கரங்கள் நீட்டி வரங்கள் கேட்டேன்
கடவுள் கண் முன்னே வந்த போது
கேட்க்கும் வரம் யாதென வினவினான்
இறவா வரம் கொடு இறைவா என்றேன்
இயலாத வரம் கேட்கும் மனிதா
உபாயம் ஒன்று கூறுகிறேன் கேளடா
ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல் என்ற
ஆன்றோர் வாக்கை அடியொற்றி நடத்தலே
அருமையான வழியென காட்டி சென்றான்
மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் செய்வதறியாது திகைத்து நின்றார் பாஸ்கர்.
சாரதாவை பெற்றவர்கள் அவமானத்தில் கூனி குறுகி நின்றனர். சிறிது நேரத்தில் நிதானித்த அவள் பெற்றோர் சாரதாவின் தங்கை ப்ரபாவை மணம் முடித்து கொடுக்க முடிவெடுத்தனர்.
ஆனால் பாஸ்கரோ தான் ப்ரபாவிடம் பேசிய பிறகே முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டார். ப்ரபா பேச போகும் முன்னர் அவள் அம்மாவிடம், "அக்கா மாதிரி எனக்கு காதல் அப்படினு எதுவும் இல்ல. ஆனா கொஞ்சம் மேல படிக்க ஆசை இருக்குது பீளீஸ் அதனால கொஞ்ச நாள் கழித்து என் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்" என்றாள்.
அதற்கு அவளிடம், "இந்த பாரு ப்ரபா... உங்க அக்கா செஞ்ச வேலையால எங்களால வெளில தலை காட்ட முடியல. மேற்கொண்டு மாப்பிள்ளைக்கு அவமானம் வேற, இதுல அவர் கேக்குறாரேனு தான் உன்னை தனியா பேச அனுப்புறோம். நீ எதாவது ஏடாகூடம் பேசி கல்யாணம் நின்னதுனு வெச்சிக்க அப்புறம் எங்கள நீ உயிரோடவே பாக்கமுடியாது" என்று சொல்லி அனுப்பினர் அவள் பெற்றோர்.
ப்ரபாவும் பாஸ்கரும் சத்திரத்தின் ஒரு அறையில் தனித்து பேச அனுப்பபட்டனர்.
அறையில் தனித்து விடப்பட்ட இருவரும் யார் முதலில் பேசுவது என்று தயங்கியபடியே நின்றனர். வெகு நேரம் சென்ற பின்னர் பேச ஆரம்பித்த பாஸ்கர் முதலில் ப்ரபாவின் சம்மதத்தை கேட்டான்.
அவளோ தன் பெற்றோரை நினைத்து பயந்தபடி இருக்க அவளும் யாரையாவது காதலிக்கிறாளா? எனக் கேட்டான்.
'இல்லை' என்று தலை ஆட்டிய ப்ரபா, மேலே பேசத்துவங்கும் முன் வெளியே சளசளவென பேச்சு குரல்கள் கேட்க, பொறுமை இழந்த பாஸ்கர் மறுபடியும் சற்றே குரலை தூக்கி ப்ரபாவின் சம்மதத்தை கேட்டான்.
இயற்கையிலே பயந்த சுபாவம் உள்ளவளாகையால் தன் பெற்றோரின் மிரட்டலை நினைத்து திருமணத்துக்கு சம்மதித்தாள். கல்யாண வீடு மீண்டும் களைகட்டியது, திருமணமும் இனிதே நிறைந்தது தன் மானத்தை காப்பாற்றிய மகளின் செயலால் மகிழ்ந்தனர் ப்ரபாவின் பெற்றோர்.
ஆனால் மணமக்களோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர், தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மததித்தாலும் அதற்க்கு முன் ப்ரபாவின் முகத்தில் தெரிந்த பயம் பாஸ்கரை யோசிக்க வைத்தது.
திடீர் திருமணத்தால் தன் ஆசைகள் நிறைவேறாது போனதால் எழுந்த கலக்கம் ப்ரபாவை குழப்பத்தில் ஆழ்த்தியது.
சத்திரத்தை அன்றே காலி செய்யவேண்டி இருந்ததாலும் எதிர் பாராது ஏற்ப்பட்ட மாறுதலாலும் ப்ரபாவின் வீட்டில் அன்று ஏற்பாடு செய்திருந்த முதலிரவை கொண்டாட பாஸ்கர் மறுத்து, "அந்த சடங்கை நாங்க எங்க வீட்டுல வெச்சுக்குறோம்"னு சொல்லிட்டான்.
சாரதாவின் செயலால் காயப்பட்டிருந்த அவனிடம் யாராலும் பேசமுடியவில்லை. திருமணம் முடிந்த உடன் ஊருக்கு திரும்பினான், மணமக்களுடன் கிளம்பிய சுற்றத்தினரும் ஊர் வந்து சேர்ந்தனர்.
அனைத்து சடங்குகளும் நல்லமுறையில் நடந்தேற, தன் புகுந்த வீட்டிற்கு வந்தாள் ப்ரபா. ஒரு வாரம் கழித்தே முதலிரவுக்கு நல்ல நாள் குறிக்கப் பட, அதுவரை லஷ்மியுடன் தங்கவைக்க பட்டாள் ப்ரபா.
இயல்பில் கலகலவெனபேசும் சுபாவமுடைய லக்ஷ்மி சீக்கிரமாகவே ப்ரபாவை ஈர்த்துவிட, இருவரும் தோழிகள் ஆனார்கள். கொஞ்சம் பயமும் தெளிந்தது ப்ரபாவுக்கு புகுந்த வீட்டின் அன்றாட செயல்களும் பிடிபட்டன. இந்நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய புறப்பட்டு வந்தனர் ப்ரபாவின் பெற்றோர். தன் பெற்றோரை கண்ட மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் குடும்ப வாழ்வை நினைத்து பயந்தாள் ப்ரபா.
தாய் அறியாத சூல் இல்லை அல்லவா? தன் மகளின் முகத்தில் கலக்கத்தை கண்ட ப்ரபாவின் தாய் இந்த பாரும்மா உன்னை நாங்க அவசரப்பட்டு படிப்ப கெடுத்து கல்யாணம் பண்ணி கொடுத்துடோமுனு நினைக்காதே உன் அக்கா செஞ்ச காரியத்தால் ஊருக்குள்ளே நம்ம குடும்பத்துக்கு கெட்டபேர் வந்திருமேனு கூட நாங்க யோசிக்கல.
இது வரைக்கும் நாங்க விசாரிச்சப்ப மாப்பிள்ளை குடும்பத்தை பத்தி நல்லவிதமா தான் சொன்னங்க. அப்படி ஒரு உறவ கை நழுவ விட கூடாதுனு நாங்க நினைச்சோம், அப்புறமும் கூட மாப்பிள்ளை உன் சம்மதத்தை தெரிஞ்சுகிட்டு தான் தாலி கட்டுவேனு சொல்லிட்டார். வேற வழி இல்லாமதான் உன்னை மிரட்ட வேண்டியதா போச்சு.
உன் படிக்கற ஆசைய கெடுக்கறேனு நினைக்காதே நல்ல யோசிச்சு பாரும்மா... அடிப்படை அறிவு உங்கிட்ட இருக்கு, அத வெச்சு ஓய்வு நேரத்துல தபாலுல படிச்சுகூட தகுதிய வளத்துக்கலாம்.
இங்க மாப்பிள்ளைக்கு அவரோட தொழிலிலும் உதவியா இருக்கலாம். செய்யனும்னு நினைச்சா கிடைக்குற சூழ்நிலைய சாதகமாக்கி ஜெயிக்கனும், அது தான்மா பொண்ணுங்களோட திறமையும் புத்திசாலித்தனமும் என அறிவுரை கூறினார்.
சிந்திக்க துவங்கினாள் ப்ரபா... முதலிரவுக்கு அலங்காரமும் நடந்தது இனி அவர்கள் வாழ்வு மலருமா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்....
No comments:
Post a Comment