This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 7 December 2018

Bhuvana's இளம் தென்றல் 4

 

    டிசம்பர் மாத பனி காற்று சில்லென்று வீச, வானமகள் கருநீல உடை கலைந்து சென்னீற ஆடை தரிக்கும் வேலையில்,  வருணி வீட்டில் பெற்றோர்கள் சென்ற மறுகணமே வருணியை எழுப்பி "அக்கா எழுந்திரு அம்மாவும், அப்பாவும் கோயிலுக்கு போய்யிட்டாங்க வா நாம் ஆத்துக்கு போலாம்" என்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வருணியை படாத,  பாடுபட்டு எழுப்பி கொண்டு இருந்தாள் வித்தியா.  


   வருணி, "ஏன்டி இப்படி உயிரை வாங்குற,  அம்மா இல்லாதப்பா  அங்க போக கூடாதுன்னு சொன்னாங்கல" என்றாள். 


    வித்தியா "அக்கா எப்பவாச்சுதான் நமக்கு நேரம் கிடைக்கும்.  அக்கா.... அக்கா... அக்கா.... "என்று நச்சரித்தால். 


    " சரி வா" என்று  வருணி அரைகுறையாய் உறக்கம் கலைந்த  முகத்தோடு ஆற்றுக்கு செல்லும் வழியில் லட்சுமி அம்மா இருவரையும் பிடித்து கொண்டார்கள். 


    "எங்கே போரிங்க? அம்மா, அப்பா அந்தப்பக்கம் இந்தபக்கம் இப்படி போக வேண்டியது தான், உடனே இதுக்கு வாலு முளைச்சிடும்..." என்று வித்தியாவின்  தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார்.  


    லட்சுமி அம்மாவையும் சோப்பு போட்டு ஏமாற்றி விட்டு ஆற்றுக்கு சென்றவர்கள் இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லையே என்றுதான் கத்தி கொண்டு இருந்தார்கள். ஏனென்றால் இன்று பெரிய வீட்டில் வருணின் அம்மா சரளா வருவதாக  முன் தினம் கூறி இருந்தார்கள்.  


    சரளாவுக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் வயது,  வரம்பு என்று எதையும் பார்க்காமல் காட்டு கத்து கத்துவார்கள் என்று அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தெரியும். வருண் தற்சமயம் கண்ட காட்சியும் இதுவே. அவளின் முகம் சரியாக தெரியவில்லை, பின் பக்கம் தான் தெரிந்தது,  பின்பக்கமாக தான் பார்த்தான். இடைவரை  நீண்ட கருங் கூந்தல்தான், அதுவே அவளை பாதிக்கும் மேல் மறைத்திருந்தது.  


    சென்னையில் தான் பழகும் சில பெண்களை இந்த கிராமத்து அழகிகளோடு ஒப்பிட்டு பார்த்தான் வருண். இருக்கும் முடியிலும் பாதியினை பியூட்டி பார்லர் சென்று வெட்டி விடுவார்கள், மீதி இருக்கும் முடியையும் கலரிங், டையிங் என்று கண்ட கண்ட  வண்ணங்கள் திட்டி வைத்து இருப்பார்கள். என்னதான் அலங்காரம் செய்து வைத்து இருந்தாலும் இயற்கையாக வளர்ந்த நிண்ட கருங் கூந்தலுக்கு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது.


     வருணுக்கு சிரிப்பு தான் வந்தது தன் மனதில், "நாம் என்ன பாண்டிய மன்னனா?  இயற்க்கையிலேயோ பெண்ணின் கூந்தலுக்கு மணமும், அழகும் இருக்கிறதான்னு ஆராச்சி செய்ய..." என்று நினைத்து கொண்டே அறைக்குள் சென்றுவிட்டான்.  


    இன்றுதான் கோயில் திருவிழா என்று அப்பா கூறினார். காலை கடன்களை  எல்லாம் முடித்து குளித்து வந்தவன் எப்போதும் போல தான் கொண்டு வந்திருந்த ஆடைகளை அணிய பார்த்து கொண்டிருந்தத வேளை,  கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.


    "யாரது?" என்று கேட்க்க, பணியாளர் "அய்யா நானு கோபாலு. பெரிய்யா உங்களுக்கு  உடுப்பு குடுத்து  இருக்காங்க, இன்னைக்கு கோயிலுக்கு இதை போட்டுக்க சொன்னாக... " என்று கூறினான். 


   "ஓ.. சரி உள்ள வா" என்றான் வருண்.  


   வந்தவன் கையில்  ஒரு தட்டில் பட்டு வேட்டி பட்டு சட்டை இருந்தது.  அதை வாங்கி கொண்டு கோபாலை  அனுப்பினான்.  அடுத்த அரை மணி நேரத்தில்  வருண் கிளம்பி மாடிபடி இறங்கி  வருவதை பாா்த்த  வேலையாட்கள் அனைவரும் மெய் மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தனர்.


     'ராஜ ராஜனின் பரம்பரையில் வந்த இளவரசனின் உருவம் இப்படி தான் இருக்குமா?' என்று  அனைவரையும் ஆச்சிரிய படுத்தியது வருணின் ஆஜானுபாகுவான கம்பீரம். ஆறடிக்கும் குறையாத கட்டுமஸ்தான தேகம்.  

அனைவரையும் ஒரு முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் வசீகரமான  முகம், நல்ல மாநிறம். ஒரு நவீன கால இளவரசனை போல் இருந்தான். அவன் வந்ததும் தயாராய் இருந்த சந்திரசேகர்,  சரளா மூவரும்  கோயிலுக்கு சென்றனர். 


    வருணி,  வித்தியா இருவரும் கிளம்பி கோயிலுக்கு வந்திருந்தனர்.  அங்கு அவர்களின் அம்மா சுமதி இருவருக்கும் தாமதமாக வந்தமைக்கு நல்ல ஏச்சு, பேச்சுகளை பரிசாக குடுத்து கொண்டு இருந்தார். அவர்களை காக்க வென்றே நல்ல வேலை கோயில் தர்மகர்த்தா வந்து விடடார். அவர் வந்ததுமே எல்லோரின் கவனமும் அவர் புறம் திரும்ப,  தப்பித்தோம் பிழைத்தோம் என்று வித்தியா, வருணியை இழுத்து கொண்டு  கூட்டத்தில் இருந்து நழுவி சென்றாள்.  


    கோயிலுக்கு பள்ளியில் வேலை செய்யும் அனைவரும் வந்து இருந்தனர் சந்திரசேகர் அனைவரையும் முறைப்படி அழைத்திருந்தார். மற்றவர்களை விட பாலநாதன்  மேல் அவருக்கு மிகுந்த நம்பிக்கையும், மதிப்பு எப்போதும் உண்டு. உண்மையாக உழைக்கும் ஊழியன்,  பொய் புரட்டு மற்றும் சூது என எந்த கெட்ட பழக்கமும் அவரிடத்தில் இல்லை என்று அபரிமிதமான நம்பிக்கை அவரிடத்தில் சந்திர சேகருக்கு. 


    சந்திரசேகர் வந்ததும் கோயில் பரபரப்பு ஆனாது. கோயிலின் மாலை,  மரியாதைகள், அபிஷேகங்கள், மூலவர் அர்ச்சனை என்று ஒன்றன் பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்தது. அர்ச்சனை முடிந்ததும் முக்கிய பூஜைக்காக சந்திரசேகர் குடும்பத்தார் மூவரும் உள்ளே அமர்ந்து இருந்தனர். நம் நாயகன் வருணுக்கு இவை அனைத்தும் போர் அடித்தது. கையில் இருந்த குங்கும பிரசாதம் வேறு அவனது சுதந்திரத்திற்கு இடைஞ்சலாய் இருந்தது.


    தனது பக்கத்தில் இருந்த அம்மாவிடம் காதில் "நான் கோயிலைச் சுத்தி பார்க்க போறேன், இப்டியே எவ்வளவு நேரம் தான் சிலை மாதிரி உக்காந்து இருக்குறது? செம போர்..." என்று  கூறிவிட்டு எழுந்து சென்றான். முன்ன பின்ன கோவிலுக்கு வந்து சென்றிருந்தால் தானே பிரகாரம் சுற்றும் முறை பற்றி தெரிவதற்கு, தன் போக்கில் நடக்க ஆரம்பித்தான் வருண்.


     அந்த பக்கம் தான் வருணியும், வித்தியாவும் கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு கதை பேசி கொண்டு நடந்து வந்தனர்.  எதிரில் வருணும் கோவில் சிலைகள், கட்டிடத்தின் அழகு என வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டு இருந்தான். எதிர்பாராத தருணத்தில் கூட்டத்தின் காரணமாய் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் இடிந்து கொண்டனர்.  


   வருணுனின் கையில் இருந்த குங்குமம் முழுவதும் வருணியின் புது உடையில் சிந்தியது. இடித்தவன் ஒரு வாலிபன் என கண்டதும், யாரிடமும் கோபமே படாதவள் வருணை பார்த்து, "ஏய் மிஸ்டர்... கண்ண எங்கே வச்சிட்டு இருக்க?  முதுகுக்கு பின்னாடியா? முன்னாடி பாத்து நடக்குறது இல்ல? கோயிலுக்கு சாமி கும்பிடதானே வந்த, இல்லைனா இடிக்கிறாதுக்காகவே வந்தியா?" என்று பட, படவென பொறிந்து தள்ளினாள்.  இது நாள் வரை அப்படி ஒரு கோபத்தை குறும்புக்காரியான தன் தங்கையிடம் கூட அவள் காட்டியது இல்லை.


   வருணுக்கு கோபம் தலைக்கு ஏரியது. "ஒய் வார்த்தை அளந்து பேசு... என்னை யாரருன்னு நினைச்ச?" என்று முடிக்கும் முன்பே வருணி எகிறி கொண்டு இருந்தாள்.


     "நீ யாரா இருந்தா எனக்கு என்ன? எவனா இருந்தாலும் ஒரு பொண்ணு மேல மோதுறதா?" என்று கத்த ஆரமித்தாள்.  


    தங்களை சுற்றி ஒரு கூட்டம் சேருவதை பார்த்த வருண், "உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்" என்று வன்மத்தோடு சொல்லி சென்றான். 


   வித்தியாவுக்கு ஒன்றுமே புரியவில்லை, "என்ன அக்கா இப்படி டென்சன் ஆகிட்ட?" என்று வியப்புடன் கேட்டாள். 


     "பின்ன என்ன வித்தியா? அவன் தப்பான சைடுல நடந்து வந்து இடிச்சு எம்மேல குங்குமத்த கொட்டிட்டு, ஏதோ நான் தப்பு செஞ்ச மாதிரி எவ்ளோ திமிறா நம்மகிட்ட பேசுறான் பாரு. ஒரு சாரியாச்சும் கேக்குறானா பாரு... என் புது டிரஸ்ல இப்படி குங்குமத்தை கொட்டிடானேடி, எருமை மாடு..." என்று திட்டி கொண்டே அவன் சென்ற திசையில் திரும்பி பார்க்க,  அதே  நேரம் அவனும் அவளை திரும்பி பார்த்தான் கோபத்தோடு...............

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.