என்பது மட்டும் நன்கு தெரிந்தது."இல்லை சாரல் அவன் நேத்து மதியம் சாப்பிட்டது என்றதும்மே பக்கென்று இருந்தும்மே இருந்தது."என்ன நேத்து மதியம் சாப்பிட்டதா இதை ஏன் இதை ஏன் முதலிலையே சொல்லலை."முருங்கை மரம் பொத்தன்று முறிந்து விழுந்தது அதற்க்கு பிறகு சும்மா இருப்பாளா என்ன......மூளையாவது மண்ணாங்கட்டியாவது ஓடு அவன் கிட்ட.....
காரில் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி சிந்தனையில் இருந்தவனின் முகத்தில் கதவை திறந்ததும் பட்ட சூர்ய வெளிச்சத்தில் கண்கள் கூச கண்களை திறவாமலே"நான் தான் சாப்பாடு வேணாம்னு சொல்றேன்லடா போட்டு டார்ச்சர்
பண்ணாதேடா என்றதற்க்கு பதில்."நான் சாரல் என்றக்குரல் கேட்டு ஷாக் அடித்ததைப்போன்று நிமிர்ந்தான் விஜய்......
அங்கு சுத்தம்மாக எதிர் பார்க்கவில்லை போல அவளை ஆ வென அவன் பார்த்துருக்க "அவளோ அலறினாள்"ஐய்யோ ரத்தம் எனஅவனது சட்டையில் இருந்த ரத்தத்தை பார்த்து அவனுக்கு தான் அடிப்பட்டு வந்து விட்டதோ என அலறிக்கத்தி விட்டாள்.அதே வேகத்தில் தன்னை மீறி பதட்டத்தில் காரில் ஏறி அவனது வெகு அருகில் அமர்ந்து விட்டாள்.....
ஐய்யோ ஏன் ரத்தம் அடி ஏதும் பட்டுறுக்கா.."பதட்டத்தில் அவன் என்ன செய்கிறோம் என கூட தெரியாமல் அவனது சட்டையை பரபரவென கலட்டி பார்க்க காயம்மே இல்லையே அப்பறம் எப்படி இவ்ளோ ரத்தம் என அவனிடம் கேட்க்க...
அவனோ அவளது இந்த புது பரிமாணத்தில் அசந்து போய் அமர்ந்துருந்தான்.எனக்காக தான் இந்தக்கவலை எனக்காக தான் பதற்றம் அவள் முகத்தில் எனக்கு ஏதும் ஆயிடுச்சோன்னு ஒரு நடுக்கம் கண்ணெடுக்காமல் பார்த்துருந்தவனை அவளே தான் சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்."உங்களை தான் கேட்குறேன் எப்படி இவ்ளோ ரத்தம் வந்தது எனக்கேட்க்க....
அப்போ தான் சுயநினைவுக்கு வந்தவன்."இது என்னோட ரத்தம் இல்லை சாரல் அவங்களை எல்லாம் தூக்கி ஆம்பூலன்சில் வச்சப்போது பட்டது எனவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது."அப்பாடி என பெரும் மூச்சை வெளிட்ட போது குவிந்த அவளது ஜெர்ரி பழ உதடுகளை கண்களாயே விழுங்கினான்......
ஆனாலும் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது.இந்த ரத்ததிற்க்கு காரணம் நான் மட்டும் தான் என்றவனின் குரலில் தெரிந்த வலியில் கண்களை திறந்தாள்.....
அவனது வருத்த படிந்த முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை.எப்பொழுதும் குதுகலம்மாய் பார்த்த அவனது முகத்தை அவனது குற்ற உணர்வ்வுடன் இருப்பதை அவளால் காணவே முடியவில்லை.எதையாவது சொல்லி அவனை அதிலிருந்து மீட்கனும் என நினைத்தவள்"இதைப்பத்தி எனக்கு முழுசா எதுவும் தெரியாது ஆனாலும் சொல்றேன்.எதாவது நோய் வந்து உடம்பு சுகம் இல்லாதவங்களை எப்படியும் காப்பாத்திபுடலாம் என நினைச்சு ஹாஸ்பெட்டல்,கோவில் என எவ்வளவு எடுத்துக்கு தூக்கிட்டு ஓடி அலையுறோம் ஆனாலும் அதையும் மீறி எவ்வளவு உயிர் போயிடுது இதுல்ல யாரை குறை சொல்றது,கடவுள் மேல குறை சொல்றதா இல்லை,விதியை குறை சொல்றதா,இல்லை டாக்டரை குறை சொல்றதா என்னை பொருத்தவரைக்கும் நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்.எல்லாரும் அவங்ககவுங்க கடமையை சரியா செய்ந்தவங்க தான் ஆனாலும் அதையும் மீறி நமக்கு வர்றதை யாராலையும் தடுக்க முடியாது.அப்படி தான் இவங்களுக்கும் இதல்லாம் நடக்கனும்னு இருக்கு போல அப்படி உங்களால தான் இதல்லாம் நடந்துருக்கு நினைச்சா அவங்களுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க என நீளம்மாய் அழகாய் பேசியவளை கண் இமைக்காமல் பார்த்துருந்தான்.....
இவளால்ல இப்படி நீளமா இவ்வளவு அழகாய் பேசமுடியும்மா.என்னை திட்டுறதுக்கு மட்டும் தான் வாயை திறப்பான்னு நினைச்சா இன்னைக்கு இவ இப்படி இவப்பேச்சால்ல என்னை அசரடுச்சதும் இல்லாம்ம என் மன உறுத்தலையும் எடுத்துட்டு லேசா ஆக்கிட்டா,பொறுப்புகள் இவளை பக்குவ படித்திறுக்கு என நினைத்தவன் அவள் சொண்ணதுக்கு சரி என்றான்....
சாப்பிடலயாம்மே நீங்க எனக்கு வயித்தை காயப்போட்டா பிடிக்காது என சிடுசிடுத்தவளை ஆசையாக பார்த்தான்....
முதலில் இந்த சட்டையை மாத்துங்க என்றவள் அவளிடம் சதிஷ் கொடுத்த சட்டையை கொடுத்தாள்...
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசனையாய் பார்த்தபடி அவள் தந்த சட்டையை மாட்ட போகும் வேளையில் "என்ன பண்ண போறிங்க .....
நீதானே சொண்ண இதைப்போடுன்னு....
அதுக்கு நான் ஒருத்தி இருக்குறது கண்ணு தெரியுல....
அதுக்கு என்ன பண்ண சொல்ற இப்ப.....
இப்படி ஒரு பொண்ணு முன்னால்ல இப்படித்தான் வெக்கம்மே இல்லாம்ம சட்டையை கலட்டிவிங்களா என முகம் சிவக்க கேட்டவளிடம்....
அந்த பொண்ணு என்னோட இருக்க போறா,ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஒரே ரூம்ல இருக்க போறோம்.இப்படி அடிக்கடி எதார்த்தம்மா நிறைய விஷயம் நடக்கும் அதுக்காக இப்படி ஓடி ஒளிய முடியும்மா என விஜய் சொல்ல"கல்யாணம் என்றதும்மே சாரலின் முகம் இறுகியது...
அதை விஜய் கவனித்தான்.நல்லா பேசிட்டு இருந்தவளை மூட்டவுட் பண்ணிட்டேன்.இனி அவ்வளவு சீக்கிரத்துல்ல மலை இறங்க மாட்டா என நினைத்தவனிடம் "நான் வெளியே நிக்கிறேன் நீங்க சட்டையை மாட்டிகிங்க என்றவள் கீழே இறங்கி காரின் கதவை சாத்தி விட்டாள்....
அவளை வெளியே பார்த்தா சதிஷ்."சாப்பிட்டானா என கேட்க்க....
இல்லை இனி தான் என்றாள்..
சட்டையை மாட்டிக்கொண்டவன் கதவை திறந்து"சாரல் என அழைக்க காரினுள் வந்து அமர்ந்தாள்......
சாப்பிடுங்க என்றாள்....
என்னால்ல சாப்பாட முடியாது சாரல்.கையல்லாம் ப்ளட் என்றான்.....
நான் ஊட்டி விட்றேன் என்றதும் அவளை கண்கள் கனியப்பார்த்தான்.ஆனா நான் ப்ரஸ் பண்ணல்ல சாரல்...
ஐய்யோ இது வேறய்யா என சொண்ணவள்"இப்போ ப்ரசு போஸ்டுக்கல்லாம் எங்க போறது நேத்துல்ல இருந்து சாப்பிடல இப்ப மணி பத்தாயிடுச்சு இன்னம் எவ்வளவு நேரம் தான் வயித்தை காயப்போடுவீங்க என கடிந்து கொண்டாள்.....
வெறும் கையால்ல பல்லை தேய்க்கவும் முடியாது.இருங்க பக்கத்துல்ல கடையில ப்ரசும் பேஸ்ட்டும் வாங்கிட்டு வரேன் என சொண்ணவள் கீழே இறங்கி வேகம்மாய் போய் வாங்கி வந்தாள்.தனக்காக எவ்வளவு பார்க்குறா என நினைவ்வே அவ்வளவு இனித்தது.....
சீக்கிரம் ப்ரஸ் பண்ணுங்க எனவும் வேகம்மாய் பல்லை விளக்கினான்.ஆனால் அவனால் சாப்பிட மட்டும் முடியாது அவன் கைகள் முழுதும் ரத்தக்கரை,ஸ்மல்லும் பயங்கரம்மாய் அடித்தது அது அவளுக்கு பழக்கம்மானதாள் எதுவும் தெரியவில்லை.வேறவர்களாக இருந்தாள் கண்டிப்பா வாம்மிட் பண்ணிருப்பார்கள்....
அவனுக்கு ஊட்டியப்படியே பேசினாள்."எனக்கு வயித்தை காயப்போட்டாள் பிடிக்காது என திட்டியப்படியே அவனுக்கு ஊட்டிக்கொண்டுருக்க அவளின் கை வலியாக வந்த சாப்பாடு அமிர்தம்மாய் இருந்தது....
ஆனா இனி இப்படி அடிக்கடி வயித்தை காயப்போடனும் என ஆசையாக இருக்கு சாரல் இப்படி என்னை திட்டிட்டே சாப்பாடு ஊட்டிவில்ல .என் மேல அவ்வளவு அக்கறையா சாரல் உனக்கு.....
அப்படி நீங்க நினைச்சுட்டா நான் பொறுப்பாக முடியாது.கை ரத்தம்மா இருந்ததால நான் ஊட்டி விட்றேன் அவ்வளவு தான்.அதுக்கு நீங்களா கற்பனையை வளர்த்துக்கிட்டா நான் பொறுப்பில்ல அவன் முகம் பாறாமல் வெடுக்கென பதில் சொண்ணாள்.....
அப்படியா அப்பறம் எதுக்கு அம்மணி என் டென்ஷன்ன பார்த்து அவ்வளவு கவலையா நின்னிங்க நான் அங்க இருந்து கிளம்பும் போது ம்ம் புருவத்தை உயர்த்தி அவன் கேட்கக....
எம்டன் அவ்வளவு ப்ரச்சனையிலையும் என்னை கவனிச்சு இருக்கான் என்றவள் அவனை ஒருநிமிடம் அவன் முகத்தை பார்த்தாள்.இந்த முகத்துல்ல அவ்வளவு காதல் தெரியுது.ஆனால் அதை என்னால்ல உணர முடியாம்ம ஏதோ ஒன்னு தடுக்குது...என நினைத்தவள் அவனிடம் " அப்படியெல்லாம் இல்லை என சொல்ல வந்தவளை"போதும் சாரல் என்றவன் அவளிடம் "என் மனசு ரொம்ப கனம்மா இருக்கு சாரல் எனக்கு ரிலாக்ஸ் வேணும் அதை நீதான் கொடுக்கனும் என்றவன் அவளை இழுத்து மார்பில் போட்டுறுந்தான் மறு நொடியில் ...
இதை எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து திமிறி "என்னை பண்றிங்க விடுங்க என்னை யாராவது பார்க்க போறா.....
உள்ள நடக்குறது எதுவும் வெளியே தெரியாது.இப்போ நான் உன்னை என்ன வேணாலும் பண்ணலாம் இப்போ அவளை இறுக்கியப்படி சொண்ணான்....
பல்லைக்கடித்த சாரல் "இப்போ என்னை விட போறிங்களா இல்லையா.....
ம்கும் விட மாட்டேன்."இந்தக்கண்ணு என் மேல் இருந்த காதலை காட்டுது ஆனாஅடுத்த நிமிஷம் அது கண்ணை மூடிட்டி பொய் சொல்லுது.இந்த வாய் இவ்வளவு நேரம் எனக்கு என்ன ஆச்சோன்னு பதறிச்சு கதறுச்சு ஆனா அதே வாய் இப்போ உன் மேல் அக்கறையே இல்லையின்னு பொய் சொல்லுதே இந்த வாயை என்ன பண்ணலாம் ம்ம்.வெகு அருகில் இருந்த சிப்பி கண்களையும் ,ஜெர்ரி பழ, உதட்டையும் எப்பொழுது வேணாலும் என் வசப்படலாம் என்ற பார்வ்வையுடன் வினவினான்....
அப்போதும் சாரல்"அப்படியல்லாம் யார் சொண்ணது நான் உண்மையை தான் சொண்னேன் அவனிடம் இருந்து தன்னை பிய்த்துக்கொள்ள முயன்ற படி பேசினால்.....
இன்னமும் இந்த வாய் பொய் சொல்லுதே இதுக்கு என்ன பனிஷ் மென்ட் கொடுக்கலாம் என்றபடி அவளை உதட்டை எந்த ஆங்கிலில் அட்டாக் பண்ணலாம் என ஸ்கெட்ஞ் போட்ட படி வினவினான் விஜய்.....
அவள் அதற்க்கும் ஏதோ சொல்ல போக...."மறுபடியும் பொய் தான் சொல்லபோற அதற்க்கு முன்னாடி ஏற்கனவ்வே சொண்ண பொய் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லாங் பனிஷ்மென்ட்டை வாங்கிக்கோ" என்றவன் அவளை உதட்டை கவ்வியிருந்தான் எவ்வளவ்வு வேகத்துடன் அவனிடம் இருந்து போராட முயன்றாலோ அந்த அளவு முத்தத்தின் வேகத்தை கூட்டிருந்தான் விஜய்.....
அன்று கொடுத்தது பத்தாது என்பதைப்போல் அவன் முத்தத்தின் நேரத்தைக்கூட்ட அதற்க்கு சாரலும் ஒரு காரணம் அவள் சற்றே இளகி கொடுத்தது தான்.....
சிறுது நேரத்தில் அவளை விடுவிக்க அப்படி ஒரு பெரு மூச்சு இருவருக்கும்.பிறகு அவளிடம் திரும்பியவன் "உனக்கு நான் நல்ல ஷர்ட் போட்டாலே பிடிக்காதா சாரல் பேபிம்மா இப்படியா பண்ணுவ என்றவன் அவளிடம் சட்டையை காமித்தான்.அவள் கையில் இருந்த சாப்பாட்டு கறை முழுதும் அவன் சட்டையில் அப்பிருந்தாள்....
"சதிஷ் இன்னொரு ஷர்ட் எடுத்தா ஆனா அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மேல தாங்காது"என அவளைப்பார்த்து மயக்கத்துடன் புன்னகைத்து கண் சிமிட்டியவனை" மார்பிலையே சட்டு சட்டென்ன அடிக்க ஆரம்பித்துருந்தாள் சாரல்..
No comments:
Post a Comment