அந்த மரத்தின் அடியில் விழுந்த வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் இருந்த மலரை எடுத்து ரசித்தபடி " வீட்டுக்கு எவ்வளவு ரெண்ட்" என்றாள்..
" 1000 ரெண்ட்.. வீடு தாம்பரத்தில இருக்கு.." என்று அவன் சொல்ல அப்பாடா என இருந்தது இவளுக்கு ஏனென்றால் அவளுடைய அலுவலகமும் தாம்பரம் தான்..
மகிழ்ச்சியாக முறுவலித்தவள் " செம என் ஆபிஸ்ஸும் கிட்டே தான்.. எனக்கு ஓ.கே.. எதுக்கும் வீட்டைப் பார்த்துட்டு பணம் தரேன்.. ஏன்னா ரெண்ட் ரொம்ப கம்மியா இருக்குனா.. வீடும் குட்டியா தானே இருக்கும்.. பார்த்துட்டு டிசைட் பண்றேன்.. அப்புறம் சாப்பாடுக்கும் சேர்த்து காசு தந்துடறேன்.. எவ்வளவுனு சொல்லு?"
" உஷாரா இருக்காங்களாமா... எல்லாத்துக்கும் சேர்த்தே 1000 கொடுத்தா போதும்... வீடு பெரிசு தான்.. நீ கவலைப்பட வேணாம்.. இப்பவே கீர்த்தி வீட்டுக்கு போய் லக்கேஜ் எடுத்துட்டு தாம்பரம் போயிடலாம்" என சொல்ல அவளும் சரியென தலையசைத்தாள்..
மரத்துக்கு பின்னாடி கைவிட்டு அங்கே இருந்த அவனது பையை எடுத்து அதில் கேமராவை வைத்துவிட்டு போகலாம் என சொல்லி தலையசைக்க இவளும் அவளது கைப்பையை மாட்டிக் கொண்டு அவனுடன் நடந்தாள்..
" ஆமாம்.. நீ ஏன் அந்த மரத்துல குரங்கு மாறி ஏறி உட்கார்ந்துட்டு இருந்த" என தியா கேட்க " ம் மேல ஏதாவது பழம் சாப்பிட கிடைக்குமானு பார்த்தேன்.. கீழே ஒரு மந்தி அதான் ஒரு பெண் குரங்கு உர்ருனு உட்கார்ந்துட்டு இருந்துதா.. பாவம் பசிக்குதோனு நினைச்சி மரம் ஏறுனேன்"
" என்ன கொழுப்பா.. என்னைப் பார்த்தா குரங்கு மாதிரியா தெரியுது.. "
" அப்போ என்னைப் பார்த்தா மட்டும் அப்படியா தெரியுது.."
" பார்த்தா தெரியல.. பட் பழகுனா தெரிஞ்சுடும்" என இப்படி ஒருவர் மானத்தை மற்றொருவர் வாங்கியபடியே பூங்காவின் வாயிலுக்கு வந்தனர்...
ஒரு சிறு பெண் இவளையே பார்த்துக் கொண்டு இருக்க அந்த குழந்தையின் பக்கத்தில் சென்றவள் " ஓய் இளவரசி என்னை ஏன் இப்படி பார்க்குறீங்க?" என புன்னையுடன் கேட்டாள் தியா..
"யக்கா என்னையா இளவரசினு சொன்னீங்க.. நானே உங்க வெள்ளைத் தோலை பார்த்து பிடிச்சு போய் தான் ஆனு பார்த்துட்டு இருந்தேன்.. நீங்க என்னடானா என்னை இளவரசின்றீங்க.. உங்களை மாதிரி கலரா அழகா ஆக என்ன சோப்பு போடணும் கா?" என சுண்டல் கூடையை கையில் வைத்தபடி கருநிறம் தீட்டப்பட்ட ஓவியமாய் இருந்த அந்த சிறுமி கேட்டுக் கொண்டு இருந்தாள்..
அந்த குழந்தையின் அருகே மண்டியிட்ட தியா " ஓய் நான் கேக்க நினைச்சதை நீ என்ன எனக்கு முன்னாடி கேக்குற.. நீ தான் ரொம்ப அழகா இருக்கே.. அதுவும் இந்த சிரிப்பு இருக்கு பாரு.. ஆளை அசத்துற போ" என இவள் சொல்ல வெட்கப்பட்டு கீழே குனிந்தாள் அந்த சிறுமி....
" அக்கா உண்மையாவா சொல்லுறீங்க.. நான் என்ன அழகாவா இருக்கேன். இந்த கிழிஞ்ச பாவடை போட்டுக்கிட்டு பவுடர் கூட அடிக்காம இருக்கிற என்னைப் போய் அழகுன்றீங்க " என அழகாய் அவள் சிணுங்க தியாவோ புருவம் மேலேற்றி அவளை அழகாக ரசித்தாள்..
ஏற்கெனவே கையில் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுக்க வேண்டுமென கேமராவை வெளியில் எடுத்தவன் அந்த அழகான காட்சியை பார்த்த அடுத்த நொடியே அதை கேமரா மெரியிலும் தன் மூளையிலும் பதிவு செய்து கொண்டான்..
எடுத்த அந்த படத்தை திருப்தியாகப் பார்த்தவன் சிறுமியிடம் காட்டி "பார்த்தீயா எவ்வளவு அழகா இருக்கே நீ.." என சிரிப்புடன் சொல்ல அவள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்..
" அண்ணா என்னன்னா இந்த கேமரா என்னை இவ்வளவு அழகா காமிக்குது.. "
" கேமரா அழகா காட்டல நீ அழகா இருக்குறதுனாலே தான் கேமரா அப்படியே உன் அழகை காட்டுது" என அவளது கண்ணத்தை தட்டி சொல்ல " அப்படின்றீங்க அண்ணா" என மீண்டும் சந்தேகம் தீராமல் பார்த்த சிறுமியை பார்த்து சிரித்தவன் ஆம் என தலையசைத்தான்...
மரத்துக்கடியில் வண்ணப் பூக்களை அழகாக ரசித்தவள் வண்ணம் தீட்டப்படாத இந்த எழாலோவியத்தை ரசித்ததைப் பார்த்து ம்ம்ம்ம் வித்தியாசமானவள் தான் என புன்னகைத்துக் கொண்டு இருந்த தியாவைப் பார்த்து மனதினுள் நினைத்துக் கொண்டான்..
அந்ந சிறுமி மொத்த சந்தோஷத்தோடு புன்னகைக்க, தியா அவளின் அருகே சென்று சிறுமியின் தந்தை தொலைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டாள்.. இருவரும் அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு கீர்த்தி வீட்டிற்கு சென்று எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு தாம்பரத்தில் இருந்த அவனின் வீட்டுக்கு வந்தனர்..
கேட்டைத் திறந்து அவன் முன்னே செல்ல
மலர் அரசிகளின் இடையே மயக்கும் அழகோடு இருந்த அந்த வீட்டைக் கண்டு பிரமிப்பில் இவள் அவன் பின்னாடியே வீட்டிற்குள் போனாள்.. இப்படி 5star hotel மாதிரி இருக்குற இந்த வீட்டுக்கு வெறும் 1000 தான் வாடகையா?.. நாமளே மேலே போட்டு கொடுத்துடுவோமா என அந்த பிரம்மாண்ட வீட்டை சுற்றி பார்த்தவாறு திரும்ப கையில் இரண்டு கப் காப்பி கோப்பையுடன் வந்தான் அவன்.. " நீ அந்தப் பக்கம் ரூமை எடுத்துக்கோ நான் இந்த பக்கம் ரூமை எடுத்துக்கிறேன்.." என்று சொல்லியவன் அவளுக்கருகில் சோபாவில் அமர்ந்தான்..
"நோ எனக்கு லெப்ட் சைட் ரூம் தான் பிடிச்சு இருக்கு.. எனக்கு அதான் வேணும்..." என இவள் அடம்பிடிக்க அவன் தர மாட்டேன் என ஒற்றைக் காலில் நிற்க தியாவே ரைட் சைட் ரூமை எடுத்துக்கிறேன் என வழிக்கு வந்தாள்...
" அப்படி வா வழிக்கு " என அவன் புன்னகையோடு சொல்ல இவள் கோபமாக முறைத்தாள்.. "மூஞ்சை அப்படி வைக்காத சகிக்கல... " என சொல்லியவாறே இவன் காப்பி கப்பை கொடுக்க எத்தனித்தான்... அதுவரை இருந்த கோபம் காப்பியை பார்த்தவுடன் மறந்து போய்விட புன்னகையுடன் "தேங்க்ஸ். மிஸ்டர்....." என சொல்ல ஆரம்பித்தவள் பாதியிலேயே திக்கினாள்... அடடா இன்னும் நாம இவன் கிட்டே பேரை கூட கேட்கவில்லையே என மண்டையில் தட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்...
" ஆமாம் உன் பேரு என்ன ?"
" வெல் இப்பவாவது கேட்கனும்னு தோணுச்சே.. ஐ யம் அர்ஜீன்.."
" ஹலோ நீயும் தான் என் பேர் கேட்கல"
" நான் கேட்கல தான்... ஆனால் எனக்கு தெரியும்.. கீர்த்தி போன்ல பேசும் போது சொன்னா.. தியா தானே உன் பேர்" என கேட்க " ஓ" என உதடுகளைக் குவித்தவள் ஆமாம் என தலையசைத்தாள்...
அவளை நேராக நோக்கி
" நீ மத்தவங்களுக்கு வேணா தியாவா இரு.. எனக்கு நீ எப்போதும் மந்தி தான்... " என சொல்லிவிட்டு அவன் குறும்பாய் சிரிக்க இவள் வேகமாய் செல்போனை எடுத்து ஏதோ செய்துக் கொண்டு இருந்தாள்..
" ஹே நான் எவ்வளவு நேரம் இப்படி காப்பி கப்பை பிடிச்சுட்டு நிற்பேன்.. "
" ஒன் மினிட்.. ஆங்ங்ங் கிடைச்சிருச்சு.. நீ மத்தவங்களுக்கு வேணா அர்ஜீனா இருந்துட்டு போ... ஆனால் எனக்கு நீ கடுவன் தான்" என சொல்ல மீண்டும் வாய்விட்டு சிரித்தான்.. ம் ஆளு சிரிக்கும் போது செம ஸ்மார்டா தான் இருக்கான் என மனதினுள் பேசியவாறே இவனை மெய் மறந்து பார்த்தாள்..
"ஆண் குரங்குக்கு என்ன பேருனு தான் போன்ல தேடுனியா.. இதை என் கிட்டே கேட்டு இருந்தா நானே சொல்லி இருப்பேன்ல.." என சிரித்தபடி காப்பி கப்பை மீண்டும் நீட்ட அவளும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்..
" ஹேவ் எ சியர்ஸ் லிவ் இன் பார்ட்னர் மந்தி " என அவன் கப்பை தூக்க இவளும் " சியர்ஸ் மை லிவ் இன் பார்ட்னர் கடுவன் " என கப்பை நீட்டினாள்.. அந்த நிமிடங்களை ரசித்த படி இருவரும் காப்பியை சுவைத்தனர்.
No comments:
Post a Comment