மௌனத்தால் பேசிவிடும் மணிவிழிகள்
வெளிவிடும் நீர்துளிகள் உன் மொழியோ
கண்ணே கண்ணீர் நீ சிந்துகையில்
கங்கையும் வற்றிபோகும் இப்புவியில்
பெண்ணே பேரழகே பிள்ளை கனியமுதே
உன் சிரிப்பை காண்கயிலே உலகமே மறக்குதடி
இறுதி காரியங்கள் நிறைவேறியது. சுந்தரம் சுயநினைவின்றி இருந்ததால், அவர் அன்னைக்கு செய்ய வேண்டிய மரியாதையையும் ஈஸ்வரனே முன்னின்று முடித்து வைத்தார்.
நாட்கள் உருண்டோடிய நிலையில் ஆபத்து கட்டம் தாண்டி உயிர் பிழைத்தான் சுந்தரம். மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கை துவங்கியது.
மனம் திருந்திய சுந்தரம் ஈஸ்வரன் குடும்பத்தில் ஒரு அங்கமானார். விபத்தில் உயிர் நிலையில் பட்ட அடியால் இல்வாழ்வையும் துறந்தார் ஒரே நாளில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பால் தொய்ந்து போன ஈஸ்வரனுக்கு உதவியாய் தொழிலிலும் கை கொடுத்தான்.
மாதங்கள் ஓடின... சுந்தரத்தின் பழைய நண்பர்கள் அவனுடைய இந்த திடீர் மாற்றத்தை விரும்பவில்லை, அவனுடைய பழைய வாழ்க்கைமுறை சிக்கலை கொடுத்தது.
சிக்கலை சமாளிக்க வேறுவழியின்றி பணத்தை கையாடல் செய்ய ஆரம்பித்தான்.
சுந்தரத்தின் நண்பர்கள் அவனை பணம் காய்க்கும் மரமாகவே பயன்படுத்தினர்.
காலமாற்றத்தினால் கிராமம் டவுன் ஆக மாற்றம் பெற்றது பாஸ்கரும் லக்ஷ்மியும் பள்ளி சென்று வர துவங்கினார்கள். அவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் வேலை சுந்தரத்துடையது ஆயிற்று.
இன்னிலையில் சுந்தரத்தின் நண்பர்கள் மொத்தமாக பணம் கேட்டு கொண்டிருந்தனர், கொடுக்காவிட்டால் பாஸ்கர் லக்ஷ்மி இருவரையும் கொன்று விடுவதாக சுந்தரத்தை மிரட்டினர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் தொந்தரவு அளவுக்கு அதிகமாக போகவே சுந்தரம் பயந்து நடுங்க ஆரம்பித்தான். பணம் கையாடவும் வழி இன்றி ஈஸ்வரன் சுந்தரத்தை கட்டுபடுத்த ஆரம்பித்தார்.
இதற்க்கு ஒரே தீர்வாக நினைத்து சுந்தரம் தனது நண்பர்களை கொன்று விட்டு போலிஸில் சரணடைந்தான். சிறைக்கு பார்க்க வந்த பார்வதியிடமும் ஈஸ்வரனிடமும் உண்மையை சொல்லி மன்னிப்பு வேண்டினான் நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கபட்டது அவனுக்கு...
தன் சகோதரனை இழந்த துக்கத்திலும், சுந்தரத்தின் கையாடல்களாலும், பருவ மழை பொய்த்ததாலும் எற்பட்ட சரிவிலும் மனம் ஒடிந்து போன ஈஸ்வரன் சிலவருடங்களில் காலமாகிவிட, அவர் காலமான அந்நாளிலேயே பார்வதியும் துக்கம் தாங்காது உயிர்விட்டார்.
ஒரளவு வளர்ந்து வாலிப வயதில் இருந்த பாஸ்கருக்கு பதின்ம வயதில் இருந்த தங்கையை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்தது.
உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் தன் தூரத்து உறவுக்கார பெண்ணான சாரதாவை திருமணம் செய்ய நிச்சயித்தார். இளம் வயது அயராத உழைப்பு கூரிய அறிவு என சகலவித தகுதிகளும் இருந்ததால் வேறு ஒருவனை காதலித்து கொண்டிருந்த சாரதாவை அவளது பெற்றோர் திருமணத்திற்க்கு மிரட்டி சம்மதிக்க வைத்தனர்.
சாரதாவோ மணமேடை வரவேண்டிய நேரத்தில் தன் காதலனுடன் கம்பி நீட்டி விட்டாள்.
No comments:
Post a Comment