கனவில் காதல் செய்கிறேன் வேலை களைப்பில் தோள் சாய்கிறேன்
அந்தரங்க நேரத்தில் ஆழ்மனதின் ஆசைகள் அறிவாயோ
அன்று உனக்கு பிடித்த என்னை
இன்று பிடிக்காமல் போன மாயம் என்ன ?
சாயம் போன என் இளமை தானோ
காதலனே என் கணவனே கண்ணீருடன் கேட்கின்றேன்
கலக்கம் நீங்கிட மறுமொழி கூறிடுவாயே
சற்றே மயக்கம் நீங்கி ஆசுவாசபடுத்தி கொண்டபின் மனதை தைரிய படுத்திகொண்ட ப்ரபா சாரதாவிடம், "அக்கா என்னக்கா ஆச்சு ? அப்பா அம்மாவ பாத்தியா? உன் புருஷன் என்ன ஆனார்" என கேட்டாள். அவர்கள் இருவரும் பேச தனிமை கொடுத்து வெளியே நின்று கொண்டான் பாஸ்கர்
"ப்ரபா உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு, அது எனக்கு சந்தோஷம் முதல்ல கல்யாண நாளில் வீட்ட விட்டு போய் உன் வீட்டுகாரருக்கு அவமானம் உண்டாக காரணம் ஆயிட்டேன். அவர்கிட்டே மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுமா... நான் இனிமே ரொம்ப நாள் இருக்க மாட்டேன் எனக்கு இருக்குறது இரத்த புற்றுநோய்மா. என்னை காதலிச்சவன் கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு போயி ஒரு வீட்டெடுத்து தங்கவெச்சான். முக்கிய செலவுகளுக்கு வேணும்னு என் நகைகளை வாங்கி விக்க எடுத்துகிட்டு போயிருந்த போது அவனை தேடி ஒரு பொண்ணு கைல குழந்தையோட வந்தா. அவகிட்ட பேசுனத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவதான் அவனோட முதல் மனைவினு... நாங்க பேசிக்கிட்டு இருந்த போதே அவன் பணத்தோட வந்துட்டான்."
"நான் கோபப்பட்டு நியாயம் கேட்டப்ப 'உன் சொத்துக்காகதான் உன்னை கல்யாணம் பண்ண நினைச்சேன் எப்போ நீ வீட்ட விட்டு வந்தியோ அப்பவே உன்னை விட்டுட்டு போய் இருப்பேன். கைல இவளோ நகை வெச்சு இருக்கேனு தெரிஞ்சதோ அதையாவது அனுபவிக்கலாமேனு தான் இது வரைக்கும் கூட வெச்சு இருந்தேன்' என சொன்னான்."
"அதிர்ச்சில எனக்கு ஒண்ணுமே தோணல.. 'இந்தா உனக்கும் கொஞ்சம் காசு தரேன் ஊரப் பாக்க போய் சேரு'னு சொன்னான். அதிர்ச்சியில சத்தம்போட்டு கத்திட்டு இருக்கும் போதே நான் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துட்டேன். எற்கனவே ரெண்டு தடவை இந்தமாதிரி ஆனபோது நான் பெருசா எடுத்துக்கலை. மயக்கம் போட்ட உடனே பயந்து போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் பாத்தபோது எனக்கு இருக்குறது இரத்த புற்றுநோய், அதுவும் முத்தின நிலமைனு தெரிஞ்சது."
"நான் ஆஸ்பத்திரில இருந்த போதே அவன் வீட்ட காலி பண்ணிக்கிட்டு பொண்டாட்டி புள்ளையோட எங்கேயோ போய்ட்டான். அக்கம் பக்கத்துல இருந்தவங்க சில பேர் உதவியால காசு கிடைச்சது, அப்பா அம்மாவ பாக்கப்போனேன் என்ன பாத்தவுடனே அப்பாவும் அம்மாவும் அடிச்சு விரட்டிடாங்க. அவங்களுக்கு எனக்கு இப்படி ஒரு நோய் இருக்குறது தெரியாதுடி..."
"ப்ரபா எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கு நம்ம அப்பா அம்மாவ ஒருதரம் பாத்தா போதும். அதுக்கு பிறகு நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன். தயவு செஞ்சு உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ண சொல்லேன்..."
விஷயத்தை கேள்வி பட்டதுமே பாஸ்கர் நேரே சென்று மாமனார் மாமியாரை பேசி சமாதானப்படுத்தி கூட்டி வந்தான். தன்னை பெற்றவர்களை கண்டவுடன் முகம் மலர்ந்த சாரதா அவர்களுக்காவே காத்திருந்தது போல மண்ணுலக விடை பெற்றாள்....
No comments:
Post a Comment