This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 1 April 2019

Uma maheshwari's என்னுள் இருப்பவன் நீயே... இறுதி பாகம்


Click here to get all parts


-சுமிரவன்- 


என்ற அந்த கதையின் கடைசி வார்த்தையை அவள் எழுதி முடிக்க ஷ்ரவன் டீ கப்பை கொண்டு வந்து மனைவியின் முன்பு நீட்டினான்..


"இந்தா சுமி கொஞ்சம் காப்பியை குடிச்சுட்டு கதையை கன்டினியூ பண்ணு" என்றான்...


" நான் கதையை முடிச்சுட்டேன் ஷ்ரவன் கண்ணா... " என டீயை பருகிய படி சொன்னாள்..


" சூப்பர் டி.. அப்போ என் கிட்டே குடு.. நான் படிச்சுட்டு தரேன்"


" ஹை அசுக்கு புசுக்கு... விஷ்வா கிட்டே கொடுத்து பப்ளிஷ் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் உங்கள் கையிலே புக்கா தான் தருவேன்... "


" ஓகே மிஸஸ். ஓகே"


" ம்ம்ம் சரிங்க மிஸ்டர்.ஓகே "


" ஷ்ரவன் ரொம்ப தாங்க்ஸ்... இந்த கதையை எழுதி முடிக்கிற வரைக்கும் பிரனிதாவை என் ஸ்தானத்தில இருந்து கவனிச்சுக்கிட்டதுக்கு.."


" அடியே ஓவரா தெரியல என் பொண்ணை நான் பார்த்துக்க இவள் தாங்க்ஸ் வேற சொல்லுவாளாம்"


" சரி தாங்க்ஸ் சொல்லல... அதுக்குப் பதிலா பாக்கி இருக்கிற கமிஷனை தரட்டுமா.." என அவள் இதழ் பதித்தாள்..


"ஷ்ரவன் பாக்கி இன்னும் 91 முத்தம் தானே இருக்கு"


" இல்லைடி 112 இருக்கு"


" டேய் இது பொய்க் கணக்கு என்னை ஏமாத்துற"


" ஐயோ என் செல்லத்தை ஏமாத்துவனா.."


" நல்லா ஏமாத்துவீயே"


" சீ போடி "


" போடா டேய்"


" ஹே ஹே கத்தாத டி பாப்பா எழுந்துக்க போறா" என சொல்ல இரண்டு வயது நிரம்பிய தன் அழகிய மலர் தூங்கும் அழகை ரசித்தாள்..


" எவ்ளோ அழகா இருக்காள"


" ஆமாம்டி அப்படியே உன்னை மாதிரியே.. அந்த சேட்டையும் சேர்த்து தான்"


" ம்ம் டா.. ஷ்ரவன் நான் ஒன்னு சொல்லட்டா.. நான் எத்தனையோ கதையை எழுதி இருக்கேன்.. ஆனால் இந்த "என்னுள் இருப்பவன் நீயே" கதை தான் என்னோட பேவரெட்டா இனி இருக்கப் போது.. ஒவ்வொரு எழுத்தையும் ரசிச்சு ரசிச்சு எழுதினேன் டா.. என் பேனாவில இருந்து மை சொட்டுறதுக்கு பதிலா காதல் சொட்டுறதைப் பார்த்தேன்... என்னோட சிறந்த நாவல் எதுனு கேட்டா என் பதில் நாளைக்கு ரீலிஸ் ஆகப் போற இந்த நாவலா தான் இருக்கும்.. அதுக்கு காரணம் என்னுள்ளே இருக்கிற உன்னாலே தான்டா என அவன் தோளில் சாய்ந்தபடி கூறினாள்..



டேய் கலை, திரு என்ன படிக்கிறீங்க மறைச்சு வைச்சு என ஷ்ரவன் கேட்க " அதுவா ஷ்ரவன் நாவல் படிச்சுட்டு இருக்கோம்.. சுமிரவனோட புது நாவல் செமயா இருக்கு.. ஆனால் படிக்கும் போதே என்னமோ நம்ம லைப்பலாம் கனெக்ட் பண்றா மாதிரி இருக்கு.." என்றான் ராம்....


" அதுவா கலை, ஏன் அப்படி தோனுதுனா " என ஷ்ரவன் சொல்லிக் கொண்்டே சுமியைப் பார்க்க " அவள் சொல்லாதே சொல்லாதே " என கண்களாலேயே கெஞ்சினாள்.. அப்போ கமிஷன் என இவன் பார்க்க தரேன் என்றபடி தலையாட்டினாள்..


" அது ஏன் அப்படி தெரியுதுனா.. எல்லா ஆபிஸ்லயும் இப்படி ஒரு கதை இருக்கும்... பெஸ்ட் ப்ரண்ட்ஸோட லவ்வை சேர்த்து வைக்க ஒருத்தவங்க இருப்பாங்க.. ஆனால் அவங்க இந்த கதையில போட்டு இருக்கிறா மாதிரி செய்யாம நிஜத்தில வேற மாதிரி பண்ணி கூட லவ்வை சேர்த்து வைச்சி இருப்பாங்க"


" ஆமாம் நீங்க சொல்றதும் கரெக்ட் தான் ஷ்ரவன்" என்றான் கலை..


" ஆனால் கதையில ஹீரோ ஹீரோயின் பேரு கூட உங்கள் பேரை மாதிரியே ஷ்ரவன் சுமினு போட்டு இருக்கு" என திரு சொல்ல 


" நீ பாலிமர் டீவியில நீ வருவாய் என சீரியல் பார்த்து இருக்கிறியா கலை அதுல கூட ஷ்ரவன் சுமி னு தான் ஹீரோ ஹீரோயினோட நேம் கூட அது தான்" என்றாள் கலையின் மனைவி ப்ரியா...


" ஓ அப்படியா" என்றான் திரு..


" டேய் கொலை(கலை) தெரு(திரு) ஒழுங்காக கொட்டிக்க வரீங்களா.. இல்லை அந்த சுமிரவன் புக்கை தூக்கி அடுப்புல போட்டுடுவேன்... 


" ஐயோ ஐயோ வந்துடுறோம் தாயே" என சொல்லியவர்கள் தங்கள் மனைவியிடமிருந்து லன்ச் பேக்கை எடுத்துக் கொண்டு சுமியின் அருகே உட்கார்ந்து உண்ண ஆரம்பித்தனர்...


அங்கே கலையின் மனைவி ப்ரியா, திருவின் மனைவி எழில் மற்றும் ஷ்ரவன் தனியே அமர்ந்து உண்டு முடித்தனர்..


உணவு முடித்துவிட்டு ஷ்ரவனின் அறைக்குள் வந்தவள் இந்த கலையும் திருவும் செம ஷார்ப்பா இருக்காணுங்க.. இத்தனைக்கும் சுமிரவன் கதை புக்கை நான் தூக்கி போட்டுடுவேனு மிரட்டி பேச வெச்சது.. இவனுங்க லவ் ஸ்டோரியை வேற.மாதிரி மாத்தி எழுதினது.. அப்புறம் இவனுங்க என்னை சமாதானப்படுத்தி நம்ம மூனு பேரும் இனி என்ன நடந்தாலும் ஒன்னா தான் சாப்பிடனும்னு சொல்ற பேஜை எல்லாம் டெலிட்டு எடிட்டுலாம் பண்ணி இவனுங்களுக்கு ஸ்பெஷலா நாலு புக்கை தனியா இவனுங்க வீட்டு அட்ரஸ்க்கு அனுப்பி வைச்சேன்.. ஆனால் பாவி பசங்க அதெல்லாம் இல்லாத இந்த புக்லயே ஏதோ அவனுங்க லைப் நடக்குறா மாதிரி இருக்குனு கண்டுபிடிச்சுட்டானுங்க... இதே நிஜ புக்கோட edition ஐ மட்டும் படிச்சு இருந்தாங்க அப்பட்டமா நான் தான் சுமிரவனு தெரிஞ்சு இருக்கும்..


" அது எப்படி டி அவனுங்க அட்ரெஸ்க்கு மட்டும் தனியா புக் அனுப்புனா.. அவனுங்களுக்கு சந்தேகம் வராத"


"சந்தேகமாவது மண்ணாங்கட்டியாவது.. சரியான பேக்குங்க.. நீங்க சுமிரவனோட சிறந்த வாசகர் போட்டியில ஜெயிச்சதுக்காக இந்த பரிசுனு சொல்லி அந்த புக்கை அனுப்பி வைச்சேன்.. ரெண்டு லூசுங்களுமே யோசிக்காம நம்பிட்டானுங்க"


" சரியான கேடி டி நீ"


" நான் கேடிலாம் இல்லை டா..."


" ஆமாம் கேடிலாம் இல்லை.. ஏமாத்துக்காரி"


" நான் என்னடா ஏமாத்துனேன்"


" ஒரு பையன் ஒரு பொண்ணு னு சொல்லிட்டு இப்படி பொண்ணோட ஏமாத்திட்டியே டி... "


" அடேய் நான் எங்க ஏமாத்துனேன்.. நான் எப்பவோ ரெடி தான்.. எனக்கு உன்னை மாதிரி பையன் எனக்கு வேணும் டா.. "


" என் பொண்டாட்டி ஆசையை நிறைவேத்திடலாம்" என்று அவன் நெருங்க "டேய் ஆபிஸ்டா" என்று சொல்லிவிட்டு வேகமாய் அவன் அறையினை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டாள்.. அவள் முகம் நாண சிவப்பை பூசிக் கொள்ள இவன் உதடு புன்னகையால் நிரம்பியது.. அவர்களின் காதல் பயணம் முடியாமல் இனி இனிதாய் தொடரப் போகிறது...... 


-முற்றும்-

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.