This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday 3 December 2018

Bhuvana's இளம் தென்றல் 3

      தன் ஆசை காதலியாம் செந்தாமரையினை மலரவைக்க வேண்டும் என்று அவசரமாய் கிழக்கில் உதித்து கொண்டு இருந்தான் மஞ்சள் நிற ஆதவன்.  கண் விழித்த வருணுக்கு  காதில் விழுந்தது அவன் பெயர்தான்,  ஆனால் ஒரு சிறிய மாற்றம் வருண் என்ற பெயருக்கு பதில்" வருணி" என்று  அழுத்தம்,  திருத்தமாக வீழ்ந்தது. 


     யார் அது என்று வருண்  பால்கனி பக்கம் சென்று பார்த்தான்.  அங்கே லட்சுமி அம்மாள் வீட்டு பின்பக்கமாக ஒரு சிறிய ஆறு ஓடி கொண்டு இருந்தது.  அந்த பக்கமாக பார்த்து  "வருணி.... வருணி வா நேரம் ஆகிறது.... நான் வேலைக்கு போக வேண்டும்....  இல்லை உன் அம்மா கிட்ட சொல்விடுவேன்...." என்று கத்தி கொண்டு இருந்தார்கள்.


   "வரேன் " என்று ஓசை வந்ததே ஓழிய ஆள் வரவில்லை.  வருணி என்ற பெயரிலேயே யார் அது என்று பார்க்க  ஆவலுடன் நின்றான்.  சிறிது நேரத்தில் ஓசை வந்த திசையில் இருந்து அவசர அவசரமாக வந்தவள்,  லட்சுமி அம்மாவின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு அவர்களிடம் கெஞ்சி,  கெஞ்சி பேசி கொண்டு இருந்தவள், நமது கதையின் கதாநாயகி வருணி.  


   அவளின்  குடும்பம் சிறியது, அப்பா  

பாலநாதன், அம்மா சுமதி,  தங்கை வித்தியா.  சந்திரசேகர் குடும்பம் வழி, வழியாக நடத்தும் மிக பெரிய பள்ளியில் கணக்கர் வேலையில் பாலநாதன் பணிபுரிந்து வந்தார். 

 

   வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் குடும்பத்தலைவி சுமதி. பிள்ளைகள் இருவருக்கும் அப்பாவிடம் அதிக செல்லம், ஆனால் அம்மாவிடம் செல்லத்தை விடவும் பயம் அதிகம்.  


   சுமதி பெண்களை வளர்ப்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். யாரிடமும் அவர்களை பேச கூட விட மாட்டார்கள் எங்கே தன் பெண்களை யாரேனும் தவறு கூறி விடுவார்களோ என்ற பயம்.  அதனாலேயே அவர்கள் மிகுந்த கட்டுபாட்டுடன் இருந்தார்கள். 


      பெரியவள் வருணி பி. எட் முடித்த உடன் தந்தை  வேலை பார்க்கும் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகிறது.  மிகவும்  அமைதியானவள், பெரியோர் சொல் கேட்டு நடப்பாள்,  எப்போதும் தன்னை சுற்றி உள்ளவர்களை சிரிப்போடு வைத்து கொள்ளுபவள்,  பிறரோடு அன்பாகவும் பாசமாகவும் பழகுபவள்.  


    ஆனாலும் அம்மா மீது இருந்த பயத்தினால் அதெல்லாம் ஒரு அளவோடு தான்.  இரக்க குணம் அதிகம்.  அனைத்து வயது குழந்தைகளுக்கும் பிரியமான ஆசிரியை என்றல் அது வருணி தான். வேலைக்கு சேர்ந்த சில தினங்களிலேயே அனைவரையும் கவர்ந்தவள்,  என்றதினாலேயே சில ஆசிரியர்களுக்கு வருணியை  பிடிப்பது இல்லை. 


     சிறியவள் வித்தியா படு சுட்டி கல்லுாரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள்.  வருணிக்கு எதிர்மறை துருவம் என்றால் அது இவள் தான். வீட்டில் அடிக்கடி சிறிய, சிறிய தவறுகள் செய்து  அம்மாவிடம் மாட்டி கொண்டு செம மாத்து வாங்குவாள்.  


     ஒரு நாள் கல்லூரி விட்டு தன் நண்பர்களுடன் திரையரங்கம் சென்று விட்டு தாமதமாக வீடு வந்து சேர்ந்தாள் வித்தியா. அம்மா கேட்டதற்க்கு நண்பர்களுடன் கல்லூரியிலேயே சிறிது நேரம் படித்து விட்டு வந்ததால் என்றாள். 


    பொய் கூறி தப்பித்தவளுக்கு, தன் அம்மாவை ஏமாற்றும் சாமர்த்தியம் பத்தவில்லை. திரைப்பட டிக்கெட்டை வெளியே போடாமல் தன் மதிய உணவு பையில் வைத்ததை, மறதியில் அப்படியே கொடுத்து விட்டாள். அதை சுத்தம் செய்ய எடுத்த அவளின் அம்மா கையில் அது மாட்டிக் கொண்டது. 


   அவ்வளவு தான், அம்மா கையில் எடுத்த வீட்டு ஆயுதம் துடைப்பக்கட்டை.... ஒரு குச்சி விடாமல் உடைந்து தான் மிச்சம். இருந்தும் அந்த ரெட்டை வால் அம்மாவிற்கு அடங்கியபாடு இல்லை. இருக்கும் வீடோ சிறியது தான், ஆனால் அவர்கள் எல்லாரும் ஒன்றாக தான் இருப்பார்கள். 


     ஒருவர் சோகமாக இருந்தாலும் மற்றவர்கள் அவர்களை கொஞ்சி பேசி சிரிக்க வைப்பார்கள். அன்பும், அரவணைப்பும் மற்றவர்களை விட அதிகம் அந்த குடும்பத்தில்.  பக்கத்து வீட்டில் லட்சுமி அம்மாள் தவிர, சுமதி தன் பெண்களை வேறு யார்க் கூடவும் பேச கூட விட மாட்டார்கள்.  


    அன்று காலை கோயில் திருவிழா என்று பெற்றோர் அதிகாலையிலேயே கோயில் சென்று விட்டனர்.  அதனால் தான் அம்மா இல்லாத தைரியத்தில் ஆற்றில் குளிக்க சென்ற வருணியும் வித்தியாவும் மூன்று மணி நேரமாகியும் வாரதாதால், லட்சுமி அம்மாள் அவர்களை அதட்டி கூப்பிட்டு கொண்டிருக்கிறார்.  


    இத்தனைக்கும் சுமதி கோயில் போகும் முன்பே லட்சுமி அம்மாளிடம் "தாங்கள் வேலைக்கு செல்லும் நேரம் அவர்களை கோயிலுக்கு அனுப்பி வையுங்கள்,  விடுமுறை நாள் என்பதால் தூங்குறாங்க" என்று கூறி சென்றார்.   


    அப்பா,  அம்மா இரண்டு பெரும் எப்போது செல்வார்கள் என்று எட்டி எட்டி பார்த்தபடி, போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு உறங்குவது போல் பாசாங்கு காட்டிய வித்தியா,  அதுநேரம் வரை உறங்காமலேயே விழித்து கொண்டு இருந்தது பாவம் சுமதிக்கு தெரியாமல் போனது. 



    அவர்கள் கிளம்பிய நொடி முதல் வித்தியாவின் ஆட்டம் ஆரம்பம்.....


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.