VICKEY'S RECIPES :) |
இப்போ இந்த ரெசிபி பாத்தீங்கன்னா இட்லி மாவு இல்ல மாவு புளிக்க டைம் ஆகும் ஆனா குழி பணியாரம் சாப்பிட ஆகணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு இன்ஸ்டன்ட் ரெசிபி. டிபன் மற்றும் ஈவினிங் ஸ்னாக் போல இதை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 1 1/2 கப்
அரிசி மாவு - 3 / 4 கப்
தயிர் - 1 / 2 கப்
தண்ணீர் , உப்பு , எண்ணெய் தேவையான அளவு
பேக்கிங் சோடா ( சோடா உப்பு ) - 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு - 1 / 4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 / 4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை
சின்ன வெங்காயம் - 10 or பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
கேரட் - 1 துருவியது
கொத்தமல்லித்தழை
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் , அரிசி மாவு , தயிர் , சோடா உப்பு , உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு போல கரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தாளிக்க கொடுத்துவுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும் . ஒரு 2 நிமிடம் வதக்கிய பின்பு அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும் .
- மாவு கரைசலை ஒரு 5 to 10 நிமிடம் ஓரமாக வைத்திருங்கள் . மாவின் ஓரங்களில் நுரை போல் வரும் . குழி பணியாரம் மாவு தயார்.
- குழி பணியாரம் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும் . இரு புறமும் நல்ல பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து பணியாரத்தை சுட சுட பரிமாறவும்.
No comments:
Post a Comment