This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday 20 April 2019

Uma maheshwari's இணைந்து வாழ்வோம் (லிவ் இன்) 6


Click here to get all parts


" ஏந்திரி அஞ்சலி ஏந்திரி.. ஏந்தரி.. ஏந்தரி அஞ்சலி ஏந்திரு.." என்று் அவளது அலாரம் டோன் நான்காவது முறையாக ஒலிக்க அர்ஜீன் கோபத்துடன் உள்ளே வந்து " தியா எழுந்திரு டி டைம் ஆகுது.." என்று கத்தினான்... 


ஆனால் அவள் அசைந்தால் தானே இவன் பொறுமையிழந்து தலையணையை அவள் மீது தூக்கி எறிந்தான்... என்ன இது ஏதோ ஒன்னு என் மேலே இவ்வளவு soft ஆ மோதுச்சே.. கடுவனோட கை மாதிரியே என தூக்கக்கலக்கத்திலே யோசித்தவள் மீண்டும் புரண்டு படுத்து  தூங்க ஆரம்பித்தாள்... இவன் கடுப்பாகி அருகில் இருந்த தலையணையை எடுத்து அவள் முகத்தை மூட அவள் மூச்சு முட்டி படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.. 


" மவளே ஒன்னு அலாரம் வைக்காதே.. இல்லை அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எழுந்திரு.. இல்லாட்டி டெய்லி உன்னை இப்படி தான் எழுப்ப வேண்டியதா இருக்கும்"


" அப்படினா நீ கூடிய சீக்கிரத்திலேயே கொலை கேஸ்ல போய்டுவே.. காலங்காத்தால இப்படியா எழுப்புவாங்க.. கொலை காரா...  என் கராத்தே கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் யூஸ் ஆகும்னு நினைச்சேன்.. ஆனால் வந்த அடுத்த நாளுக்கே யூஸ் ஆகும்னு நினைக்கல.. " என அவள் சண்டை போடாவதற்கு தயாராக 

பக்கத்தில் இருந்த கடிகாரம் காட்டிய மணியைப் பார்த்தவுடன்  பதறியடித்த படி பாத்ரூமுக்குள் ஓடினாள்... 


அவள் ஓடிப் போவதை சிரித்தபடி பார்த்தவன் அறையை விட்டு வெளியே வந்து சமையல் கட்டுக்குள் நுழைந்தான்... அவள் அலுவலகத்திற்கு தயாராகி விட்டு அறையில் இருந்து வெளியே வர அவன் புருவங்கள் வியப்பால் மேல் எழும்பியது..


" பரவாயில்லையே இப்படி டக்குனு ரெடி ஆகிட்டே.. நான் என்ன நினைச்சேனா  நீ வெளியே வரதுக்கு ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும்னு.. பட் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே.. இட்ஸ் மெடிக்கல் மிராக்கில்... அதிகமாலாம்  மேக் அப் போட மாட்டியா?"


" யாருக்காக மேக் அப் போடணும்.. பசங்களை திரும்பி பார்க்க வைக்குறதுக்காகவா.. இல்லை நாலு பேர் நம்மளை திரும்பி பார்க்கணும்ன்றதுக்காகவா.. அவங்களை திரும்பி பார்க்க வைக்க அழகை தான் ஆயுதமா உபயோகிக்கணும்னு இல்லை.. குணத்தையும் உபயோகிக்கலாம்"


" i accept ur view point... ஆமாம்  இப்படியே பிரசன்னம் பண்ணிட்டே இருந்தா ஆபிஸ்க்கு லேட்டா தான் போவ மந்தி...சோ ஈவினிங் வந்து மீதியை கன்டினியூ பண்ணு"


" ஹையோ ஆமாம்ல.. பேச ஆரம்பிச்சா இப்படி தான் பேசிட்டே இருப்பேன்.... ஓகே ஓகே நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன் பாய்..."  என அவள் கிளம்ப எத்தனிக்க அவள் தோளைப் பற்றி டைனிங் டேபிளில் உட்கார வைத்தான்... " இரு சாப்பிட்டு போ." என்றவன் சமையல் கட்டுக்குள் நுழைந்து ஓட்ஸ் கொண்டு வந்தான்.. கையோடே அவளுக்கு டிபன் பாக்ஸை கொண்டு வர அவள் ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்..


" என்ன கடுவா? இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றியா? இதுக்குலாம் நான் மசிய மாட்டேன் " என சாப்பிட்டபடியே கேட்க "நான் அடையார்ல இருக்கும் போதே அசோக்கும் சேர்த்து நான் தான் சமைப்பேன்.. குக்கிங் என்னோட hobby....  ஆமாம் உன் மூஞ்சை இம்ப்ரெஸ் பண்றது தான் ஒரு குறை... உன்னை இம்ப்ரெஸ் பண்ண நான் ஏன் இதெல்லாம் பண்ணனும் பேபி.... அதான் நீ ஆல்ரெடி என் கிட்டே இம்ப்ரஸ் ஆகிட்டியே" என்றான் அவன்...


" ஓய் இதென்ன சரியான ரீலா இருக்கு.. நான் எங்க உன் கிட்டே இம்ப்ரஸ் ஆனேன்.. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேணாம்.. "


" ஹலோ பொய் சொல்றது நானா நீயா.. உனக்கு என்னை பிடிச்சு இருந்ததை நான் உன் கண்ணுல பார்த்தேன்.. நமக்கு பிடிச்சவங்களைப் பார்க்கும் போது நம்ம கண்ணோட pupil  அதான் கண்மணி பெருசாகும்.. உன்னோட கண்மணி பெருசாகி உன்னைக் போட்டு  கொடுத்துடுச்சு மந்தி..  நான் உன்னைப் பிடிச்ச அப்போ நீ கோபமே படல.. அப்படியே பிரம்மை பிடிச்சா மாதிரி நின்ன... உன் கண்மணியும் பெருசாகி என்னையே பார்த்துது.. இப்போ சொல்லு உண்மையா என்னை பிடிக்கல.."


" ஓ.கே ஓ.கே ஒத்துக்குறேன்.. பிடிச்சு தான் இருந்தது போதுமா... யப்பா இனி நான் உண்மையையே பேசிடுறேன்.. இல்லாட்டி நீ என்னை பேசியே டார்ச்சர் பண்ற..  பேசாம நீ சேல்ஸ்மேனா ஆக ட்ரை பண்ணுங்க.. "


" என்ன கொழுப்பா.. டிபன் பாக்ஸை திருப்பி கொடு டி.. வெளியே போயே கொட்டிக்கோ"


" ம் யெஸ்.. உடம்புல தான் கொழுப்பு சேரலயே.. அதான் வாயிலயாவது கொழுப்பை சேர்த்துக்கலாம்னு தான்..  கோபத்தைப் பாரு.. அதெல்லாம் தர முடியாது.. எனக்கு சோறு தான் முக்கியம்.."


" அடிங்க" என இவன் டிபன் பாக்ஸை பிடுங்க வர தியா லன்ச் பாக்ஸை பேக்கில் போட்டுக் கொண்டு காற்றில் பறக்கும் வெற்று காகிதத்தைப் போல அந்த இடத்தைவிட்டே காலி செய்து ஓடிவிட்டாள்..


இரவு ஏழு மணிக்கு வீட்டிற்குள் அவள் நுழைய தோட்டத்தில் நின்று  பூக்களை ரசித்துக் கொண்டு இருந்த அர்ஜீனைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்... உள்ளே சென்று உடலையும் மனதையும் புத்துணர்வாக்கிக் கொண்டு அவளும் தோட்டத்திற்கு வந்து அவன் அருகே சென்று அமர்ந்தாள்...  தியாவைப் பார்த்து இவன் மெல்லிதாய் புன்னகைத்தான்..


" உன் கிட்டே கொஞ்சம் பேசணும் அர்ஜீன்.."


" சாரி. மிஸ். தியா.. எனக்கு இப்போ டைம் இல்லை... நான் உங்களுக்கு நாளைக்கு அப்பாயின்மென்ட் தரேன்..   "


" என்ன கொழுப்பா?.. வெட்டியா தானே இருக்கே.. அப்புறம் எதுக்கு சீனை போடுற.."


" அதான் உனக்கே தெரியதுல..  என்ன கேட்கணுமோ கேளு டி.. இப்படி பர்மிஷன்லாம் கேட்கணும்னு அவசியம் இல்லை.. "


" ஓ.கே கடுவா.. ஆமாம் நீ எந்த கம்பெனில வேலை செய்யுற?"


" நான் இப்போதைக்கு என்  மனசுக்கு நானே  கம்பனி கொடுத்துட்டு இருக்கேன்.. தனியா கம்பெனில வேலை செய்யல. ரைட்டர் ஆகணும்ன்றது என்னோட ஆசை.. போட்டோகிராப்பி யும் பிடிக்கும்"..


" ஓ சூப்பர்... எப்படி வெட்டியா இருக்கேன்றதை இவ்வளவு ஸ்டைலா சொல்ற... சரி சரி மொறைக்காத.. ஆமாம்  எழுத ஸ்டார்ட் பண்ணிட்டியா?.. உன் ஸ்டோரி எதை பேஸ் பண்ணி எழுதப் போற கடுவா?"


" ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. என் கதையோட முதல் எழுத்து  காகிதத்தில ஒரு நாளுக்கு முன்னாடி தான் பிறந்தது.. இன்னும் கொஞ்ச நாளிலே முடிச்சதும் நானே உனக்கு கதை சொல்றேன்..."


" ம் சரி ஓ.கே... ஓய் எனக்கு பிடிச்சு இருந்ததை நீ என் கண்ணுலயே கண்டுபிடிச்சுட்ட.. ஆனால் உனக்கு என்னை பிடிச்சதுக்கான ரீசன் என்ன?"


" காதல் காரணத்தைப் பார்த்து வராதுனு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.. ஏதாவது ஒரு காரணம் நம்மளை அறியாமயே நம்ம மூளை யோசிச்சு இருக்கும்.. அழகு, அறிவு , குணம், நம்ம மனசுல யோசிச்சு வெச்சு இருக்கிற கற்பனைகளுக்கு ஏத்தா மாதிரி இருக்கிறது.. நம்ம குடும்பத்துக்கு செட் ஆவாங்களானு பார்க்குறது.. ஏதோ ஒரு தனித்துவம் அவங்களை நோக்கி ஈர்க்கும்.. உன் கிட்டேயும் என்னை அப்படி ஒண்ணு ஈர்த்தது.. ஆனால் அதை நான் இப்போ சொல்ல மாட்டேன்.. அப்புறமா சொல்றேன்"


" ஏன் கடுவா.. உனக்கு ஒரு விஷயத்தை ஷார்ட்டாவே சொல்ல தெரியாதா.. இப்படி தான் நீட்டி முழக்குவியா.. அப்புறமா சொல்றேனு ஒரு வார்த்தையில முடிக்கலாம்ல.."


" நான் இப்படி தான்.. இப்படி பேசி தான் எனக்கு பழக்கம் மந்தி.. நாம எதையும் ஆராயாம மத்தவங்க சொல்றதை அப்படியே கேட்டு நடக்குறதுவிட அதைப் பத்தி நிறைய யோசிச்சு அப்புறமா தான் முடிவெடுப்பேன்"


" எனக்கும் அது தான் ரொம்ப பிடிக்கும்  கடுவா.. முன்னாடி பெரியவங்க சொன்ன எல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.. அது அந்த காலத்துக்கு ஒத்து போய் இருக்கலாம்.. ஆனால் சில பேர் அதையே மூட நம்பிக்கை ஆக்கி நம்ம தலைமுறை மேலே திணிக்க பார்க்குறாங்க... முன்னோர்கள்  சொன்ன எவ்வளவோ நல்ல விஷயங்களை விட்டுட்டு ஜாதி மதம்னு பெண்களுக்கான வரைமுறை  அப்படினு யாரோ கிளப்பிவிட்ட ஒன்னை தான் இன்னும் காப்பாத்த நினைக்குறாங்க.. சோ சேட்"


" exactly தியா.. நம்ம மனசுலலாம் முதலிலே சொன்ன விஷயங்கள் அப்படியே பதிஞ்சு போய் அது மட்டும் தான்  உண்மைனு நம்பிடுறோம்.. அப்புறம் அந்த விஷயங்களைப் பத்தி மத்தவங்க வேற மாதிரியான விமர்சனம்  செஞ்சு  நல்ல விஷயங்களை எடுத்து சொன்ன  கூட அதை ஏத்துக்க மாட்டேங்குறோம்..."


" அதே தான் கடுவா.. எங்க அம்மா கிட்டே நான் போராடி பார்த்துட்டேன்.. ஊருக்குள்ளே இருக்குற நாலு சிசிடிவி கண்ணுங்களுக்காக உன் மன அமைதியையும் கெடுத்துக்கிட்டு என்னோட மன அமைதியையும் கெடுக்காதேமானு எவ்வளவோ பேசி பார்ப்பேன்.. கடைசியில எங்கே ரெண்டு பேருக்குள்ளே சண்டை வரது தான் மிச்சம்.. நான் பெத்த பொண்ணு என் பேச்சையே கேட்கலனு ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.. ஐயோ இவங்க பண்ண அலப்பறைலாம் இருக்கே.. நான் ஓட்டு போடும் போது இந்த கட்சிக்கு ஓட்டு போடுனு சொன்னாங்க ஆனால் நான் வேற கட்சிக்கு ஓட்டுப் போட்டுட்டேன்.. அவ்வளவு தான் என் பொண்ணு என் பேச்சையே கேட்கல... என் வளர்ப்பை பத்தி ஊரு தப்பா பேசாதானு ஒரே கத்து...  யாருக்கு ஓட்டு போடணும்னு நான் டிசைட் பண்றதுக்கும் வளர்ப்புக்கும் என்ன சம்மந்தம்னு தான் எனக்கு புரியல.. தான் சொல்றதைக் கேட்டு நடந்தா அது அவங்க குழந்தையை நல்லா  வளர்த்ததுக்கான சின்னம் இல்லை.. அந்த குழந்தை மத்த எதையும் புரியாம மனசால  வளராததுக்கான அடையாளம் அது..." என அவள் சொல்லி முடிக்க அவளை அணைத்துக் கொண்டு "கரெக்டா சொன்னடா... நீ ரொம்ப தெளிவா இருக்க.. ஐ லைக் யுவர் வே ஆப் திங்கிக்.. ஐ யம் க்ளேட் டூ ஹேவ் எ பார்ட்னர் லைக் யூ.. " என்றான் இயல்பாக.. ஆனால் அவளால் தான் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல் அவனின் அணைப்புக்குள் நெளிய ஆரம்பித்தாள்....


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.