Raagaa's recipes:
தேவையானவை:
புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு,
வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியா - அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
வேர்க்கடலை (அ) முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால், தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு:
வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment