This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 12 April 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 22


Click here to get all parts


விஜய் தன் மார்பில் விழுந்த அடிகளை சுகம்மாய் வாங்கி கொண்டுருந்தான்.பிறகு சிரிப்புடன் அவள் கையை பிடித்து நிறுத்தியவனை முகம் சிவக்க பார்த்தாள்.அவளது கோபத்தாள் சிவந்த உதட்டையும் ,கோபத்தில் படப்படத்த கண்களையும் ரசித்தவாறே"சாரல் இந்த அடி எனக்கு பத்தாது இன்னும் வேணும் என்றவனை புரியாமல் பார்த்தவள்"பிறகு தாமதமாய் ஏதோ ஒன்று புரிய வேகம்மாய் கதவை திறக்க போனவளை மறுபடியும் இழுத்து மார்ப்பில் போட்டுருந்தான் அவன்"எங்க போற சொண்ணது புரியல எனக்கு இந்த அடிப்பத்தாது என்றவன் அவள் இதழோடு இதழ் சேர்த்தான்.போனமுறை வேகத்தை கூட்டிருந்தவன் இந்த நிதானமாய் அவளது இதழை சுகமாய் சுகித்தான்.முதல் முத்தம் உதட்டலவ்வே இருக்க இந்த முறை அவளது நாடி நரம்பல்லாம் சில்லிட செய்தது ஆனால் அதை உணரமறுத்தவள் அவனை பலம் கொண்டு தள்ளி விட்டு வாயை மூடிக்கொண்டு கதவை திறந்தவள் வேகம்மாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடினாள்......




அதை போன் பேசிக்கொண்டுருந்த சதிஷ் பார்த்து விட்டு"இந்த பொண்னை காருக்குள்ள வச்சு என்னம்மோ பண்ணிட்டான்.அவனிடம் சென்றவன்"டேய் என்னடா பன்ன அந்த பொண்ண வாயை மூடிட்டு ஓடுது அவங்க உனக்கு சாப்பாடு ஊட்டினாங்களா இல்லை நீ ஊட்டினியா.....




ம்ம் அவள் கையால எனக்கு ஊட்டினா நான் அவளுக்கு என் வாயால ஊட்டினே என சொண்ணவனின் அர்த்தம் தாமதமாய் புரிய "அடப்பாவி நீ சாப்பிடலையின்னு நான் போய் ஹெல்ப் கேட்டு கூட்டி வந்தேன் என் பேரை இப்படி கெடித்திட்டியடா என கடுப்புடன் சொல்ல"விஜய்யோ அசராது "நான் உன் பேருக்கு கோவிலில் பூஜையே பண்ணலாம்னு இருக்கேன் இப்படி ஒரு ஸ்வீட்டான ஸ்விட் காரியத்தை யார் செய்ய முடியும் என் நண்பனை தவிர என சொண்ணவனை சீ நீ மனுஷனே இல்லை என சொல்லி விட்டு சென்றாலும் விஜய்யின் இந்த புத்துணர்வ்வு சதிஷிற்க்கு நிம்மதியை கொடுத்தது....



பிறகு ஒரு முறை அனைவரையும் வந்து பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான் விஜய்.குளித்து விட்டு வர கால் வந்தது விஜய்க்கு அட்டன் செய்தததும் அந்த புறம் கேட்ட குரலில் அவனது உடலும் தாடையும் இறுகியது......





வணக்கம் விஜய் தம்பி எப்படி இருக்காங்க உங்களோட உடன் பிறவா பிறப்புக்கள் என்று நக்கலாக வந்தது வார்த்தை வீ ஆரோடது.....




தனக்குள் நிதானத்தை கொண்டு வந்தவன் அவரிடம்."ம்ம் ரொம்ப நலம் வீ ஆர் சார் நீங்க எறக்குன்ன ஆட்களுக்கு சரியா அடிக்க தெரியல போல ஆனா என்னோட ஆட்களுக்களுக்கு எங்க அடுச்சா என்ன ஆகும்னு தெரியும் அதை கொஞ்ச நேரத்துல்ல தெரிஞ்சுப்பிங்க என்றவனின் அமைதியான கூற்றில் ஏதோ ஒரு பொடி இருப்பது போல் இருந்தது வீ ஆருக்கு......




அப்போ உங்க கால்க்கு "ஐயம் வெயிட்டிங்"என்றவன் போனை வைத்தான்....



அப்பொழுது தான் சதிஷ் காண்டாமிருகம் என சொல்லும் தண்டபானி வந்தான் பதற்றத்துடன் "ஐயா என்றபடி....



என்னாச்சு தண்டா என்றார் பதற்றம்மாய்....


"ஐய்யா ஒரு தப்பு நடந்து போச்சு" தலையை குனிந்த படி பயத்துடன் சொண்ணான்...




"முதல்ல என்னதுன்னு சொல்லுடா...."


அது வந்து நம்ம கட்டடத்துக்கு லோட் ஏத்திட்டு வந்த எட்டு லாரிகளையும் காணோம் என்றதும் தூக்கி வாரிப்போட்டது வீரராகவனுக்கு"என்னடா சொல்ற எப்படி"என பதற....


தெரியலய்யா பைபாஸ்ல தான் எல்லா லாரியும் காணம்ம போயிருக்கு என்றதும் அப்போது அவனின் இன்னொரு கையால் வந்தான்.நம்ம கட்டட வேலைக்கு யாரும்மே வரலயா என்னன்னு தெரியல இன்னொரு இடி தலையில் இறங்கியது.....





இருவரையும் எரித்த வீ ஆர்"என்னடா சொல்றிங்க ரெண்டு பேரும் அந்த இன்ஜினியர் பய்யன் எங்க என கத்த"வந்துட்டேன் சார் என்ற படி அலறி ஓடி வந்தான் அவன்...



ஏன் யாரும் வரலை ....வெறி பிடித்தவராய் கத்தினார் வீ ஆர்....



தெரியலை சார் நானும் ரொம்ப நேரம் வெயிட் பண்னேன் யாரும் வரலை அதான் இன்பார்ம் பன்னேன் என பம்ம....



அவங்களை எல்லாம் வேலைக்கு கூட்டிட்டு வந்த அந்த இன்ஜார்ஞ் காளியப்பனுக்கு போன போடு என...



நான் போன் பண்னேன் சார் போன் ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருது... .



டேய் பொருள் இல்லாம்ம ஆள் இல்லாம்ம எப்படிடா நான் வேளையை முடிப்பேன்.பில்டிங்க நான் இன்னும் கொஞ்ச நாள்ல முடிச்சாகனும்டா......



எப்படிங்கயா ஒரே நேரத்தில யாரலையா இப்படி நமக்கு ரெண்டு  பிரச்சனைய்யை கொடுக்க முடியும்..




"முடியும் விஜய்" அவனால்ல மட்டும் தான் அடுத்த நொடி அவனுக்கு போன் பண்ணிருந்தார்...



அவன் எதிர் பார்த்தது தானே "என்ன வீ ஆர் சார் என்ன சொண்ணான் அந்த காண்டாமிருகம்.எட்டு லாரியையும் ஹய்வ்வே முழிங்கிடுச்சுன்னு சொண்ணான்னா அவனது பேச்சு அவரை கொலவெறி ஆக்க....



விஜய் எங்கிட்ட விளையாடதே "உறுமினார் வீ ஆர்....




என்ன வீ ஆர் சார் விளையாட்டை ஆரம்பிச்சது நீங்க முடிக்க வேண்டியது நான் அதை முழுசா செய்யவேண்டாம்மா...படு கூலாக பதில் சொண்ணான் விஜய்.....




விஜய் இந்த வீ ஆரோட மோத நினைக்காத தாங்க மாட்ட சின்ன பய்யன்டா நீ ......



வீ ஆர் சார் சொண்ணா சரியா தான் இருக்கும் நான் சின்ன பய்யன் நீங்க பெரியவங்க"பெரியவங்ககிட்ட தான்னே இந்த சின்ன பசங்கள்ளா நல்ல விஷயங்களை கத்துக்க முடியும்.நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை கத்துக்கிட்டேன் அதை உங்க கிட்டயே காமித்தாள் தானே சிஷ்யனா எனக்கும் குருவ்வா உங்களுக்கும் பெருமை "பொய்யாய் புகழ்ந்தான் விஜய்....



அப்பறம் பேச வேண்டியதையே மறந்துட்டேன் பாருங்க "லோட் லாரி எல்லாத்தையும் ஹய்வ்வே முழுங்கிடுச்சு,லேபர்ஸ் எல்லாரையும் இன்ஜார்ஞ் காணாமல் ஆக்கிட்டான் இப்போ எப்படி முடிப்பிங்க""இல்ல அதர் ஸ்டேட்ல்ல இருந்து ஆட்களை இரக்க போறிங்களா இரக்குங்க அவனுங்களுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் .....



அப்பறம் இன்னொரு விஷயம்"இந்த முறை லாரி தான்னே காணாமல் போச்சு அடுத்த முறை நீங்களே காணம்மா போயிடுவிங்க என அமைதியாய் சொல்ல ஆக்ரோஷம்மாய் கத்தினார் வீ ஆர்"விஜய்".....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.