This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday 2 April 2019

Uma maheshwari's இணைந்து வாழ்வோம் (லிவ் இன்) 1


Click here to get all parts


"பொண்ணுனா அடக்கம் வேணும் அகம்பாவம் இருக்கக்கூடாது" என்று சூப்பர் ஸ்டார் டிவியில் டயலாக் பேசிக் கொண்டு இருக்க அதன் வால்யூமைக் குறைத்துவிட்டு இங்கே விமலாவும் மல்லிகாவும் தங்கள் குரலின் வால்யூமை அதிகரித்து பேசத் தொடங்கினர்..


"அக்கா உங்களுக்கு தெரியுமா பக்கத்துவீட்டு மஞ்சுளா பொண்ணு இருக்கா இல்லை... அவள் புருஷன் கிட்டே கோச்சிக்கிட்டு வீட்டுக்கே வந்து உட்கார்ந்துட்டாளாம்.."


"நம்ம காலத்துலலாம் புருஷனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவோமா.. இப்போலாம் புருஷனையே ஓட ஓட அடிக்கிறாளுங்க.. புருஷன் பேச்சைக் கேட்குறது தானே பொண்டாட்டிக்கு லட்சணம்.. இந்த காலம் ரொம்ப கெட்டுப் போச்சு டி.."


" ஆமாம் கா.. விமலா புருஷன்லாம் டெய்லி குடிச்சுட்டு வந்து அவளை போட்டு புரட்டி எடுப்பான்.. ஆனாலும் அவள் அவனைப் பொறுத்துக்கிட்டு ரெண்டு குழந்தைகளைப் பெத்து அதுங்களைக் கட்டிக் கொடுத்து கௌரவமா வாழல.. ஆனால் இந்த மஞ்சுளா பொண்ணும் தான் இருக்காளே... புருஷன் வாரத்துக்கு ஒரு முறை குடிச்சுட்டு வரதை கூட அவளாலே பொறுத்துக்க முடியல.. பொண்ணுன்னா கொஞ்சமாவது சகிப்புத்தன்மை வேணாமா?.. நாமலாம் அந்த காலத்துல புருஷனைக் கண்டா எப்படி பயப்படுவோம்.. ஆனால் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எங்கே இருந்து தைரியம் வருதோ.."


" எல்லாம் படிக்கிற தைரியம் தான் டி... இவங்களுக்கு எல்லாம் பதினேழு வயசிலேயே கல்யாணம் பண்ணி வீட்டிலேயே உட்கார வெச்சு இருக்ணும்"


" அதே தான் கா.. சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சா.. நம்ம தலையில இருக்கிற பாரமும் குறையும்.. இல்லை இதுங்க எப்போ யாரையாவது கூட்டிட்டு வந்து நிக்க போதுங்களோனு வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.."


" அதான் கமலா நானும் என் புருஷன் கிட்டே சொன்னான்... ஆனால் அந்த மனுஷன் கேட்டா தானே.. என் பொண்ணை நான் படிக்க வைப்பேனு சண்டை போட்டு இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து விட்டுட்டாரு.. இப்போ சென்னையில வேலை கிடைச்சிருக்கு போணும்னு அவள் அடம்பிடிச்சா அவரும் சரினு சொல்லிட்டாரு... எங்கே அந்த மனுஷன் என் பேச்சை கேட்டா தானே.. பொண்டாட்டி பேச்சை எங்கே இந்த காலத்து புருஷங்க கேக்குறாங்க " என குறைப்பட்டாள் மல்லிகா.. 


உள் அறையில் அமர்ந்து கம்ப்யூட்டரில் தன் இரு கரு விழிகளை பதித்தபடி நெற்றியில் புரண்டு கொண்டு இருந்த முடியை விலக்கியவாறு தன் பட்டுப் போன்ற இதழ்களில் பட்டும் படாமலும் இருந்த பெண்ணை பிடித்த படி வேலை செய்து கொண்டு இருந்த தியா காதுகளில் ஹாலில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்த இவர்களின் பேச்சு வந்து விழுந்தது..


அவ்வளவு தான் தனது கூந்தலை வாரி சுருட்டி கிளிப் போட்டுக் கொண்டு மணிக் கட்டு வரை நீண்டு இருந்த குர்தாவின் கையை முடுக்கிக் கொண்டு தயாராக சண்டைக்கு எழுந்து வந்த அந்த நேரத்தில் தான் தன் தாயின் கடைசி வார்த்தை காதுகளில் விழுந்தது.. அது வரைக் கோபத்தில் அழுந்த பற்றி இருந்த அவளது உதடுகள் தானாக மலர்ந்து சிரித்து விட்டது..


" அட என்ன இது.. இவங்க தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புருஷன் பேச்சைக் கேட்குறது தான் பொண்டாட்டிக்கு லட்சணம்னு சொன்னாங்க.. ஆனால் இப்ப என்னவோ புருஷன் எங்கே இப்போலாம் பொண்டிட்டி பேச்சை கேட்குறானு சலிச்சிக்கிறாங்க.. இந்த மம்மிக்கு என்ன தான் வேணும் புருஷன் பேச்சை பொண்டாட்டி கேட்கணுமா.. இல்லாட்டி பொண்டாட்டி பேச்சை புருஷன் கேட்கணுமா.. இவங்களே தெளிவான சிந்தனை இல்லாத அப்போ அந்த பாழாப் போன சிந்தனையை ஏன் எங்கே மேலே திணிக்கப் பார்க்குறாங்க.." என அவள் கதவில் சாய்ந்து யோசித்துக் கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டு கமலா ஆண்டி மீண்டும் பேசத் தொடங்கினாள்...


" இந்த காலத்து பசங்க எல்லாம் எதிர்த்து எதிர்த்து பேசுதுங்க.. நாம ஏதாவது சொன்னா நம்மளையே எதிர்த்து கேள்வி கேட்குறாங்க... நீங்க சொல்றது தப்புனு நம்ம கிட்டேயே சொல்றாங்க.. நாமலாம் அந்த காலத்துல எது சொன்னாலும் எப்படி எதிர் கேள்வி கேட்காம அழகா கேட்டுக்கிட்டு நடந்தோம்.. ஆனால் இந்த காலத்துலயும் இருக்குதுங்களே.. எது சொன்னாலும் சரினு கேட்டுக்குறது இல்லை.. ஏன் எதுக்கு எப்படினு கேள்வி கேட்குதுங்க.. இதுங்கலாம் எங்கே உருப்பட போகுதுங்களோ.


போற இடத்துல மாமியாரு கிட்டே நல்லா வாங்கும் போது தான் தெரியும்.. ஏன் சொன்னாங்கனு" என கமலா பேச இதுவரை மூடியிருந்த தியாவின் வாய்க்கதவு தானாக திறந்து கொண்டது...


" ஆன்டி உங்களுக்கு பிறந்த குழந்தை மனுஷி தானே"


" ஆமாம் ஏன் கேட்குற தியா"


" இல்லை ஆண்டி நான் ஏதோ உங்கள் கன்ட்ரோலயே இருக்குற எலக்ட்ரானிக் ஐட்டமோ இல்லை.. zooல டிக்டேட்டர் சொல்றதை மறுபேச்சு பேசாம கேட்குற விலங்கோனு நினைச்சுட்டேன்.. ஏன்னா அதுக்களுக்கு தான் பகுத்தறிவுன்ற ஒன்னு இல்லை.. சொல்றதுல நல்லது எது கெட்டது எதுனு ஆராய்ந்து பார்க்காம அப்படியே கேட்டு நடந்துக்கும்.. நீங்க இதே மாதிரி தான் உங்கள் பொண்ணு இருக்கணும்னு சொன்னீங்களா.. அதான் எனக்கு லைட்டா டவுட் வந்துருச்சு நீங்க ஒரு மனுஷியை பெத்திங்களா இல்லை.. இல்லை ரோபாவை பெத்திங்களானு க்ளியர் பண்ணிக்க கேட்டேன்" என அவள் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு உதட்டை சிரிக்கிறேன் என்ற பேரில் நீட்டிக் காட்ட கோபமாக எழுந்துக் கொண்டார் கமலா..


" அக்கா நான் அப்புறமா வரேன்" என சொல்லிக் கொண்டு திரும்பி செல்ல முற்படும் பொழுது மீண்டும் தியாவின் குரல் குறுக்கிட்டது..


" ஆண்டி நான் அங்கிள் கிட்டே சொல்றேன்... உங்களை ஏதாவது வேலைக்கு அனுப்ப சொல்லி.. அப்போ தான் அடுத்தவங்க வீட்டுக்கு வந்து நாலு பேரு கதையை பேசுறதுக்கு நேரம் இல்லாம தன்னோட வேலையைப் பார்க்க தோணும்.. வேலை வெட்டி இல்லைனா இப்படி தான் குரூப் போட்டு வெட்டிப் பேச்சு பேசிட்டு இருப்பீங்க.. " என இவள் சொல்ல அவர் முறைத்துக் கொண்டே தன் முகவாயை தோளுக்கு கொண்டு வந்து ஒழுங்கு காட்டிவிட்டு போக இவளும் ஒழுங்குக் காட்டினாள்...


அவர் செல்வதையே திருப்தியாக பார்த்து புன்னகைத்தவள் இந்த பக்கம் திரும்ப மல்லிகாவின் விழகளில் கோப தண்டாவம் ஆடியது.. 


" ஹே என்னடி பேச்சு பேசுற.. நீ இப்படி பேசுறதைப் பார்த்தா நாலு பேர் உன்னை பத்தி என்ன பேசுவாங்க" என கத்த


" அம்மா நீங்க ஏன் நாலு பேரு பேசுறதைப் பார்த்து கவலைப்படுறீங்க.. ஏன்னா நீங்களும் அப்படி பேசுற அந்த நாலு பேருல ஒருத்தர் தானே.. நம்ம மத்தவங்களல பத்தி பேசுறா மாதிரி நம்மள மத்தவங்களும் நம்மளப் பத்தி பேசிடுவாங்களோன்ற பயம்... எதுக்கு இதெல்லாம்னு கேட்குறேன்... நாலு பேருல ஒருத்தரான நீங்க பேசுறதை குறைச்சு பாருங்க.. மத்த மூணு பேரு வாயும் கூடிய சீக்கிரத்துல மூட ஆரம்பிச்சுடும்... நம்ம உண்டு நம்ம வேலை உண்டுனு இருந்தா ஊரு வாய்க்கு பயப்பட வேணாம்.. அதனாலே எனக்கு எந்த பயமும் இல்லை.. நீங்களும் கொஞ்சம் உங்க வேலையைப் பாருங்க.. கொஞ்ச நாளிலே உங்களுக்கும் பயம் போயிடும்.." என சொல்ல மல்லிகா ஏதோ பேச வாயைத் திறக்கும் முன்னரே கையெடுத்துக் கும்பிட்டாள்...


" மம்மி எனக்கு இப்போ உன் லச்சரை கேட்க டைம் இல்லை.. எப்படி இந்த society க்கு ஏத்தா மாதிரி இருக்கணும்னு அப்புறமா ரூல் புக்ஸ்ல இருந்து ரூல்ஸை சொல்லு மா... இப்போ நான் என் ரூம்க்கு போறேன்" என முழங்கை வரை நீண்டு இருந்த இன்னொரு கையையும் மடக்கி விட்டபடி நடந்து போனாள் தியா, ஹீரோ என்ட்ரிக்கு கொடுக்கும் பி. ஜி. எம் மை ரசித்தபடி.. 


நமக்கு நாமே

ஏற்படுத்திக் கொள்ளும்

சிறை நாலு பேர்

நம்மளைப் பார்ப்பார்களே

என்பது தான்...

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.