சீமாவின் தோழி மகா வந்ததும் 2 பேரும் சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
"ஏன் டி லேட்?" னு சீமா கேட்க,
"பஸ்தா இன்னைக்கு லேட்டு டீ" னு சொன்னாள் மகா.
"உன் ஆளு வந்துட்டு போயிட்டானா?" னு மகா கேட்டவுடன் சீமா முறைத்தாள்.
உடனே மகா "சாரி டீ... சும்மா கிண்டலுக்கு தான்."
உடனே சீமா, "நீ என்னை நாலு அடி கூட அடி ஆனா எங்க நட்ப தப்பா பேசாத" னு சொல்லிட்டா.
"இல்ல, யாரோ தெரியாத பையன கல்யாணம் பண்ணுறதுக்கு இவன் உனக்கு நல்ல பிரண்ட் தான உன்னை பத்தி புரிஞ்சுகிட்டவன். அதான் டி...."
"நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ண போறேன். ஆனா அது கண்டிப்பா சிவா இல்ல... அவன் எனக்கு நல்ல குளோஸ் பிரண்ட். எனக்குனு பிறந்தவன கண்டிப்பா பாப்பேன், அப்போ எனக்கு மனசுல ஒரு புயல் அடிக்கும் அப்டியே பிரீஸ் ஆகிறுவேன் டி. அவன் அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல .ஆனா பெரிய மீசை ,கொஞ்சமா தாடி, அப்றமா அவன் கண்ணு பார்வைலயே நான் மயங்கணும்.தலைய கோதுற ஸ்டைல்லயே நான் கவுந்துறனும் டி. அவன் சிரிப்புல நான் என்னைய மறக்கணும். எல்லார்கிட்டயும் பாசமா பேசனும்.பணத்தை விட மனுசங்க முக்கியம்னு நெனைக்கணும் என்னைய மட்டும்தான் லவ் பண்ணனும் அவ்ளோதான்."
"போதும் போதும்டி, லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு... இதுக்கு மேல தாங்காது" என மகா கூறினாள்.
"போடி" என கூறினாள் சீமா.
"சாி நீ சொல்லு, உனக்கு எப்டி மாப்ள வேணும் னு நெனைக்கிற?"
அதற்கு மகா "எனக்கு அப்பா சொல்ற மாப்ள தான்டி . பெருசா ஒன்னும் எதிா்பாா்ப்புல இல்லை. என் மேல கொஞ்சம் அன்பு, நல்ல நிரந்தரமான வேலை ,கை நிறைய சம்பளம் போதும் டி. சாிடி டைம் ஆகிட்டு ஒர்க் ஸ்டாா்ட் பண்ணுவோம்" என்றபடி பிாிந்தனா்.
சாி ஹீரோ பத்தி பாக்கலாமா? இனிதா யோசிக்கணும்.
"சக்ரவா்த்தி(ஹீரோ) சாப்ட வா பா" என ஜெயா (சிபி அம்மா) குரல் கொடுத்தார். படிகளில் இறங்கியவனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றிய எண்ணத்தை இத்தோடு நசுக்கினேன் நான், பின்ன சீமா என்னை நசுக்கிறுவால்ல....
"அம்மா எத்தனை வாட்டி சொல்றது? கால் மீ சிபின்னு" எனக்கூறியபடியே சாப்பிட ஆரம்பித்தான்.
"ஆசையா வச்ச பேர வச்ச என்ன கூப்டாதீங்கன்னு சொல்றியே ராஜா."
"எனக்கு பிடிக்கல மா... நான் எந்த நாட்டுக்கு சக்ரவர்த்தி நீயே சொல்லு?"
"நம்ம வீட்டுக்கு தொழில்க்கு நீதான பா எல்லாமே" என கூறினாள்.
அதற்குள் சிபி அப்பா விஜயராஜ் சக்கரவர்த்தி உண்ண வந்து விட்டதால் பேச்சு தடைபட்டது.
"என்ன ஸ்பெஷல்?..." என்றவாறே வந்தார்.
"உங்களுக்கு பிடிச்ச பூாி சன்னா மசாலா, அப்புறமா ராஜாக்கு பிடிச்ச இடியாப்பம் தேங்கா பால் உளுந்தவடை அவ்ளதாங்க." (சாியான சாப்பாட்டு ராமன் பேமிலியோ ? -- பாவங்க சீமா).
"என்னப்பா கிளம்பிட்டியா எப்போ திரும்ப வருவ?" என கேட்ட அப்பாவிடம்,
"ஆமாப்பா ஞாயிறு தான் வரமுடியும் னு நெனைக்கிறேன், இல்லைனா அடுத்த வாரம் தான் பா" என்றான் சிபி.
"சாி ஞாயிறு கண்டிப்பா வந்துறு. இல்லைனா உன் அம்மா இம்சை தாங்க முடியாதுடா."
"சாிப்பா" என்றான் சிரித்துக் கொண்டே.
ஜெயா கோவமாக முறைத்தாள், விஜயன் அவளை பார்த்தால் தானே. "போயிட்டு போன் பண்ணுடா" என்றார் மகனிடம்.
"சாி...." என கூறியபடியே கிளம்பினான் திருநெல்வேலியில் உள்ள அவனது ஹோட்டலுக்கு. விஜயனுக்கு பூா்வீக தொழில் கட்டிட காண்ட்ராக்ட் என்றாலும் மகனது ஆசைக்காக அவரது இடத்தில் ஹோட்டல் அமைக்க ஒப்புக் கொண்டாா். ஜெயவிஜயம் என்ற அம்மா அப்பா பெயரில் 3 மாடிகளில் தொடங்கி 2 வருடங்கள் ஓடி விட்டன. நன்றாக போவதால் ஜெயா சிபிக்கு கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் சிபி பொண்ணை பிடிக்கலைன்னு தட்டி கழிக்கிறான்.பெண்களை விரும்பலை நண்பனின் காதல் தோல்வியால்...(நம்ம சீமா கிட்ட தானங்க அடி வாங்கனும் எழுதிருக்கு. அதை மாத்த முடியுமா?)
நேத்து புல்லா யோசிச்சு எழுதிருக்கேன் பா ஹீரோ இன்ட்ரோன்னா சும்மாவா? டயர்ட் ஆகிட்டேன் ரெஸ்ட் எடுக்க போறேன் நல்ல கமெண்ட்ஸ் போடுங்க பா.
No comments:
Post a Comment